முகப்பு

12 March 2016

மகாமகம் : நினைவுப்பதிவுகள் 30+

1968, 1980, 1992, 2004, மகாமகங்களைக் கண்ட நிலையில் மகாமகத்தில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், பிறந்த மண் கும்பகோணம் என்ற நிலையிலும் ஐந்தாவதாகக் காணும் 13-22 பிப்ரவரி 2016இல் நிகழ்ந்த மகாமகத்தை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். பெரும்பாலானவை இந்த வலைப்பூவில் வெளியாகியுள்ளன. சில அச்சில் வந்து, வலைப்பூவில் பதியப்படாமல் உள்ளன. கட்டுரைகளுக்கு நேரில் சென்று செய்திகளைத் தொகுத்து உரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. 


நன்றி..நன்றி..


இப்பதிவுகள் தொடர்ந்து வரும் மகாமகங்களிலும் நம் மனதில் நிற்கும் என நம்புகிறேன். உரிய பதிவுகளைப் படிக்க விரும்புவோர் அந்தந்த தலைப்பில் சொடுக்கலாம், படிக்கலாம். எனக்கு ஆதரவு தந்து, நான் தொடர்ந்து எழுத உதவி என்னுடன் பயணித்த நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் பேரன் தமிழழகன் பிறந்த நாளான இன்று மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 






மகாமகம் 2016 இலச்சினை


மகாமக நினைவு அஞ்சல் உறைகள்



மகாமக நினைவு அஞ்சல் அட்டைகள்
 



மகாமக நினைவு மேசை காலண்டர்
 

மகாமக நினைவு சைவக்கோயில்கள் காலண்டர்

மகாமக நினைவு வைணவக்கோயில்கள் காலண்டர்

மகாமகப் பயணப்பதிவுகள் சிறப்புற அமைய ஒத்துழைத்தமைக்கு நன்றி

முகப்பு பின்னர் மாறிவிடும் என்ற நிலையில் பதிவிற்காக இப்பதிவு வெளியானபோது இருந்த முகப்புப்பக்கம்


21 comments:

  1. கலைக் களஞ்சியம் போல தங்களுடைய பதிவு..

    தங்கள் பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. நல்லதொரு தொகுப்பு. சேமித்துக் கொண்டேன்......

    தங்கள் பேரனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான தொகுப்பு சார். நேரம் கிடைக்கும் போது தேங்காய் பர்பி தயிர் ரசம் சுவைக்க எனது வலைப்பூவுக்கு வருகை தாருங்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    அருமையான தொகுப்பு தங்களின் பேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. விரிவான விடயங்களும் அருமையான புகைப்படங்களும் தந்த முனைவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்...
    தங்களின் பேரன் தமிழழகனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  6. தங்களின் பேரன் தமிழழகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெயரைப்போலவே அவரும் மிக அழகாக இருக்கிறார். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. அருமை ஐயா...
    நல்லதொரு தொகுப்பு...

    ReplyDelete
  8. தங்கள் பேரன் தமிழழகனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மகாமக தொகுப்பை வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  9. தங்கள் பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...
    கலைக்களஞ்சியத் தொகுப்பு ஐயா...

    ReplyDelete
  10. தங்களின் பெயரனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  12. அருமையான தொகுப்பு ஐயா. சேமித்து வைத்துக் கொண்டோம்.

    தங்கள் பெயரனுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நல்ல தொகுப்பு.வாழ்த்துக்கள் சார்/

    ReplyDelete
  14. மகாமகம் சென்றுவந்த புண்ணியம் கட்டிக் கொண்டேன். நன்றி

    ReplyDelete
  15. அய்யா மதங்களின் நம்பிக்கை மீதான பதிவுகள் ஒரு புறம் இருக்க அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் போட்டால் தான் இந்த பகுதி முழுமைபெறும் ஆகவே கீழுள்ள பதிவையும் சேர்த்து இந்தக் களஞ்சியத்தில் பதிவிட்டால் எதிர்கால சந்ததியினர் படித்து தெரிந்து கொள்வார்கள் அல்லவா.

    http://www.apherald.com/Politics/ViewArticle/119390/Kumbakonam-s-Mahamaham-tank-is-polluted/

    http://www.dtnext.in/News/City/2016/02/24030457/Post-Mahamaham-significant-level-of-pollution-in-tank.vpf




    மலக்கழிவு28சதவிகிதம்;
    மூத்திரக்கழிவு40சதவிகிதம்!

    மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு





    கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத் தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

    கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

    கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    காவல்துறையினரின்
    உடல்நலம் பாதிப்பு!

    குளத்தைப் பாதுகாக்கும் 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல்துறையினருக்கு தொண்டை கரகரப்பு, மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.

    விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத் தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.

    இ.கோலி

    இ.கோலி என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும் இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிக மாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. முக்கியமாக ஓ157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன. இத னுடைய வாழ்க்கைச் சுழற்சி மலத்தின் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து பிறகு தாவரம் மற்றும் மீன் உணவு வழியாக மீண்டும் மனித குடலைச் சென்றடையும். சமைத்த உணவு உண்ணும் பழக்கம் உள்ள மனித இனங்களில் மிக அதிக அளவு இவ்வகை பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதி, மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் இவ்வகைப் பாக்டீரியாக்கள் குடலில் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.






    மனித மலக்கழிவு - மூத்திரக் கலப்பு



    நீரில் இ-கோலி என்னும் பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. (இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் உள்ள சளி போன்ற திரவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.மலம் கழிக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி நீரில் கலந்துவிடுகின்றன). இவ்வகைப் பாக்டீரியாக்கள் 28 விழுக்காடு குளத்து நீரில் கலந்துள்ளது. மேலும் மனித சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவும் குளத்து நீரில் 40 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.


    மாவட்ட நீரியல் துறை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறும்போது,

    நாங்கள் குளத்து நீரை ஓட்டத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். ஆனால், வெளியேறும் நீரின் அளவு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அதிகமாக இருந்தது. முக்கியமாக குளத்தின் கரைப்பகுதி மற்றும் 2 அடி ஆழமுள்ள பகுதி நீர் அப்படி தங்கிவிட்டது. இதனால் மாசுக்கள் அதிகமாகிவிட்டன. மேலும் மக்கள் தொடர்ந்து வந்து முழுக்குப் போடுவதால் மாசு மிகவும் அதிகமாகிவிட்டது என்று கூறினார்.

    ReplyDelete
  16. உங்கள் வீட்டுக் குட்டி தமிழழகன் வரவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனி மகாமகம் என்றாலேயே உங்கள் பதிவுகள் நினைவுக்கு வரும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. Mr KSS Krishnan (thro email: krishnan.kss@gmail.com)
    All the best, your journey will go a long long way.

    ReplyDelete
  20. ரெடி ரேபாரேன்ஸ் பார் மகா மகம்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  21. Mr Subramanian kamatchi gouder (மின்னஞ்சல் மூலமாக subramaniankamatchigouder@gmail.com)
    இரத்தின சுருக்கமான வார்த்தைகள்.

    ReplyDelete