தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று ஆலந்துறைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு குடவாயில் பாலசுப்ரமணியன் அய்யம்பேட்டை செல்வராஜ், அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, கரந்தை ஜெயக்குமார் உள்ளிட்ட பல நண்பர்களுடனும் அறிஞர்களுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் மென்மேலும் அதன்மீதான ஈடுபாடு கூடுவதை என்னால் உணர முடிகிறது. அக்கோயிலுக்குச் செல்வோம் வாருங்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்குச் செல்லலாம்.
பண்டைக்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். அம்மன்னன் காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு இக்கோயில் ஒரு எடுத்துக் காட்டாகும். ஞானசம்பந்தப்பெருமானால் பாடப்பெற்ற இக்கோயிலின் தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச்சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக இக்கோயில் விளங்குகிறது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. சப்தஸ்தானத்தல விழாவிற்கான பல்லக்கு அருகே காணப்படுகிறது.
கருவறை கோஷ்டத்தில் சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்துசெல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.
ஒரு சோழ நாட்டுச் சிற்பி.....கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்குக் காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் உள்ளது உண்மை என்று அங்குள்ள சிற்பங்களில் ஒன்றின் பெருமையைப்பற்றி குடவாயில் பாலசுப்பிரமணியன் தன்னுடைய கலையியல் ரசனைக் கட்டுரைகள் என்ற நூலில் விவாதிக்கிறார். அனைத்துச் சிற்பங்களும் அவ்வாறு உணர்வை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
அழகான சிற்பங்களையும், கலை நுட்பங்களையும் கொண்ட இக்கோயிலுக்கு ஒரு முறை சென்றுவருவோம்.
துணை நின்றவை
மா.சந்திரமூர்த்தி, புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2004
மு.அகிலா, புனலாடும் முன் புள்ளமங்கை செல்வோம், மகாமகம் மலர் 2004
படங்களும் செய்திகளும் மிக அருமையாக உள்ளன.
ReplyDeleteஇங்கு திருச்சி சென்னை செல்லும் வழியில் திருச்சியிலிருந்து 25-30 கிலோமீட்டர் தொலைவில் செட்டிகுளம் என்ற ஓர் ஊரிலும் பிரும்மபுரீஸ்வரர் என்ற பெயரில் ஓர் சிவன் கோயில் உள்ளது. நான் சென்ற ஆண்டு சென்று வந்தேன். சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலாகும். தலைப்பைப் பார்த்ததும் உடனே அந்த ஞாபகம் எனக்கு வந்தது.
பகிர்வுக்கு நன்றிகள்.
புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில்...இப்போது தான் கேள்விப் படுகிறேன் ஐயா. புகைப்படங்கள் அழகு.
ReplyDeleteசிற்பங்கள் அழகோவியமாக இருக்கிறது. பல்லக்கும் அருமை ஐயா. தம +1
சோழர் காலத்து கோவிலொன்றைப்பற்றி மறுபடியும் அறிய மகிழ்வாக உள்ளது.
ReplyDeleteமுதலாம் பராந்தகசோழன் காலத்தைச் சேர்ந்த,
ReplyDeleteபண்டைக்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட
ஞானசம்பந்தப்பெருமானால் பாடப்பெற்ற கலைச் சிறப்புகள் நிறைந்த கோயிலின்
சிறப்பினை தங்கள் மூலமாகவே அறியப் பெற்றேன் அய்யா!
வெகு சிறப்புமிக்க அழகான சிற்பங்களையும், கலை நுட்பங்களையும் கொண்ட இக்கோயிலுக்கு அவசியம் ஒரு முறை சென்று வருவேன் என்பது உறுதி முனைவர் அய்யா அவர்களே!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு.
வணக்கம்
ReplyDeleteஐயா
அறிந்திடாத தகவல் இந்த ஆலயத்தின் ஒவ்வொரு சிற்பங்கள் பற்றி சொல்லிய விதம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுடன் இக்கோயிலுக்கு சென்று வந்த நினைவலைகள்
ReplyDeleteஇனிமையானவை ஐயா
இன்று தங்கள் பதிவால் அக்கோயிலுக்கு மீண்டும் சென்று வந்த உணர்வு
நன்றி ஐயா
தம +1
ஒருமுறை சென்று வர வேண்டும் ஐயா... சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteதிருச்சி - சென்னை சாலையில் பிரம்மாண்டமானதொரு பிரம்மன் கோவில் சென்ற ஆண்டு தரிசித்தேன். இப்போது தாங்கள் தெரிவிக்கும் புள்ளமங்கை பிரம்மனையும் விரைவில் தரிசிக்கவேண்டும். (௨) பிரம்மன் நமது எதிர்காலத்தை நம் தலையில் எழுதிவைக்கிறான் என்பது பொதுவான கருத்து. அதைக் குறிக்கும் அடையாளமாகத்தான் தங்களின் படங்கள் சிலவற்றில் ஒரு எழுதுகோல் காணப்படுகிறதோ?
ReplyDeleteமிகச்சிறிய சிற்பங்களின் அளவை உணர்த்த அளவுகோல் வைத்தேன். நன்றி.
Deleteபுள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் பற்றி அறியத்தந்த முனைவருக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 8
தஞ்சைக்கு அருகில் இருந்தும் புள்ளமங்கை சிவாலயத்தை தரிசித்ததில்லை..
ReplyDeleteஇனிய பதிவு - அழகிய படங்களுடன்!..
அறியாத கோவிலை பற்றி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபழமையான கோயிலின் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! அழகான படங்களுடன் விளக்கப்பதிவு சிறப்பு! நன்றி!
ReplyDeleteபடங்களும் பதிவும் மிகவும் அருமை!
ReplyDeleteஇந்தக் கோயிலைப் பற்றி அறிந்திருந்தாலும், இத்தனைத் தகவல்கள் அறிந்ததில்லை. தங்களின் அழகிய படங்களுடனும், தகவல்களுடனும் அறிந்து கொண்டோம். அழகான சிற்பங்கள்.....மிக்க நன்றி பகிர்வுக்கு ஐயா!
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான பகிர்வு அவன் அருளால் என்றாவது செல்ல வாய்ப்புக் கிடைக்கட்டும் எனக்கு!
ReplyDeleteநன்றி
இக்கோவில் பற்றி அறிந்திருக்கவில்லை. கல்லிலே கலை வண்ணம் காட்டும் சிற்பங்கள். படங்களுக்குக் கீழே குறிப்புகள் இருந்திருந்தால் என்னைப் போன்றோருக்கு உதவியாய் இருந்திருக்கும் . பதிவுக்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
ReplyDeleteஇது வரை அறியாத கோவிலின் விபரங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அழகான பழமையான ஒரு கோவிலுக்கு சென்று தரிசித்த திருப்தி தங்கள் பதிவை படிக்கையில் ஏற்பட்டது. கோவிலின் புகைப் படங்களும், சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் புகைப்படங்களும் மிகவும் அருமையாக உள்ளது. இனி எப்போதாவது தஞ்சாவூர் செல்லும் சமயம் தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த கோவிலுக்கு நேரடியாக சென்று தரிசித்து வரும் பாக்கியத்தை அந்த ஈஸ்வரன் எனக்கு அருள மனமுருகி வேண்டிக் கொள்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பல கோவில்களுக்கு சென்று அதன் தகவல்களையும் அமைப்பையும் விவரிக்கும் உங்கள் எழுத்து மிக்க சிறந்தது.நன்றி மேலும் பல கோவில்களை உங்கள் மூலமாக அறிய ஆவலாய் இருக்கிறேன் .நன்றி .வான்மீகீயூர் .லகூட்வா .ல.சங்கர்
ReplyDeleteதமிழ் வ்க்கிப்பீடியாவில் 200 பதிவுகளை பதிவேற்றி சாதனை படைத்திருக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிக்கிப்பீடியாவில் இவர் ஆற்றுகின்ற தொண்டு. பெருந்தொண்டு. சமயத்தொண்டு. தமிழ்த்தொண்டு.
Deleteதொண்டரடிப் போற்றி..
ஒரு கோயிலைப் பற்றி எழுதி, அதற்கானப் படிமங்களை இணைத்து. அதன் வரலாறுகளை தேடி அலைந்து செய்வதெல்லாம் பெரும் செயல்.
தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யா
ReplyDeleteதங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யா
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteகாலத்தால் அழிக்க முடியாத சிற்பங்களை படைத்து அளித்துள்ளார் நம் முன்னோர்கள். ஆனால் பாருங்கள்.. அவை குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு அறிந்து கொள்ள நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆர்வம் காட்டுவதில்லை. சிற்பத்தினை திருடி விற்கும் கும்பலுக்கு இருக்கும் சிற்ப ஞானம்,.. கோயில்களைப் பராமரிக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் கூட இல்லை. :-(
ReplyDeleteஅரும்பெரும் முயற்சி பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteமிக மிக அருமை.
ReplyDeleteமிக அருமையான பதிவு . இதைப்போன்ற பகிர்வுகள் நான் விரும்பிகிறேன்.
ReplyDeleteI'm downloading all your miniatures. Thank you.
ReplyDelete