18 February 2017

இலண்டனிலிருந்து தமிழ்நாட்டிற்கு : கார்டியன்

இலண்டனிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா வந்த பயணியரின் எண்ணவோட்டங்களை அண்மையில் கார்டியன் இதழில் 17 டிசம்பர் 2016 அன்று வெளியான தமிழ்நாடு : நூற்றுக்கணக்கான கோயில்கள் ஆனால் மிகச்சில ஆங்கிலேயர்களைக் காணும் நிலை என்ற தலைப்பிலான கட்டுரையில் காண முடிந்தது. சுற்றுலா வந்த பயணியர் தமிழ்நாட்டைக் கூர்ந்து கவனித்து, அனுபவித்த விதம் நம்மை வியக்க வைக்கிறது.பிரிட்டனைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவைப் பற்றி தெரியுமா என்று கேட்டால் அவர்கள் கோவா, கேரளா, ராஜஸ்தான், தில்லி, இமயலை போன்றவற்றைப் பற்றிக் கூறுகின்றார்கள். தமிழ்நாட்டைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அவர்களுடைய அனுபவங்களில் சிலவற்றைக் காண்போம். (நன்றி : கார்டியன்)
  • தமிழ்நாடு : அழகான கடற்கரைகள், உலகின் மிகப்பெரிய கோயில்கள், தேயிலைத் தோட்டங்கள்....ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான ஆங்கிலேய சுற்றுலாப்பயணியர்கள். உலகின் 10 பெரிய இந்துக் கோயில்களில் எட்டு கோயில்களைக் கொண்ட பெருமை. அங்கார்வாட்டைவிடப் பழமை. உலகில் நெடுநாள் நாகரிகம்,  3800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்பாட்டு வரலாறு. கலைக்குப் பெருமை சேர்த்த சோழர்கள் ஆண்ட மாண்பு. வாழை இலை போட்டு பத்துக்கும் குறையாத கூட்டு, பொறியலுடன் அப்பளத்தை வைத்து அவர்கள் சோறு சாப்பிடுவதும்,  காலை உணவில் இட்லிப்பொடி, தேங்காய் சட்னியுடன் ஊத்தாப்பம் என்ற நிலையில் வாய்க்கு ருசியாக மிகவும் சிறப்பாக அமைதல். கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாதனவற்றை காணும் வாய்ப்பு. 
  • தமிழ்நாட்டுக்கோயில்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்ல. தமிழக மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அம்சம்.
  • கங்கைகொண்டசோழபுரம் : தற்போது சிறிய கிராமமாக இருக்கும் இவ்வூர் அந்நாளில் சோழர்களின் தலைநகரம். அழகாக பேணப்படுகின்ற தோட்டத்தைக்கொண்டு அமைந்துள்ள சூழலில் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட இறைவனின் சிற்பங்கள். தன்மீது படுகின்ற  சூரியக்கதிர்களை கோயிலின் உள்ளே அழகாக பிரதிபலிக்கின்ற, இறைவனின் வாகனமான புன்னகைக்கும் நந்தி. பெரும்பாலும் சுற்றுலாப்பயணியரைக் காணமுடியவில்லை. வழிபாட்டிற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் வருகின்ற மக்கள். தலையில் அழகாக மலர்களைச் சூடிய மகளிர். கோயிலுக்கு வருவோர் அர்ச்சகரிடமிருந்து விபூதியைப் பெற்றுக் கொள்கின்ற அழகு.....
  • சிதம்பரம் நடமாடும் சிற்பங்களைக் கொண்ட அழகான கோபுரங்களுடன் காணப்படுகின்ற தென்னிந்தியக் கோயில்களில் குறிப்பிடத்தக்கது.
  • கும்பகோணம் தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ். 188 கோயில்களையும், சுற்றிலும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட ஊர். தென்னிந்தியாவின் சியம் ரீப் (அங்கார்வாட்டின் நுழைவாயில்) என்ற பெருமை. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிகும்பேஸ்வரர் கோயில். சட்டை இல்லாமல், திருநீற்றுடன் பல யாத்ரீகர்கள்.
  • தாராசுரம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் ஒன்று. நூற்றுக்கணக்கான நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டமைந்த தூண்களைக் கொண்டுள்ள கோயில்.
  • தஞ்சாவூர் பெரிய கோயில் : கி.பி.1010இல் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் (பெரிய என்ற நிலையில்) கோயில் 60 மீட்டர் உயர விமானத்தில் 80 டன் எடையுள்ள கல். ஆயிரமாண்டு கால ஓவியங்கள் இன்னும் ஒளிமயமாக. 
  • மகாபலிபுரம் 1300 ஆண்டு கால பெருமையுடைய கடற்கரைக் கோயில் மற்றும் சிற்பங்கள்.
  • வால்ப்பாறை 1000 மீட்டர் உயரத்தில் 10000 ஏக்கர் பரப்பளவில் தேநீர்த் தோட்டம். உலகளவில் தேநீருக்கான நுகர்வு குறைய ஆரம்பிக்கவே தேநீர்ச் சுற்றுலா என்றளவில் சுற்றுலா முதன்மை.
  • பொங்கல் திருநாள் அறுவடைத் திருவிழாவான பொங்கல் திருநாளை தமிழர்கள் வரவேற்கும் விதம் அழகு.  பொங்குதல்  என்ற சொல்லிலிருந்து வருவது பொங்கல். பொங்கலின்போது தமிழ்நாடே மகிழ்ச்சி. இளையவர்களும் முதியவர்களும் புதிய ஆடை அணிந்து கொண்டு, வீட்டை அலங்கரித்தல். பலர் கரும்புக்கட்டுகளோடு. பெரும்பாலும் அனைவருடைய வீட்டின் முன்பும் வண்ண மயமான கோலங்கள். 
நன்றி:
மூலக்கட்டுரையிலிருந்து விவரங்கள் தொகுத்து தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கட்டுரையாளருக்கும், கார்டியன் இதழுக்கும் நன்றி. மூலக்கட்டுரையை வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்: 

17 comments:

  1. கட்டுரையாளருக்கு நன்றி.

    ReplyDelete
  2. தமிழக அடையாளங்களைப் பகிர்ந்த
    கார்டியன் ஏட்டிற்கும் - அதனை
    பகிர்ந்த தங்களுங்கும் நன்றி.

    ReplyDelete
  3. 1. கும்பகோணம்: ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிகும்பேஸ்வரர் கோயில்.

    2. கங்கைகொண்டசோழபுரம் : தற்போது சிறிய கிராமமாக இருக்கும் இவ்வூர் அந்நாளில் சோழர்களின் தலைநகரம்.

    3. தமிழ்நாடு: உலகின் 10 பெரிய இந்துக் கோயில்களில் எட்டு கோயில்களைக் கொண்ட பெருமை. உலகில் நெடுநாள் நாகரிகம், 3800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்பாட்டு வரலாறு.

    4. தாராசுரம் : யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் ஒன்று. நூற்றுக்கணக்கான நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டமைந்த தூண்களைக் கொண்டுள்ள கோயில்.

    5. மகாபலிபுரம் : 1300 ஆண்டு கால பெருமையுடைய கடற்கரைக் கோயில் மற்றும் சிற்பங்கள்.

    -- குறிப்பிட்ட பல செய்திகள் பரவலாக பலருக்குத் தெரியாத செய்திகள். கார்டியனில் தமிழ்நாடு பற்றிக் காணக் கிடைத்தது நமக்குப் பெருமை.

    ReplyDelete
  4. வணக்கம்
    அய்யா
    இது தொடர்பாக இயங்கவே முடியும் இல்லையா ...
    நல்ல வணிக வாய்ப்பு இருக்கிறது

    ReplyDelete
  5. நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது இன்னும் அதிக அளவிலும் ஆழமானதாகவும் இருக்கவேண்டும் என்பது தெரிகிறது.

    ReplyDelete
  6. சுற்றுப்பயணம் வந்தவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்து எழுதியிருப்பதறிந்து மகிழ்ச்சி. தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்? கார்டியன் பத்திரிக்கையில் வந்தவற்றைத் தொகுத்துக் கொடுத்திருப்பதற்கு நன்றி முனைவர் ஐயா!

    ReplyDelete
  7. அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பெருமையான விஷயங்கள்.

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள்! ஐயா!

    ReplyDelete
  10. தங்களின் எழுத்து நடை ஆங்கிலக்கட்டுரையை விட அருமை. அது பழம் என்றால், நீங்கள் பழச்சாறினைத் தந்துள்ளீர்கள். வணக்கம்.

    ReplyDelete
  11. பகிர்வுக்கு மகிழ்ச்சி. இந்த இடங்களை நல்ல சுற்றுலா அனுபவமாக மட்டும் நம்மால் மாற்ற முடிந்தால் நிறைய பணவரவு நாட்டுக்குக் கிட்டும். அரசும் மக்களும் இயைந்து செய்யவேண்டும்

    ReplyDelete
  12. அருமையான பதிவு அய்யா. எனது சுற்றுலா வலை தளம் மற்றும் 'ஹாலிடே நியூஸ்' இதழ்களில் உங்கள் அனுமதியோடு பயன்படுத்திக்கொள்ள விழைகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  13. சிறந்த பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  14. தமிழ் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். வெளிநாட்டவரும் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டியது அரசின் கடமை.

    ReplyDelete