தேவார மூவரால் பாடப்பெற்ற திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், காவிரியின் வடகரையில் உள்ள 46ஆவதுதலமாகும். இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அண்மைப்பதிவில் திருவீழிமிழலையில் புகழ் பெற்ற வௌவால்நத்தி மண்டபம் கண்ட நாம், தற்போது சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற இக்கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.
கொடி மரம், பலி பீடம், நந்தியைக் கடந்து செல்லும்போது இடப்புறம் குஹாம்பிகை சன்னதியும், கடும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. பிற சன்னதிகள் மற்ற கோயில்களில் அமைந்துள்ளவாறே காணப்படுகின்றன. சிறப்பான அமைப்பாக சட்டநாதர் சன்னதியை இங்கு காணமுடியும்.
கொடி மரம், பலி பீடம், நந்தியைக் கடந்து செல்லும்போது இடப்புறம் குஹாம்பிகை சன்னதியும், கடும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. பிற சன்னதிகள் மற்ற கோயில்களில் அமைந்துள்ளவாறே காணப்படுகின்றன. சிறப்பான அமைப்பாக சட்டநாதர் சன்னதியை இங்கு காணமுடியும்.
கருவறையைச் சுற்றி வரும்போது தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயிலை நினைவுபடுத்துகின்ற வகையில் நின்ற நிலையிலான அழகான சிற்பங்களைக் காணமுடியும்.
மிக அழகாக காணப்படுகின்ற அச்சிற்பங்களில் ஒன்றாக சிவபெருமான் தன் தேவியுடன் நிற்கின்ற சிற்பத்தைக் காணலாம்.
தொடர்ந்து சுற்றி வரும்போது கருவறையின் கோஷ்டத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் போன்ற கோயில்களில் உள்ளவாறு நுணுக்கமான அளவிலான சிற்பங்களைக் காணமுடியும். மந்திர மலையை மத்தாக நட்டு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் கடையும் காட்சி உள்ளிட்ட பல சிற்பங்கள் அவற்றில் உள்ளன.
வாய்ப்பு கிடைக்கும்போது நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற கலைப்பொக்கிஷமான திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலுக்குப் போவோம், வாருங்கள்.
கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரியை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிமீ தொலைவிலுள்ள இன்னம்பூரை அடுத்து அதே சாலையில் சுமார் மூன்று கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.
கண்டு களித்தேன்.
ReplyDeleteஅழகிய கோவில். சுவாரஸ்யமான பதிவு. அழகிய படங்கள். தம +1
ReplyDeleteஅருமை
ReplyDeleteகாலையில் நல்ல காட்சிகளுடன் பதிவு தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteதிருப்புறம்பியம் 'சாட்சி'நாதேஸ்வரர் கோயில் சிற்பங்களுக்கு புகழ் பெற்றது என்பதற்கு உங்களின் படங்களே சாட்சி :)
ReplyDeleteசிறப்பான புகைப்படங்களுடன் அருமையான பதிவு. நன்றிகள்
ReplyDeleteஅருமையான படங்களுடன் அற்புதமான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteசிற்பங்களின் அழகு மனதைக் கவர்கிறது ஐயா
ReplyDeleteநன்றி
திருப்புறம்பியம் 'சாட்சி'நாதேஸ்வரர் கோயிலை மீண்டும் உங்கள் பதிவில் கண்டு களித்தேன்.
ReplyDeleteபுகைப்படங்க்கள் அழகு.
ReplyDeleteஅருமையான சிற்பங்கள்... நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
ReplyDeletewonderful info sir
ReplyDeleteபடங்களுடன் பதிவு தகவல் களஞ்சியம்
ReplyDeleteதிருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் நான் பார்க்காத கோயில்களில் ஒன்று. ஆனால் பார்த்தது போன்ற நிறைவு ஏற்பட்டது. நேற்று இங்கே ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
ReplyDeleteகனடா நாட்டிலிருந்து
முனைவர் அ.கோவிந்தராஜூ
சிற்பங்கள் மிகவும் அழகு. திருப்புறம்பியம் ' பொன்னியின் செல்வனில்' அடிக்கடி வரும். தஞ்சையிலிருந்து போகும்போது சுவாமிமலையைத்தாண்ட வேன்டுமா?
ReplyDeleteதஞ்சையிலிருந்து போகும்போது சுவாமிமலையைத் தாண்டவேண்டும். சுவாமிமலையில் விசாரித்துக்கொண்டு வருவது நலம்.
Deleteரத்தினச்சுருக்கமான விவரங்கள் . அதனை முழுமைப்படுத்தின சிற்பங்கள் .
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை ஐயா
ReplyDeleteதுளசி, கீதா