20 April 2014

வாழ்வில் வெற்றி

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16.8.1982இல் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த நான் வார, மாத இதழ்களில் வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்து அப்பணியினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். எனது முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன்மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவு வாசகர் கடிதங்களை எழுதுவதுடன் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை எழுதும் ஆர்வம் எழுந்தது. கருத்துக்களை மேம்படுத்திக் கொள்ளவும், வெளிக்கொணரவும் இதனை ஓர் வாய்ப்பாக நான் உணர்ந்தேன்.சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றபோது மனதில் ஒருவகையான நிறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இருந்த ஆர்வமும், படியாக்கம் என்ற நிகழ்வின் மீதான ஆர்வமும் பிற நூல்கள் வரக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் வாசகர் கடிதத்தில் தொடங்கிய பயணம்.......
100க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் 
ஆறு நூல்கள்
60க்கும் மேற்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
27 புத்தர் மற்றும் சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்புகள்
130 பத்திரிக்கை நறுக்குகள் :
முதல் பத்திரிக்கை நறுக்கு (தினமலர், 17.6.1999)

தமிழ்/ஆங்கில இதழ்களில் மேற்கோள்கள்
முதல் மேற்கோள் (The Hindu 24.11.2000)
தமிழ்க்கட்டுரையில் முதல் மேற்கோள் (காலச்சுவடு, ஜூலை 2004)
ஆங்கிலக்கட்டுரையில் முதல் மேற்கோள் (Outlook, 19.7.2004) 

தமிழ்/ஆங்கில இதழ்களில் பேட்டிகள் 
தமிழ் நாளிதழில் முதல் பேட்டி (தினமணி, 6.1.2008)
ஆங்கில நாளிதழில் முதல் பேட்டி (Times of India, 29.10.2012) 


தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள்
ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி, 22.4.2010)
படிப்போம் பகிர்வோம் (தினமணி, 22.4.2013)
தமிழில் இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12.1.2014)
நிதான வாசிப்பு (மொழிபெயர்ப்பு) (தி இந்து, 13.1.2014)

இரு வலைப்பூக்கள்
சோழ நாட்டில் பௌத்தம்
முனைவர் ஜம்புலிங்கம்

இவ்வாறாக என்னை எழுதவைத்ததோடு மட்டுமன்றி களப்பணியில் ஈடுபட வைத்து ஓர் ஆய்வாளனாக உருவாக்கியது 32 ஆண்டுகளாக மேலாக நான் பணியாற்றிவருகின்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறும் இவ்வினிய வேளையில் எனது நூல்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன்.    

பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46
முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:
"ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது. ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக் கொள்ளும் திறன் கைவசம் இருக்கிறது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக்கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்...இந்தச் சித்து விளையாட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை..."

"கதைகள் நன்றாக இருக்கின்றன. நன்றாக என்றால் எப்படி? கொஞ்சம் உறைப்பது மாதிரி, கொஞ்சம் நறுக் சுறுக்கோடு சுரணை வருவதற்காகக் கிள்ளுவது மாதிரி...அதுவும் அப்பாவியாக இருந்துகொண்டு நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே அனாயாசமாகக் கிள்ளுவது மாதிரி...."


என்னுடைய முதல் நூலான வாழ்வில் வெற்றி, மின்னூலாகவும் வெளிவந்துள்ளது.   

Judgement Stories of Mariyathai Raman (Tr),  New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate, Ambattur,  Chennai 600 098, November 2002, I Edition, Rs.30

Tantric Tales of Birbal (Tr), New Century Book House (P) Ltd, November 2002, I Edition, Rs.45
Jesting Tales of Tenali Raman (Tr),  New Century Book House (P) Ltd,  October 2005, I Edition, Rs.50
Nomadic Tales from Greek (Tr),  New Century Book House (P) Ltd, May 2007, I Edition, Rs.25
From the Preface of Nomadic Tales from Greek:
".........He (Dr B Jambulingam) is having a flair for translation. His translation work includes the Tamil books of Mullai P.L.Muthiah into English (Mariyathai Raman Theerppu Kathaikal, Birbal Thanthira Kathaikal and Tenali Raman Vikata Kathaikal). Now the author successfully translated the book Greekka Nadodi Kathaikl written in Tamil by C.S.Subramanian into English under the title Nomadic Tales from Greek.....He is a man with a multidimensional outlook who needs encouragement to proceed further with his liteary and academic activities.We hope that this book written by him will go a long way in achieving this ambition....."

தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
 என்னுரையிலிருந்து:
"1997 மார்ச் 16 நாளிட்ட The Week இதழில் "You can be cloned" என்ற தலைப்பில் முதன்முதலாகப் படியாக்கம் தொடர்பான அட்டைப்படக் கட்டுரை வெளியாகியிருந்தது. அறிவியல் வரலாற்றில்  ஒரு புதிய சாதனையான அந்தச் செய்தியைப் பார்த்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் அதிர்ச்சி. அதன் நன்மை தீமைகளைப் பற்றிய ஒரு அலசலே அதற்குக் காரணம். இத்தகைய ஒரு வரலாற்று நிகழ்வைத் தமிழில் மொழிபெயர்க்க விழைந்தேன்......தமிழில் அறிவியல் செய்தி வெளிவர வேண்டும் என்ற நோக்கமும், ஆங்கில மூலத்திலிருந்து அதிகமான செய்திகளைக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வமும் என் முயற்சிக்கு விறுவிறுப்பைத் தந்தது......  

தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து:
"வரலாற்று ஆய்வுக் களங்களிலும், அறிவியல் ஆய்வுக் களங்களிலும் தனித்த முத்திரையைப் பதித்துவரும் நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் இவ்வரிய நூலை பெரிதும் பாராட்டும்வண்ணம் உருவாக்கியுள்ளார். படியாக்கம் குறித்த அறிவியல் செய்திகளை இளம் மாணவர்களும், அறிவியல் ஆர்வலர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலை உருவாக்கியுள்ளார். படியாக்கம் என்னும் இந்நூல் அறிவியல் தமிழுக்கு ஒரு புது வரவாகத் திகழ்கிறது....."

படியாக்கம் நூலுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் அளித்த பாராட்டுக்கடிதம்

படியாக்கம் நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அளித்த பாராட்டுக்கடிதம்



தஞ்சை மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் நண்பர்கள் திரு தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ள நூலில் தஞ்சை மாவட்டத்தில் சமண சமய வரலாற்றினை ஆராய்கிறது.  (நூலைப் பெற முகவரி : ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், அலைபேசி 94434 76597, 2018, ரூ.130)

விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகளை எழுதியபோது பெற்ற அனுபவங்களைக் கொண்டு விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் என்ற தலைப்பில் அமேசான் மூலமாக வெளியிட்டுள்ளேன். இந்நூலில், விக்கிப்பீடியாவில் பதிவுகளை எழுதும்போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். புதிதாக விக்கிப்பீடியாவில் எழுத வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு அண்மையில் நூல் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, அலைபேசி 98426 47101) வடிவம் பெற்றுள்ளது. 


என்னுடைய நூல்கள்

1) வாழ்வில் வெற்றி, பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46
2) Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate,
Ambattur,  Chennai 600 098, November 2002, I Edition, Rs.30
3) Tantric Tales of Birbal (Tr), NCBH, November 2002, I Edition, Rs.45
4) Jesting Tales of Tenali Raman (Tr), NCBH,  October 2005, I Edition, Rs.50
5) Nomadic Tales from Greek (Tr), NCBH, May 2007, I Edition, Rs.25
6) படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
7) தஞ்சை மாவட்டத்தில் சமணம்தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் உடன் இணைந்து,  ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்,
அலைபேசி 94434 76597, 2018, ரூ.130
9) சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112,   அலைபேசி 9842647101, செப்டம்பர் 2022, ரூ.1000

 --------------------------------------------------------------------------------------------------
  இன்று (20.4.2014) எங்கள் (ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு
(மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)
தமிழழகன்
பெயர் சூட்டு விழா
 --------------------------------------------------------------------------------------------------
21 ஜனவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது./

28 comments:

  1. அன்புடையீர்..
    தங்களுடைய இல்லத்தில் நிகழும் மங்கலகரமான விழாவினை அறிந்து மனம் மிகவும் மகிழ்கின்றது.
    செல்வன் தமிழழகன் அனைத்து நலன்களையும் பெற்று நீடூழி வாழ அன்னை அபிராமவல்லியும் அமுதீசனும் நல்லருள் புரிய வேண்டுகின்றேன்..
    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவும் வாழ்த்தும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

      Delete
  2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் துணையாக வரும் தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  3. தங்களின் எழுத்துலகச் சாதனைகள் தொடரட்டும்.
    தமிழழகன்
    அருமையான பெயர்.
    பெயரினைப் போலவே
    வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. தமிழழகன் பெயரினைப் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்ற தங்களின் உயரிய பாராட்டுக்கு நன்றி.

      Delete
  4. நமது பெயரன், “தமிழழகன்“ - தங்கள் தமிழைப் போலவே தழைத்து வளர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகள். தங்களுக்கும் தங்கள் மகன், மருமகளுக்கும் வணக்கம் அய்யா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எல்லையில்லா மகிழ்வினைத் தருகிறது. நன்றி.

      Delete
  5. பாராட்டுக்கள்! உங்கள் ஆங்கில நூல்களை N.C.B.H நடத்தும் புத்தக கண்காட்சிகளில் பார்த்து இருக்கிறேன்.

    தங்கள் பேரன் தமிழழகனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனது ஆங்கில நூல்களைத் தாங்கள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. பேரனுக்கு தாங்கள் அனுப்பிய வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  6. (ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு
    (மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)
    தமிழழகன் பெயர் சூட்டு விழாவுக்கு இனிய வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுகளைத் தொடர்ந்து வரும் தங்களின் வருகையும், பெயர் சூட்டுவிழாவிற்கான தங்களின் வாழ்த்தும் மனதிற்கு நிறைவைத்தருகின்றன. நன்றி.

      Delete
  7. எழுத்துலகில் சாதனை படைத்து வரும் தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எல்லாம் வல்ல இறைவன் இருப்பது போல் தங்களின் பேரக் குழந்தை "தமிழழகன் "தமிழ் போற்றும் நல்லுலகில் சாதனைச் சுவடுகளைப் பதித்திட பெயருக்கு ஒப்ப வாழ்வும் வளமும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா .அழைப்பிற்கும்
    பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பும் வாழ்த்தும் இறையருளால் கைகூடும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு. வருகைக்கு நன்றி.

      Delete
  8. தங்கள் சீரிய எழுத்துப் பணி
    பிரமிக்க வைக்கிறது
    விரிவாக பதிவர்களும் அனைவரும்
    அறியும் வண்ணம் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பேரன் தமிழகனும் தங்களைப் போல
    சிறந்த தமிழ் அறிஞராய் எதிர்காலத்தில் விளங்க
    எல்லாம வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்

    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப்பணிகளை ஏதாவது ஓரிடத்தில் பதியும்போது பல வகையில் அது பலன் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறான முறையை மேற்கொண்டேன். தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  9. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல் தொடர்ந்து பதிவுகளைக் காணும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      Delete
  10. இத்தனைப் புத்தகங்கள் எழுதி,, படியாக்கம் பற்றி தமிழில் அறியக்கொடுத்து ..நன்றி ஐயா.

    தங்கள் பேரனுக்கு இனிய வாழ்த்துக்கள்! இறைவன் அவனை ஆசிர்வதிக்கட்டும். அழகுப் பெயர் ஐயா..பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 1980வாக்கில் கோவையில் Frankenstein என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். இறந்த இருவருக்கு (ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்) உயிரூட்டப்படும் பயங்கரமான படம். அவ்வாறே 1990களில் தஞ்சையில் அதே தலைப்பில் வேறொரு படம் பார்த்தேன். இறந்த ஒருவருக்கு உயிரூட்டப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து லண்டனில் டாலி ஆட்டுக்குட்டி செயற்கையாகப் பிறப்பிக்கப்பட்ட செய்தியைப் படித்தேன். அதில் உள்ள ஆர்வம் என்னை இந்நூலை எழுதத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் என் பேரனுக்கான வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  11. உங்களது வலைப்பூவில் பதித்துள்ள உங்கள் களப் பணி சார்ந்த எழுத்துக்கள் படித்துள்ளேன். உங்களது பிற எழுத்துக்கள் பற்றி இப்போதுஅறிகிறேன். ஒரு நல்ல நாளில் பேரனுக்குப் பெயர் சூட்டும் விழாவில் உங்கள் எழுத்தும் பரிமளிக்க இறைவனை வேண்டுகிறேன். பேரன் பல்லாண்டு நலமுடன் வாழவும் வேண்டுகிறேன் . அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவன் உங்கள் நூல்கள் பற்றிப் பேசி பெருமை கொள்வான். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலாக வாசகர் கடிதம் வெளியானபோது நான் பெற்ற மகிழ்ச்சி அளப்பரியது. தொடர்ந்து நண்பர்கள் தரும் ஊக்கம் என் எல்லையை விரிவுபடுத்தியது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற முனைப்பானது களத்தை விரிவாக்கியது. பேரனுக்கான தங்களின் வாழ்த்துக்கும் என் எழுத்து மீதான நேசிப்புக்கும் நன்றி.

      Delete
  12. தங்களுக்கும் தங்களின் பேரருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  13. You are a hardworking and sincere researcher.You have enough to share with others.It is not only research but also service to society.My sincere wishes to selvan thamilazhagan.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தினையும் ஆய்வினையும் பகிர்ந்துகொள்ளும் இக் களத்தில் தாங்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  14. அற்புதம்... நிறைவான வாழ்க்கை வாழ்கிறீர்கள்...

    ReplyDelete
  15. தங்களின் அன்பான வாழ்த்து இன்னும் என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete