29 August 2015

திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில்

-------------------------------------------------------------------------------
ஆங்கில விக்கிபீடியாவில் நான் இக்கோயிலைப் பற்றிய பதிந்துள்ள பதிவை Thirumazhapadi Vaidyanathaswami Temple என்ற தலைப்பில் பார்க்க அன்போடு அழைக்கிறேன். தலைப்பைச் சொடுக்கினால் விக்கிபீடியாவில் கட்டுரையைப் படிக்கலாம்.
-------------------------------------------------------------------------------

அண்மையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி வைத்யநாதசாமி கோயிலுக்குச் சென்றோம். குடமுழுக்கின்போதும், நந்தித்திருமணத்தின்போதும் போக முயன்றும் முடியவில்லை. பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது.  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலத்தில் கொள்ளிடம் வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. நாங்கள் சென்றபோது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் நடந்துவிட்டு, கோபுரம் நோக்கி நடந்தோம்.  ஆற்றிலிருந்து கோபுரத்தைப் பார்க்க அழகாக இருந்தது. 


மார்க்கண்டேய முனிவருக்காக இறைவன் மழு ஏந்தி நடனமாடிக் காட்சி தந்ததால் இத்தலத்தை மழுவாடி என்பர். நாளடைவில் இது மழபாடி  ஆனதாகக் கூறுகின்றனர்.

பங்குனி மாதத்தில் நடைபெறுகின்ற நந்திதேவர் திருமண விழா புகழ் பெற்றதாகும். திருவையாற்றில் நடைபெறுகின்ற சப்தஸ்தான விழாவின்போது நந்திதேவர் புறப்பட்டுச் செல்வார்.   

நந்தித் திருமணத்தொடர்பு, ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், ஆற்றுக்கு எதிரே கம்பீரமான ராஜகோபுரம் என்பனவே இக்கோயிலைப் பற்றி நான் அறிந்தது. இக்கோயிலுக்கு முன்னரே நான் இரு முறை சென்றுள்ளபோதிலும் இப்போது செல்லும்போது ஏதோ புதிதாகச் செல்வது போல இருந்தது. பெரிய வெளிப்பிரகாரம். கடந்த முறை உள்ளே போகமுடியாதபடி இருந்தது. தற்போது சுத்தம் செய்யப்பட்டு சுற்றி வரும் அளவு உள்ளது.


கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து கோயிலின் உள்ளே சென்றதும் நூற்றுக்கால் மண்டபம் பார்த்தோம். அதன் வலப்புறத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்தன. கோயிலின் வலப்புறம் சூரியன், சந்திரன், அகோரவீரபத்திரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரை பார்த்தோம். தொடர்ந்து மடப்பள்ளி விநாயகர்.


முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறை சென்றோம். வைத்யநாதசுவாமியைக் கண்டோம். இறைவனின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்களைக் கண்டோம். கருவறையில் நிலைவாயிலின் மேலே அகத்தியர் புருசாமிருகரிசி, வசிஷ்டர் சிற்பங்களைக் கண்டோம்.

பின்னர் பிரகாரத்தைச் சுற்றிவந்தோம். சிவசூரியன், காத்யாயணி, சப்தமாதர்கள், ஏழு கன்னியர்கள், 63 நாயன்மார்கள், தொகையடியார்கள், தல விநாயகர் ஆகியோரைக் கண்டோம். தொடர்ந்து ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தரைப் பார்த்தோம். இரு புறமும் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் இருந்தனர். வேதாரண்யம் கோயிலில் இக்கட்டட அமைப்பு உள்ள இடத்தில் சுழலும் தூண்களைப் பார்த்த நினைவு வந்தது. 

தொடர்ந்து காசி விசுவநாதர், விசாலாட்சி, கைலாசநாதர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அய்யாறப்பர், சரஸ்வதி, சுந்தரர், பரவை நாச்சியார், சொக்கநாதர், மீனாட்சியை வணங்கினோம். திருச்சுற்றில் சுற்றிவரும்போது பனை மரத்தினைப் பார்த்தோம்.  கருவறையின் பின் புற கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மாவைக் கண்டோம். கருவறையின் இடது புறம் நால்வேத நந்தி எனப்படும்  நான்கு நந்திகளைக் கண்டோம். இந்த நந்திகளைப் பார்த்தபோது அமைப்பில் வித்தியாசமாக இருந்தபோதிலும் புள்ளமங்கை கோயிலில் விமானத்தை ஒட்டிப் பார்த்த நினைவுக்கு வந்தன. தொடர்ந்து சிவதுர்க்கை அண்ணாமலையார், ஜுரகேஸ்வரர் சன்னதிகளைப் பார்த்தோம். கஜசம்காரமூர்த்தி, கல்யாண பாலம்பிகை, காலபைரவர், பைரவர் சிற்பங்களையும் பார்த்தோம்.  

இறைவனை வணங்கிவிட்டு, இறைவியின் சன்னதிக்குச் சென்றோம். இறைவியின் சன்னதி கோயிலின் இடது புறம் இருந்தது. அழகான நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். நின்ற நிலையில் இருந்த தேவியை வணங்கினோம்.   அம்மன் சன்னதியின் விமானம் மிகவும் அழகாக வித்யாசமான முறையில் இருந்ததை கண்டு வியந்தோம். சப்தஸ்தானத்தலங்களில் காணப்படும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு ஒருவகையான மாறுபட்ட அடுக்குடன் விமானம் காணப்பட்டது.அம்மன் சன்னதிக்கு எதிரே கோயில் குளம் இருந்தது.

மறுபடியும் இறைவனை வணங்கிவிட்டு கோயிலை விட்டுக் கிளம்பினோம். நந்தி திருமணத்திற்கு வராத குறை எங்களை விட்டு அகன்றது. மன நிறைவுடன் வெளியே வந்தோம்.
31.8.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

46 comments:

 1. திருமழபாடி கோயில்
  அழகுற தங்களின் படங்களில்
  காட்சி தருகிறது ஐயா
  அதிலும் மேல் தளத்துடன் கூடிய சுற்று மண்டபம்
  அருமை நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி.

   Delete
 2. திருமழபாடியின் சிறப்பை ப்பற்றி அறியத்தந்த முனைவருக்கு நன்றி
  புகைப்படங்கள் அழகோ அழகு
  பதிவுக்கு வாழ்த்துகளோடு
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 3. எங்கள் சொந்த ஊர் (அப்பாவின் ஊர்) திருமழபாடி. இவ்வூரைப் பற்றிய செய்திகள் என்றாலே ஒருவித ஆர்வத்துடன் படிப்பது வழக்கம். தமிழ்மணத்தில் திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில் என்ற தங்களது கட்டுரையைக் கண்டவுடன் முன்னிலும் மட்டற்ற மகிழ்ச்சி. எதிர்பார்த்தபடியே நிறைய தகவல்கள், படங்களோடு எங்கள் ஊர் கோயிலைப் பற்றி எழுதியமைக்கு நன்றி.

  கொள்ளிடத்தில் (மழைக்காலத்தில்) நிறைய தண்ணீர் ஓடும்போது ஒருமுறை திருமழபாடி சென்று வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆற்றில் இறங்கியபோது நான் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள். அவசியம் சென்று பார்ப்போம். நன்றி.

   Delete
 4. திருமழபாடி...
  காலையில் வாசிக்க அமர்ந்தபோது ஸ்ரீராம் அண்ணாவின் பாசிட்டிவ் செய்திகள், தங்களின் ஆன்மீகப் பயணம் என சிறப்பான வாசிப்பு அனுபவம்...

  படங்கள் எல்லாம் அழகு ஐயா...
  நல்ல பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான வாசிப்பு அனுபவம் பெற்றமைக்கு நன்றி.

   Delete
 5. திருமழபாடி அழகான திருத்தலம்.. நல்லதொரு இயற்கைச் சூழலில் அமைந்துள்ள திருக்கோயில்..

  மீண்டும் தரிசனம் செய்த மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. இக்கோயிலைப் பார்த்ததும் எனக்கு முதலில் நினைவிற்கு வந்தது திருநெய்த்தானம். அக்கோயிலும் சற்றொப்ப இவ்வாறே ஆற்றின் கரையில் இருக்கும். வருகைக்கு நன்றி.

   Delete
 6. அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன் ஐயா!
  அத்தனை படங்களும் அழகு! கோயில் அமைப்பும் வரலாறும்
  அதன் பெருமையைச் சாற்றுகின்றன.
  தங்களால் அறியக் கிடைத்தமையிட்டு மிக்க மகிழ்ச்சி!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டிற்கும், வாக்கிற்கும் நன்றி.

   Delete
 7. வணக்கம் அய்யா,
  தங்களோடு நாங்களும்,,,,,,,,,
  அக்கோயிலோடு பல முறைச்சென்றுள்ளேன். ஆனால் கோயில் உள் இன்னும் சென்றதில்லை. சென்று பார்க்க வேண்டும்.
  புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் சென்று பாருங்கள். பார்க்கவேண்டிய கோயில். குறிப்பாக ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தரும், அம்மன் சன்னதி விமானமும் மிகவும் அழகு. வருகைக்கு நன்றி.

   Delete
 8. அழகான படங்களுடன் திருமழபாடி திருத்தலம் சென்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிங்க.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கு நன்றி.

   Delete
 9. மிக அருமையான படங்களுடன் சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அதிகமான பணிகளுக்கிடையேயும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

   Delete
 10. சீரிய தகவல்களுடன் சிறப்பான படங்கள்! திருமழப்பாடி கோயில் திவ்ய தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களது பாராட்டுக்கு நன்றி.

   Delete
 11. அழகான படங்கள் அரிய விவரங்கள் ஆலய தரிசனம் நேரில் கண்டது போல் உணர்ந்தேன். நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 12. விக்கி பீடியா மற்றும் இந்தப் பதிவு இரண்டையும் வாசித்தேன் மழபாடி என்னும் பெயர்க்காரணம் விக்கிபீடியாவில் இல்லையே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் பொருத்தமான தரவு (source) கிடைக்காத நிலையில் சேர்க்க முடியவில்லை. இன்னும் இக்கட்டுரை மேம்படுத்தவேண்டும் என்ற நிலையில் பின்வரும் குறிப்பினைத் தந்துள்ளார். "This article is an orphan, as no other articles link to it. Please introduce links to this page from related articles; try the Find link tool for suggestions. (August 2015)". எனக்குத் தெரிந்தவரை எழுத முயற்சித்து வருகிறேன். மேம்படுத்த முயற்சிப்பேன். தங்களின் கருத்திற்கு நன்றி.

   Delete
 13. திருமழப்பாடி கோயில் பற்றி வாசித்தோம்...அருமையான படங்கள். தகவல்களும். விளக்கமாகத் தந்துள்ளீர்கள் ஐயா! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 14. அன்புள்ள அய்யா,

  திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில்பற்றி படங்களுடன் விரிவான விளக்கங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

  நன்றி.
  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 15. தங்களுடைய பதிவையும் விக்கி கட்டுரையையும் படித்தேன். சிறப்பான படங்களுடன் கூடிய வர்ணனை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எனது பதிவோடு, ஆங்கில விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள இக்கட்டுரையையும் தாங்கள் படித்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

   Delete
 16. நாங்களே நேரில் கண்டது போல ,உணர்வு தோன்ற விரிவான விளக்கம் படங்கள்! நன்றி முனைவரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 17. புகைப்படங்கள் அருமை அய்யா.....

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கு நன்றி.

   Delete
 18. அழகான புகைப்படங்களுடன் பதிவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 19. ஆன்மீக மணம் கமழும் பகிர்வு;புகைப்படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. அன்பான பாராட்டுக்கு நன்றி.

   Delete
 20. nice pictures and explanations thanks/gautham

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி.

   Delete
 21. வணக்கம் சகோதரரே.

  அழகிய படங்களுடன், அழகிய முறையில் திருமழபாடி கோவிலைப்பற்றி சிறப்பாக சொன்னமைக்கு மிகுந்த நன்றி. திருமழபாடி வைத்தியநாத சுவாமியை நேரில் சென்று தரிசித்த மகிழ்வை தந்தது தங்களின் அருமையான பதிவு. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 22. திருமழபாடி என்ற பெயரைக் கேட்டதுமே பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து... என்று பள்ளியில் படித்த பதிகப்பாடல் நினைவுக்கு வருகிறது. அழகிய படங்களுடன் கூடவே அழைத்துப்போவதைப் போன்ற தெளிவான விளக்கங்களுடனான எழுத்துநடை.. நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்ததோடு, பதிகப்பாடலை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி, நன்றி.

   Delete
 23. சிறந்த பக்திப் பதிவு
  விக்கிப்பீடியாவில் பகிரப்பட்டது மென்மேலும் சிறப்பு
  தமிழர் வரலாற்று அடையாளங்களைப் பகிரும் தங்கள் பணியைப் பாராட்டுகின்றேன்.
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்து நான் எழுத ஊக்கமளிக்கிறது.

   Delete