07 March 2017

விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்ப் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் : தினமணி

விக்கிபீடியாவில் மூன்றாமிடம் பெற்றதைப் பற்றி இன்றைய
தினமணி இதழில் வெளியான செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 
வெளியிட்ட தினமணி  இதழுக்கு என் நன்றி.



விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்த 
தமிழ்ப்பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்

விக்கிபீடியா கடந்த ஜனவரி மாதம் நடத்திய விக்கிக்கோப்பைப் போட்டியில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பி.ஜம்புலிங்கம் 253 பதிவுகளைப் பதிவு செய்தார். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள், வைப்புத்தலங்கள் பட்டியலை முழுமையாக்கல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள், அறிஞர்கள் அறிமுகம் போன்றவற்றைப் பதிவு செய்தார். இதன் மூலம், இப்போட்டியில் அவர்  மூன்றாம் இடத்தினைப் பெற்றார்.

இது குறித்து ஜம்புலிங்கம் தெரிவித்தது :  இலக்கின் அடிப்படையில் எழுதத் தொடங்கியபோது, தினமும் இரண்டு பதிவுகளாவது எழுதவேண்டும் எனத் திட்டமிட்டேன். சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு, ஏழு என எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. முதலில் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள கோயில்களைப் பற்றிய பதிவுகளைத் தொடங்கி பின்னர் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ளவற்றைப் பற்றி எழுதினேன் என்றார் ஜம்புலிங்கம். 

இவர் ஏற்கெனவே 2015ஆம் ஆண்டில் முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 



20 comments:

  1. வணக்கம்
    ஐயா
    மேலும் உயர எனது வாழ்த்துக்கள் தகவலை பார்த்த போது இரட்டிப்பு மகிழ்வு.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சி...

    தங்களின் சாதனைகள் தொடரட்டும்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. அன்பின் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மகிழ்வான வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  6. தினமணி செய்திகண்டேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும். மு. இளங்கோவன் (மின்னஞ்சல் வழியாக muelangovan@gmail.com)

    ReplyDelete
  7. வாழ்த்துகளும் வணக்கமும் அய்யா. தங்கள் பணியைக் தினமணி இன்று வாழ்த்துவதுபோல் நாளைய தமிழ் உலகமே வாழ்த்துவது உறுதி

    ReplyDelete
  8. விக்கிபீடியாவில் நீங்கள் 'ஒலி'த்த பிறகு தின'மணி' எதிரொலிக்கக் கேட்பானேன்?

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
  9. மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா.

    ReplyDelete
  10. உளம் கனிந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. மகிழ்வான செய்தி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வலையுலகத்தில் எங்களுக்குத் தெரிந்த சாதனையாளர் நீங்கள் மேலும் சிறப்புகள் பெற அன்புடன் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வணக்கம் ஜம்பு. சென்னைப் பதிப்பிலும் வந்திருந்தது.
    மனமார்ந்த வாழ்த்துக்களும் அன்பும்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் . முயற்சி திருவினையாக்கும் என்பது சரியாகிவிட்டது

    ReplyDelete
  15. தங்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த மரியாதையைக் கண்டு மகிழ்கிறேன் :)

    ReplyDelete
  16. //தமிழ்ப் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் : //

    இது தான் ஆங்கில வரியை மனத்தில் கொண்டு அதன் பிரதியாய் தமிழில் எழுதுவதின் குறைபாடு!

    நீங்கள் என்ன தமிழ்ப் பல்கலைக் கழகத்தையா கண்காணிக்கிறீர்கள்?

    ReplyDelete
  17. பாராட்டுகள் ஐயா!
    தங்கள் தமிழ் பணி தொடர
    வாழ்த்துகள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!!தங்களின் அயராத உழைப்பிற்குக் கிட்டிய வெற்றி!!! மேலும் தங்கள் விக்கிப்பதிவு அரும்பணி தொடரவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete