20 December 2016

கோயில் உலா : 26 நவம்பர் 2016

26 நவம்பர் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தேவாரப்பாடல் பெற்ற எட்டு கோயில்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற நான்கு கோயில்களுக்கும், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலுக்கும் தலப்பயணம் சென்றோம். இவையனைத்தும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். மயூரநாதர் கோயிலில் சிவபுராணம் பாடல் பாட ஆரம்பித்து அங்கிருந்து பிற தலங்களுக்குச் சென்றோம். தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் கோயிலில் வழிபட்ட பின் அங்கு மதியம் ஓய்வெடுத்து, பின்னர் பயணத்தைத் தொடங்கி ஆக்கூரில் நிறைவு செய்தோம். மயூரநாதர் கோயில் தவிர மற்ற கோயில்கள் நான் இதுவரை பார்த்திராத கோயில்களாகும். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். 

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (அமைவிடம்)
  • ஆதிமயூரநாதருக்காக தனி சன்னதி கொண்டுள்ள மயூரநாதர் கோயில். இரு கொடி மரங்கள் உள்ளன. (மயிலாடுதுறை நகரில் உள்ளது) 
  • குடமுழுக்கு காணவுள்ள திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் (மயிலாடுதுறை அருகே பொறையாறு சாலையில் 6கிமீ தொலைவில் உள்ளது)
  • அட்டவீரட்டானத்தலங்களில் ஒன்றான, வயல்களின் நடுவே காட்சியளிக்கின்ற கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் செம்பொன்னார் சென்று, அங்கிருந்து நல்லாடை செல்லும் சாலையில் வலப்புறத்தில் உள்ளது) 
  • அழகான மாடக்கோயிலான செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் (மயிலாடுதுறை-பொறையாறு சாலையில் உள்ளது)
  • அய்யம்பேட்டை புள்ளமங்கை, கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலைப் போன்று கருவறையைச் சுற்றி சிறிய சிற்பங்களையும், சற்றே பெரிய அளவிலான கருவறை விமானத்தையும் கொண்ட நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் (செம்பொனார் கோயில் அருகே உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் செல்லலாம்)
  • பனை மரத்தை தலமரமாகக் கொண்ட மேலப்பெரும்பள்ளம் வலம்புர நாதர் கோயில் (மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் உள்ளது)
  • மாடக்கோயிலான தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் (சீர்காழி-ஆக்கூர் சாலையில் உள்ளது) 
  • மாடக்கோயிலான ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் (மயிலாடுதுறை-பொறையாறு சாலையில் உள்ளது)
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்
  • தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் (சீர்காழி-ஆக்கூர் சாலை) 
  • திருநகரி கல்யாண அரங்கநாதசுவாமி கோயில் (திருவாலியிலிருந்து 2 கிமீ) 
  • திருவாலி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில் (சீர்காழி-பூம்புகார் சாலையில் 9 கிமீ தொலைவில்) 
  • திருத்தேவனார்தொகை கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் (சீர்காழியிலிருந்து 6 கிமீ. திருநாங்கூரிலிருந்து 4 கிமீ)

மயூரநாதர் கோயில் 
மயூரநாதர்-அபயாம்பிகை (ஞானசம்பந்தர், அப்பர்)

மயூரநாதர் கோயிலில் சிவபுராணம் ஓதுதல்

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்
உசிரவனேசுவரர்-வேயுறுதோளி (ஞானசம்பந்தர்)

கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் 
வீரட்டேசுவரர்-இளங்கொம்பனையாள் (ஞானசம்பந்தர்)


வீரட்டேசுவரர் கோயில் முன்பாக கோயில்உலா சென்றோர்

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் செம்பொன்பள்ளியார்-மருவார்குழலி, (ஞானசம்பந்தர், அப்பர்)
நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் நற்றுணையப்பர்-மலையான்மடந்தை (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்)
நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில் மூலவர் விமானம் அருகில் 
 





நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயிலில் நுட்பமான சிற்பங்கள்


மேலப்பெரும்பள்ளம் வலம்புர நாதர் கோயில் 
(சம்பந்தர், அப்பர், சுந்தரர்) 
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
சங்காரண்யேசுவரர்-சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர்)


தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் நாண்மதியப்பெருமாள்-செங்கமலவள்ளித்தாயார் (திருமங்கையாழ்வார்) 

திருநகரி கல்யாண அரங்கநாதசுவாமி கோயில்
(திருமங்கையாழ்வார்)


திருவாலி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில் (குலசேகராழ்வார்)  
திருத்தேவனார்தொகை கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் 
(திருமங்கையாழ்வார்) 

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயில்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் 
தான்தோன்றீஸ்வரர்-வாள்நெடுங்கண்ணி (ஞானசம்பந்தர், அப்பர்)
நன்றி
கோயில் உலா அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. இந்த கோயில் உலாவில் கலந்துகொண்டோர்:

முனைவர் வீ.ஜெயபால் 
திரு கிருஷ்ணமூர்த்தி, பணிநிறைவு (RDO)
திரு மணிவாசகம் (BSNL)
திரு தங்கவேலு 
நெய்வேலி திரு வெங்கடேசன்
நெய்வேலி திரு செல்வராஜ்
முனைவர் ஜம்புலிங்கம்
திரு சச்சிதானந்தம் (BSNL) திருமதி சுசீலா
திருமதி கௌரி டீச்சர்
திருமதி மனோரஞ்சிதம்
திரு த.சு.பாலசுப்பிரமணியன்
திருமதி பா.இந்துமதி
திரு அருள்நிதி செல்வமணி
திரு அ.கு.செல்வராசன்

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

12 comments:

  1. படங்களை ரசித்தேன். காலையில் கோவில் தரிசனம்.

    ReplyDelete
  2. பழைமையான திருத்தலங்களைக் காட்டி -
    எங்களையும் தரிசிக்க வைத்து விட்டீர்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    தங்களின் பதிவைபடித்தபோது இந்து நாகரீகம் பாடம் படித்தது போல ஒரு உணர்வு சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நன்றி ஐயா
    தங்களுடன் பயணித்து உண்ர்வு

    ReplyDelete
  5. தங்களின் தேடுதல் மேலும் மேலும் வியப்பை தருகிறது ஐயா... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. மாயவரத்தில் இருந்த போது இந்த கோவில்களை எல்லாம் தரிசனம் செய்து இருக்கிறேன்.
    அருமையான படங்களுடன் கோவில் உலா பகிர்வுக்கு நன்றி. மீண்டும் தரிசனம் செய்தேன்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு! திருநகரி, கீழப்பரசலூர், நனிப்பள்ளி, தலைச்சங்காடு -இந்த இடங்களெல்லாம் எங்கேயிருக்கின்றன என்பதை சரியான விபரங்களுடன் சொன்னால் அந்த இடங்களுக்குப் பயணிக்கச் செல்கையில் வசதியாக இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. இருக்குமிட விவரங்களை இணைத்துவிட்டேன். நன்றி.

      Delete
  8. அருமையான பதிவு
    தங்கள் தேடல் தொடரட்டும்
    தங்கள் பணி சிறக்கட்டும்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  9. மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தவிர வேறு கோவில்களுக்கு இதுவரை சென்றதில்லை வாய்ப்பு வாய்க்கிறதா தெரியவில்லை வாழ்த்துகள்

    ReplyDelete
  10. கோவில்கள் இருக்குமிடங்களை விரிவாக மறுபடியும் இணைத்தமைக்கு அன்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete