முகப்பு

16 August 2016

தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800+ பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்து 34 வருடங்களை நிறைவு செய்து இன்று (16 ஆகஸ்டு 2016) 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட மூன்று மகாமகங்கள் பணியாற்றிய நிலையில் பல்துறையிலான கட்டுரைகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் (பணியாளர் எண்.36) சேர்ந்த என்னை பௌத்தம் மற்றும் சமணம் (57), பிற துறைகள் (63), சிறுகதைகள் (40) தமிழ் விக்கிபீடியா (297), ஆங்கில விக்கிபீடியா (104)  சோழ நாட்டில் பௌத்தம் (75), முனைவர் ஜம்புலிங்கம் (128), கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் செய்திகள் (152) என்ற நிலையில் 800க்கு மேற்பட்ட பதிவுகள்/கட்டுரைகள் எழுதவும், புத்தர் (16) மற்றும் சமணர் (13) சிலைகளைக் கண்டுபிடிக்கவும் களம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு  என் மனமார்ந்த நன்றி. 
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் (1989-1992) அவர்களின் நேர்முக உதவியாளராக (புகைப்படம் :16.8.1991)

பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் (65)

முதல் ஆய்வுக்கட்டுரை வெளியான இதழ் : தமிழ்க்கலை. மார்ச் 1994 
1.‘‘தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்’’, தமிழ்க்கலை,  தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994, தமிழ் 12, கலை 1-2, பக்.98-102
2.‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், துணர் 70, மலர் 1, ஏப்ரல் 1996, பக்.560-563
3.‘‘பௌத்தத்தில் வாழ்வியல்’’, தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 8, ஜனவரி 1997, பக்.905-912
4.‘‘இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்’’, தமிழியல் ஆய்வு, (ப.ஆ:  முனைவர் இரா.காசிராசன் மற்றும் பலர்), ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 1997,  பக்.147-151
5.“சைவமும் பௌத்தமும்”, ஆறாம் உலகச்சைவ மாநாடு, ஆய்வுச்சுருக்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1997, ப.88
6.‘‘தஞ்சையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், துணர் 72, மலர் 1, மே 1998, பக்.3-8
0.‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, மனித நேயக்கருத்தரங்கம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், ஆகஸ்டு 1998
7.‘‘மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்’’,  தமிழ்ப் பொழில், துணர் 73, மலர் 3, ஜூலை 1999, பக்.95-98
8.“கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்”, ஆய்வுமணி, (ப.ஆ: துரை.குணசேகரன்), தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, மயிலாடுதுறை, 2001, பக்.160-166
9.“சம்பந்தரும் பௌத்தமும்”, திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2002, பக்.654-662
10.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்’’,தமிழ்ப்பொழில், துணர் 76, மலர் 5, நவம்பர் 2002, பக்.695-702
11.‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மார்ச் 2002, ப.3
12.“காவிரிக்கரையில் பௌத்தம்”, கல்கி தீபாவளி மலர், 2002, பக்.162-163
13.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’,தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், பிப்ரவரி 2003, ப.3
14.“தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்”, எத்தனம், (ப.ஆ: ஆ.சண்முகம்),  அன்னம், தஞ்சாவூர்,  2002, பக்.137-137, ஜூன் 1998இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
15.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, பௌர்ணமி,தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, ஜூலை 2003, ப.16
16.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஜூலை 2003, ப.3
17.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, பௌர்ணமி, அக்டோபர் 2003, பக்.20-21
18.“நாவுக்கரசரும் பௌத்தமும்”, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2003, பக்.738-743
19.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்- பேட்டவாய்த்தலை”, பௌர்ணமி, டிசம்பர் 2003, ப.13
20.“நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்”, வரலாற்றுச்சுடர்கள், (ப.ஆ: கவிமாமணி கல்லாடன்),  குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003, பக்.63-69
21.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஒகுளூர்”,  பௌர்ணமி, ஜனவரி 2004, ப.14
22.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஆயிரவேலிஅயிலூர்”, பௌர்ணமி, அக்டோபர் 2004, பக்.12-13
23.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, செய்திச்சோலை, ஏப்ரல் 2005, ப.24
24.“புத்துயிர் பெறும் பௌத்தம்:சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-அய்யம்பேட்டை, ஆலங்குடிப்பட்டி, இடும்பவனம்”, பௌர்ணமி, ஆகஸ்டு 2005, ப.5
25.“பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, கணையாழி, ஆகஸ்டு 2006, ப.61
