முகப்பு

30 December 2017

விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  600 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமாக உள்ளதை நான் பதிவிடும்போது உணர்கிறேன். விக்கிபீடியாவில் நான் எழுதுகின்ற பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் என்னால் எடுக்கப் பட்டவையாகும். அனைத்துப் புகைப்படங்களையும் பொதுவகத்தில் (wikipedia commons) பதிந்துவிடுவேன். தொடர்ந்து கட்டுரையோடு இணைத்துவிடுவேன்.  

ஜனவரி 2017இல் விக்கிபீடியா நடத்திய விக்கிக்கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு 253 பதிவுகளை மேற்கொண்டேன். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள், வைப்புத்தலங்கள் பட்டியலை முழுமையாக்கல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள், அறிஞர்கள் அறிமுகம் போன்றவை அடங்கும். இப்போட்டியில்  மூன்றாம் இடத்தினைப் பெற்றேன். 

முக்கிய பிரமுகர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் என்ற நிலைகளில் தங்கம் மூர்த்தி,  சு. நரேந்திரன்க. பாஸ்கரன்கிஅரங்கன்,  வீஜெயபால், வீஅரசு  ஆகியோரைப் பற்றிப் பதிந்தேன். முன்பே இருந்த நா.விச்வநாதன் கட்டுரையில், அவருடைய புகைப்படத்தினைச் சேர்த்து, கட்டுரையில் கூடுதல் செய்திகளைச் சேர்த்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் பதிவில் தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடம், நூலகக்கட்டடம் மற்றும் ஐந்து புலங்களின் கட்டடங்களைப் புகைப்படம் எடுத்து பதிவோடு இணைத்தேன். (ஆங்கில விக்கிபீடியாவில் Tamil University தலைப்பில் இக்கட்டடங்களின் புகைப்படங்களை இணைத்தேன்). அண்மையில் எழுதியவற்றில் குறிப்பிடத்தக்கனவற்றைப் பார்ப்போம்.


கல் நாதசுவரம்
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்குக் கோயில்களின் மீதான ஈடுபாடு சற்றே அதிகம். பள்ளிக்காலத்தில் படிக்கும்போதே கும்பேஸ்வரர் கோயில், சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில் பிரகாரங்கள் எனக்கும் உடன் பயின்ற நண்பர்களுக்கும் அடைக்கலம் தந்தன. அதிகமாகப் படித்தது கும்பேஸ்வரர் கோயில் உள் பிரகாரத்தில்தான். அப்போது அக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. அண்மையில் இக்கோயிலில் உள்ள கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதைப் பற்றிய செய்தியைப் படித்தபோது அதனைப் பற்றிய பதிவு விக்கிபீடியாவில் இருக்கிறதா என்று தேடினேன், இல்லையென்றதும் உடன் பதிந்தேன்.



காவிரி புஷ்கரம்
ஆகஸ்டு 2017 வாக்கில் காவிரியில் நடைபெறுகின்ற புஷ்கரம் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். இதற்கு முன்னால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைபெறுகின்ற மகாமகம் பற்றியே கேள்விப்பட்ட நிலையில் இது எனக்குப் புதிதாகத் தெரிந்தது. விழாவில் முக்கியத்துவத்தினை அறிந்தபின் காவிரி புஷ்கரம் என்ற தலைப்பில் புதிய பதிவு ஆரம்பித்தேன். இதற்காக பல முறை மயிலாடுதுறை சென்றுவந்தேன். மகாமகம் 2016 பதிவினை விக்கிபீடியாவில் எழுதிவந்தபோது பயன்படுத்திய உத்தியை இதிலும் பயன்படுத்தினேன். முடிந்தவரை அவ்வப்போது செய்திகளைப் படித்து, உடன் பதிவுடன் இணைத்து பதிவினை மேம்படுத்தினேன். தொடர்ந்து கிருஷ்ணா, கங்கா, ப்ராணஹிதா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, துங்கபத்திரா, சிந்து உள்ளிட்ட அனைத்து புஷ்கரங்களைப் பற்றியும் 10க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தொடங்கினேன். பதிவில் இந்தியாவில் புஷ்கரங்கள் என்ற உட்தலைப்பினையும் தெளிவிற்காக எழுதினேன்.


தேங்காய் சுடும் விழா
தேங்காய் சுடும் விழா தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாடப்படுவதைப் பற்றி நாளிதழ்களில் படித்தேன். காவிரி, அமராவதி ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தேன். இதுவரை நான் கேள்விப்படாததாக இருந்த நிலையில் அவ்விழாவினைப் பற்றி புதிய பதிவினை ஆரம்பித்தேன்.


நவநீத சேவை
கும்பகோணத்தில் பெரிய தெருவில் ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை பார்த்துள்ளேன். தஞ்சாவூரில் கருட சேவை என்ற விழா நடைபெறுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். வெண்ணெய்த்தாழி உற்சவம் என்றும் அழைக்கப்படுகின்ற இவ்விழாவின்போது தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் பல்லக்கில் வரிசையாக நான்கு வீதிகளையும் வலம் வருவதையறிந்து விழாவின்போது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து புகைப்படங்களை எடுத்து, உரிய செய்திகளை மேற்கோள்களுடன் இணைத்தேன். 

வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பதிப்பாளரும், தமிழறிஞருமான திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017இல் இயற்கையெய்தினார். 1000க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த இவர், பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். தானே முன்வந்து கேட்டு நூல்களைப் பதிப்பிப்பார். என் ஆய்வினைப் பாராட்டியவர்களில் இவரும் ஒருவர். அனைத்தும் வரலாற்றில் பதியப்படவேண்டும் என்றும் நூல் வடிவம் பெறவேண்டும் என்றும் விரும்பியவர். அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி பதிவை ஆரம்பித்தேன்.


துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
கும்பகோணம் வட்டத்தில் உள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் புகழ்பெற்றது. இக்கோயிலைக் காணவேண்டும் என்ற அவா இந்த ஆண்டு நிறைவேறியது. அதனைப் பார்த்து, உரிய விவரங்களுடன் பதிந்தேன். 

ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
இதே காலகட்டத்தில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவிலும் பகிர்ந்தேன். 20 ஆகஸ்டு 2017 அன்று ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் நான் ஆரம்பித்த, ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்த புகைப்படத்துடன் "உங்களுக்குத் தெரியுமா" (Did You Know?) பகுதியில் இடம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து, அந்த முதற்பக்கம் 6635 பேரால் பார்க்கப்பட்டதாக சக ஆகில விக்கிபீடியர் செய்தி அனுப்பியிருந்தார். 




என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 

47 comments:

  1. மிக அருமையான சேவை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. முனைவர் அவர்களின் சாதனை மலைக்க வைக்கிறது இன்னும் சிகரம் தொட மனம் நிறைந்த பிரார்த்தனைகளுடன்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அய்யா....

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  5. அருமை நல்ல பதிவுகள், இணையத்தில் படிப்பவர்கள் பயன் பெறுவர், வாழ்த்துக்கள் மேலும் மேலும் தங்கள் பணி தொடர்க

    ReplyDelete
  6. நான்கு ஆண்டுகளுக்குள் 600 விக்கிபீடியா பதிவுகள் மலைக்க வைக்கிறது, தங்கள் சாதனை. நல்ல செய்திகளை பதிவு செய்யப்பட வேண்டிய செய்திகளைத் தேடிப் பதிவு செய்தது மேலும் மலைக்க வைக்கிறது.

    எண்ணிக்கை வழியான சாதனை ஒரு தற்செயலான நிகழ்வு என்பதனை தங்கள் பதிவுகளின் தன்மை பறைசாற்றுகின்றன.

    ஆயிரத்திற்கும் தஞ்சைக்கும் நெருங்கிய பிணப்பு உண்டு. 600 பதிவுகள் என்ற தங்கள் சிகரம் மேலும் உயர்ந்து விரைந்து உயர்ந்து இன்னும் 200 நாட்களுக்குள் 1000 என்னும் தஞ்சை எண்ணைத் தொடும் என உறுதியாக நம்புகிறேன்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் பயன் தரும் பணி பாராட்டுக்குரியது. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் அயரா பணி தொடரட்டும்

    ReplyDelete
  9. அருமையான, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் பணியை சிரமேற்கோண்டு செய்து வருகி
    ன்றீர்.நீங்கள் ஒரு தனித் தேன் கூடமைக்கின்றீர். வணங்குகிறோம். இறையருள் துணை நிற்க!

    ReplyDelete
  10. அருமையான, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் பணியை சிரமேற்கோண்டு செய்து வருகி
    ன்றீர்.நீங்கள் ஒரு தனித் தேன் கூடமைக்கின்றீர். வணங்குகிறோம். இறையருள் துணை நிற்க!

    ReplyDelete
  11. அபாரமான சாதனை! . தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  12. பாராட்டுகள்....... பின்பற்ற ஆசை தான்.

    ReplyDelete
  13. தங்களின் சேவை தமிழுக்கு பெருமை.

    ReplyDelete
  14. இன்னும் பல பதிவுகள் வழங்கிட வேண்டுகின்றேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  15. மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  16. ரொம்ப பெருமையா இருக்கு சார் தமிழுக்கு தமிழரால் சேவை வணங்குகிறேன், வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர

    ReplyDelete
  17. ஐயா! இது மிகச் சிறந்த தமிழ்ச் சேவை மட்டுமில்லை வியப்பூட்டும் அருஞ்செயலும் கூட! மூன்றே ஆண்டுகளில் அறுநூறு கட்டுரைகள் - அதாவது ஓர் ஆண்டில் சராசரியாக இருநூறு கட்டுரைகள் - படைத்திருக்கிறீர்கள்! ஓர் ஆண்டின் மொத்த நாட்களே 365-தான்! வியக்கிறேன்! மலைக்கிறேன்! இரு கரம் கூப்பி வணங்குகிறேன்!

    ReplyDelete
  18. மின்னஞ்சல்வழி(nivethithavinpathivukal@gmail.com)
    அய்யாவிற்கு, வணக்கம்...!
    உங்களை போன்ற பெரியவர்களால் தான் இன்றைய இளைஞர்கள் தமிழின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள்.அய்யாவின் பனி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன்
    நிவேதிதா @கே.எஸ்.வேலு

    ReplyDelete
  19. மின்னஞ்சல் வழியாக (c.appandairaj@gmail.com)
    அன்புள்ள அய்யா, வணக்கம். வாழ்த்துக்கள். தங்கள் பணிமேலும் தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .அன்புடன், தஞ்சை அப்பாண்டைராஜ்

    ReplyDelete
  20. முனைவர் சா.உதயசூரியன் மின்னஞ்சல் வழியாக (suriyaudayam@gmail.com)சாதனை மேல் சாதனை

    ReplyDelete
  21. திரு ஈ.அன்பன் மின்னஞ்சல் வழியாக(anbumalar89@gmail.com)
    Vanakkam valthukkal ayya

    ReplyDelete
  22. அய்யா, வணக்கம்.
    என்னைப் பற்றியும் நீங்கள்தான் விக்கிப்பீடியாவில் எழுதினீர்கள் என்பதை நன்றியுடன் நினைத்துக் கைகுவிக்கிறேன்.
    2013இல் புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்ச்சங்கம்” நடத்திய பயிற்சிவகுப்பில் விக்கிப்பீடியா பற்றிய வகுப்பில் பயிற்த்சியாளராகத் தொடங்கிய தங்கள் பயணம் 2017இல் பயிற்றுநராகவும் தொடர்வதை நினைத்து மகிழ்கிறேன்.
    அதனாலேயே கணினித் தமிழ்ச்சங்க விழாவில், விக்கிப்பீடியா இயக்குநர் திரு இரவி சங்கர் அவர்களை அழைத்து, தங்களுக்கு விருதுவழங்கி மகிழ்ந்தோம். அது நாங்கள் பெற்ற பேறு!

    தங்களின் பணி ஒப்புயர்வற்றது. பின்பற்றவும் கடினமானது, போற்றுதற்குரியது.
    வணங்கி வாழ்த்துகிறேன்.
    பணிதொடர அன்புடன் வேண்டுகிறேன். வணக்கம்.
    தங்கள் அன்புள்ள,
    நா.முத்துநிலவன்,
    புதுக்கோட்டை

    ReplyDelete
  23. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில், தங்களுக்கான விருதை வழங்கியபின், அவ்விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தங்களின் அரிய பதிவுகளைப் பற்றி எடுத்துக் கூறி, அவர் தொடர்ந்து படிக்கும் தங்களின் பதிவுகளையும் சொல்லிப் பாராட்டியது மிக்க மகிழ்வைத் தந்தது. சிலர் இதுபோலும் பாராட்டுகள் விருது பெற்றதும் அத்தோடு காணாமல் போய்விடுவர் நீங்கள் தொடர்வது பெரிதும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  24. தொடர்க தங்கள் பணி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. உங்களின் பணி அபாரமானது ஐயா.
    வாழ்த்துக்கள் பல.
    தொடருங்கள்

    ReplyDelete
  26. பிரமிக்க வைத்த பணி. மனம் நிறைந்த பாராட்டுகள் ஜம்பு சார் !!!!!!!!!!

    ReplyDelete
  27. மிகவும் பயனுள்ள 600 கட்டுரைகளை, பழந்தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் பொக்கிசங்களை விக்கிப்பீடியாவிற்கு ஆக்கி உதவிய தங்கள் பெருந்தகமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..வளர்க நும் சேவை!!

    ReplyDelete
  28. அய்யா வணக்கம்.
    மூன்றரை ஆண்டுகளுக்குள் அறுநூறு பதிவுகளை விக்கிபீடியாவில் ஏற்றி சாதித்துள்ள தங்களின் அருஞ்செயலுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க வலைப்பதிவர் விழா நாளிலிருந்தே தங்களின் இத்தகு இலக்கியப் பணியினை உற்று நோக்கி வருகிறேன். மலைக்க வைக்கும் அரும்பணி. தொடர்ந்திட வாழ்த்துகிறேன். அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா

    ReplyDelete
  29. திரு ரமேஷ்குமார், பாண்டிச்சேரி (https://www.facebook.com/rameshphotographer வழி) மூன்றரை வருடங்களில் 600 பதிவுகள் (கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு) குறுகிய நாட்களில் நீண்ட பணி உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்...
    தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் உங்கள் பெயர் நிலைத்திருக்கட்டும்...

    ReplyDelete
  30. தங்கள் விக்கிபீடியா பணி, தமிழுக்கும், தமிழ்க்கணினித் துறைக்கும் தாங்கள் செய்திட்ட மேலான தொண்டாகும். விக்கிபீடியாவில் எழுதி வெளியிடுவது சாதாரணமானதல்ல. அங்கு ஆயிரம் நிபந்தனைகளும், சரிபார்ப்புகளும் இருக்கும். மேலெழுந்தவாரியாக எழுதிப் போய்விட முடியாது. தங்கள் பெருமுயற்சி, இன்னும் பல்லாயிரம் இளைஞர்களுக்குத் தூண்டுகோலாக இலங்குவது கண்கூடு. வாழ்த்துக்கள் ஐயா!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
  31. தமிழ் விக்கிபீடியாவில் உங்களது 600 பதிவுகள் என்பது ஒரு பெரிய சாதனை. பயன் கருதாத உங்களது தமிழ்த் தொண்டினுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ஒருநாள், புதுக்கோட்டையில், ஒரு கணினிப் பயிற்சி வகுப்பில் தங்களை முதன்முதல் சந்தித்ததும்; அன்றைய தினம் நடந்த, தமிழ் விக்கிபீடியா வகுப்பில், தாங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டதும், மற்றும் இது சம்பந்தமாக, தங்களது ஐயப்பாடுகளை கேட்டதும் நினைவில் வருகின்றன.
    உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். ஆங்கிலப் புத்தாண்டு – 2018 வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. தங்கள் பணி தொடர வேண்டும்
    தமிழும் உலகில் மின்ன வேண்டும்
    தாங்கள் நீடூழி வாழ வேண்டும்
    வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
  33. அன்பருக்கு என்னைப்பற்றியும் குடந்தையில் உள்ள சிவகுருநாதன் நூல்நிலையம் பற்றியும் விக்கியில் வெளியிட்டிருப்பது நன்றிக்குரியது. வாழ்த்துகள். மேலும் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    600வது பதிவு என்ற சாதனைக்கு இனிய வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  36. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
  37. 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா .இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்....
    விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுதியும், அவற்றைபற்றி இங்கே பகிர்ந்தும், எனது ஆர்வத்தை தூண்டிஇருக்கிறீர்கள்.. அருமையான பணி.. நன்றி...

    ReplyDelete
  39. Mr G.M. Balasubramaniam
    (thro: gmbat1649@gmail.com)
    ஐயா வணக்கம் விக்க்பீடியாவில் உங்கள் பணி பெருமை கொள்ளத்தக்கது. என் பெயரும் வருவதாக இருந்து வந்து மறைந்தது உங்கள் பணியில் இருக்கும் இடர்பாடுகளைப்பற்றி தெரிவித்தது. வாழ்த்துகள்,

    ReplyDelete
  40. Mr Solachy, Poet (thro: solachysolachy@gmail.com)
    வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
  41. வணக்கம் சகோதரரே

    நலமா? நீண்ட நாட்கள் கழித்து உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்வடைகிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    தங்களுடைய சாதனைகளை பற்றி படித்தறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
    விக்கி பீடியாவில் 600 வது பதிவைகண்ட தங்களது சாதனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் தங்களது அயராத பணி தொடர ஆண்டவனை உளமாற பிரார்த்திக்கிறேன்.
    இத்தனை பணி நடுவிலும் என் தளம் வந்து என் எழுத்தை ஊக்குவித்து பாராட்டும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  42. மிகப்பெரிய அரிய சாதனையைப் படைத்துள்ளீர்கள் ஐயா.
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  43. வாழ்த்த வயதில்லை | பாராட்டுக்கள் அய்யா | மென்மேலும் கட்டுரைகளை எழுதி சாதனை படைக்க வேண்டுகிறேன்

    ReplyDelete