---------------------------------------------------------------------------------------------------
நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் (16.8.1982) சேர்ந்து
34ஆம் ஆண்டு தொடங்கும் இந்நாளில் (16.8.2015)
34ஆம் ஆண்டு தொடங்கும் இந்நாளில் (16.8.2015)
தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது தொடர்பான பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கும், ஆய்வுக்கும், வாசிப்புக்கும் துணை நிற்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு மனமார்ந்த நன்றி.
---------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்விக்கிபீடியாவில் பயனராவதைப் பற்றி விவாதித்தோம். இருக்கின்ற கட்டுரையை
மேம்படுத்துவதன் மூலமாகவும், புதிதாக கட்டுரை
எழுதுவதன் மூலமாகவும் விக்கிபீடியாவில் பங்களிக்கலாம். நமக்கு எளிதானதை, பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து, விக்கிபீடியாவின் நெறிமுறைகளை மனதில் கொண்டு எழுத ஆரம்பிக்கலாம். இப்பதிவில்
நான் விக்கியில் எழுத ஆரம்பித்த நிலையில் பெற்ற அனுபவங்களைப் பகிர்கின்றேன்.
கட்டுரைகளை
மேம்படுத்துவது
முன்னரே பிற
விக்கிபீடியர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சிக்கலாம். கூடுதல்
செய்திகளைத் தருவதன் மூலமாக கட்டுரை மெருகேறும். எளிதாகப்
புரிந்துகொள்வதற்கு வசதியாக நான் மேம்படுததிய கட்டுரைகளில் சிலவற்றைப் பகிர்கிறேன்.
அந்தந்த தலைப்பில் சொடுக்கினால் உரிய தலைப்பிற்குள் செல்லலாம்.
மகாமகம் கட்டுரையில் ஆண்டுவாரியாக
ஒவ்வொரு மகாமகம் என்ற நிலையில் 15ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தரப்பட்டுள்ள செய்திகள் என்னால் இணைக்கப்பட்டு
மேம்படுத்தப்பட்டன. அடிக்குறிப்புகள் சேர்ப்பது பற்றி கட்டுரையின் இறுதியில்
விவாதிப்போம்
புதிய கட்டுரை எழுதுவது
கட்டுரை எழுதுவதற்கு
முன்பாக விக்கிபீடியாவில் உள்ள உங்களுக்கு ஆர்வமுள்ள கட்டுரைகளைப் படித்துப்
பார்க்கலாம். எழுதும் முறை, பதிவின் அமைப்பு, உள்ளடக்கம் என்ற நிலைகளில் கட்டுரையினைப்
படிக்கும்போது இயல்பாகவே பதிவு எழுதுகின்ற எண்ணம் தோன்றும். கடந்த வாரப்பதிவில்
பார்த்த விக்கிபீடியா முதல் கட்டுரை என்ற கீழ்க்கண்ட அமைப்பைப்
பார்ப்போம். கட்டுரைத்
தலைப்பை இங்கே உள்ளிடவும் என்ற இடத்தில் புதிய கட்டுரையின் தலைப்பை தட்டச்சு
செய்தால் புதிய பக்கம் உருவாகும். அதில் நாம் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம். விக்கிபீடியாவில் தரப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.
எந்த தலைப்பைத் தெரிவு
செய்ய விரும்புகின்றோமோ அத்தலைப்பு தொடர்பான செய்திகளையும், செய்தி நறுக்குகளையும் சேகரித்து தனியாக
ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளல் நலம். நாம் தேடும் இணைப்பு இணையத்திலிருந்தால் உரிய
இணைப்பைக் கொடுக்கலாம். கட்டுரையில் ஒரு ஒழுங்கமைவு இருப்பது அவசியம்.
ஒரு கோயிலைப்
பற்றி எழுதுகிறோமென்றால் கோயில் அமைவிடம், வரலாறு, கோயிலிலுள்ள இறைவன், இறைவி, தொடர்புடைய புராணங்கள் மற்றும் செய்திகள், சிறப்புகள், மேற்கோள்கள், வெளி இணைப்புகள் என்ற நிலைகளில்
பக்கத்தலைப்பு அமையலாம். இவ்வாறாக எளிதாக உள்ள ஒரு கட்டுரை புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்.
ஒரு
அறிஞரைப் பற்றி எழுதுகிறோமென்றால் அவரது பிறப்பிடம், பெற்றோர், பெற்ற பட்டங்கள்/விருதுகள், வகித்த பதவிகள், எழுதிய நூல்கள், சாதனைகள், மேற்கோள்கள், வெளி இணைப்புகள் என்ற நிலைகளில் அமைத்துக் கொள்ளலாம். இவ்வ்கையில் அமைந்தது
விக்கியில் என் முதல் கட்டுரையான
தமிழ்ப் பண்டிதர் திரு மணி. மாறன் அவர்களைப் பற்றிய பதிவு. எழுதிய சில நாள்களுக்குள் அக்கட்டுரை போதிய ஆதாரங்கள்
இல்லாததாலும், விக்கி நெறிமுறைப்படி இல்லாததாலும் நீக்கப்படும் என்ற குறிப்பு
விக்கியிடமிருந்து வந்தது. முதல் கட்டுரை நீக்கப்படக்கூடாது என்ற நிலையில் அதிக
முயற்சி எடுத்து அவரைப் பற்றி மேலும் பல விவரங்களை நூல்களிலிருந்தும், நாளிதழ்களிலிருந்தும்
சேகரித்துப் பதிவேற்றினேன்.
பக்கத்தலைப்புகள்
கோயில் தொடர்பான கட்டுரையில் பக்கத்தலைப்புகளைப் பின்வருமாறு அமைத்துக்கொள்ளல் நலம். தேவைப்படின் வசதிக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ளலாம். மாதிரிக்கு கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் பதிவைப் பார்ப்போம்.
==இருப்பிடம்==
==மூலவர்==
==மேற்கோள்கள்==
கட்டுரைகளில் நாளிதழ் மேற்கோள்
அடிக்குறிப்புகள்
த்ருவதற்கான உத்திகள் கட்டுரை எழுத உதவியாக இருக்கும். அண்மையில் அழகர் கோயில் தேரோட்டம் கட்டுரையில் நான்
சேர்த்த இணைப்பினை நான் சேர்த்த மேற்கோள் தேரோட்டம் என்ற உள் தலைப்பில்
பின்வருமாறு அமையும் :
"காலை 5.45 மணிக்கு, மேள தாளம் முழங்க
புதிய தேரில் அழகர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். யானை
கம்பீரமாக முன்னே சென்றது. காலை 7.15 மணிக்கு தேரின் வடத்தைப் பிடித்து
பக்தர்கள் இழுக்கஆரம்பித்தனர். எங்கு பார்த்தாலும கோவிந்தா என்ற கோஷம் முழங்கியது.
தேர் நான்கு கோட்டை வாசல்களை கடந்து, காலை 9.25மணிக்கு மீண்டும்
நிலைக்கு வந்தது. அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர்
: அழகர்கோயிலில் நேற்று ஆடித்தேரோட்ட விழா நடந்தது. ஆடிப்பௌர்ணமி நாளன்று நடைபெற்ற
இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்." <ref>[http://m.dinakaran.com/adetail.asp?Nid=9490 அழகர் கோயிலில் ஆடித்தேரோட்டம், தினகரன், ஆகஸ்டு 1, 2015]</ref>
(3) என்ற அடிக்குறிப்பாக
கட்டுரையில் வந்துள்ள இந்த மேற்கோள் கீழே உசாத்துணையில் (3) என்ற நிலையில்
அமைந்துள்ளதைக் காணலாம். உரிய செய்திக்குப் பின்னர் <ref> என்ற சொல்லுடன்
அடிக்குறிப்பிற்கான மேற்கோளாக உரிய நாளிதழின் உரலியைக் கொண்டும், அந்நாளில் வந்த
அச்செய்திக்கான தலைப்பினைக் கொண்டும் தந்துவிட்டு, நாளிதழின் பெயர், நாள் விவரத்தைக்
குறிப்பிடவேண்டும். இறுதியில் </ref> என்றவாறு குறி
அமைக்கப்படவேண்டும்.
கட்டுரைகளில் நூல் மேற்கோள்
நூலை மேற்கோளாகக்
காட்டும் நிலையில் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் கட்டுரையில்
தரப்பட்டுள்ள உத்தியைப் பயன்படுத்தலாம். கட்டுரையின் முதல் பத்திக்கான செய்தி
பின்வருமாறு அமைகிறது: "கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில்
இதுவும் ஒன்றாகும்." <ref> புலவர் கோ.மு.முத்துசாமி பிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்
திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 </ref> இதற்கான அடிக்குறிப்பு ஆசிரியர், நூலின் பெயர், பதிப்பகம், ஊர், ஆண்டு என்ற
நிலையில் அமைந்துள்ளது.
நமது பங்களிப்புகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பதிவுகளைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கினால் நாம் மேற்கொண்டுவரும் திருத்தங்கள், பதிவுகள் பதிவானதைக் காணமுடியும்.
நாம் எழுதிய கட்டுரைகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட கட்டுரையைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கும்போது பயனர் பங்களிப்புகள் என்ற தலைப்புடன் பக்கம் திறக்கும். அந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் (பா.ஜம்புலிங்கம் ஆகிய நான் பயனர் என்ற நிலையில்) கீழ்க்கண்ட அமைப்பு காணப்படும்.
பா.ஜம்புலிங்கம்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு
எண்ணிக்கை ·தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL ·
அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்
அவற்றில் தொடங்கிய கட்டுரைகள் என்பதைச் சொடுக்கினால் அவரவர் தொடங்கிய கட்டுரைகளின் தலைப்பினைக் காணமுடியும். அண்மையில் நான் தொடங்கிய கட்டுரை திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்பதாகும்.
நமது கட்டுரைகள்
பிற இதழ்களில், நூல்களில் நாம் எழுதிய கட்டுரைகளை அப்படியே பதிவதும், அடிக்குறிப்பாகத் தருவதும் தவிர்க்கப்படுவது நலம். பெரும்பாலும் வலைப்பூக்களில் வெளியாகும் கட்டுரைகளும் மேற்கோளாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நமது பங்களிப்புகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பதிவுகளைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கினால் நாம் மேற்கொண்டுவரும் திருத்தங்கள், பதிவுகள் பதிவானதைக் காணமுடியும்.
நாம் எழுதிய கட்டுரைகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட கட்டுரையைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கும்போது பயனர் பங்களிப்புகள் என்ற தலைப்புடன் பக்கம் திறக்கும். அந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் (பா.ஜம்புலிங்கம் ஆகிய நான் பயனர் என்ற நிலையில்) கீழ்க்கண்ட அமைப்பு காணப்படும்.
பா.ஜம்புலிங்கம்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு
எண்ணிக்கை ·தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL ·
அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்
அவற்றில் தொடங்கிய கட்டுரைகள் என்பதைச் சொடுக்கினால் அவரவர் தொடங்கிய கட்டுரைகளின் தலைப்பினைக் காணமுடியும். அண்மையில் நான் தொடங்கிய கட்டுரை திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்பதாகும்.
அக்கட்டுரைத் தலைப்பைச் சொடுக்கினால் அக்கட்டுரை கீழ்க்கண்டவாறு முழுமையாக திரையில் தோன்றும். மேலிருந்து இரண்டாவது நிலையில் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் என்ற நிலைகளில் சொற்கள் காணப்படும். இவ்வமைப்பு அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும். அதில் வரலாற்றைக் காட்டவும் என்பதைச் சொடுக்கவேண்டும்.
திருத்த வரலாறு என்று தோன்றும் அப்பக்கத்தில், அச்சொல்லுக்குப் பின்னர் உரிய கட்டுரையின் தலைப்பு காணப்படும். அப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் கீழ்க்கண்டவாறு பதிவு காணப்படும். அதன்மூலம் புதிய பக்கம் இன்னார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும்.
(நடப்பு |
முந்திய) 16:02, 13 ஆகத்து
2015 பா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) .
. (3,012 பைட்டுகள்) (+3,012) . . ("{{நூல்
தகவல் சட்டம்| தலைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
இப்பதிவில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். ஒவ்வொருவரும் புதிதாக எழுத ஆரம்பிக்கும்போது மாறுபட்ட அனுபவங்களைப் பெறலாம். விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது தொடர்பான பதிவில் புகைப்படங்கள் சேர்த்தல், உள்ளிட்ட மேலும் பல விவரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. இப்பதிவின் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போல விக்கிபீடியாவின் நெறிமுறைகளை மனதில் கொண்டு எழுத உங்களை அன்போடு அழைக்கிறேன். 6.7.2014இல் தொடங்கி 13.8.2015 வரை தமிழ் விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள கட்டுரைகள் 220. இவற்றுள் நீக்கப்பட்ட கட்டுரைகள் ஐந்து ஆகும். தமிழ் விக்கிபீடியா அனுபவம் ஆங்கில விக்கிபீடியாவில் தடம் பதிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் விவாதிப்போம். வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------------------
நன்றி : விக்கிபீடியா
---------------------------------------------------------------------------------------------------
தெளிவான விவரங்கள் அய்யா...மகிழ்வாக உள்ளது .உங்களது விக்கி பீடியா பங்களிப்பு ..
ReplyDeleteவருகைக்கும் மகிழ்வுக்கும் நன்றி.
Deleteமிக மிக தெளிவான விளக்கத்துடன் விக்கிபீடியாவில் எவ்வாறு பங்களிப்பது என்ற விடயங்களை விவரித்து இருப்பது அற்புதம் அய்யா! அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிநெறிகளை வழங்கியமைக்காக நன்றியினை தெரிவிக்கின்றேன்.
ReplyDeleteத ம 1
நட்புடன்,
புதுவை வேலு
முடிந்தவரை எழுத முயற்சித்துள்ளேன். வேறு நிலையில் தனியாக ஐயமிருந்தால் அதற்கேற்றவாறு மறுமொழி கூறுவே. நன்றி.
Deleteதமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தங்களின் பணி
ReplyDeleteதொடர சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
தட்டச்சு சுருக்கெழுத்தாளராகச் சேர்ந்த என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது தமிழ்ப்பல்கலைக்கழகமே. நன்றி.
Deleteதம 3
ReplyDeleteஅருமையான தெளிவான விளக்கங்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteவிரைவில் சந்திப்பேன்... நேரில் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்கிறேன் ஐயா...
அவசியம் சந்திப்போம், பகிர்ந்துகொள்வோம். அன்பிற்கு நன்றி.
Deleteபுதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
விரைவில் பதிவு செய்வேன்.நன்றி.
Deleteஉங்கள் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா. தெளிவாக விளக்கியுள்ளீர்கள் , நன்றி. முயற்சி செய்கிறேன், நேரம் தான் திட்டமிட வேண்டும். இப்பொழுது மிகவும் நெருக்கடியாக இருக்கிறது.
ReplyDeleteத.ம.4
ஒரு புறம் நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது. என்ன தலைப்பு இல்லை எனத் தேடி பல புதிய தலைப்புகளைச் சேர்த்து எழுத ஆரம்பித்தது மனதிற்கு நிறைவைத்தருகிறது.
Deleteவணக்கம் ஐயா.
ReplyDeleteமிகுந்த பயனுள்ள கட்டுரை.
தமிழறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நன்றி.
பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.
Deleteஎளிய விளக்கங்கங்களுடன் - பயனுள்ள பதிவு.. நன்றி ஐயா!..
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஐயா ஒரு சந்தேகம் பொதுவாக எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்பது பற்றியும் ஒரு நாள் விளக்கவும்.
ReplyDeleteஇப்பதிவின் இரண்டாவது தலைப்பாக உள்ள புதிய கட்டுரை எழுதுவது என்ற பத்தியில் விக்கிபீடியாவில் தரப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகள் என்ற சொற்றொடரைச் சொடுக்கினால் விக்கிபீடியாவில் இணைப்பு கிடைக்கும். அவ்விணைப்பில் சில எளிய வழிமுறைகள் என்ற தலைப்பில் 2ஆவது பத்தியில் இது தொடர்பான குறிப்பு உள்ளது. தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மிகத் தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteசிறப்பான விளக்கம்! அருமை!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஎத்தனை பதிவர்களுக்கு இந்த முனைப்பு இருக்கும்.?உங்கள் பொறுமையும் தகவல் திரட்டலுமே பிரமிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன். தற்பொழுது சிறிது முன்னேற்றம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
Deleteஎளிய பணியாளராக தட்டெழுத்து சுருக்கெழுத்தாளர் பொறுப்பில் சேர்ந்து இத்தனை சிகரம் தொட்டிருக்கிறீர்கள்....எந்த வேலையும் தாழ்வில்லை, முயற்சி திருவினையாக்கும் என்பனவற்றை மெய்ப்பிக்கிறது உங்களது வாழ்க்கைப் பயணம்....தொடரட்டும்...வாழ்த்துக்கள்....
ReplyDeleteதாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு பேரானந்தம் கொள்கிறீர்கள்....வாழ்த்துக்கள்...
எஸ் வி வேணுகோபாலன்
94452 59691
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பயணத்தைத் தொடர்வேன். நன்றி.
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteவாழ்த்துககள்,
பயனுள்ள பதிவு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteமுனைவரே தங்களின் இந்த பதிவு பிரமிக்க வைத்தது தெளிவான விளக்கவுரைகள் அருமை தங்களது 34 ம் ஆண்டு தொடர்ந்து மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்க நலம்.
தங்களது வாழ்த்து மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி.
Deleteசிறப்பான விளக்கங்கள்....
ReplyDeleteதொடர்கிறேன்.
தாங்கள் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியே. நன்றி.
Deleteபயனுள்ள சிறப்பான பதிவு.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஅருமையான விளக்கம் அய்யா... நன்றாக எழுத கற்றுக்கொண்ட பிறகு எழுத முயற்சி செய்கிறேன் ....
ReplyDeleteஎழுதும்போது ஐயமிருப்பின் கேளுங்கள். முடிந்தவரை தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். நன்றி.
Deleteநல்லது அய்யா
Deleteஇதெல்லாம் உங்களை மாதிரி விசயம்தெரிஞ்சவங்க செய்யலாம்.நானெல்லாம்....!?
ReplyDeleteஅனைவருமே விசயம் தெரிந்தவர்கள்தான். தங்களாலும் முடியும். நன்றி.
Deleteமுந்தைய உங்களது பதிவினைப் போலவே இதனையும் தனி கோப்பினில் (FOLDER) சேமித்துக் கொண்டேன். பதிவினுக்கு நன்றி!
ReplyDeleteதாங்கள் சேமித்துவைத்துக்கொண்டதறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். எழுத ஆரம்பிக்கும்போது ஐயமிருந்தாலோ, என் பதிவில் ஏதாவது ஒரு இடத்தில் விடுபாடு எனக் கருதினாலோ தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டுகிறேன். என்னை மேம்படுத்திக்கொள்ள தங்களின் கருத்து உதவியாக இருக்கும். நன்றி.
Deleteமுயன்றுபார்க்கிறேன் அய்யா....
ReplyDeleteதங்களது ஆர்வம் அறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deleteபுதிதாக எழுத விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நேரங்கிடைக்கும் போது நானும் முயன்று பார்க்கிறேன். மிகவும் நன்றி முனைவர் ஐயா!
ReplyDeleteமுயன்று பார்க்க வாழ்த்துக்கள். பதிவு தொடர்பாக உதவி தேவைப்படின் தெரிந்தவரை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறேன். நன்றி.
DeleteI will try sir. (PMS Chitra மின்னஞ்சல் வழியாக)
ReplyDeleteவிக்கி பீடியாவில் இன்னும் பலர் எழுதுவதற்கு ஆதாரமான கிரியா ஊக்கி தாங்கள்தான் ஐயா!
ReplyDeleteதங்களின் வருகையறிந்து மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி. கற்றதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற என் அவாவே இதற்குக் காரணம்.
ReplyDeleteமிக மிகத் தெளிவான விளக்கங்கள் ஐயா. குறித்துக் கொண்டோம். தங்களின் சுட்டியையும். எழுத ஆசை உள்ளது. முயன்று பார்க்கின்றோம் ஐயா. ஒரு வேளை வெளியானால் தங்களுக்கு அறிவிக்கின்றோம் ஐயா. தங்களின் ஊக்கம் மிக்க இந்தப் பதிவுகள் எங்களுக்கு மிக்க மகிழ்வாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது. கடினம் என்பது தெரிகின்றது. கடினமாக உள்ளதை நாம் அடையும் போதுதானே அதில் சிறப்பே உள்ளது...அப்படிப் பார்க்கும் போது தங்களின் உழைப்பு அபரிதமானது ஐயா...பெருமைப்படுகின்றோம் எங்கள் வணக்கங்கள்!
ReplyDeleteஐயமிருப்பின் எப்பொழுது வேண்டுமானாலும் கேளுங்கள். பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறேன். நமது மொழி, பண்பாடு போன்றவற்றை அனைவரும் அறியவேண்டும் என்ற நல்லெண்ணமே எனக்கு இவ்வாறான ஓர் ஆர்வத்தைத் தூண்டியது. நன்றி.
Deleteஅருமையான பதிவுகள்... வாழ்க ...வெல்க...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஅருமை ஐயா. எழுத துாண்டும் விளக்கம், முயற்சிக்கிறேன் ஐயா.
ReplyDelete