இன்று (9.9.2015) கும்பாபிஷேகம் காணும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, இதே நாளில் கும்பாபிஷேகம் காணும் மேலும் இரு கோயில்களைப் பார்த்து வந்தோம். நாங்கள் கண்ட கும்பாபிஷேகக் கோயில்களைக் காண அழைக்கிறோம். வாருங்கள்.
2016 மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள பல கோயில்கள் கும்பாபிஷேகம் காண்கின்றன. மகாமகத்திற்காக காவேரிசக்கரப் படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக் கோயில்கள் சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் கோயில் ஆகியனவாகும். அண்மையில் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று (9.9.2015) ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்.
கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில்.
காலை 4.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றடைந்தோம். நேரிடையாக கோயிலுக்குச் சென்றோம்.
எங்கு பார்த்தாலும் கூட்டம். ராஜகோபுரத்திற்கு முன்பாக நின்று கண்கொள்ளாக்காட்சிக்காகக் காத்திருந்தோம். மின்சார ஒளி வெள்ளத்திற்கிடையே இருந்த இருட்டினை விரட்டிவிட்டு விடியல் தொடங்கியது.
பலிபீடம், கொடிக்கம்பத்தை வணங்கிவிட்டு அங்கிருந்து கருவறைக்குச் சென்றோம். பிரகாரத்தைச் சுற்றி வந்து கருவறைக்குச் செல்லும்படி பாதை அமைத்திருந்தார்கள். உள்ளே இருந்த ராமாயண ஓவியங்களைப் பார்த்தோம். பின்னர் கருவறையில் உள்ள பட்டாபிஷேகக் காட்சியைக் கண்டோம். அலங்கார தூண் மண்டபத்தில் சற்றே அமர்ந்திருந்தோம்.
பின்னர் இன்று கும்பாபிஷேகம் காணும் மற்றொரு கோயிலான கௌதமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் 12 சைவக்கோயில்களில் முதன் முதலாக இச் சைவக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அங்கு சென்று கௌதமேஸ்வரரையும், இறைவி சௌந்தரநாயகியையும் தரிசித்துவிட்டு, யாகசாலையைப் பார்த்தோம். என் ஆய்விற்காக கும்பகோணத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் பற்றிய விவரங்களைத் தேடிச் சென்றபோது பெயரின் காரணமாக இக்கோயில் பௌத்தம் தொடர்பானதாக இருக்குமோ என்று எண்ணிச் சென்று ஏமாந்தேன். அவ்வகையில் எனக்கு இக்கோயில் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருந்தது. கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார் என்று கூறி அவர் தொடர்பான ஒரு கதையைக் கூறினர். பின்னர்தான் இக்கோயில் ஒரு சிவன் கோயில் என அறிந்தேன்.
கௌதமேஸ்வரைத் தரிசித்துவிட்டு மகாமகக்குளம் அருகே பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது குளத்தைக் கண்டோம். மகாமகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதைப் பார்ப்போம்.
அங்கு பார்த்துக்கொண்டிருக்கும்போது சுவாமிமலை நினைவிற்கு வரவே, இன்று கும்பாபிஷேகம் கண்ட சுவாமிமலைக்குச் செல்ல முடிவெடுத்து, சுவாமிமலை வந்தடைந்தோம். தொடர்ந்து பக்தர்கள் வந்த நிலையில் வரிசையில் நின்று முருகனை தரிசித்தோம்.
ஒரு கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் முழுமையாகப் பார்த்ததும், அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன வேறு இரு கோயில்களுக்குச் சென்றதும் மனதிற்கு நிறைவினைத் தந்தது.
2016 மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள பல கோயில்கள் கும்பாபிஷேகம் காண்கின்றன. மகாமகத்திற்காக காவேரிசக்கரப் படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக் கோயில்கள் சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் கோயில் ஆகியனவாகும். அண்மையில் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று (9.9.2015) ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்.
கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில்.
காலை 4.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றடைந்தோம். நேரிடையாக கோயிலுக்குச் சென்றோம்.
எங்கு பார்த்தாலும் கூட்டம். ராஜகோபுரத்திற்கு முன்பாக நின்று கண்கொள்ளாக்காட்சிக்காகக் காத்திருந்தோம். மின்சார ஒளி வெள்ளத்திற்கிடையே இருந்த இருட்டினை விரட்டிவிட்டு விடியல் தொடங்கியது.
