16 February 2016

மகாமகம் 2016 சிறப்பு மலர் : சரஸ்வதி மகால் நூலகம்

2016 மகாமகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு மலர் 260 பக்கங்களுடன்  50 கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மண்ணின் பெருமையையும், விழாவின் பெருமையையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது இம்மலர்.
மலரின் முகப்பு அட்டை
மலரின் பின் அட்டை
மகாமக இலச்சினையைக் கொண்டு அமைந்துள்ள முதற்பக்கத்தில் மகாமகக்குள சோடச மண்டபங்கள் காணப்படுகின்றன. பின் அட்டையில் சோடச மண்டபங்களும், மகாமகக்குளமும் உள்ளன.  நடுவில் மகாமகத்திற்கான ஆங்கில இலச்சினை உள்ளது.
மலரின் முதற்பக்கம்

மலர்க்குழு, மலர் பதிப்புக்குழு உறுப்பினர்கள் விவரம்
கட்டுரைகளின் தலைப்பு
உள்ளே முதல் பக்கத்தில் திருவையாறு அய்யாறப்பர் கோயிலின் நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மலர்க்குழு மற்றும் மலர் பதிப்புக்குழு உறுப்பினர்களின் விவரம் உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சரஸ்வதி மகால் நூலக இயக்குநரின் பதிப்புரைக்கு அடுத்த பக்கத்தில் கட்டுரைகளின் தலைப்புகள் காணப்படுகின்றன. 260 பக்கங்களைக் கொண்ட இம்மலர் முழுக்க முழுக்க ஆர்ட் தாளில் அச்சிடப்பட்டுள்ளது. 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதியுள்ள மகாமகம் என்ற தலைப்பிலான கட்டுரை முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. கீழ்க்கண்டவாறு கும்பகோணம் மற்றும் மகாமகத்தின் பெருமை, இலக்கியங்கள், கோயில்கள், கலை என்ற பல்வேறு நிலைகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. 

மகாமக விழா : பாரத தேசம் போற்றும் மகாகம் ஒரு தேசியத் திருவிழா, வரலாற்று நோக்கில் மகாமகத் திருவிழா, மகாமக தீர்த்த யாத்திரை, 18ஆம் நூற்றாண்டு ஆவணங்களில் மகாமகத் திருவிழாவும் மராட்டிய மன்னர்களின் பங்களிப்பும்,  மகாமகத்தில் தமிழ்த்தாத்தா, மகாமகத் தொடக்கமும் அதன் சிறப்பும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் காணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு, மகிமைமிக்க மகாமகம், இந்தியாவும் புனித நீராடலும், 11 ஆண்டுகளில் மகாமகம், தீர்த்தங்களும் மண்டபங்களும், சரஸ்வதி மகால் நூலகத்தின் வளர்ச்சியும் மகாமகப் பங்களிப்பும்.

மகாமகக்குளம், கோயில்கள், நூலகம் மற்றும் மடங்கள் : குடந்தைக் கும்பேசர், நற்சூதராம் மூர்க்கரும் குடந்தைப்பதியும், குடந்தைக் கீழ்க்கோட்டத்துக் கூத்தனார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், குவலயம் போற்றும் குடந்தை மாநகர், ஒட்டக்கூத்தரும் குடந்தையும், குடந்தையின் கருவூலங்கள், குடந்தை சார்ங்கபாணி திருக்கோயிலும் ஆழ்வார்களும், கோயில் நகரம் குடந்தை, அறவழி காட்டும் திருமடங்கள்,  குடந்தையில் கோயில் கொண்ட குலகுரு, மகாமகக்குளத்தை நிர்மாணித்த கோவிந்த தீட்சிதர்.

அருகிலுள்ள கோயில்கள் : தாராசுரத்து ஐராவதேசுவரர், குடமூக்கில் பழையாறை, பழையாறைப் பெருநகர், தஞ்சை மாவட்ட வைணவத் தலங்கள், தஞ்சை மாவட்டத்துத் தேவாரத் திருத்தலங்கள்.  

இலக்கியங்கள் : மகாமக அந்தாதிக்கும்மி, கும்பகோணம் கோயில்களின் புராணம், சங்க இலக்கியம் மற்றும் திருமுறை உணர்த்தும் குடந்தை, சிவ ரகசியத்தில் குடந்தை, சேஷாசல நாயுடு யாத்த கும்பகோணம் மகாமக அலங்காரம், திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் குடந்தை.

கலை : இசைக்கலை வளர்ச்சியில் திருக்குடந்தை, தஞ்சை கலைக்கூடம், நாட்டியக்கலை வளர்ச்சியில் குடந்தை, குடந்தை திருச்சேறையில் சாளுக்கிய-சோழன் விக்கிரமனின் கல்வெட்டுகள்,  கும்பகோணம் மகாமகத்தில் வடமொழி நாடகங்கள், கும்பேசர் குறவஞ்சி நாடகம் ஒரு பார்வை

மேற்கண்ட கட்டுரைகளுடன் உருத்திராக்கம், சிவாலய அமைப்பும் பிரதிஷ்டா மூர்த்திகளும்,  தஞ்சை மாவட்ட ஆட்சியரலுவலக அருங்காட்சியகம், கவிதைகள், குடந்தை கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள், மகாமகம் 2016 திட்டப்பணிகள் போன்றவையும் காணப்படுகின்றன. 

கும்பகோணத்தைப்பற்றியும், மகாமகத்தைப் பற்றியும் பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ள இம்மலர் உரிய புகைப்படங்களுடன் காணப்படுகிறது. பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டுள்ளனவற்றில் அரிய செய்திகளும், வியப்பையூட்டும் செய்திகளும் காணப்படுகின்றன. வரலாறு, இலக்கியம், கலை என்ற நிலைகளில் அதிக முயற்சி மேற்கொண்டு அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமையாக உள்ளது. பல நூற்றாண்டுகள் பெருமை பேசும் மகாமகத்தினைப் பற்றிய ஓர் அரிய மலரைத் தந்த மலர்க்குழுவினரை மனதாரப் பாராட்டுவோம். 1992இலும், 1980இலும் வெளியான மலர்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மகாமகம் 2016 சிறப்பு மலர்
பதிப்பாசிரியர் : மலர்க்குழு
வெளியிடுவோர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் 
ஆண்டு : 2016
விலை : ரூ.300

பிற மகாமக மலர்கள் : 
2004 மகாமகம் சிறப்பு மலர்
1992 மகாமகம் மலர்
1980 மகாமகம் மலர்

10 comments:

  1. மலர் அறிமுகத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  2. தகவல் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மலர் அறிமுகத்திற்கு ரொம்பவும் நன்றி சார்

    ReplyDelete
  4. தகவல்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது என்று சொல்லுங்கள்!
    தம +1

    ReplyDelete
  6. நல்லதொரு விடயத்தை பகிர்ந்தளித்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. மலர் வெளிவந்திருக்கும் தகவலை உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன். பல தகவல்கள் அதில் அடக்கம் எனத் தெரிகிறது.

    தகவலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. மலர் அறிமுகத்திற்கு மிக்க நன்றி அய்யா!
    த ம 5

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    தகவலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. மகாமக மலர் பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete