20 November 2015

கம்பட்ட விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை ஐந்து கோயில்கள் பார்த்துள்ள நிலையில் ஆறாவது கோயிலுக்குச் செல்வோம்.

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. அக்கோயில்களில் தீர்த்தவாரி சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பயணத்தில் நாங்கள் சென்ற கோயில்களில் இதுவரை மூன்று சிவன் கோயில்களைப் பார்த்த நிலையில் இப்பதிவின் வழியாக இதே நாளில் குடமுழுக்கு கண்ட நான்காவது கோயில் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.


தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென்மேற்கு திசையில், மௌனசுவாமி மட வளைவுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் படித்த நிலையில் (1972-75) இக்கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும்.  

அதற்கு அடுத்து உள்ளே செல்லும்போது அழகான ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள மண்டப முகப்பில் இறைவன், இறைவியும் காளையின் முன்பாக அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அருகே விநாயகரும் முருகனும் உள்ளனர். பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இங்கு விழுந்ததால் இத்தலத்தை மாலதிவனம் என்றழைக்கின்றனர். முகப்பின்கீழே மாலதி வனம் என்று எழுதப்பட்டிருந்தது. 

கருவறையில் கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்தோம்.  தஞ்சாவூரையும், பழையாறையையும் சோழர்கள் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சிசெய்த காலத்தில் இங்கு பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் என்றால் பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம் என்று பொருள்) இருந்ததால் மூலவரை கம்பட்ட விஸ்வநாதர் என்றழைக்கப்படுவதாக அறிந்தோம். பின்னர் இறைவியைத் தரிசித்தோம். பின்னர் கும்பாபிஷேகம் கண்ட இரு விமானங்களையும் கண்டோம். இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30

கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்த பின்னர் தஞ்சாவூருக்குக் கிளம்ப ஆயத்தமான போது அருகில் உள்ள, அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன திரௌபதியம்மன் கோயிலுக்குச் சென்றோம். கும்பகோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  திரௌபதியம்மனை தரிசித்துவிட்டு மன நிறைவுடன் கிளம்பினோம்.


 
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

18 comments:

 1. தங்களின் அயரா பணிகளுக்கு இடையிலும் பயணம் செய்வது
  வியக்க வைக்கிறது ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
 2. தஞ்சாவூரில் தடுக்கி விழுந்தால் கோவில் மீதுதான் விழவண்டும் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். நானிம் தஞ்சை மாவட்டத்தில் பல கோவில்களை தரிசித்தபோது அவைகளின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். சிறிய கிராமங்களில் கூட பெரிய கோவில்கள் உள்ளன.

  ReplyDelete
 3. தங்களின் பயணத்தால் பல சிறப்புகளை அறிய முடிகிறது ஐயா... நன்றி...

  ReplyDelete
 4. தங்களின் பதிவின் வழியாக குடமுழுக்கு கண்ட கம்பட்ட விஸ்வநாதர் கோயில் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். தற்போதைய இங்கு நிலவும் சுழலில் மனதிற்கு மிகவும் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித் தந்தது. நன்றி அய்யா.
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 5. உங்கள் கட்டுரைகளை பார்த்த பின் தான் நான் கோவில்களை பற்றி எழுத ஆரம்பித்தேன்.நன்றி

  ReplyDelete
 6. முனைவரின் பயணம் எங்களுக்கும் பயனுள்ளதே.... தகவலுக்கு நன்றி
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 7. நாங்களும் பயணித்தோம், பல கோயில்களின் சிறப்புகள் அறிய முடிகிறது.
  நன்றி ஐயா,

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 9. முனைவர் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 10. தகவல்களுடன் படங்களும் சிறப்பு. காணக்கிடைத்தற்கு மிக்க நன்றி ஐயா..

  ReplyDelete
 11. அன்புள்ள அய்யா,

  கம்பட்ட விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் படங்களுடன் பல சிறப்புகளை அறியத் தந்தது கண்டு மகிழ்ச்சி.

  த.ம.7

  ReplyDelete
 12. =====================================================================

  தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ===========================================================================


  படித்தேன். தரிசித்தேன்.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்திற்கு எழுதிவிட்டேன். நன்றி.

   Delete
 13. வணக்கம்
  ஐயா
  படங்களுடன் அற்புத விளக்கம் நேரில் வந்து தரிசனம் செய்ததுபோல ஒரு வித உணர்வு...ஐயா... த.ம9
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. கோவிலின் சில கோபுரங்கள் வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. சிறப்பான பதிவு.
  த ம 9

  ReplyDelete
 15. படங்களுடன் கோவில் குறித்து அறியத் தந்தீர்கள் ஐயா...

  ReplyDelete
 16. ஆயிரம் குடமுழுக்குகள் கண்டிருப்பீர்கள் போலிருக்கிறதே;நன்று

  ReplyDelete
 17. உங்கள் மூலம் நாங்களும் குடமுழுக்கு நடந்த கோவில்களை தரிசிக்க முடிகிறது. மிக்க நன்றி ஐயா.

  படங்கள் அனைத்தும் நன்று.

  ReplyDelete