07 January 2017

கோயில் உலா : 24 டிசம்பர் 2016

என் வலைப்பூவில் 150ஆவது பதிவு
எழுத்துக்கு ஊக்கமூட்டும் அனைவருக்கும் நன்றி
24 டிசம்பர் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தேவாரப்பாடல் பெற்ற எட்டு கோயில்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற மூன்று கோயில்களுக்கும் தலப்பயணம் சென்றோம். திருப்பாலைத்துறையில் சிவபுராணம் ஓதி உலா தொடங்கினோம். 
திருப்பாலைத்துறையில் சிவபுராணம் ஓதப்படல்
தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், வைகல் வைகல்நாதர் கோயில், கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில், தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில், திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களை தற்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மற்ற கோயில்களுக்கு முன்னர் சென்றுள்ளேன். அனைத்து கோயில்களையும் காண அழைக்கிறேன்.   

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள்
  • திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் (பெரிய களஞ்சியத்திற்கு சிறப்பு பெற்றது) (கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அருகில் உள்ளது)
  • ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது)
  • திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் (ராஜகோபுரத்துடன் கோயில் முன்னர் உள்ள குளத்தைக் காணும்போது மிகவும் அழகாக உள்ளது. வான சாத்திர அடிப்படையில் நவக்கிரக அமைப்பு உள்ள கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ளது. ஆடுதுறையிலிருந்தும் செல்லலாம்) 
  • வைகல் வைகல்நாதர் கோயில் (மாடக்கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூரை அடைந்து மேலும் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)
  • திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில்  (பெரிய நடராஜர் திருமேனிக்கும், அழகான ஓவியங்களுக்கும், நுட்பமான சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது)(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ செல்லவேண்டும்)
  • கோழம்பம் எனப்படும் கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம்)
  • தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)
  • திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் (பெரிய நந்திக்குப் புகழ் பெற்ற கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது)
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்
  • தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில் (மிக அழகான பெருமாள் உள்ள கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)
  • நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயில் (கல் கருடனுக்குப் பெயர் பெற்ற கோயில்)  (கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது)
  • திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் (அழகான மூலவரைக் கொண்ட கோயில்) (கும்பகோணம்-குடவாசல்-திருவாரூர் சாலையில், கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தூரத்தில் உள்ளது)
திருப்பாலைத்துறை பாலைவனநாதர், தவளவெண்ணகையாள்  
(நாவுக்கரசர்)
திருப்பாலைத்துறையில் உள்ள நெற்களஞ்சியம்
தென் குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர், பவழக்கொடியம்மை 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
திருநீலக்குடி (தென்னலக்குடி) நீலகண்டேஸ்வரர், அழகாம்பிகை 
(நாவுக்கரசர்)
வைகல் வைகல்நாதர், கொம்பியல்கோதை 
(ஞானசம்பந்தர்)
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர், அங்கவளநாயகி 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
ஆனையுரித்தேவர் சிற்பம், அருகில் பார்வதியும் கந்தனும்
முன்மண்டபக்கூரையில் உள்ள அழகான ஓவியம்
கோழம்பியம் கோகிலேஸ்வரர், சௌந்தரநாயகி 
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர்)
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், சௌந்தரநாயகி  
(ஞானசம்பந்தர்)
ஆமருவிப்பெருமாள் கோயில்
(பெரிய திருமொழி)
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா முலையம்மை(ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்)

 

நாச்சியார்கோயில் 
சீனிவாசப்பெருமாள் கோயில், வஞ்சுளவல்லித்தாயார் 
திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், சாரநாயகி
நன்றி
இக்கோயில் உலாவிற்கும், இதற்கு முந்தைய  26 நவம்பர் 201613 மார்ச் 201626 செப்டம்பர் 201518 சூலை 201520 சூன் 20158 நவம்பர் 201413 செப்டம்பர் 201426 ஏப்ரல் 2014 நாள்களிலான உலாவிற்கும் அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. 

துணை நின்றவை
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

7 ஜனவரி 2017அன்று இரவு மேம்படுத்தப்பட்டது.

18 comments:

  1. விளக்கமான தகவல்கள் ஐயா... நன்றி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஆனையுரித்தேவர் சிற்பம், அருகில் பார்வதியும் கந்தனும் சிற்பம் அழகாக உள்ளது .
    இதில் உள்ள பெருமாள் கோயில்களுக்கு நான் ௨௦௦௯ ல் போனேன் . பழைய ஞாபகம் வந்துவிட்டது

    ReplyDelete
  3. விளக்கமும், படங்களும் அருமை

    ReplyDelete
  4. அழகிய படங்கள்...

    ReplyDelete
  5. அழகிய படங்கள்... சிறப்பான தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. சிறப்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள். மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete

  7. அருமையான தகவல்
    வரலாற்றுச் சான்று கூறும் தலங்கள்

    ReplyDelete
  8. நல்லதொரு பயணத்தில் தங்களுடன் வந்தது போல இருக்கின்றது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  9. அருமையான தெய்வீகப் பயணம்....
    அருமை ஐயா...

    ReplyDelete
  10. 150ஆவது பதிவு
    அழகிய படங்கள்.
    சிறப்பான தகவல்கள்
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. படிக்கப் படிக்க மனம் இலயித்து. கோயில் படங்கள் நினைவுகளை மீட்டியது.

    சோழநாட்டில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.


    ReplyDelete
  12. படங்களும் பதிவும் அழகு. 150-க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. உணவு இடைவேளையில் பயணக் கலைப்பையும் பொருட்படுத்தாத தங்களுடனான உரையாடலில் பல அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  14. முன்பு பயணம் செய்யும்போதுசில ஊர்களின் பெயர்கள் பார்த்த நினைவு நாச்சியார் கோவில் சென்ற நினைவிருக்கிறது தஞ்சையிலும் கும்பகோணத்திலும் கோவில்களுக்கு கேட்கவே வேண்டாம் அங்கேயே இருந்தால் ஒருவேளை இக்கொவில்களை காணலாம் படங்களுடன் பதிவும் தகவல்கள் நிறைந்திருக்கிறது

    ReplyDelete
  15. 150ம் அரிய தகவல்களை சொல்லும் பதிவுகள். தங்கள் சிறப்பான பணிக்கு பாராட்டும் வாழ்த்துகளும் ஐயா!

    ReplyDelete
  16. 150 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார். அருமையான கோயில் உலா. தகவல்கள் அற்புதம்.

    ReplyDelete
  17. ஆடுதுறை ஶ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் புகழ்பெற்ற திருவிடைமருதூருக்கு அருகே(சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)தங்கள் கட்டுரையில் பாபநாசம் அருகே என்று தவறாக உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete