12 மகாமக சைவத் தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஆறு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஏழாவது கோயில். தொடர்ந்து மகாமகத்திற்கு முன்பாக மீதி பார்க்கவுள்ள கோயில்களுக்கும் செல்வோம்.
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் காண்பதற்காக 22.10.2015 அன்று சாக்கோட்டை சென்றுவிட்டு கும்பகோணம் வந்து ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கண்டேன். மகாமகத் தீர்த்தவாரி கோயில்கள் இரண்டை ஒரே நாளில் அடுத்தடுத்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.
கும்பகோணம் நகரில் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மிக அருகில் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான, மிகப்பழமை வாய்ந்த நாகேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகுகால காளியம்மன் சன்னதி உள்ளது. அந்நிலையில் ராகுகாலக்காளியம்மன் கோயில் என்றாலே பலருக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள மூலவர் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.

கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தைக் கடந்து கருவறைக்குச் செல்லும்போது வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். இறைவன் சன்னதியிலிருந்தே அம்மனை தரிசிக்க முடியும். இறைவனையும் அம்மனையும் தரிசித்துவிட்டு வலம்வரும்போது யாகசாலை பூசைகள் நடைபெற்றுவருவதைக் காணமுடிந்தது.
திருச்சுற்றில் சுற்றிவரும்போது ராகுகால காளியம்மன் சன்னதியைக் காணமுடிந்தது. இச்சன்னதியில் ராகுகால வேளைகளில் சிறப்பு பூசை நடைபெறுவதாகவும் அதிகமான எண்ணிக்கையில் வேண்டுதலுக்காகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் பக்தர்கள் வருவார்கள் என்றும் கூறினர்.
குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கோயில் முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. குடமுழுக்கிற்கு சற்று முன்பாக பக்தர்கள் பூசைக்குரியனவற்றை தட்டில் வைத்து கோயிலைச் சுற்றிவந்து யாகசாலையில் பூசை நடைபெறுமிடத்தில் தந்தனர்.
சிறிது நேரத்தில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்த நிலையில் கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இதுவரை கோயிலைச் சுற்றி வந்த பின்னர் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக கோயிலின் வெளியே வந்தேன். விமானக்கலசங்களுக்கும் பூஜை செய்யப்பட்டு குடமுழுக்கு இனிதாக நிறைவேறியது. நிறைவாக சூடமேற்றப்பட்டபோது பக்தர்கள் பக்தியில் திளைத்தனர்.
ஒரே நாளில் இரு குடமுழுக்கினைக் கண்ட நிலையில் கும்பகோணத்திலிருந்து மன நிறைவோடு கிளம்பினேன். மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கு கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள விரைவில் மற்ற கோயில்களுக்குச் செல்வோம்.
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8,30

---------------------------------------------------------------------------------------------------
- காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
- கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
- நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
- சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
- கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
- காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
- கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
- அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
- பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
- அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
- கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
- ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப் பெருவிழா 2004, கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014