20 December 2021

சாசனம் அரையாண்டிதழ் 4, 2021

சாசனம் அரையாண்டிதழ் 4, 2021 பிராமி வரி வடிவம் தொடர்பாக வெளிவரவுள்ள மூவிதழ் வரிசையில் முதல் இதழ் என்கிறது இதனை வெளியிட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்.




தமிழியின் காலம்:அண்மைக்கால கரியமில காலக்கணிப்புகள், தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புகளும் ஆட்பெயர்களும், ஒரு பண்டைய தமிழ்க்கல்வெட்டு குறித்த மீள்வாசிப்பு, இலங்கையில் பிராமிக் கல்வெட்டுகள், இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் சமய நிலை, இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள், சங்க கால நெடுநிலை நடுகற்கள், உருவப்பொறிப்புள்ள சாதவாகனர் காசுகள், பெரிய தடாகம் மட்கலப்பொறிப்பு, நாயக்கர் கால இலக்கியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்டும் அணிகலன்களும் ஆடைகளும் என்ற தலைப்புகளில் தமிழ்க் கட்டுரைகளையும், Measuring Pearl: Text, Practice and Tradition of Pearl Measuring, The origin of the Tamil script, Portrait coins of the Satavahanas, Palaeographical study of Kushana Inscriptions, New coin with title "Pravuda Devaraya" of Vijayanagara Dynasty, Preserving Tamil Scripts: The Way towards their Digitization, Archival and Outreach, The Rediscovery of Brahmi, The Invention of the Brahmi Script என்ற தலைப்புகளில் ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ள இவ்விதழில் உரிய ஒளிப்படங்களும், வரைபடங்களும், அட்டவணைகளும் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் வாசகர்களை நிகழ்விடத்திற்குக் கொண்டு செல்கின்ற உணர்வினைத் தருகின்றன.

துறைசார்ந்த சான்றோர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்றறிஞர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இவ்விதழ் துறைசார் ஆய்வாளர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கின்ற ஆய்வாளர்களுக்கும் ஒரு முக்கியமான ஆதாரமாக அமையும். இவ்விதழ் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவன நூலகங்களில் இடம்பெற வேண்டிய இதழாகும். முகநூல் தொடங்கி பல தளங்களில் பல கண்டுபிடிப்புகளை தமிழுலகிற்கு அளித்துவருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், வருங்கால வரலாற்றறிஞர்களுக்கும் இது ஒரு கையேடாக அமையும். அரியதோர் துறையில் கட்டுரைகளைக் கொண்டுள்ள இவ்விதழையும், அடுத்தடுத்து இப்பொருண்மையில் வெளிவரவுள்ள இதழ்களையும் வாங்கிப் பயன் பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

சிறந்த தலைப்புகளில் கட்டுரைகளை வழங்கியுள்ள கட்டுரையாளர்களுக்கும், தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை செறிவாகவும், முறையாகவும் ஒருங்கிணைத்து உரிய இடங்களில் ஒளிப்படங்களையும், அட்டவணைகளையும் இணைத்து, பதியப்படும் வரலாறு நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நன்னோக்கில் இதழ் முழுமையையும் உயர்தர வழவழப்பான தாளில் அச்சிட்டு வழங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வு மையத்திற்கும், மதிப்புறு ஆசிரியர் முனைவர் மனோகரன், மதிப்புறு இணையாசிரியர் பொறியாளர் குமார், பதிப்பாளர் திரு சுகவன முருகன், மற்றும் ஆலோசர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதழ் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள:
திரு சுகவன முருகன் (98426 47101)
கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வுமையம், ஓசூர் 635 109
(மின்னஞ்சல் : kdhrckgi@gmail.com)
ஆண்டுக்கு இரு இதழ்கள்,
ஓர் இதழ் ரூ.400, ஓர் ஆண்டிற்கு ரூ.750.
சுமார் 200 பக்கங்கள்.

பேராசிரியர் இல.தியாகராசன் ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கெல்லாம் ஒரு பெரிய அதிர்ச்சி. வரலாற்றுத்துறைக்கு ஒரு பேரிழப்பு.


1993-95இல் பௌத்த ஆய்வில் அடியெடுத்த வைத்தபோதிலும், அவரை முதல் முறையாகக் காணும் வாய்ப்பினை 1997இல்தான் பெற்றேன். முதல் சந்திப்பின்போது அவர் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும் கூறினார். அவர் சொன்னவற்றில் பல சிலைகளை நான் பார்த்துள்ளேன் என்று நான் கூறியபோது வியந்தார். அன்று முதல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆய்வு தொடரபாக உரையாடுவது வழக்கம். களப்பகுதியில் நான் கண்டுபிடித்த புத்தரைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனமுவந்து பாராட்டியவர்.
பல ஆய்வாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், எந்த நேரத்தில் சென்று கேட்டாலும் ஐயங்களைத் தெளிவிப்பவர், ஒரு நண்பரைப்போல பழகுபவர். அறிஞர்களிடம் பழகும்போது காணும் இடைவெளியை இவரிடம் காணமுடியாது. இயல்பாகப் பேசுவார். தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர். அரியலூர் கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
25 டிசம்பர் 2021

25 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

6 comments:

  1. தகவல்கள் நன்று

    ReplyDelete
  2. நீங்கள் புத்தகம் வாங்கி இருக்கிறீர்களா?  இதுதான் முதல் இதழா?  அலலது இதுவரை இரு பிரதிகள் வந்துள்ளனவா?  உள்ளிருக்கும் கட்டுரைகள் பக்கத்தை ஒரு படங்கள் எடுத்துக் போட்டிருக்கலாமே..  எத்தனை பக்கங்கள்?  பிராமி எழுத்துகள் பற்றி மட்டும் ஆராய்ச்சியா?  வரலாற்று நிகழ்வுகளையும் சொல்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. இவ்விதழ் என்னிடம் உள்ளது. ஆண்டுக்கு இரு இதழ்கள். இது நான்காவது இதழ். இதிலிருந்து தொடர்ந்து மூன்று இதழ்கள் பிராமி வரி வடிவ சிறப்பிதழ்களாக வரவுள்ளன. (பொதுவாக பிராமி மட்டுமன்றி கல்வெட்டியல், வரலாறு உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன, சுமார் 200 பக்கங்கள்), இவ்விதழ் 190 பக்கங்கள். மேலும் ஐயமிருப்பின் பதிப்பாளரை அலைபேசி வழி தொடர்புகொள்ளலாம்.

      Delete
  3. கற்றது கை மண்ணளவு இல்லை இல்லை விரல் தூசு அளவு.
    ஆனால் கற்க வேண்டியது மலையளவு.

    ReplyDelete
  4. பயனுள்ள நூல்பற்றி நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete