முனைவர் மா.சுந்தரபாண்டியன் |
நமது பண்பாட்டு நிகழ்வுகள் பதியப்படும்போது நம் பெருமையை நம்மால் உணரமுடிகிறது. வளர்ந்துவரும் தனியார் மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் பன்மடங்கு பெருகிக் கொண்டுவரும் இந்நிலையில் பண்பாடு குறித்த பொருண்மைகளை விவாதிக்க வேண்டிய சூழல் எழுகிறது. அது காலத்தின் தேவையாகவும் ஆகிவிடுகிறது. இச்சூழலில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்த நூல்கள் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன எனலாம். அவ்வகையில் இந்நூல் வழிபாடுகளும் விழாக்களும் (பக்.9-41), வாழ்க்கை வட்டச்சடங்குகள் (42-111), சிறார் வழக்காறுகள் (112-122), ஊர்ப்பெயராய்வு (123-131), நிகழ்த்துக்கலை (132-143) என்ற ஐந்து தலைப்புகளில் அமைந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காக தஞ்சாவூர் வட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நூலாசிரியர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது திரட்டப்பட்ட நேரடித் தரவுகளின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள் இந்நூலில் முக்கியமான இடததைப் பெறுகின்றன.
கட்டுரைகள் பெரும்பாலும் திருக்கானூர்ப்பட்டியை மையமாகக் கொண்டுள்ளன. வழிபாடுகளும் விழாக்களும் என்ற தலைப்பின்கீழ் திருக்கானூர்ப்பட்டியில் உள்ள கோடியம்மன் கோயில் ஏகௌரியம்மன் கோயில், ஒத்தையால் முனியாண்டவர் கோயில், அங்காளபரமேசுவரியம்மன் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி நேரில் சென்று விவரங்களைத் தொகுத்து வரலாறு, நாட்டுப்புறவியல், சமூகவியல் என்ற பல்வேறு நோக்கில் அளித்துள்ளார்.திருவிழாக்களின்போது நடைபெறும் நிகழ்வுகளையும், மக்கள் இத்தெய்வங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அவர்களுடைய ஈடுபாடுகளையும் வெளிக் கொணர்ந்துள்ளார். நேரடி களப்பணியின்போது அவர் சந்தித்த தகவலாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை வட்டச்சடங்குகளாக பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்ற நிலைகளில் காணலாகும் சடங்குகளைப் பொருளாதார நோக்கில் அணுகியுள்ளார். இவ்வகையான வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பரிமாற்றத்தின் முக்கிய பங்கு, தாய்மாமனின் பங்கு ஆகியவற்றை திருக்கானூர்ப்பட்டியில் நடைபெற்ற பல சடங்குகளில் கலந்துகொண்டு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நெறிமுறைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஊர்ப்பெயராய்வு என்ற நிலையில் திருக்கானூர்ப்பட்டியைப் பற்றி வரலாற்று ரீதியாக செய்திகளைத் சேகரித்து அளித்துள்ளார். ஊரின் எல்லை, வாழும் மக்கள், மண்வளம், நீர்வளம், தொழில், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல கூறுகளைப் பற்றி விவாதிக்கிறார்.
சிறார் விடுகதைகள் என்ற தலைப்பிலான கட்டுரையில் விடுகதையைப் பற்றிய பொருள் மற்றும் இலக்கணத்தைக் கூறிவிட்டு திருக்கானூர்ப்பட்டியில் காணலாகும் சிறுவர் சிறுமிகளின் விடுகதைகளை இயற்கை, தாவரம், மனிதன், விலங்கு, புழங்குபொருள்கள் என்ற வகைளில் சேகரித்து யெவளிப்படுத்துகிறார்.
பறையாட்டம் என்ற தலைப்பில் தஞ்சை மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயில் நடனம், காளைமாட்டு நடனம், குறவன் குறத்தி ஆட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்றவற்றை அறிமுகப்படுததிவிட்டு திருக்கானூர்ப்பட்டியில் வாழும் மக்களிடம் களப்பணி வாயிலாகச் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தோற்கருவிகளின் வகைகள் மற்றும் வரலாறு தொடங்கி அனைத்தையும் விரிவாக முன்வைக்கிறார்.
பண்பாட்டுப்பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்), முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, டிசம்பர் 2006, ரூ.100, பக்.144.
இவருடைய பிற நூல்கள்
நாட்டுப்புற மக்களிடம் பிறப்புச்சடங்கு, பூப்புச்சடங்கு, காதணி விழா, திருமணச்சடங்கு, வளைகாப்பு விழா, இறப்புச் சடங்குகளால் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டு வந்தது, எப்படி செயல்பட்டு வருகிறது, அவற்றின் சமுதாய மதிப்புகள் என்ன என்பதைக் குறித்து இந்நூல் அமைந்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். செலவுப்பொருளாதாரம், முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், தஞ்சாவூர் 613 007, 2009, ரூ.50, பக்.96.
"நாட்டுப்புற மக்களின் வழக்காறுகள் அனைத்தும் அம்மக்களின் மேம்பாட்டிற்கே" என்ற கருத்திற்கிணங்க நாட்டுப்புற மக்களிடம் தரவுகள் கள ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறையில் ஆராய்ந்து முடிவுகள் வெளிப்படுததப்பெற்றுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூல் வடிவமாகக் கொணர்வது என்பது எளிதான காரியமல்ல. இருப்பினும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் வெளிவரவேண்டும் என்ற உயரிய நோக்கில் அவற்றை வெளிக்கொணர்ந்துள்ள ஆசிரியரின் பெருமுயற்சியைப் பாராட்டி, இந்நூல்களை வாசிப்போமே.

திருக்கானூர்ப்பட்டியில் இந்து உடையார், கிறித்தவ உடையார், கள்ளர்,
அம்பலார், பள்ளர், பறையர், சக்கிலியர் முதலான சாதி மக்களிடையே ஏற்படும்
உறவுகள், உழைப்பு, பொருளாதார ஏற்றம் பற்றிய செய்திகளை இந்நூல்
கிராமப்பொருளாதாரமாக விளக்குவதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். கிராமப்பொருளாதாரம்,
முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், தஞ்சாவூர் 613 007, 2009, ரூ.50, பக்.112.
நாட்டுப்புற மக்களிடம் பிறப்புச்சடங்கு, பூப்புச்சடங்கு, காதணி விழா, திருமணச்சடங்கு, வளைகாப்பு விழா, இறப்புச் சடங்குகளால் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டு வந்தது, எப்படி செயல்பட்டு வருகிறது, அவற்றின் சமுதாய மதிப்புகள் என்ன என்பதைக் குறித்து இந்நூல் அமைந்துள்ளதாக முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். செலவுப்பொருளாதாரம், முனைவர் மா.சுந்தரபாண்டியன் (அலைபேசி 9894888978), அகரம், தஞ்சாவூர் 613 007, 2009, ரூ.50, பக்.96.
"நாட்டுப்புற மக்களின் வழக்காறுகள் அனைத்தும் அம்மக்களின் மேம்பாட்டிற்கே" என்ற கருத்திற்கிணங்க நாட்டுப்புற மக்களிடம் தரவுகள் கள ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறையில் ஆராய்ந்து முடிவுகள் வெளிப்படுததப்பெற்றுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூல் வடிவமாகக் கொணர்வது என்பது எளிதான காரியமல்ல. இருப்பினும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் வெளிவரவேண்டும் என்ற உயரிய நோக்கில் அவற்றை வெளிக்கொணர்ந்துள்ள ஆசிரியரின் பெருமுயற்சியைப் பாராட்டி, இந்நூல்களை வாசிப்போமே.
வணக்கம்
ReplyDeleteஐயா.
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அலுவல் நிலையில் பணியாற்றிக்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற நண்பர்களில் இவரும் ஒருவர். தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteமுனைவர் திரு. மா.சுந்தரபாண்டியன் அவர்களின் நாட்டுப் புற ஆய்வுகளைக் குறித்து தாங்கள் விவரித்துள்ள விதம் அவருடைய உழைப்பினைக் காட்டுகின்றது.
ReplyDeleteஇனிய அறிமுகம்.. வாழ்க வளமுடன்..
இவரைப் போல மற்றொரு நண்பரும் நாட்டுப்புறவியல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மற்றொரு பதிவில் அவருடைய நூலைப் பற்றி விவாதிக்க உள்ளேன். நன்றி.
Deletei congratulate you for expanding our friend's wing
ReplyDeleteதங்களைப் போன்று தொடர்ந்து வாசித்து கருத்து கூறும் பெருமக்களின் ஆதரவே இவ்வாறான தொடர் அறிமுகங்களுக்குக் காரணம். நன்றி.
Deleteமுனைவர் மா.சுந்தரபாண்டியன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்
ReplyDeleteதங்களின் எழுத்து நூலை வாசிக்கத் தூண்டுகிறது
நன்றி ஐயா
ஒரு சிறிய பொருண்மையை எடுத்து ஆழமாக விவாதித்த வகையில் அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. எனது பதிவினைத் தொடர்ந்து வந்து கருத்துக்களைத் தரும் தங்களுக்கு நன்றி.
Deleteஇதுபோன்ற நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவை.
ReplyDeleteதங்களின் மூலம் இந்நூல் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி!
http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html
தங்களின் வரவேற்புக்கு அன்பான நன்றி.
Deleteநல்ல சில நூல்களை அறிமுகப் படுத்தி இருகிறீர்கள்.படிக்க முயற்சிக்கிறேன்.
ReplyDeleteசில துறையில் வெளிவரும் நூல்கள் பலருக்கு அறிமுகம் இல்லாமல் போய்விடுகின்றன. அக்குறையைப் போக்க இதுபோன்ற முயற்சி. தங்களைப் போன்றோரின் ஒத்துழைப்புடன் இப்பணி தொடரும். நன்றி.
Deleteசிறப்பான நூலை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteமுனைவர் மா.சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
களப்பணி மூலம் இந்த ஆய்வாளர் தொகுத்த விவரங்கள் ஆய்வுக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteசிறப்பான நூல் அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteபெரும்பாலான மக்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் பற்றிய அறிவு புத்தக வாயிலாகத்தான் தெரிய வேண்டி இருக்கிறது அதுவும் நகர்ப் புறங்களில் வாழ்பவர்கள் நாட்டுப்புறக் கலைகளை உதாசீனப்படுத்தும் நிலையையே மேற்கொள்கின்றனர். சுந்தர பாண்டியன் போன்ற ஒரு சிலர் இது பற்றிய விழிப்புணர்வை புத்தக வாயிலாக ஏற்படுத்த முயல்வது போற்றற்குரியது.
ReplyDeleteஇவ்வாறான துறைகள் தொடர்பான நூல்கள் சமுதாயத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். தங்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteநல்லவிசயங்களை பகிர்வது நல்லார்க்கு நன்று.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
பகிர்வதைப் பார்த்து கருத்து தெரிவிப்பது அதைவிட நன்று. வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம் ஐயா
ReplyDeleteமுனைவர் திரு. மா.சுந்தரபாண்டியன் அவர்களின் நாட்டுப் புற ஆய்வுகள் பற்றிய புத்தகங்களை அறியத் தந்தமைக்கு முதலில் நன்றிகள். நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அறிமுகப்படுத்துகிறீர்கள். தொடருங்கள் ஐயா
----------------
சாதியும் நானும் எனும் புத்தகத்தை முடிந்தால் படியுங்கள் ஐயா. 32 அனுபவக் கட்டுரைகள் தாங்கிய புத்தகம். முதன்மைக்கல்வி அலுவலர் திரு. அருள்முருகன் அவர்கள் எழுதிய கட்டுரையும் அதில் ஒன்று. காலச்சுவடு பதிப்பகம்.
தங்களின் அன்பான வருகைக்கு நன்றி. தாங்கள் கூறிய நூலை அவசியம் படிப்பேன்.
Deleteநுால்களை அறிமுகப்படுத்தியதோடு..அல்லாமல் அந்த நூல்களை படிப்பதற்கு வழிவகைகளை தெரிவித்தல்..எம்மை போன்றவர்க்கு உதவியாக இருக்கும். நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி. ஆசிரியர் முனைவர் மா.சுந்தரபாண்டியன் அவர்களின் அலைபேசி 9894888978 எண்ணிலோ, பதிப்பகம் முகவரியில் (அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007) கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டு நூல்களைப் பெறலாம். வருகைக்கு நன்றி.
Deleteநண்பர்களின் வசதிக்காக ஆசிரியரின் தொடர்பு தொலைபேசி எண்ணும், பதிப்பாளரின் முகவரியும் பதிவில் தரப்பட்டுள்ளது. தாங்கள் தொடர்பு கொண்டு நூலைப் பெறலாம். வருகைக்கு நன்றி.
ReplyDeleteபண்பாட்டுப் பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்)
ReplyDeleteகிராமப்பொருளாதாரம்,
செலவுப்பொருளாதாரம்,
இந்த புத்தகங்களை எனது முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன். அனுப்பும் செலவும் எவ்வளவு என சொன்னால் பணம் அனுப்பி விடுகிறேன். எனது முகவரி: N.RATHNAVEL, 7-A, Koonangulam Devangar North St., SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt). 94434 27128. மிக்க நன்றி. ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தால் எளிதாக இருக்கும்.
தங்களின் வருகையும், ஈடுபாடும் என்னை நெகிழவைக்கிறது. முனைவர் சுந்தரபாண்டியன் அவர்களின் மின்னஞ்சல் sundarapandian35@yahoo.in
Deleteஅவரிடம் தங்களது தொலைபேசி எண்ணைத் தந்துள்ளேன். அவரும் தங்களைத் தொடர்பு கொள்வார். நன்றி.
பண்பாட்டுப்பொருண்மைகள் (நாட்டுப்புறவியல் ஆய்வுகள்) : மா.சுந்தரபாண்டியன் = Dr B Jambulingam எழுதிய பதிவு.
ReplyDeleteபுத்தக அறிமுகம். சிறந்த காரியம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தேவைப்பட்ட நண்பர்கள் அணுகி புத்தகங்கள் வாங்கி நல்ல முயற்சி வெற்றியடையச் செய்யுங்கள். அனைவருக்கும் மிக்க நன்றி.
தங்களின் வருகைக்கும், வாசிப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி.
Deleteஐயா நான் பிறந்ததே பறை சாதியில் என் தாத்தா வோடு எங்கள் குடும்பத்தில் பறை மறைந்து விட்டது தற்போது நான் கற்றுக்கொள்ள ஆசை படகிறேன் அதற்கான பயிற்சி மையம் எங்கு உள்ளது என்று கூறுங்கள்
ReplyDeleteவிவரம் கிடைக்கும்போது தெரிவிப்பேன். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Delete