26.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, குமுதம் தீராநதி, செப்டம்பர் 2006,ப.2
27.“வளையமாபுரத்தில் புத்தர் சிலை, ரசனை, மார்ச் 2008, ப.12
28.‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’,தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஆகஸ்டு 2008, ப.4
29.‘‘சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007)’’,தமிழ்க்கலை, தமிழ் 13, கலை 1, செப்தம்பர்-திசம்பர் 2008, பக்.31-36
30."Buddha Statues in the vicinity of other Temples in the Chola country", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol No.19, September 2008, pp.15-23
முதல் ஆங்கிலக்கட்டுரை வெளியான இதழ் : Tamil Civilization. 1998 
31.‘‘திருவாரூர் மாவட்டம் வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’,  தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், நவம்பர் 2008, ப.4
32.‘‘திருச்சி காசாமலையில் புத்தர் சிலை’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர்,  டிசம்பர் 2008, ப.4
33.‘‘சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை’’, தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, பக்.29-32
34.“தஞ்சை அருகே 11ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், முக்குடை, ஜூலை 2009, ப.20 (நகல் அண்மையில் பெறப்பட்டது) 
35."A Resurvey of Buddha Statues in Pudukkottai Region (1993-2009)", Tamil Civilization,Vol No.23,October-December 2009, pp.62-68
36.“தஞ்சை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, முக்குடை, ஏப்ரல் 2010, ப.29 
37.“செருமாக்கநல்லூரில் சமணர் சிலை கண்டுபிடிப்பு’’,தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மே 2010, ப.4
38. ‘‘பௌத்தச் சுவட்டைத் தேடி: களத்தில் இறங்கும் முன்”, http://tamilindru.blogspot.com, 29.5.2010
39.“நாகப்பட்டின மாவட்டத்தில் புத்தர் சிலைகள்”, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு,  கோயம்புத்தூர், ஆய்வரங்கச் சிறப்பு மலர்,  2010,பக்.687-688
40.“பௌத்தம் வளர்த்த தமிழ்”, தினமணி செம்மொழிக்கோவை, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர்,  பக்.237-240
41.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, செம்மொழி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2010, பக்.188-190
42.‘‘அம்மண சாமியப் பாக்க வந்தீங்களா?”,http://tamilindru.blogspot.com, 12.6.2010
43. ‘‘அந்த புத்தர் எந்த புத்தர்?”, http://tamilindru.blogspot.com, 31.7.2010
44.‘‘புத்தர் அல்ல, கும்பகோணம் பகவர்”, http://tamilindru.blogspot.com, 21.8.2010
45.“வேதாரணியம் அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு’’,தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், செப்டம்பர் 2010, ப.2
46. ‘‘நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்”, http://tamilindru.blogspot.com, 13.11.2010
47.“சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்”, தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011, ப.54
48.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, கரந்தைத்தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011, பக்.179-181
49.“தஞ்சை அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு”, முக்குடை, டிசம்பர் 2011, ப.20
50.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”,முக்குடை, ஏப்ரல் 2012, பக்.14-15
51.“10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு”, அன்பு பாலம், செப்டம்பர் 2012, ப.47
52.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட (2009-2011) சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”, முக்குடை, டிசம்பர் 2012, பக்.15-16
53.“சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள்”, தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013 திருச்சி பதிப்பு, 2013, பக்.50-51
54.“சோழ நாட்டில் புத்தர் சிலைகள் வழிபாடும் நம்பிக்கைகளும்”தமிழக நாட்டுப்புற ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010, பக்.134-139  (நகல் அண்மையில் பெறப்பட்டது) 
55.மீசை வைத்த புத்தர்!: சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்!, ” தி இந்துபிப்ரவரி 27, 2015, ப.8
56.பௌத்த சுவடுகளைத் தேடி : களப்பணி ஆய்வு”, வளன் ஆய்விதழ்,இதழ் 16, மலர் 1, மார்ச் 2015, பக்.117-123
57. ‘‘மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம், கும்பகோணம் மகாமகம் தீர்த்தவாரி சிறப்பிதழ், தினமணி, 22.2.2016
அண்மைக் கட்டுரை : தினமணி
----------------------------------------------------------------
பேட்டிகள் (5) 
----------------------------------------------------------------



முதல் பேட்டி தமிழ் நாளிதழ் : தினமணி

முதல் பேட்டி ஆங்கில நாளிதழ் : Times of India
5.Writerof 250 articles in Tamil Wikipedia, The New Indian Express, 13.11.2015


 ----------------------------------------------------------------
மேற்கோள்கள் (19) 
----------------------------------------------------------------
முதல் மேற்கோள் :The Hindu, 31.5.2002
1.“Symbolic of harmony”, The Hindu, 31.5.2002
2.“The Late Buddhist Art in South India-A Report on the Buddhist Sculptures from Tamil Nadu”, by     Fukuroi Yuko in INDO-KOKO-KENKYU, Indian Archaeological Studies, Vol.23, Indian Archaeological Society, Tokyo, June 2002, pp.49-75
3.“Thanjavur and Trichy Regions”, Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, The Commissioner of Archaeology and Museums, Government Museum, Chennai, 2003, pp.27-29
4.ரவிக்குமார், “புத்தர் தேசம்”, காலச்சுவடு, ஜூலை 2004
5.S.Anand, “Bodhi's Tamil Afterglow, Outlook, 19.7.2004 
6.ஸ்டாலின் ராஜாங்கம், “மதுரையில் சமணம்”, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், செப்டம்பர் 2009பக்.50-52
7.ஸ்டாலின் ராஜாங்கம், “ஆரிய ராமனும் வைதீகச்சோழனும்காலச்சுவடு, நவம்பர் 2010
8 “தீபங்குடி நல்ஞானப்பெருவிழா”, முக்குடை, ஜனவரி 2012. ப.26
9.கோ.தில்லை கோவிந்தராஜன், “தஞ்சையில் சமணர் சிற்பங்கள்”, தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜனவரி 2012, பக்.14-20
10.ஜெயமோகன் வலைப்பூ, “தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்”,
11.போதி வலைப்பூ, தமிழ் பௌத்தம் ஆவணங்கள், http://www.tamilbothi.blogspot.com
12. “The Tamil Roots of Buddhism”, Thivya,  http://www.lankannewspapers.com 5th May 2012
13.பௌத்தமும் தமிழும், http://sites.google.com/site/buddhasangham/Home/links 
14.மு.சிவகுருநாதன், “தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த - சமண மதங்கள்“, http://panmai2010.wordpress.com/2012/07/31
16.ஜெயமோகன் வலைப்பூ, “சோழநாட்டில் பௌத்தம்”, மார்ச் 9, 2013 
17.நல்ல பிளாக், தமிழ்Cloud.org
18. "Ancient meditating Buddha discovered", Buddhist Channel, 16 Apr 2013
19. "Ancient meditating Buddha discovered", Buddhist Karma, 18 Jul 2013
20.நாகையில் முனைவர் பா.ஜம்புலிங்கத்தின் தேடல் : நம்ம ஊரு நாகப்பட்டினம், முகநூல், 14.8.2013
21.புத்தர் சிலை அல்ல, சமண தீர்த்தங்கரர் சிலை, அததெரண, 15 அக் 2013
22. "In search of imprints of Buddhism", Buddhist Channel, 24 Feb 2014
23.அமெரிக்க-கியூப உறவு இப்படியும் ஒரு ராஜதந்திரம், தி இந்து, யாழ் ஜனவரி 5, 2015 
ஜனவரி 31, 2015
25.ஸ்டாலின் ராஜாங்கம், “தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்தி இந்து, 
ஜூலை 9, 2015
26.கிராந்தி தேப்பிள்ளை அளித்த புத்தர் சிலை -சோழர் காலக் கொடைக்கல்வெட்டு, கூகுள்ஸ் குரூப், 25.9.2015
27.புத்தகப்பண்பாட்டில் தலித்துகள், மலைகள், 2.11.2015
28.புன்னைவனம், பௌத்த சுவட்டைத்தேடி, விக்ரமம், 4.11.2015
29.காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம், புத்தகரம்
30.புளோரிடாவிருந்து ஹவானாவிற்கு, தி இந்து, யாழ் ஏப்ரல் 8, 2016 
31. ‘Even today, Mahamaham has significance for the people’, The Times of India, Trichy Edition, 23rd January 2016, p.2
அண்மை மேற்கோள் : Times of India, 23.1.2016
----------------------------------------------------------------
அணிந்துரைகள்/வாழ்த்துரைகள் (8) 
----------------------------------------------------------------
முதல் அணிந்துரை மர்மவீரன் ராஜராஜசோழன், 2005
1.மர்ம வீரன் இராஜராஜசோழன்,  ஓவியர் சந்திரோயம், 2005, அணிந்துரை
2.காத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு,  9.4.2009, அணிந்துரை
3.சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
4.சோழர் காலக் கட்டடக்கலையும் சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
5.திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம், 20ஆம் ஆண்டுநிறைவு விழா மலர், 2010-11, வாழ்த்துரை 
6.இந்த எறும்புகள், கவிஞர் அவிநா, அழகுமலை பதிப்பகம், தஞ்சாவூர், 2.6.2012, அணிந்துரை
7.கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், பிரேமா நூலாலயம், தஞ்சாவூர், அக்டோபர் 2012, வாழ்த்துரை
8.சுவடிப்பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், 2012, வாழ்த்துரை
----------------------------------------------------------------
பிற துறைகள் தொடர்பான பதிவுகள் (58) 
----------------------------------------------------------------
1.‘‘எலியைத் தின்னும் கிழப்புலி’’, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஜனவரி 1995, ப.4
2.‘‘ஆண் குதிரை கருத்தரிக்கும்’’, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஜனவரி 1995, ப.43.‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அறிக அறிவியல் இதழின் பங்கு’’,  அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழக 5ஆவது கருத்தரங்கு, தஞ்சாவூர், 1995, பக்.415-419
4.‘‘ஓட்டுநருக்கு நற்செய்தி’’, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஜனவரி 1995, ப.1
5.‘‘மாசுபடியும் தாஜ்மஹால்’’,  தமிழக அறிவியல் பேரவை 4ஆவது கருத்தரங்கு, கோயம்புத்தூர், 1996, ப.280 (சுருக்கம்)
6.‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’,  தமிழக அறிவியல் பேரவை 5ஆவது கருத்தரங்கு, அண்ணாமலைநகர், 1997, ப.53
7.‘‘உயிர் வார்ப்புகள் ஒரு விவாதம்’’,  அறிக அறிவியல், ஜூன் 1997, பக்.7-12
8.‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி  மொழிபெயர்ப்பு படியாக்கம், அறிவியல் தமிழாக்கம்’’,  அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழக 6ஆவது கருத்தரங்கு, காரைக்குடி, 1997, பக்.125-135
9.‘‘ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்’’,  பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல், செப் 1997, பக்.5-8
10.‘‘தஞ்சைப்பெரிய கோயிலில் திரிபுராந்தகர்’’,  தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, பக்.170-174
11.‘‘நிழலும் நிஜமும் உயிர்ப்படியாக்கம்’’, அறிக அறிவியல், ஜூன் 1998, பக்.29-30
12.‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’,  காலந்தோறும் அறிவியல் தொழில் நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழக 7ஆவது கருத்தரங்கு, 1998, பக்.78-84
13.‘‘உயிர்ப்படியாக்கம் வரலாற்றுப்பின்னணி’’, அறிக அறிவியல், ஆகஸ்டு 1998, பக்.8-9
0.‘‘குன்றக்குடியும் திருப்புகழும்’’, தமிழ் மரபும் முருக வழிபாட்டு  நெறியும் கருத்தரங்கம், பழனி, ஆகஸ்டு 1998 (கலந்துகொள்ளவில்லை)
14.‘‘அம்மா டாலிக்கு வயது இரண்டு’’, அறிக அறிவியல், அக்டோபர் 1998, பக்.21-22
15.‘‘உலகப்பெரும் அகராதி’’, தமிழ் அகராதியியல் செய்தி மலர், சூலை-டிசம்பர் 1998, ப.3
16.‘‘படியாக்க நிகழ்வு 1997’’, பொது அறிவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 1999, பக்.346-352
17.‘‘அறிவியல் தொழில் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை-1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 1999, பக்.141-147
18.‘‘பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்’’, பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக  மலர்,  1999, பக்.36-38
19.‘‘உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்’’, மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்), சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர், 1999, பக்.98-109 (பெரிய கோயில் சொற்பொழிவின் அச்சுவடிவம்)
20.‘‘2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்’’, அறிக அறிவியல், மே 2001, பக்.21-24
21.‘பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை’’, பெரிய புராண ஆய்வு மாலை, தொகுதி 2, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2001, பக்.686-691
22.‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, உயிர்தொழில் நுட்பவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2002, பக்.85-97
23.‘‘தஞ்சாவூர் மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பங்களிப்பு’’, தமிழ்ப்பொழில், துணர் 77, மலர் 2, ஜுன் 2003, பக்.63-70 (புதுக்கோட்டை மாவட்டக்கருத்தரங்கில் படிக்கப்பெற்றது)
24.‘‘2002இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, பல்துறைத்தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2003, பக்.79-88
25.‘‘2001இல் படியாக்கத்தின் வளர்ச்சி நிலை’’, தமிழ்ப்பொழில், துணர் 77, மலர் 4,5 ஆகஸ்டு செப்டம்பர் 2003, பக்.150-158
26.‘‘2003இல் படியாக்கத்தின் வளர்ச்சி நிலை’’, தமிழ்ப்பொழில், துணர் 77, மலர் 11 மார்ச் 2004, பக்.392-405
27.‘‘சப்தஸ்தானத்தலங்கள்’’, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.44-45
28.‘‘காட்டு மிருகங்கள் படியாக்கம்’’, அறிக அறிவியல், டிசம்பர் 2004, ப.29
29.‘‘திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்’’, தமிழ்நாட்டுச்சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2004,  பக்.244-252 
30.‘‘சிவகுரு தரிசனம் திருவடிப்பேறு’’, திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, 2005,  பக்.372-379
31.‘‘2004இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 80, மலர் 7, நவம்பர் 2005, பக்.276-280
32.‘‘2004இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 80, மலர் 9, சனவரி 2006, பக்.349-360
33.‘‘2005இல் படியாக்கத் தொழில் நுட்பம்’’, இந்தியத் தொழில் நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2006, பக்.271-280
34.‘‘2006இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 83, மலர் 2, ஆகஸ்டு 2008, பக்.199-200
35.‘‘2006இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 83, மலர் 5, செப்டம்பர் 2008, பக்.233-236
36.‘‘2006இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 83, மலர் 9, டிசம்பர் 2008, பக்.361-364
37.‘‘அனைத்துக்காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன் (சேகுவாரா) : ஜான் செரியன், (மொழிபெயர்ப்பு) நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008, பக்.41-4438. ‘‘2007இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், துணர் 84, மலர் 2, பிப்ரவரி 2009, பக்.47-52
39. ‘‘இராஜராஜன் நேருவின் பார்வையில்’’, தினமணி, 26.9.2010
40.‘‘நிதான வாசிப்பு ஒரு கலை”, http://tamilindru.blogspot.com, அக் 2010
41. ‘‘நிதான வாசிப்பு ஒரு கலை”, செய்தி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 15.3.2011, பக்.1-4
42. ‘‘2008இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில்,  நவம்பர் 2011, துணர் 86, மலர் 11, பக்.421-430
43. ‘‘2009இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, வாழும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2011, பக்.103-108
44. ‘‘வாசிப்பை நேசிப்போம், பணியாளர் குரல், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கம், பிப்ரவரி 2012, ப.5
45.    “A Writing on Reading”, Current Trends in Linguistics, Tamil University, Thanjavur, 2013, pp.171-176
46. ‘‘படிப்போம்,பகிர்வோம்’’, தினமணி, 21.9.2013, வாசகர் கடிதம் 27.9.2013
47. ‘‘மனிதரில் மாணிக்கங்கள்’’, தினமணி புத்தாண்டு மலர் 2014, பக்.112-126
48. ‘‘தமிழில் இந்த ஆண்டில் சிறந்த சொல் எது?’’, தி இந்து, 12.1.2014, வாசகர் கடிதம் 13.1.2014
49. ‘‘நிதானவாசிப்பு ஒரு கலை’’, தி இந்து, 13.1.2014
52. ‘‘தேவாரம்பாடாத கோயில்’’, தி இந்து, 9.7.2015
53. கோயில் உலா பத்திரிகை.காம். 27.8.2015
54. கோயில் உலா : புள்ளமங்கை பத்திரிகை.காம். 27.8.2015
55. கோயில் உலா : திருமழபாடி பத்திரிகை.காம். 4.9.2015
56. கோயில் உலா : குடந்தைக் கோயில்கள் பத்திரிகை.காம். 23.10.2015
57. ‘‘கே.பாலசந்தர்முதலாண்டு நினைவு, சிகரம் தீட்டிய சித்திரங்கள்’’, தி இந்து, 18.12.2015
54. ‘‘கலாமும் நானும் : மறக்க முடியாத இரு நிகழ்வுகள்’’, தினமணி கலாம் சிறப்பு மலர், 2015, ப.166
58. மகாமக ஸ்பெஷல் : கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா பத்திரிகை.காம். 29.1.2016
59. ‘‘மகாமகம்முன்னோட்டம் நாகேஸ்வரர் ஆலய உலா’’, தி இந்து, 28.1.2016, வாசகர் கடிதம் 4.2.2016
62. ‘‘புளோரிடாவிலிருந்துஹவானாவிற்கு’’, தி இந்து,1.4.2016
63. ‘‘ஆனந்தபவன் : அரசியலும் விடுதலையும்’’, ஹாலிடே நியூஸ், மலர் 3, இதழ் 6, மே 2016
அண்மைக் கட்டுரைஹாலிடே நியூஸ், மே 2016
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
புத்தர் சிலைகள் (15+1) : மங்கலம், புதூர், கோபிநாதப்பெருமாள்கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டினம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், காஜாமலை, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், அய்யம்பேட்டை
முதல் கண்டுபிடிப்பு செய்தி : தினமலர், 17.6.1999
சமண தீர்த்தங்கரர் சிலைகள் (13) : ஜெயங்கொண்டம், காரியாங்குடி, ஆலங்குடிப்பட்டி, செங்கங்காடு, தஞ்சாவூர், பெருமத்தூர், அடஞ்சூர், செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, பஞ்சநதிக்குளம், தோலி, கவிநாடு, நாட்டாணி
----------------------------------------------------------------
விக்கிபீடியா (411) 
----------------------------------------------------------------
தமிழ் விக்கிபீடியாவில் பதிவுகள்  (303)
ஆங்கில விக்கிபீடியாவில் பதிவுகள் (108)
தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பாளர் அறிமுகம், நவம்பர் 1, 2015
விக்கிபீடியா பங்களிப்பு : Indian Express, 13.11.2015
முதல் சிறுகதை குங்குமம், 9-15 சூலை 1993
நன்றி
கட்டுரைகளை வெளியிட்டோருக்கும், கண்டுபிடிப்புகளை வெளியிட்ட இதழ்களுக்கும் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும், அறிஞர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.

6 நவம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

41 comments:

  1. இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு நல்ல செய்தி, உங்களிடமிருந்து. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 35 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற முனைவர் B. ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் பல்கலைக் கழகப் பணியோடு பிற சமூகப் பணிகளும் செவ்வனே செய்திட, எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    மேலே புகைப்படத்தில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள், முன்பு சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனைக்கு நன்றி. நீங்கள் கூறும் அறிஞர் அவரேதான்.

      Delete
    2. more works are awaiting after retirement.this is a partial work.you will achieve more in future-librarian

      Delete
  2. 35ஆண்டுகாலப் பணி,இக்காலத்தில் எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத, வியப்பிற்குரிய, மலைப்பிற்குரிய செயல் ஐயா.
    வாழ்த்துக்கள்
    ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் பயனுள்ளதாக, குறிப்பாக இச்சமூகத்திற்குப் பயனுள்ளதாகச் செலவிடும் தங்களின் முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
    நமது நாட்டின் சாபக்கேடு என்னவென்றால்,தங்களைப் போன்ற மனிதர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதில்லை.
    பொறாமையும்,வஞ்சக மனமும் உள்ள மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், சாதனையாளர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை.
    வாழ்த்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் பணி
    மனமகிழ்வோடு வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  3. 35 வருடப் பணி - மிகச் சிறப்பு ஐயா. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும். மேலும் பல ஆக்கங்களை வெளியிட எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்களின் அயராத பணிக்கு வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் !

    ReplyDelete
  5. முக்கியமான அலுவலகத்தின் முக்கியப்பணியில் இருந்துகொண்டே களஆய்வுகள், கட்டுரைகள், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் என உங்களிடம் கற்றுக்கொள்ள அயராத உழைப்பும், ஆய்வு நோக்கும், அன்பான பகிர்வும் என எவ்வளவோ உள்ளன அய்யா! தலைவணங்குகிறேன். தங்களின் பணிகளை எழுத்தாளர் எஸ்.ரா.அவர்கள் நமது வலைப்பதிவர் விழாவில் புகழ்ந்து சொன்னபோது வியப்படையவில்லை. உங்களை நினைத்தே வியப்படைகிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டுகள். வணக்கம்.

    ReplyDelete
  6. மிகவும் பாராட்டுக்குரிய சேவை.

    ReplyDelete
  7. அளப்பரியன செய்த தங்களுடன் நானும் தோழமை பூண்டுள்ளேன் என்பது மகிழ்ச்சிக்குரியது..

    எங்களுடைய அன்பின் உறவாகிய தங்களுக்கு மேன்மேலும் சிறப்புகள் வந்தெய்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்..

    வாழ்க பல்லாண்டு..

    ReplyDelete
  8. தங்களின் சேவை தொடரட்டும் அய்யா.....

    ReplyDelete
  9. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
    முப்பத்தைந்து ஆண்டுகள்
    தொடர்ந்து பணியாற்றி வருகின்ற
    தங்களின் பணியைப் பாராட்டுகிறேன்!
    தமிழ்ப் பற்று, வரலாறு எழுதுதல் என
    இலக்கியப் பணி ஈடுபாடு என
    விக்கிப்பீடியா, வலைப்பூ என
    தங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்!
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. 35 ஆண்டுகால பிரமிக்கத்தக்க சாதனையே வாழ்க வளமுடன்

    முனைவரின் பணி மென்மேலும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துகள்
    த.ம.6

    ReplyDelete
  11. 35 ஆண்டுகளென்பது சாதாரணமானது அல்ல. பல்கலை வித்தகர் நீங்கள் சாதனைகள் தொடரட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. 35 ஆண்டுகால பணி என்பது பெரும் சாதனையே. அந்த அதீத பணியின் நடுவே 800 பதிவுகளை எழுதியிருப்பது அதைவிட சாதனை.
    வாழ்த்துக்கள் அய்யா!
    த ம 7

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரரே

    தங்களின் சாதனைகள் மலைக்கச் செய்கின்றது. தங்களின் அயராத பணிகளின் நடுவே, 800 பதிவுகளையும் எழுதி சாதனை படைத்திருப்பது அறிந்தேன். தங்களைப் போன்றோர் என் தளம் வந்து வாழ்த்துக்கள் பல கூறி சென்றிருப்பது என்னை பெருமிதம் அடையச் செய்கிறது. மிக்க நன்றி!
    தங்களை வாழ்த்த வயதும் தகுதியும் எனக்கு போறாது! எனவே வணங்குகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. உங்களின் உழைப்பும் ஊக்கமான தேடலும் புரிகின்றது! நல்லதொரு தொகுப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
  15. அம்மாடி! தங்கள் அயராத அடக்கமான பணிகள் அசர வைக்கின்றன. ஒரு தட்டச்சு சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்தவர் இந்தளவுக்கு உயர்ந்ததின் இரகசியம் புரிந்தது. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?..

    25 ஆண்டுகளுக்கு முன்பான புகைப்படத்தையும் அந்த இளைஞரின் தோற்றத்தையும் மறக்க முடியாது. இன்று அந்த இளைஞர் சாதனைப்படைத்து முன்னுதாரணமாகத் திகழ்பவர் என்பதையும் மறுப்பதற்கில்லை.. (முனைவர் சி. பாலசுப்ரமணியம் ஐயா எனக்கும் பழக்கமானவர்)

    மர்மவீரன் ராஜராஜசோழன் -- புன்னகைக்க வைக்கும் தலைப்பு.

    தலைப்புகளைப் படித்து முடித்த பொழுதே அந்த பிர்மாண்டம் மனத்தில் தேங்கியது. பெளத்தம் பற்றி சிறப்பு ஆய்வுகள் உங்களுக்கு வெல்லக்கட்டி போலும்!
    நிறைய தெரிந்து கொள்ள ஆவல் உந்தித் தள்ளுகிறது!

    நீங்கள் ஐம்பெருங்காப்பிய 'மணிமேகலை'யை உரைநடைப் புதினமாக வார்த்துத் தந்தால் எவ்வளவு
    சிறப்பாக இருக்கும்?.. கற்பனையே கற்கண்டாக இனிக்கிறது!..

    வாழ்த்துக்கள், அய்யா!

    ReplyDelete
  16. 800 பதிவுகள்! மூன்று மகாமகங்கள் உழைப்பு! மலைப்பாக இருக்கிறது! தங்கள் சாதனையைப்போற்றுகிறேன்! மேன்மேலும் தங்கள் சாதனைகள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. Dear Sir, best wishes - to continue your services in all the areas, work, research, writing, family, friends ......regards, T Ashok kumar, AP/SOME/SASTRA,(Automobile Lab In-charge)
    (thro' email: ashokkumar201@hotmail.com)

    ReplyDelete
  18. தங்கள் பணி வளரட்டும்.. வாழ்க்கை சிறக்கட்டும்..
    கு.கி.கங்காதரன் (மின்னஞ்சல் வழியாக: gangadharan.kk2012@gmail.com)
    9865642333

    ReplyDelete
  19. Best wishes for completing 35 years service in Tamil University. I wish to continue your service further. By S.Sudalaimuthu, Rtd SBT Manager,
    (thro' email: ssudalaimuthu@gmail.com)

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறக்கட்டும்! சிலம்பின் சொல்/(s)word of anklet என்ற புது நாடகம் உலக நாடக விழா பாரிசில் நடத்தவுள்ளேன். 35 ஆண்டுவிழா காண்கிறது எனது எழினி தமிழ்நாடு நாடகக்குழு!
    (மின்னஞ்சல் வழியாக: dr.ravindran.athencode@gmail.com)

    ReplyDelete
  21. my blessings to u mr. jambulingam. urself and mr. jayakumar have reached a position fir to start a printed magazine. u can join some big tamil journal and continue ur work successfully.
    drtpadmanaban (drtpadmanaban@gmail.com)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்.Dr.R.Muralidharan, Thanjavur
    (மின்னஞ்சல் வழியாக: tumurali@gmail.com)

    ReplyDelete
  23. 35ஆம் ஆண்டில் பல்கலைக்கழகப் பணியில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். -முனைவர் தி.நெடுஞ்செழியன்
    முன்னைப் பணியாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
    (மின்னஞ்சல் வழியாக: tamilthinai@gmail.com)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகின்றேன். நட்புடன் பா.செல்வக்குமார்.
    (மின்னஞ்சல் வழியாக: jhrdt@rediffmail.com)

    ReplyDelete
  25. Dear Dr. Jambulingam, Very happy to hear from you that you have completed 34 years of your carrier in Tamil University and stepping into 35th year. I have great appreciation for your contribution to the Tamil society in terms of your translations and other write ups. I wish you live long to contribute more to the society and your name be inscribed in the history of Tamil. With best regards and warm greetings,
    RAJENDRAN Dr. S. Rajendran
    Professor in Linguistics
    Centre for Excellence in Computational Engineering and Networking (CEN),Amrita University
    Coimbatore 641 112
    (thro' email: rajushush@gmail.com)

    ReplyDelete
  26. மிக்க மகிழ்ச்சி. மோகன்ராஜ் ஸ்தபதி
    (மின்னஞ்சல் வழியாக : kuberanicons@yahoo.com)

    ReplyDelete
  27. Respected sir, regards. wishes for completing 34 years in admin and accolades of academic research. your are inspiration to academic staff as well.
    may many more come from your research.
    thanks. Dr. P. Srinivasan, Associate Professor
    School of Education, Central University of Tamil Nadu (thro' email: seenuthilaka@yahoo.com)
    Thiruvarur 610005
    Tamil Nadu

    ReplyDelete
  28. Dear Sir,Congrats. You inspire us !!!.
    Balaji (thro' email: cryobalaji@gmail.com)

    ReplyDelete
  29. Congrats! With best regards,
    N R Visalatchy. Telengana Museum, Director
    (thro' email: nrvishal45@yahoo.co.in)

    ReplyDelete
  30. அடக்கமான அறிவுத்தேடலுக்கு என் கரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு என்றும் உண்டு. முத்துப்பாண்டியன் சென்னை.

    ReplyDelete
  31. தங்கள் சாதனைகள் பிரமிக்கவைக்கிறது
    நீங்கள் பதிவராகத் தொடர்வதும்
    எங்கள் இணைப்பில் இருப்பது கூட
    நிச்சமாய் எங்களுக்கு வாய்த்த பெரும்பாக்கியமே
    சாதனிகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. வணக்கம் முனைவர் ஐயா !

    தங்கள் சாதனைகள் கண்டு வாயடைத்து நிற்கின்றேன்
    சிறந்த சேவை ஐயா ! தோன்றிற் புகழோடு தோன்றுக என்னும் வள்ளுவனின் பொய்யா மொழிக்கு தாங்கள் உதாரணம் மென்மேலும் தங்கள் சேவை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் வாழ்க நலத்துடன் !

    தம +1

    ReplyDelete
  33. அன்புள்ள ஜம்புலிங்கம் சார்,
    சில நாள்கள் கழித்து வாழ்த்துச் செய்தி அனுப்புவதற்கு மன்னிக்கவும். எனக்கும் இது பத்திரிகையாளனாக 35-வது ஆண்டு துவக்கம். மதுரைப் பதிப்பு தினமணியில் 04.08.1982-ல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன்.
    1985-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்.
    தமிழ் இந்து தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதில் பணி புரிகிறேன்.எனக்கும் இது 35-வது ஆண்டு.
    உங்கள் சாதனை சாதாரணம் அல்ல பெரிய 'ஜம்ப்' என்றே மகிழ்கிறேன்.
    உங்களுடைய பணியார்வமும் அனுபவமும் எல்லோருடனும் பகிரப்பட வேண்டும். நல்ல நூல் ஒன்றை எழுதி உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா நலனும் பெற்று நல்ல உடல், மன வளத்தோடு நீங்கள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் குழாத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.
    அன்புடன், வ. ரங்காசாரி, தி இந்து, தமிழ் நாளிதழ்,
    சென்னை, 21.08.2016
    (மின்னஞ்சல் rangachari.v@thehindutamil.co.in வழி)

    ReplyDelete
  34. தங்கள் பணி மகத்தானது !வாழ்த்துகள்!

    ReplyDelete
  35. அன்புள்ள முனைவர் ஜம்புலிங்கம் அவர்கட்கு
    வாழ்த்துக்கள் !!
    அன்புடன்,ம. திருமலை
    (மின்னஞ்சல் thirumalai1953@gmail.com வழியாக)

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  37. PaNiVaaNa VaNaKKaNGaL AiYaAa.!'
    idHu aVVaLaVu iYalBaaNadHallaVae.,
    NeeNGaL SeidHa tHoNdiRKKu
    YeNNaaZHuM NalaM VaaZHa
    YeNaNBaaNa VaaZHtHtHuKKaL.!'
    May God BleSS You.!'
    (மின்னஞ்சல் வழியாக : dongrydavid@gmail.com)

    ReplyDelete
  38. Congratulations.ramiah valliapapan
    (மின்னஞ்சல் வழியாக: rmvs1962@yahoo.com)

    ReplyDelete
  39. திரு பா.மதுசூதனன் (madhu31558@gmail.com வழியாக)
    அன்புளள நண்பர் ஜம்புலிங்கம் அவர்ளுக்கு,
    தாங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 34 ஆணடுகள் பணியாற்றியமைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலுவல் பணியில் இருந்து கொண்டு முனைவர் பட்டம் முடித்து, பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, பௌத்தம் தொடர்பான பல ஆய்வுகளும், ஆய்வுக் கடடுரைகளும் வெளிக் கொணர்ந்த தங்களது கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று மேலும் மேலும் புதிய கணடுபிடிப்புககள் மேற்கொண்டு மேலும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.
    அன்பன்,பா.மதுசூதனன்

    ReplyDelete