ஆங்கில விக்கிபீடியாவில் 17.5.2015இல் எழுத ஆரம்பித்து அண்மையில் 100ஆவது பதிவினை நிறைவு செய்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவில் 250ஆவது கட்டுரையினை இன்று நிறைவு செய்துள்ளேன். வலைப்பதிவுகளின் உறவே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டையில் 11.10.2015இல் நடைபெறவுள்ள வலைப்பதிவர் திருவிழாவிற்கு அன்பான அழைப்பு விடுத்து, பதிவைக் காண அழைக்கிறேன். புதுக்கோட்டையில் அனைவரும் சந்திப்போம்.
ஆங்கில விக்கிபீடியாவில் முதல் கட்டுரை
17.5.2015 அன்று எழுதி ஆங்கில விக்கிபீடியாவால் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் என்ற தலைப்பிலான எனது முதல் கட்டுரை ஏற்கப்பட்டது. வரைவினை ஏற்றுக்கொண்டு, பின்னர் தொடர்ந்து நானே எழுதலாம் என்றும் வரைவினை எழுதி இசைவு பெற வேண்டிய அவசியமில்லை என்றும் விக்கிபீடியாவில் தெரிவித்தனர். அவர்களால் ஏற்கப்பட்ட அக்கட்டுரை காரணம் சுட்டப்பட்டு நீக்கப்பட்டுவிட்டதாக 12.9.2015இல் தகவல் வந்தது. அனைத்தும் நாளிதழ் செய்திகளே இருந்ததால் அது நீக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். நூறாண்டுகள் கழித்து அவ்விழா நடைபெற்ற நிலையில் அக்கட்டுரைக்கு எந்த நூலையும் சான்றாகத் தர இயலா நிலையில் நான் இருந்தேன்.
ஆங்கில விக்கிபீடியாவில் 2ஆவது கட்டுரை
ஆங்கில விக்கிபீடியாவில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் 63 கோயில்களும், தென் கரையில் 128 கோயில்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் பல கோயில்கள் பதியப்படாமல் இருந்தது. அந்நிலையில் விடுபட்ட கோயில்களைப் பற்றிக் குறித்துக் கொண்டு ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தேன்.
வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில் (2ஆவது கட்டுரை) |
முதல் கட்டுரை நீக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டுரை வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில் தொடர்பானதாகும். இக்கட்டுரையை நேரிடையாகப் பதிவு செய்தேன். கட்டுரைக்கான புகைப்படம் கோயில் உலா சென்றபோது என்னால் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகும். பிற கோயில்களுக்கும் அவ்வாறே செய்துள்ளேன்.
தேவாரப் பாடல் பதிவுடன் திருஈங்கோய்மலை மரகதேஸ்வரர் கோயில் |
இவ்வகையில் பதியப்பட்ட மற்றொரு கட்டுரை திருஈங்கோய்மலை மரகதேஸ்வரர் கோயிலைப் பற்றியதாகும். வேறு சில கட்டுரைகளில் தேவாரப் பாடல் தமிழில் தரப்பட்டதைக் கண்டேன். அதனடிப்படையில் ஆங்கில விக்கிபீடியாவில் தமிழில் தேவாரப் பாடலை இணைத்து மேற்கோளாகத் தந்தேன். நாளடைவில் இவ்வாறாக இருப்பதைத் தவிர்க்கலாம் என சில விக்கிபீடியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கடுத்து எழுதும் கட்டுரைகளில் தேவாரப்பாடலை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.
புதுக்கோட்டை ஞானாலயா (தமிழ் விக்கிபீடியாவிலும் உள்ளது) |
நாளடைவில் கோயில்களுடன் வேறு தலைப்பில் எழுத முயற்சிக்கும்போது புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப் பற்றிப் பதிந்தேன். அதற்காக அங்கு சென்று விவரங்களைத் தொகுத்தேன். முதன்முதலில் தமிழ் விக்கிபீடியாவிலும் தொடர்ந்து ஆங்கில விக்கிபீடியாவிலும் கட்டுரை எழுதியது ஞானாலயா நூலகத்தைப் பற்றியதேயாகும்.
2016 மகாமகத்தை முன்னிட்டு ஆங்கில விக்கிபீடியாவில் கும்பகோணத்தில், மகாமகம் தொடர்பான கோயில்களை இணைப்பது பற்றிச் சிந்தித்தேன். அதற்கு முன்பாக மகாமகம் என்ற தலைப்பில் இருந்த கட்டுரையில் 15ஆம் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரையிலான மகாமகம் வாரியாக விவரங்ளைத் தொகுத்து இணைத்தேன். பின்னர் கும்பகோணத்திலுள்ள இந்துக்கோயில்கள் என்ற தலைப்பில் இருந்த ஒரு பதிவினைக் கண்டேன். அப்பதிவில் கும்பகோணத்திலும், கும்பகோணத்திற்கு அண்மையிலும் உள்ள கோயில்கள் ஒழுங்கமைவு இன்றி கலந்திருந்ததைக் கண்டேன். பின்னர் அதில் கும்பகோணத்திலுள்ள சைவக்கோயில்கள், கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்கள், கும்பகோணத்திலுள்ள பிற கோயில்கள், கும்பகோணம் அருகேயுள்ள கோயில்கள் என்று நான்கு துணைத்தலைப்புகள் இட்டுப் பதிவினை மேம்படுத்தியதோடு அதில் விடுபட்டிருந்த அபிமுகேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஆறு சிவன் கோயில்களையும், சேர்த்தேன்.
மகாமகம் தொடர்புடைய கோயில்களில் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் கோயில் பற்றி நான் ஆரம்பித்த கட்டுரை |
கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 13.7.2015இல் சென்று வந்த மறுநாள் அவ்விழா தொடர்பாக நான் எடுத்த புகைப்படங்களை முன்னரே இருந்த கட்டுரையில் இணைத்தேன்.
முன்னரே இருந்த கட்டுரையில் கும்பாபிஷேகம் தொடர்பான, நான் எடுத்த, புகைப்படங்கள் இணைப்பு |
இதே முறையில் கும்பகோணம் கௌதமேஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு 9.9.2015இல் சென்று வந்து, நான் எடுத்த புகைப்படங்களை முன்னர் நான் ஆரம்பித்திருந்த இத்தலைப்பிலான கட்டுரையில் இணைத்தேன்.
நான் ஆரம்பித்த கட்டுரையில் கும்பாபிஷேகம் தொடர்பான, நான் எடுத்த, புகைப்படங்கள் இணைப்பு |
ஆங்கில விக்கிபீடியாவில் 100ஆவது கட்டுரை
இவ்வாறாக ஆங்கில விக்கிபீடியாவில் பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பற்றி நினைவிற்கு வரவே அங்கு சென்று நூலகம் பற்றிய விவரங்களைத் தொகுத்து, முதலில் தமிழ் விக்கிபீடியாவிலும், பின்னர் ஆங்கில விக்கிபீடியாவிலும் சேர்த்தேன்.
சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் (ஆங்கில விக்கிபீடியாவில் 100ஆவது கட்டுரை), தமிழ் விக்கிபீடியாவிலும் உள்ளது
தமிழ் விக்கிபீடியாவில் 250ஆவது கட்டுரை
ப.தங்கம் எழுதியுள்ள அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை என்ற ஒரு தமிழ் ஓவியரின் பயணக்கதையைக் களமாகக் கொண்ட நூல் பற்றிய பதிவினை தமிழ் விக்கிபீடியாவில் 3.10.2015அன்று 250ஆவது கட்டுரையாகப் பதிவேற்றினேன்.
------------------------------------------------------------
நன்றி
கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள் 2014இல் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த பயிற்சிப்பட்டறை விக்கியில் நான் எழுத ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது என்பதை நினைவுகூற விரும்புகிறேன். அப்பட்டறையில் நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் கலந்துகொண்டோம். திரு பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகம் என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் திரு முரளீதரன் அவர்களும் வலைப்பூக்களைப் பற்றி விளக்கவுரை தந்தனர். அவர்களுக்கும் வலைப்பூவில் எனது எழுத்துக்களுக்கு ஆதரவு தரும் சக வலைப்பதிவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.
------------------------------------------------------------
|
வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteவாழ்த்துக்கள் ஐயா,
ReplyDeleteமகிழ்ச்சி,,, தாங்கள் இன்னும் பல தலைப்புகளில் எழுதுங்கள் அனைவருக்கும் பயன்பட,,
நன்றி.
மேலும் பல தலைப்புகள் வைத்துள்ளேன். அனைவருக்கும் பயன்படும் வகையில் விரைவில் எழுதுவேன், உங்களது வாழ்த்துக்களுடன்.
Deleteஇன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஉங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தொடர்வேன், நன்றி.
Deleteவாழ்த்துக்கள் அய்யா!
ReplyDeleteஉண்மையில் இது பிரமாண்டமான சாதனை.!
அதிலும் விக்கிப்பீடியாவில் எழுத நிறைய ஆதாரங்களை தேட வேண்டும். 2010-ல் விக்கியில் எழுதலாம் என்று இருந்தேன். முதலில் அதன் பாரம்பரிய எழுத்து நடை எனக்கு வரவில்லை. அது கைகொடுத்திருந்தால் நானும் ஒரு 100 கட்டுரையாவது எழுதியிருப்பேன். ஆனாலும் மனதின் ஒரு மூலையில் விக்கியில் எழுதும் ஆசை அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது.
ஆரம்பத்தில் நான் சிரமப்பட்டேன். அதன் உத்தியைச் சற்றே தெரிந்தால் ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஐயமிருப்பின் கேளுங்கள், விக்கியில் எளிதாக எழுத ஆரம்பிக்கலாம். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteதங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா
ReplyDeleteதங்களின் அயரா உழைப்பின் பயன் இது
தொடரட்டும் தங்களின் எழுத்துலகச் சாதனை
தம 1
உங்களைப் போன்ற நண்பர்கள் இயக்கும்போது எழுத்தின்மீதான ஆர்வம் மேம்படுகிறது. வாழ்த்துக்கு நன்றி.
Deleteசாதனை தொடர வாழ்த்துக்கள் !
ReplyDeleteவலைப்பூவில் தொடர்ந்து எழுதி சாதிக்கும் தங்களது வாழ்த்துக்கு நன்றி.
Deleteவலைப்பதிவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டிய சாதனையை சாதித்துள்ளீர்கள் முனைவர் அய்யா!
ReplyDeleteகுழலின்னிசை கும்ப மரியாதை செலுத்தி மகிழ்கிறது! வாழ்த்துகள்!
தஞ்சை தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
ஐந்து மாதத்திற்குள் இவ்வளவு எழுதுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. 2015 இறுதிக்குள் தமிழில் 300 கட்டுரைகள் என்றும் ஆங்கிலத்தில் 100 என்றும் திட்டமிட்டிருந்தேன். ஆங்கிலத்தில் நான் நினைத்ததைவிட முன்னரே எழுதிமுடித்துவிட்டேன். உங்களைப் போன்றோரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களே எனது இந்த முயற்சிக்குக் காரணம். நன்றி.
Deleteஅபார உழைப்பு மென் மேலும் சிகரங்களைத் தொட எமது வாழ்த்துகள் முனைவரே...
ReplyDeleteதமிழ் மணம் 4
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteமுனைவர் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும். ஒரு தமிழரின் சாதனை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteவிக்கி பீடியாவின் ‘Pages created’ பட்டியலைப் பார்வையிட்டேன். அதில் எங்கள் ஊர் திருமழபாடி பற்றிய கட்டுரையை மீண்டும் ஆர்வத்துடன் படித்தேன். ( 98, 100 இவற்றை ஏன் நீக்கம் செய்துள்ளார்கள்?)
டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற நூலை நான் பி.ஏ படிக்கும்போது படித்து இருக்கிறேன். மறக்க முடியாத நூல். ஆனாலும் டாக்டர் கே.கே.பிள்ளையைப் பற்றி எனக்கு இன்னும் விவரம் தெரியாது. அவரைப்பற்றிய விவரம் கிடைத்தால் சேர்க்கவும்.
தமிழில் எழுதப்பட்ட ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கண்டவுடன் அவரிடம் உங்களுக்கு உள்ள அன்பின் மேம்பாடு தெரிந்தது. அய்யா கவிஞர் முத்துநிலவன் பற்றியும் நீங்கள் எழுதியதாக நினைவு. இங்கு பட்டியலில் இல்லை.
தமிழ் வலைப்பதிவர் சந்திப்புகளைப் பற்றியும் எழுதவும். நன்றி.
தங்களின் வாழ்த்துக்கு நன்றி. இவ்விலக்கைத் தொட சற்றே நிதானமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டியிருந்தது.
Delete1.(98 திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்) முதலில் நீக்கிவிட்டனர். மேலும் பல ஆதாரங்களைச் சொல்லி இணைத்துள்ளேன். சொடுக்கினால் படிக்கலாம். (100இதுதான் எனது முதல் கட்டுரை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம் பற்றியது. பெரும்பாலும் நாளிதழ் செய்திகளே இருந்தன. நூறாண்டுகளுக்குப் பின் நடக்கும் நிகழ்வு என்ற நிலையிலும், வரலாற்றில் இது தொடர்பான பதிவுகள் இல்லாத நிலையிலும் இக்கட்டுரைக்கு நூல் ஆதாரம் தரமுடியவில்லை. அந்நிலையில் எனது முதற்கட்டுரையே நீக்கப்பட்டது என அறிகிறேன்.
2.வரலாற்றறிஞர் கே.கே.பிள்ளை அவர்களைப் பற்றிச் சேர்க்க முயற்சிப்பேன்.
3.நட்புக்கும் அப்பாற்பட்டு சாதனைகள் என்ற நிலையில் கரந்தை ஜெயக்குமார் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தவே இவ்வாறான முயற்சி.
4.கவிஞர் முத்துநிலவன் அவர்களைப் பற்றிய பதிவு, நான் எடுத்த அவருடைய புகைப்படத்துடன் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளது.
5) தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு பற்றி முன்னரே நான் நினைத்தேன். தொடர் நிகழ்வு என்ற நிலையில் சிக்கல்கள் உள்ளன. இவ்வாறான மாநாடு, கருத்தரங்கு நிகழ்வுகளைக் குறித்து விக்கியில் பதிவுகள் இல்லை. நீக்கப்படும் என்ற நிலையில் ஒரு கட்டுரை அமையும் என்று நினைத்தால் அதனைச் சேர்ப்பதில் அதிகம் யோசிக்கிறேன்.
வாழ்த்துகள் அய்யா. நம்பவே முடியவில்லை. அத்தனை உழைப்பும் உங்களையே சாரும். நாங்கள் நடத்திய இணையப் பயிற்சி முகாமில் நானும் இன்னும் விக்கியில் எழுதக் கற்றுக் கொள்ளாத பட்டியலில்தான் இருக்கிறேன். தங்களின் சுய முயற்சி போற்றுதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது. வாழ்த்துகள் அய்யா. தொடர்ந்து செல்லுங்கள். புதுக்கோட்டை விழாவில் நீங்கள் பெருமை பெறுவீர்கள்!
ReplyDeleteஎனக்கே நம்பமுடியவில்லை. ஆரம்பித்துவைத்தது நீங்களே. அனைத்துப் பெருமைகளும் உங்களுக்கும், நம் சக வலைப்பதிவர்களுக்குமே. முடிந்தவரை தமிழில் பெருமை பேசுபனவற்றை, விக்கியில் இல்லாதனவற்றை, சேர்க்க முயற்சிப்பேன். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பணி தொடரும். நன்றி.
Deleteவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம்அறம்
நன்றி
எவ்வளவு ஒரு மகத்தான சாதனை?!!!! ஐயா! உங்கள் உழைப்பு அபாரம்! அருமை! பெருமையாகவும் இருக்கின்றது ஐயா!
ReplyDeleteஎங்களுக்கும் ஆர்வம் இருக்கின்றதுதான். ஆனால் எப்படி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டு கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது, அதாவது உள்ளடக்கம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்று.... தாங்கள் கட்டுரைகள் பதிவிட அது மிகவும் உபயோகமாக இருக்கு குறித்தும் வைத்துக் கொண்டோம். மீண்டும் தங்களிடம் கற்க வேண்டும் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள...
வாழ்த்துகள் ஐயா! மேலும் மேலும் தாங்கள் பல படைப்புகளைப் படைக்கவும் பிரார்த்தனைகள்..
மிக்க நன்றி ஐயா..
ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டேன். தற்பொழுது ஓரளவுக்கு எழுத முடிகிறது. தாங்கள் எழுத என்னால் ஆன உதவியைச் செய்வேன். நன்றி.
Deleteஐயா ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா. தங்கள் தளத்தில் மின் அஞ்சல் சன்ஸ்க்ரிப்ஷன் இணைக்க முடியுமா? அதில் எங்கள் மின் அஞ்சலைக் கொடுத்தால் தாங்கள் பதிவு வெளியிடும் போது அது மின் அஞ்சலுக்கு வந்து விடும், தாமதமானாலும் நாங்கள் தவறவும் விட வாய்ப்பில்லை என்பதால். இப்போது சமீபத்தில் வேலைப்பளு காரணமாக இணையம் வர இயலாத நிலை. தங்கள் படைப்புகள் பல விடுபட்டன என்று கருதுகின்றோம். இதோ பழைய பதிவுகளுக்குச் சென்று வாசிக்க உள்ளோம். அதனால்தான் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...
இணைத்துவிட்டேன். என் பதிவுகள் மீதான தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteஅய்யா மிகவும் மகிழ்வாக உள்ளது...உங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது...தொடர்ந்து தமிழின் தமிழரின் பெருமையை உலகறியச்செய்யுங்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களைப்போன்றோரின் வாழ்த்துகளுடன் முயற்சி தொடரும். நன்றி.
Deleteதங்களுடையது அரும்பணி பாராட்டிற்குரியது..
ReplyDeleteமேன்மேலும் - சிறப்புகளை எய்துதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகின்றேன்..
அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteஉங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.
ReplyDeleteதம +1
ReplyDeleteஇருநூற்று ஐம்பது பதிவுகள் விக்கிபீடியாவில் எழுதுவது என்பது சுலபமில்லை! உங்களின் தணியாத உழைப்பும் ஆர்வமும் புரிகிறது! வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteசற்றே சிரமம்தான். இருப்பினும் உங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் இச்சாதனை படைக்க உதவியது.
Deleteஅற்புதமான தமிழ்ப் பணி. இணையத் தமிழ் உலகிற்கு நீங்கள் ஆற்றியுள்ள அரும்பணி என்றென்றும் நினைவு கூறத் தக்கது. தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDeleteபுதுக்கோட்டையில் கடந்த ஆண்டு நீங்களும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் எடுத்த வகுப்பும் இச்சாதனைக்கு ஒரு காரணம். உங்களது வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஐந்து திங்களில் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் 100 கட்டுரைகளும் தமிழில் 250 கட்டுரைகளும் எழுதி சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்! விரைவில் இவை ஆயிரத்தை எட்ட விழைகின்றேன்
ReplyDeleteஆங்கிலத்தில் சாதனை ஐந்து மாதங்களுக்குள். தமிழைப் பொறுத்தவரை அதற்கு முன்பிருந்தே எழுதிவருகிறேன். தங்களின் வாழ்த்துக்களுடன் ஆயிரத்தைத் தொடுவேன். நன்றி.
Deleteஉங்கள் சாதனை மிகவும் போற்றுதலுக்குரியது. மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த பங்களிப்பை உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்வார்களா?
தங்களின் பாராட்டு கண்டு மகிழ்கின்றேன். இந்த பங்களிப்பு பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. நன்றி.
ReplyDeleteஅரிய பணியாற்றும் உங்களை வாழ்த்தும் வகை தெரியவில்லை ஐயா!
ReplyDeleteஇருகரங்கூப்பி வணங்குகின்றேன்!
தொடரட்டும் உங்கள் பணி!..
தங்களைப் போன்ற சக பதிவர்களின் வாழ்த்துக்களும், ஊக்கமும் என் இந்த சாதனைக்குக் காரணம். நன்றி.
Deleteஒருங்கிணைந்த அயராத உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
ReplyDeleteஆரம்பம் முதல் தாங்கள் அளித்துவரும் ஊக்கமும், பாராட்டும் எனக்கு உத்வேகத்தைத் தருகின்றது. நன்றி.
Deleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
Deleteஆங்கில விக்கிபீடியாவில் 100,
ReplyDeleteதமிழில் 250 கட்டுரைகள் நிறைவு செய்தமை
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும் பெருமை
ஆயிரக்கணக்கில் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
தமிழை உலகெங்கும் பரப்புங்கள்!
என்றும் நாம் ஒத்துழைப்போம்!
வாழ்த்துகள்!
டிசம்பர் 2015க்குள் முடிக்க இலக்கு வைத்து எழுதினேன். எதிர்பார்த்ததற்கு முன்பாகவே முடித்தேன். தங்களின் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பதிவு செய்வேன். வருகைக்கு நன்றி.
Deleteஇன்னும் புதிய சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்
ReplyDeleteபுதிய சிகரங்களைத் தொடுவேன், தங்களின் வாழ்த்துக்களுடன். நன்றி.
Deleteஉங்கள் பணி பிரமிக்க வைக்கின்றது. பாராட்டுக்கள் ஐயா.இன்னும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சிகரம் தொடுவேன், உங்களைப் போன்றோரின் பாராட்டுகளுடன்.
ReplyDeleteMr Sri Sritharan (kstharan1@hotmail.com மின்னஞ்சல் வழியாக): பார்த்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து ஔங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்குங்கள்.அன்புடன், சிறீதரன்
DeleteMr Natkeeran L.K. (natkeeran@gmail.com மின்னஞ்சல் வழியாக): வணக்கம் ஐயா: உங்கள் பங்களிப்புக்கள் சிறப்பாக அமைகின்றன. குறிப்பாக தமிழ் நூலகங்கள் பற்றிய உங்கள் கட்டுரைகளைச் சிறப்பாக ரசித்தேன். நன்றி. அன்புடன், நற்கீரன்
Dr Ganesh Ram (nsganeshram@gmail.com மின்னஞ்சல் வழியாக): Congratulations sir. I wish you to continue your work for the sake of history.
Dr Karthikeyan (drkarthik53@gmail.com மின்னஞ்சல் வழியாக):vaazhttukkal.vaLarka meenmeelun, A Karthikeyan
Dr S.Rajendran (rajushush@gmail.com மின்னஞ்சல் வழியாக) : GOOD. KEEP GOING.raj
Dr R. Muralidharan (tumurali@gmail.com மின்னஞ்சல் வழியாக): வாழ்த்துக்கள்.
Dr Kanaka Ajithadoss (ajithadoss@gmail.com மின்னஞ்சல் வழியாக): பெரும் பாராட்டுகள் . அமைதியாக ,ஆரவாரமின்றி பெருஞ்சாதனை . தங்களது செம்பணிக்கு நன்றி . மிக்க அன்புடன்
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteதங்கள் பதிவினை படித்து தங்கள் பெருஞ்சாதனைகளை கண்டு பிரம்மிப்பும், ஆச்சரியமும் அடைந்தேன். தங்களுடைய அனைத்து முயற்சிகளும் இதுபோல் வெற்றியடைந்து இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத மனமாற வாழ்த்துகிறேன். தங்கள் சாதனை தொடர்ந்து எங்கும் எதிரொலிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் பிரமிப்பு கண்டு மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்துக்களுடன் சாதனைகளைத் தொடர்வேன். நன்றி.
ReplyDelete