முகப்பு

10 December 2015

கும்பேஸ்வரர் கோயில்

கும்பகோணத்தில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள நிலையில் அடுத்த கோயிலான கும்பேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம்.

17.10.2015 அன்று நவராத்திரியை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். 

மூன்றாம் பிரகாரத்தில் வன்னி மரம், முன்பாக விநாயகர். இப்பிரகாரத்தில் கும்ப முனிவர், விநாயகர். இரண்டாம் பிரகாரம் செல்லும் முன்பாக முற்றவெளி விநாயகர், பாலதண்டாயுதபாணி சன்னதி. நுழைந்ததும் வலப்புறம் லட்சுமிநாராயணப் பெருமாள் சன்னதி. கொடி மரம், நந்தி, பலிபீடம்.  அடுத்த கோபுரம் வாயிலாகச் செல்லும்போது நிலைக்காலில் பௌத்தம் இப்பகுதியில் தழைத்திருந்தமைக்கான கல்வெட்டு. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர். தொடர்ந்து நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் உள்ளிட்ட பலர் உள்ளனர். தென்மேற்குப் பகுதியில் வலஞ்சுழி விநாயகர், பிட்சாடனர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி,  சரசுவதி. வடக்குப் பிரகாரத்தில் மங்களாம்பிகை சன்னதி. வாயிலின் இரு புறமும் ஜெயா, விஜயா.  கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சட்டநாதர் சன்னதி. கோயிலை வலம் வந்த நாம் நவராத்திரி கொலுவைப் பார்ப்போம்.  


1970களின் இடையில் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரிப்பருவம் வரை கும்பகோணத்தில் நவராத்திரியின் போது நண்பர்களுடன்  கும்பகோணத்திலுள்ள கோயில்களுக்குச் செல்வது வழக்கம். பின்னர் பல முறை மகன்களுடனும், மனைவியுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் 40 வருடங்களுக்கு முன்பாக முதன்முதலாக நண்பர்களுடன் கோயில்களைச் சுற்றி வந்தது நினைவிற்கு வரும். இம்முறையும் அப்படியே. மகாமகத்திற்காக தீர்த்தவாரி காணும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.







மூலவராக கும்பேஸ்வரர் உள்ள இக்கோயிலில் உறையும் இறைவி மங்களாம்பிகை. இக்கோயில் குடமுழுக்கு 5.6.2009 அன்று நடைபெற்றுள்ள நிலையில் மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மின்னொளி அலங்காரத்தில் கோயில் மிக அழகாக இருந்தது. முதன்மை வாயிலைக் கடந்து கொடி மரத்தின் அருகில் நின்று வணங்கிவிட்டு உள்ளே சென்றோம். 


வலப்புறம் தொடங்கி வரிசையாக ஆங்காங்கே ஆளுயர கொலு பொம்மைகளைக் கண்டோம். புராணக்கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பொம்மைகள் இயற்கையாகவே  இருந்தன.




அழகாக அமைக்கப்பட்டிருந்த  இந்திர சபையினைக் கண்டோம். இளம் வயதில் பார்த்தபோது இருந்த இன்பத்தை இப்போதும் உணர முடிந்தது.
நவராத்திரி கொலுவைப் பார்த்துக்கொண்டுவரும்போது நெட்டியால் ஆன மகாமகக்கோயில் அமைப்பைப் பார்த்தோம். மிகவும் அழகாக இருந்தது.உள்ளே கொலுவின் அழகினைப் பார்த்துவிட்டு மூலவரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் செய்துவிட்டு, ராஜ கோபுரத்தினைக் கடந்து சன்னதிக்கு வந்தோம். சன்னதியில் இருந்த கடைகளில் நவராத்திரி கொலு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்ற அந்த கொலு பொம்மைகளை பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது. கிளம்ப மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.








அடுத்த களப்பணியின்போது எடுத்த புகைப்படங்கள் இதோ. நான்கு வாயில்களும், தூண் மண்டபமும், குளமும் இவற்றில் உள்ளன.















---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை,  கும்பேசுவரர் கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992

17.1.2016இல் மேம்படுத்தப்பட்டது. 

17 comments:

  1. தரிசனம் அருமை - அற்புதமான படங்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. அழகிய புகைப்படங்களுடன் வழக்கம் போல விளக்கம் நன்று
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. சிறப்பானதோர் தரிசனம். ஆளுயர கொலு பொம்மைகள்... நேரில் பார்க்க வேண்டும் எனும் ஆவல் வந்தது......

    ReplyDelete
  4. அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு. கும்பேஸ்வரர் கோவில் பற்றிப் படித்ததும் டி எம் சௌந்தரராஜன் பாடிய "குயில் பாடும் கும்பகோணம் கோவில் கண்டேன்" பி சுசீலா பாடிய "ஆலவாய் அழகனே" பாடலும் நினைவுக்கு வந்தன!

    தம +1

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா !

    நாங்கள் எல்லாம் காணக் கிடைக்காத கோவில்களைக் கண்முன்னே காட்டினீர்கள் நன்றி கொலு பொம்மைகள் ராஜ கோபுரம் உருவச் சிலைகள் அழகு ...
    பதிவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
  6. உள்ளத்தைச் சுகப்படுத்தும்
    சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. அருமையாக இந்த கோயிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. கரந்தையில் கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில்,
    ஒரு காலத்தில் பார்த்த கொலு காட்சிகள்
    நினைவில் தோன்றுகின்றன ஐயா
    தம +1

    ReplyDelete
  9. விளக்கம் புகைப்படங்கள் இரண்டும் அருமை சார்.

    ReplyDelete
  10. படங்களும் பதிவும் அருமை!

    ReplyDelete
  11. தொடருங்கள்..தொடருகிறேன்.

    ReplyDelete
  12. தொடருங்கள்..தொடருகிறேன்.

    ReplyDelete
  13. புயல், மழை, வெள்ளம் என்று படங்களைப் பார்த்து பார்த்து மனம் வெதும்பிய இந்த நேரத்தில், மனதிற்கு ஆறுதலான கோயில் படங்கள். மகாமகத்திற்குப் பிறகு இந்த கோயிலுக்கு போகலாம் என்று இருக்கிறேன். உங்கள் பதிவிலுள்ள தகவல்கள் எனக்கு உதவும். நன்றி அய்யா!

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    நிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. ஆளுயரம் உடைய பொம்மைகளா! அட வியப்பாக இருக்கின்றதே. பார்க்க வேண்டும் போலத் தோன்றுகின்றது. அழகிய புகைப்படங்களுடன் விளக்கங்கள் நன்று.

    ReplyDelete
  16. தங்களின் தயவால் தொடர்ந்து பல கோவில்களை தரிசித்து வருகிறோம். பகிர்வுக்கு நன்றி அய்யா!
    த ம 13

    ReplyDelete
  17. மெகா கொலுவை கண்டு ரசித்தேன் !

    ReplyDelete