26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட வராகப்பெருமாள் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதி வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி வழியாக காவிரியாற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. சக்கரபாணி கோயிலுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இக்கோயிலின் அருகே வராகக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக மண் மேடாகக் காணப்பட்ட இக்குளம் தற்போது மகாமகத்தை முன்னிட்டு தூர்வாரப்பட்டுவருகிறது. இக்கோயிலுக்கு அருகே கரும்பாயிரம் விநாயகர் கோயில் உள்ளது.கோயிலின் முகப்பில் ஆதிவராகப்பெருமாள் தேவியருடன் காணப்படும் சுதைச்சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து வைணவக் கோயில்களில் இக்கோயிலும் இராஜகோபாலஸ்வாமி கோயிலுமே சிறிய கோயில்களாகும். முகப்பைக் கடந்து உள்ளே வரும்போது அழகான கொடிமரம் காணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள மண்டபத்தினை அடுத்து கருவறையில் மூலவர் வராகப்பெருமாள் காணப்படுகிறார். வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் இவர் வராகப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார்.
திருச்சுற்றில் சுற்றிவரும்போது அழகான சிறிய விமானத்தினை கருவறையின்மீதாகக் காணமுடியும்.
ஒரு சமயம் ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்துகொண்டதாகவும், வானவர்கள் திருமாலிடம் இதுபற்றி முறையிட திருமால் வராக உருவெடுத்து பாதாளத்தில் புகுந்து அவருடன் போரிட்டு ஒரு கொம்பினால் அவனையும் அவனுடைய சுற்றத்தாரையும் அழித்ததாகவும் மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிகொண்டு மேலே வந்து பூமியை முன்போல நிலைபெறச் செய்ததாகவும் கூறுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் நிலையில் பெருமாள் பூமிதேமியை தமது இடது மடியில் வீற்றிருக்கும் நிலையில் காணப்படுகின்றார்.
இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்னரோ மகாமகத்தின்போதோ வாய்ப்பான நாளில் இக்கோயிலுக்குச் செல்வோம். மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் ஐந்து வைணவக் கோயில்களில் இதுவரை மூன்று கோயிலுக்கு சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து ராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கும், சக்கரபாணி கோயிலுக்கும் விரைவில் செல்வோம்.
இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்னரோ மகாமகத்தின்போதோ வாய்ப்பான நாளில் இக்கோயிலுக்குச் செல்வோம். மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் ஐந்து வைணவக் கோயில்களில் இதுவரை மூன்று கோயிலுக்கு சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து ராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கும், சக்கரபாணி கோயிலுக்கும் விரைவில் செல்வோம்.
--------------------------------------------------------------------------------------------
மகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக்கோயில்கள்
மகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக்கோயில்கள்
- சார்ங்கபாணி கோயில்
- சக்கரபாணி கோயில்
- ராமஸ்வாமி கோயில்
- ராஜகோபாலஸ்வாமி கோயில்
- ஆதிவராகப்பெருமாள் கோயில்
--------------------------------------------------------------------------------------------
நன்றி : மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு
காலையில் இனிய தரிசனம்.. மகிழ்ச்சி..
ReplyDeleteகோயில் தரிசனம் அருமை அய்யா!
ReplyDeleteத ம 1
இனிய கும்பாபிஷேக நிகழ்வு காண வைத்த முனைவருக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 2
வணக்கம்
ReplyDeleteஐயா
நாங்கள் பார்க்க முடியாதா நிகழ்வை அற்புதமாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான தரிசனம் ஐயா! தகவல்களுடன் படங்களும் நன்று ஐயா.
ReplyDeleteகோவில்கள் நிறைந்த ஊர் கும்பகோணம் அநேக கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் இந்தக் கோவிலுக்குச் சென்ற நினைவு இல்லை. இருந்தால் என்ன உங்கள் மூலம் கண்டோம் . நன்றி.
ReplyDeleteதங்கள் பதிவுகள் வழியாக பல கோயில் செல்கிறேன். தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteதம +1
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் சென்றபோது இந்தக் கோவில்களை தரிசித்த நினைவு இருக்கிறது. ஆனால் உங்களைப் போல நுட்பங்களை அறிந்து கொள்ள இயலவில்லை . மேலோட்டமாக பார்த்துவிட்டு வந்து விடுகிறோம்.
ReplyDeleteஅருமையான விவரங்கள்! இந்தக் கோவிலுக்கு போயிருக்கிறேன்.
ReplyDeleteபுண்ணியக் கணக்கில் இன்னும் ஒரு வரவு!
ReplyDeleteநன்றி ஐயா
Mr KSS Krishnan (thro email: krishnan.kss@gmail.com)
ReplyDeleteThanks, This is the koil where My elder sister's marriage and my sacred thread ceremony(poonul) held. I wish I should go all temples when I come next time. Let me hope so.Once again thanks a lot.
வணக்கம் சகோதரரே,
ReplyDeleteநலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கோவிலின் சிறப்புகளும் படங்களும் மிக அருமையாக இருந்தது. மிகவும் ரசித்து படித்தேன்.
நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
ReplyDeleteஅன்புள்ள முனைவர் அய்யா,
வணக்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
நட்புடன்,
புதுவைவேலு
www.kuzhalinnisai.blogspot.com
Happy New Year 2016
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகும்பகோணம் வராகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் அழகிய படங்களுடன் அருமையாச் சொல்லி இருக்கிறீர்கள்.
தாங்கள் தட்டச்சராகப் பணியேற்று அலுவலகத்தில் உயர் பதவிபெற்று தீவிர முயற்சியால் முனைவர் பட்டம் பெற்று இன்னும் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருவதற்கு எனது பாராட்டுகள்.
புத்தாண்டு வாழ்த்துகள் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும்.
நன்றி.
த.ம8
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஎன் வலைத்தளத்திற்கு வந்து புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி, ஐயா!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.கும்ப்கோணம் வழியாகப் பல நூறு முறை மயிலாடுதுறை(மனைவியின் ஊர்) சென்றிருக்கிறேன். கோபுர தரிசனத்தோடு சரி. தங்கள் தயவில் இன்று புண்ணியம் கிட்டியது.நன்றி அய்யா
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.கும்ப்கோணம் வழியாகப் பல நூறு முறை மயிலாடுதுறை(மனைவியின் ஊர்) சென்றிருக்கிறேன். கோபுர தரிசனத்தோடு சரி. தங்கள் தயவில் இன்று புண்ணியம் கிட்டியது.நன்றி அய்யா
ReplyDeleteஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!
ReplyDelete
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநேரில் பார்த்த மாதிரியான அனுபவத்தை உங்களது எழுத்து
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete