30 November 2015

ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

12 மகாமக சைவத் தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஆறு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஏழாவது கோயில். தொடர்ந்து மகாமகத்திற்கு முன்பாக மீதி பார்க்கவுள்ள கோயில்களுக்கும் செல்வோம்.
   
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் காண்பதற்காக 22.10.2015 அன்று சாக்கோட்டை சென்றுவிட்டு கும்பகோணம் வந்து ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கண்டேன். மகாமகத் தீர்த்தவாரி கோயில்கள் இரண்டை ஒரே நாளில் அடுத்தடுத்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.

கும்பகோணம் நகரில் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மிக அருகில் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான, மிகப்பழமை வாய்ந்த நாகேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகுகால காளியம்மன் சன்னதி உள்ளது. அந்நிலையில் ராகுகாலக்காளியம்மன் கோயில் என்றாலே பலருக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள மூலவர்  ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.




 
கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தைக் கடந்து கருவறைக்குச் செல்லும்போது வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். இறைவன் சன்னதியிலிருந்தே அம்மனை தரிசிக்க முடியும். இறைவனையும் அம்மனையும் தரிசித்துவிட்டு வலம்வரும்போது யாகசாலை பூசைகள் நடைபெற்றுவருவதைக் காணமுடிந்தது.  
 


திருச்சுற்றில் சுற்றிவரும்போது ராகுகால காளியம்மன் சன்னதியைக் காணமுடிந்தது. இச்சன்னதியில் ராகுகால வேளைகளில் சிறப்பு பூசை நடைபெறுவதாகவும் அதிகமான எண்ணிக்கையில் வேண்டுதலுக்காகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் பக்தர்கள் வருவார்கள் என்றும் கூறினர்.

குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கோயில் முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. குடமுழுக்கிற்கு சற்று முன்பாக பக்தர்கள் பூசைக்குரியனவற்றை தட்டில் வைத்து கோயிலைச் சுற்றிவந்து யாகசாலையில் பூசை நடைபெறுமிடத்தில் தந்தனர். 
சிறிது நேரத்தில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்த நிலையில் கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 

இதுவரை கோயிலைச் சுற்றி வந்த பின்னர் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக கோயிலின் வெளியே வந்தேன். விமானக்கலசங்களுக்கும் பூஜை செய்யப்பட்டு குடமுழுக்கு இனிதாக நிறைவேறியது. நிறைவாக சூடமேற்றப்பட்டபோது பக்தர்கள் பக்தியில் திளைத்தனர்.  

ஒரே நாளில் இரு குடமுழுக்கினைக் கண்ட நிலையில் கும்பகோணத்திலிருந்து மன நிறைவோடு கிளம்பினேன். மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கு கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள விரைவில் மற்ற கோயில்களுக்குச் செல்வோம்.
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8,30

---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப் பெருவிழா 2004, கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014

23 comments:

  1. உங்களுடன் சேந்து எங்களுக்கும் தரிசனம்! நன்றி.

    ReplyDelete
  2. அருமையான கும்பாபிஷேக தரிசனம்..

    நேற்றைய நிகழ்வினை அறிந்திருக்கவில்லை.. எனினும், தங்கள் பதிவின் வாயிலாக இனிய தரிசனம்..

    ReplyDelete
  3. உங்கள் பணி வியக்க வைக்கின்றது அய்யா...மறைந்து கிடக்கும் கோயில்கள் உங்களால் உலகறியட்டும்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவின் மூலம் நிறைய கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது சார்.

    ReplyDelete
  5. உடன் பயணிக்கிறோம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  6. உங்களுடன் சேர்ந்து நாங்களும்,,,,

    நன்றி ஐயா

    ReplyDelete
  7. நாத்திகனே ஆயினும் உங்களது வர்ணனை ஈர்த்தது. போகவும் ஆலயங்களில் உள்ள கூரை ஓவியங்களின் தீராக் காதலன் நான்

    ReplyDelete
  8. கிடைக்காத இறை தரிசனம் யாவும்
    தங்களால் கிடைக்கப் பெற்றோம்.
    இறை இன்பம் கிட்டி வருகிறது
    தங்களின் அருள் எழுத்தால்!
    த ம +
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. கோபுர தரிசனமே புண்ணியம் என்பர்;நீங்களோ கும்பாபிஷேக தரிசனங்கள் பல தொடர்ந்து செய்து அது பற்றிப்பகிரவும் செய்கிறீர்கள்!
    நன்றி

    ReplyDelete
  10. கும்பாபிஷேகம் காண வைத்த முனைவர் அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  11. வணக்கம் முனைவர் ஐயா !

    தேடிக் கிடைக்காத தெய்வ தரிசனம் எல்லாம் திகட்டத் தருகின்றீர்கள் இறையருள் நல்கட்டும் எல்லோருக்கும்
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
  12. தங்களுடன் பயணித்த உணர்வு
    நன்றி ஐயா
    தம+1

    ReplyDelete
  13. தங்கள் மூலம் கும்பாபிஷேகத்தைக் கண்டேன்.
    த ம 7

    ReplyDelete
  14. சிறப்பான தகவல்களுடன் படங்களும் அருமை...மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  15. சிறப்பான தகவல்களும் அழகிய புகைப்படங்களுமான பகிர்விற்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  16. படங்களும் தகவல்களும் நிறைவைத் தந்தன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  17. படங்களும் விவரணைகளும் உங்களுடன் பயணித்த உணர்வை ஏற்படுத்தியது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அருமையான தரிசணம்... மிக அழகான படங்களுடன் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  19. தமிழோடு இணைந்த
    கோவில் வரலாறுகளை, நிகழ்வுகளைப் பகிரும்
    தங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  20. கோவிலுக்கு என்னை கைப்பிடித்து அழைத்து சென்றிருக்கிறீர்கள்... உங்கள் புனிதமான பணியைக் தொடருங்கள்...

    ReplyDelete
  21. கும்பகோணம் இராகுகால துர்க்கை படம் அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன்.ஜ.சந்தானம்.

    ReplyDelete