கும்பாபிஷேகம் காண காத்திருப்போர்
|
கும்பாபிஷேகம் நிறைவுற்றபின் உள்ளே செல்லும் பக்தர்கள் |
புதிய பலிபீடமும் கொடிமரமும் |
உற்சவமூர்த்திகளை ரசித்துக்கொண்டிருக்கும் பக்தர்கள் |
பிரகாரத்திலிருந்த யாகசாலை |
பிரகாரத்தில் இருந்த தசாவதாரக்காட்சி |
கும்பாபிஷேக நாளன்று விமானம் |
பின்னர் இன்று கும்பாபிஷேகம் காணும் மற்றொரு கோயிலான கௌதமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் 12 சைவக்கோயில்களில் முதன் முதலாக இச் சைவக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அங்கு சென்று கௌதமேஸ்வரரையும், இறைவி சௌந்தரநாயகியையும் தரிசித்துவிட்டு, யாகசாலையைப் பார்த்தோம். என் ஆய்விற்காக கும்பகோணத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் பற்றிய விவரங்களைத் தேடிச் சென்றபோது பெயரின் காரணமாக இக்கோயில் பௌத்தம் தொடர்பானதாக இருக்குமோ என்று எண்ணிச் சென்று ஏமாந்தேன். அவ்வகையில் எனக்கு இக்கோயில் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருந்தது. கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார் என்று கூறி அவர் தொடர்பான ஒரு கதையைக் கூறினர். பின்னர்தான் இக்கோயில் ஒரு சிவன் கோயில் என அறிந்தேன்.
கௌதமேஸ்வரர் கோயில் நுழைவாயில் |
பிரகாரத்தில் யாகசாலை |
மூலவர் விமானம் |
சுவாமிமலை கோயில் நுழைவாயில் |
சுவாமிமலை கோயில் மற்றொரு நுழைவாயில் |
சுவாமிமலை கோயில் உள்ளே ஓவியங்கள் |
கும்பகோணம் ராமசுவாமி கோவில் கும்பாபி ஷேகத்தை உங்கள் பதிவின் மூலம் நேரில் பார்த்த மாதிரி இருந்தது..
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteகும்பாபிஷேக கோயில்களை கண்டு எங்களையும் தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteகடந்த மாதம் குடந்தை வந்திருந்தேன்
ReplyDeleteசில கோவில்களையே தரிசிக்க முடிந்தது
தங்கள் பதிவு மீண்டும் வரவேண்டும் எனும்
ஆவலைத் தூண்டுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மகாமகத்திற்காக தற்போது கும்பகோணத்தில் பல கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்களது ஆவல் நிறைவேற வாழ்த்துக்கள்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகும்பகோணம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் பற்றி படங்களுடன் நன்றாக விளக்கியிருந்தீர்கள்.
எனக்கு கும்பகோணம் என்றவுடன் மகாமகம்தான் ஞாபகம் வருகிறது... சிவலோக பதவி அடைந்த அந்த 100 பேரின் கதி.. அதோ கதிதானா...? மறக்க முடியுமா...?
த.ம. 3.
தங்களின் வருகைக்கு நன்றி. அம்மகாமகத்தை மறக்க முடியுமா?
Deleteதங்கள் பதிவு மூலம் கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த மனநிறைவு ஏற்பட்டது.
ReplyDeleteநன்றி அய்யா!
த ம 4
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteபுகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது தகவலும் அருமை முனைவரே.....
ReplyDeleteதமிழ் மணம் 5
தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
Delete
ReplyDeleteகும்பகோணம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
காணப் பெறாத கண்களுக்கு காட்சியாய் அமைந்தது
தங்களது ஆன்மீகப் பதிவு!
புண்ணியத் தீர்த்தம் எங்கள் மீது பட்டது போன்றதொரு உணர்வினை தந்தது அய்யா
தங்களது இந்த பதிவு!
நன்றி முனைவர் அய்யா
நன்றி அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
ஒரு கோயில் கும்பாபிஷேகம் பார்க்கச் சென்று மூன்று கோயில்கள் பார்த்தது மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. வருகைக்கு நன்றி.
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteநாங்களும் கலந்து கொண்ட திருப்தி... நன்றி ஐயா...
ReplyDeleteபுதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டு ஆயத்த பணிகளுக்கிடையே தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteதங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட ஓர் நிறைவு
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
வருகைக்கும் கருத்திற்கும் அன்பான நன்றி.
Deleteஅழகான படங்களைக் கண்டு மனம் மகிழ்ந்தது..
ReplyDeleteகுடந்தை ராமஸ்வாமி திருக்கோயில் சிற்பங்கள் மிக அருமையானவை.. கண்களுக்கு விருந்து..
கும்பாபிஷேகம் முடிவுறும் நிலையில் உங்களுக்கு புகைப்படங்கள் அனுப்பினேன். அடுத்தடுத்து பிற கோயில்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் மேலும் சில படங்களை அனுப்பமுடியவில்லை. இருப்பினும் தாங்கள் நான் அனுப்பிய புகைப்படங்களைத் தங்களது வலைத்தளத்தில் வெளியிட்டதைக் கண்டேன். சில சிற்பங்களைப் புகைப்படமெடுத்தேன். அது பற்றி தனியாக எழுதவுள்ளேன். நன்றி.
Deleteஒவ்வொரு படமும் எங்களையும் அங்கு இருந்தது போன்ற உணர்வைத்தந்தது.
ReplyDeleteஅவ்வுணர்வு ஏற்படவே இவ்வாறான பதிவு.
Deleteநானும் உங்கள் மூலம் கோயிலை தருசித்த மாதிரி இருக்கு!
ReplyDeleteஅத்தகைய உணர்வை பதிவு ஏற்படுத்தியதறிந்து மகிழ்ச்சி.
Deleteகும்பகோணம் ராமசாமிக்கோவில் உள்பிராகாரத்தில் ராமாயண்ம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கும். கும்பாபிஷேகம் போது அவற்றையும் புதுப்பிக்கின்றார்களா.?
ReplyDeleteராமாயண ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன ஐயா. சில ஓவியங்களைப் புகைப்படமெடுத்தேன். அதை பிறிதொரு பதிவில் இடவுள்ளேன். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteஅன்பின் அய்யாவிற்கு.
ReplyDeleteஅருமையான பதிவு. மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி.
நானும் உங்களுடன் கோயிலுக்கு வந்து தரிசித்த
ReplyDeleteமன நிறைவைப் பெற்றேன்.
அழகிய படங்களுடன் ஆன்மீகப் பதிவு அருமை!
வாழ்த்துக்கள் ஐயா!
இவ்வாறான மனநிறைவினைத் தாங்கள் பெற்றதறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deleteநீங்கள்”செய்புண்ணியம்” உங்கள் பதிவு வாயிலாக எங்களுக்கும் வந்து சேருகிறது
ReplyDeleteபார்த்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மன நிறைவு ஈடு இணையற்றது. தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteஉங்களால் நேரில் பார்த்த உணர்வு.
அழகிய படங்கள், நல்ல தொகுப்பு,,,
பகிர்வுக்கு நன்றி அய்யா,
அவ்வாறான உணர்வை பதிவு ஏற்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deletedr. jambulingam, u get a degree in journalism through corres. because u became a news reporter, editor and publisher. this cannot be presented so quickly with photos byany newspaper or a tamil journal. if u publish a periodical people will hot buy, and even if they buy, they may not read it. but u r making visual stills. if u capture these for a short time in a camcorder or from ur mobile as a mp4 file u can produce a film show in this blogspot. try u can get a movie camera, shoot , edit and make a mp4 file and publish it here. then u will be the first to publish a video magazine in tamil. try. do it. i will help u. Prof. dr. t.padmanaban
ReplyDeleteதங்களின் பாராட்டு என்னை நெகிழ வைத்துவிட்டது. கும்பாபிஷேகங்களைக் கண்டு கும்பகோணத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கும்போதே எவ்வாறாக எழுதவேண்டும் என திட்டமிட்டுக்கொண்டே வந்தேன். தேவையான புகைப்படங்களைத் தெரிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் முடிந்தவரை பதிந்தேன். பணிச்சூழல், கால இடைவெளி காரணமாக பெரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியவில்லை. தாங்கள் கூறியுள்ளது பற்றிச் சிந்திக்கிறேன். தங்களைத் தொடர்பு கொள்வேன். நன்றி.
Deleteஒரு கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடந்த இரு கோவில்களைப் பார்த்து வந்து உடனே படங்களுடன் பதிவிட்டு பகிர்ந்து கொண்ட தங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுதான் இறையருள் என்பதோ? வருகைக்கு நன்றி.
ReplyDeleteஇறைவன் அருள் ....தங்கள் பதிவால் பெற்றோம் நன்றி அய்யா
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteகும்பகோணம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வைக் கண்முண் நிறுத்திவிட்டீர்கள்.
ReplyDeleteதொடருங்கள்!
தொடர்வேன், தங்களது வாழ்த்துக்களுடன்.
Deleteவணக்கம் சகோதரரே.
ReplyDeleteகும்பகோணம் ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம் என்று சென்று விட்டு அங்கிருந்தவாறே மற்ற இரு கோவில்களையும் தரிசித்து விட்டு வந்ததோடு, தங்கள் பதிவின் மூலம் எங்களையும் நீங்கள் சென்ற அனைத்து கோவில்களுக்கும் அழைத்துச்சென்று தரிசிக்க வைத்தமைக்கு மிகவும் நன்றி. உங்களால் நாங்களும் கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு களித்த திருப்தி வரப்பெற்றோம்.
பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நாம் பெற்ற இன்பத்தை நண்பர்களும் பெறவேண்டும் என்ற நன்னோக்கில் பகிர்ந்தேன். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் பதிவில் சொல்லிய ஆலயத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ண உணர்வு எழுகிறது. ஏன் என்றால் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் சிறப்பு ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கும்பாபிஷேக நிகழ்வுகளைக் கண்டு கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteகும்பாபிஷேகத் தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete