முகப்பு

26 January 2019

விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். வழக்கம்போல புகைப்படங்களை பொதுவகத்தில் (wikipedia commons) பதிந்துவருகிறேன். தமிழில் வெளிவராத, தேவையான என கருதப்படுகிற தலைப்புகளில் தொடர்ந்து எழுத முயற்சித்து வருகிறேன். அண்மையில் எழுதிய சில பதிவுகளைக் காண்போம்.

முதல் உலகப்போர் நிறைவுற்று 100 ஆண்டுகள் நிறைவான நிகழ்வு 11 நவம்பர் 2018இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்தொடர்பாக எழுதப்பட்டதுதான் வரலாற்று நிகழ்வுகள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்ற 11.11.11 நூற்றாண்டு நினைவு என்ற தலைப்பிலான பதிவு. 

மகாமகத்தின்போது கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுதும்போது நான் எழுத விடுபட்டது பாடகச்சேரி சுவாமிகளைப் பற்றிய பதிவு. அண்மையில் நேரில் அங்கு சென்று பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்ச்சாலை என்ற பதிவினை ஆரம்பித்தேன். பாடகச்சேரி சுவாமிகள் என்ற முதன்மைக்கட்டுரையில் அவரைப் பற்றிய விவரங்கள் காணப்பட்டன. இருப்பினும் கூழ்ச்சாலை பற்றிய பதிவின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு தொடங்கப்பட்டு, அவருடைய புகைப்படம் இரு பதிவிலும் சேர்க்கப்பட்டது. 

அறிஞர்கள் என்ற நிலையில், தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அக்டோபர் 2018இல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற கோ.பாலசுப்பிரமணியன் அவர்களைப் பற்றி நாளிதழ் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பதிவு ஆரம்பித்தேன். தொடர்ந்து அவருடைய புகைப்படத்தை எடுத்து பதிவில் இணைக்கவுள்ளேன். அதுபோன்று தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான, தஞ்சையைச் சேர்ந்த சி.எம்.முத்து அவர்களைப் பற்றி விக்கிபீடியாவில் பதிவுகள் இல்லாததைக் கண்டேன். அவரைப் பற்றிய பதிவினைத் தொடங்கினேன். விரைவில் அவரைப் புகைப்படம் எடுத்து, இணைக்கவுள்ளேன்.


அண்மையில் துவங்கப்பட்ட பதிவுகளில் முக்கியமான பதிவாக நான் கருதுவது ஒற்றுமைக்கான சிலை என்ற தலைப்பில் அமைந்த பதிவாகும். சிலை திறக்கப்பட்ட 31 அக்டோபர் 2018 அன்று, ஆங்கில விக்கிபீடியாவில் அமைந்திருந்த கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு, இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வு நடைபெறும்போதே பதிதல் என்ற நிலையில் கோயில்களின் குடமுழுக்கினை அதே நாளில் பதிந்தபோதிலும், இவ்வாறான ஒரு பதிவினை இப்போதுதான் முதன்முதலாகப் பதிகிறேன். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த விடுதலைச் சிலை என்ற தலைப்பில் அமைந்த சுதந்திரதேவி சிலை கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு பதிவிட நினைத்தேன். ஆனால் ஆங்கில விக்கிபீடியாவில் Statue of Unity என்ற தலைப்பிலான கட்டுரையில் அதிகமான செய்திகள் இருந்ததால் அதனையே மொழிபெயர்த்து, கூடுதல் விவரங்களை பதிந்த நாளிலேயே பெற்று இணைத்தேன்.

ஆங்கில வெளிநாட்டு இதழ்களில் சிலவற்றைப் பற்றிய பதிவுகள் தமிழில் இல்லாத நிலையில் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான், லண்டனிலிருந்து வெளிவரும் டேப்ளாய்ட் சன், மற்றும் தி கார்டியன் வீக்லி, உள்ளிட்ட இதழ்களைப் பற்றி ஆங்கில விக்கிபீடியா பதிவினை அடிப்படையாக வைத்து பதிவுகளைத் தொடங்கினேன். இந்த மூன்று இதழ்களும் நான் வாசித்து வருகின்ற இதழ்களாகும்.



திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 80ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடிய தருணத்தில், அகில இந்திய வானொலி நிலையம் பற்றி பதிவு இருக்கின்றதா எனத் தேடியபோது அது இல்லாத நிலையில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் என்ற தலைப்பில் புதிய பதிவினைத் தொடங்கினேன். சமய விழாக்கள் என்ற நிலையில் மதுரையில் நடைபெறுகின்ற படியளக்கும் விழா என்ற விழாவினைப் பற்றிய பதிவினை ஆரம்பித்ததோடு, அவ்விழா மானாமதுரை மற்றும் திண்டுக்கல் நடைபெறுவது தொடர்பான செய்திகளையும் சேர்த்தேன். அவ்வாறே ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அளித்தது தொடர்பான விழா பட்டீஸ்வரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அவ்விழா நடைபெற்றபோது நேரில் சென்று, முத்துப்பந்தலுடன் உடன் வந்து, புகைப்படங்களை இணைத்து, முத்துப்பந்தல் விழா என்ற தலைப்பில் புதிய பதிவினைத் தொடங்கினேன்.
அண்மைக்காலத்தில் மிகவும் முக்கியப்பணியாக நான் கருதியது தேவார வைப்புத்தலங்கள் என்ற தலைப்பில் 147 கோயில்கள் கொண்ட பட்டியலை உருவாக்கி, அதற்கேற்றவாறு தேவார வைப்புத்தலங்கள் என்ற வார்ப்புருவினை அமைத்து 90 விழுக்காட்டுப் பணியினை நிறைவு செய்துள்ளேன். பட்டியலில் இல்லாத கோயில்களைப் பற்றி புதிய பதிவிட்டும், பட்டியலில் உள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளை மேம்படுத்தியும் செய்யும் பணியினை விரைவில் நிறைவு செய்யவுள்ளேன்.

ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
இதே காலகட்டத்தில் ஆங்கில விக்கிபீடியாவில் Tiruverkadu Devi Karumariamman Temple என்ற தலைப்பில் அங்கு சென்று வந்த அடிப்படையில் புதிய கட்டுரை ஒன்றை ஆரம்பித்தேன். புகைப்படங்களை அந்தந்த கட்டுரைகளில் இணைக்கும் பணியினை மேற்கொண்டேன். 

என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 
மார்ச் 2017 விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்ப் பல்கலைக் கழக கண்காணிப்பாளர் : தினமணி
டிசம்பர் 2017 : விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு 


------------------------------------------------------------------------------------
அன்புடையீர், வணக்கம். 
நாளை நடைபெறவுள்ள என் இளைய மகனின் திருமணத்திற்கு 
உங்கள் வருகையையும், வாழ்த்தையும் அன்போடு எதிர்பார்க்கிறேன்.
மணமக்கள் : ஜ. சிவகுரு - சே. சிந்துமதி
மண நாள், நேரம் : 27 ஜனவரி 2019, காலை 9.00 - 10.30
நிகழ்விடம் : ஷண்முகப்பிரியா திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
அன்புடன், ஜம்புலிங்கம்
------------------------------------------------------------------------------------

21 comments:

  1. 700வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.




    மணமக்கள் : ஜ. சிவகுரு - சே. சிந்துமதி க்கு எங்கள் வாழ்த்துக்கள் ஆசிகள்.
    இறைவன் அருளால் பல்லாண்டு வாழவேண்டும் இனிதாக.


    பாடகச்சேரி சுவாமிகள் அதிஷ்டானம் போய் படங்கள் எடுத்து வந்தேன், இன்னும் போடவில்லை பதிவு.

    ReplyDelete
  2. பாடல்பெற்ற தலங்கள் பார்த்து விட்டோம், இனி வைப்புத்தலங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்து கொஞ்ச தலங்கள் பார்த்தோம், அதற்குள் மதுரை வந்து விட்டோம்.

    ReplyDelete
  3. விக்கிபீடியாவில் 700 பதிவுகள் மிரப்பெரிய சாதனையே... வாழ்த்துகள்.

    மணமக்கள் : ஜ. சிவகுரு - சே. சிந்துமதி எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. விக்கிப்பீடியாவில் 700 வது பதிவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    மணமக்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    விக்கி மீடியாவில் 700 பதிவுகள் தந்து சாதித்திருக்கும் தங்கள் சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    தங்கள் சாதனை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்கள் இளையமகனின் திருமண செய்தி கண்டும் மகிழ்ந்தேன். மணமக்கள் ஜ.சிவகுரு சே.சிந்துமதி இருவரும் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க நலம். அழைப்புக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மணமக்களுக்கு ஆசிகளும், வாழ்த்துகளும்..

    உங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்....

    ReplyDelete
  7. மகத்தான சாதனை ஐயா...

    மணமக்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  11. விக்கிபீடியாவில் 700 படைப்புகள் படைத்த சாதனைக்கு வாழ்த்துக்கள்.

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. விக்கிபீடியாவில் தங்களது நான்கு இலக்க பதிவினை (1000)விரைவில் எதிர் பார்க்கிறேன்.
    மணமக்களை நேரில் வாழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.நன்றி

    ReplyDelete
  13. இந்த அருஞ்செயலுக்கு பாராட்டுக்கள் ஐயா.
    இடைவிடாத ஊக்கமின்றி முயற்சியின்றி இது சாத்தியமில்லை . மணமக்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. 700 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மணமக்கள் நீடுழி வாழ அன்பும் ஆசிகளும் :)

    ReplyDelete
  15. 700வது விக்கிபீடியா பதிவுக்குப் பாராட்டுகள் மணமக்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. திரு தருமி (dharumi2@gmail.com மின்னஞ்சல் வழியாக) :
    ஐயா. இந்த விஷயத்தில் உங்களைக் காப்பி அடிக்கணும்னு ஆசைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். ஆனால் இன்னும் ஏதும் ஆரம்பிக்கவில்லை. என்னை அதில் “குப்புறத் தள்ளி” விடுங்களேன்..........பாராட்டுகள்

    ReplyDelete
  17. திரு பரிவை சே.குமார் (kumar006@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    வாழ்த்துக்கள் அய்யா.தொடரட்டும் தங்கள் பணி...

    ReplyDelete
  18. திரு கங்காதரன் (gangadharan.kk2012@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    மிக்க மகிழ்ச்சி ஐயா... நன்றி

    ReplyDelete
  19. திரு பட்டாபிராமன் (vijayakoti33@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அயற்சியில்லாமல் முயற்சிகள் தொடரட்டும். எதிர்கால சந்ததிகளுக்கு தகவல்கள் போய் சேரட்டும்.

    ReplyDelete
  20. 700 பதிவு!!! அடேங்கப்பா!!! உண்மையிலேயே இது மிகப் பெரிய செயல் ஐயா! அதுவும் ஒரே மாதிரி இல்லாமல் விழாக்கள், நிகழ்வுகள், அறிஞர்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் நீங்கள் பதிந்து வருவது சிறப்பானது.

    சிறியேன் முதன் முதலில் என் இணையப் பயணத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவில்தான் தொடங்கினேன். தற்பொழுது ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ எனும் தலைப்பில் காணப்படும் விக்கிப்பீடியா கட்டுரை ‘ஓரெழுத்தொருமொழி’ எனும் தலைப்பில் நான் எழுதியதுதான். நான் இணையத்துக்கு வந்த புதிதில், விக்கிப்பீடியாவில் அப்படி ஒரு கட்டுரையே இல்லை. நான் அதை எழுதியதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதன் பின் சில கட்டுரைகளை மேம்படுத்தியும், பல கட்டுரைகளைத் திருத்தியும் வந்தேன். ஆனால் வலைப்பூ, பேசுபுக்கு, துவிட்டர் என வந்த பிறகு விக்கிப்பீடியா பக்கம் செல்ல முடியவில்லை. தாங்கள் இருபுறமும் பங்களித்து வருவது வியப்புக்குரியது. பாராட்ட வயதில்லை; வணங்குகிறேன்!

    ReplyDelete
  21. அயராத உழைப்பு ஐயா. தங்களைப் போன்றோர்களால் தமிழ் இன்னும் செழிக்கும்

    ReplyDelete