எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள நூல்களில் ஒன்று இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) இணைந்து உருவாக்கிய தமிழ் நடைக் கையேடு.
இக்கையேடு, பிழையின்றி தமிழில் எழுதுவதற்குத் துணைபுரிகிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பயன்பாட்டு முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளதால் அதில் தரப்பட்டுள்ள உத்தியைக் கொண்டு தவறின்றி எழுத முடியும். அந்நூலை வாசிப்போம், வாருங்கள்.
இந்தக் கையேடு தற்காலத் தமிழ் உரைநடைய எழுத உதவும் கீழ்க்கண்ட நெறிமுறைகளை விளக்குவதாக நூலட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது:
- நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை
- சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள்
- எளிமையான பட்டியல் முறையில் சந்தி விதிகள்
- எடுத்துக்காட்டுகள் வழியாகச் சந்தி விளக்கம்
- பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தும் முறை
- பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை
- ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்புகள் தரும் முறை
நிறுத்தக்குறிகள், சொற்களைச்சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி, சொல் தேர்வும் பொருள் தெளிவும், எழுத்துப்பெயர்ப்பு என்ற தலைப்புகளில் இந்நூலில் எழுதப்படுகின்ற முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. எழுதும்போது சில அடிப்படைத் தவறுகளை நாம் செய்கின்றோம். அந்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ பல சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறான பல சிக்கல்களுக்கு விடை தந்து சொற்களைப் பயன்படுத்தும் முறைகளைத் தெளிவாகத் தருகிறது இக்கையேடு.
பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற நிறுத்தற்குறிகளான கால் புள்ளி, அரைப்புள்ளி, முக்கால்புள்ளி, முற்றுப்புள்ளி, புள்ளி, முப்புள்ளி, கேள்விக்குறி, உணர்ச்சிக்குறி, இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி, தனி மேற்கோள்குறி, மேற்படிக்குறி, பிறை அடைப்பு, சதுர அடைப்பு, இணைப்புக்கோடு, இணைப்புச் சிறுகோடு, சாய்கோடு, அடிக்கோடு, உடுக்குறி போன்றவனவற்றின் பயன்பாடு உதாரணங்களுடன் தரப்பட்டுள்ளது.
தனிச்சொற்ளை எழுதும் முறை என்ற தலைப்பில் தனிச்சொற்களை எழுதும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. அவ்வாறான சில சொற்களைக் காண்போம்.
தக்க (ப.61) 'செ(ய்)ய' போன்ற வினையெச்சத்தின் பின் இடம்விட்டு எழுதப்படுகிறது.
போற்றத் தக்க மனிதர், காணத் தக்க இடங்கள்
தகாத (ப.61) இது தனித்தே எழுதப்படுகிறது.
பேசத் தகாத வார்த்தைகள்
முடியும், முடியாது (ப.69) இந்த வினைமுற்று வடிவங்களை இடம்விட்டு எழுதவேண்டும்.
என்னால் ஐந்து மணிக்குள் வந்துவிட முடியும்.
இதை யாராலும் தடுக்க முடியாது.
வட (ப.71) இது இடம்விட்டே எழுதப்படுகிறது.
வட புலம், வட இந்தியா, வட திசை
வெகு (ப.73) அடுத்து வரும் சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும்.
வெகுநேரம், வெகுதொலைவு, வெகுவிரைவில்
சந்தி மிகும், மிகாத இடங்களுக்கு சில உதாரணங்களைக் காண்போம். (ப.77)
'அந்த', 'இந்த' முதலிய சுட்டுப் பெயரடைகளின் பின்பும், 'எந்த' என்ற வினாப் பெயரடையின் பின்பும் ஒற்று மிகும். (தொடரும் சொல், விகுதி : க, ச, த, ப). 'என்ன' என்னும் வினாப் பெயரின் பின் மிகாது. எ-டு. என்ன கேள்வி?
அந்த + சாலை = அந்தச் சாலை
இந்த + தேர்தல் = இந்தத் தேர்தல்
எந்த + பக்கம் = எந்தப் பக்கம்
'போக', 'வர', 'படிக்க' போன்ற ('செ(ய்)ய' என்னும்) வினையெச்சங்களின் பின் ஒற்று மிகும். (தொடரும் சொல், விகுதி : க, ச, த, ப).
போக + கண்டேன் = போகக் கண்டேன்
வர + சொல் = வரச்சொல்
படிக்க + படிக்க = படிக்கப்படிக்க
'நல்ல', 'இன்ன', 'இன்றைய' போன்ற பெயரடைகளின் பின்னும் 'படித்த', 'எழுதாத' போன்ற பெயரெச்சங்களின் பின்னும் ஒற்று மிகாது. (தொடரும் சொல், விகுதி : க, ச, த, ப).
நல்ல + கதை = நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
இன்றைய + தமிழ் = இன்றைய தமிழ்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
எழுதாத + கதை = எழுதாத கதை
சொல் தேர்வு, பொருள் தேர்வு நிலையில் தரப்பட்டுள்ள உதாரணங்கள் தகுதியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதை எடுத்துரைக்கிறது.
ஒரு பொருள் தரும் பல சொற்கள் (ப.103)
கவிதா...கொஞ்ச வாரத்துக்கு முன்னால ஒரு
வாரப் பத்திரிகையில சிறுகதை எழுதியிருந்தா
'கொஞ்சம்' என்பதும் 'சில' என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்களே. பேச்சு வழக்கில் 'நாள்' என்பதற்கு முன் 'கொஞ்ச(ம்)' என்பது எழுத்து வழக்கில் 'சில' என்பதும் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் கொஞ்சம் என்பது வாரம், மாதம் முதலியவற்றின் முன் பயன்படுத்தப்படுவதில்லை.... மேற்காட்டிய எடுத்துக்காட்டு பேச்சு நடையில் இருப்பதால் அதற்குப் பொருத்தமாக கொஞ்ச நாளைக்கு என்று இருக்கலாம்; 'சில வாரத்துக்கு' என்பது இங்கு பொருத்தமாக இருக்காது.
மாற்றுப் பெயர்ச் சொற்கள் (ப.116)
உம் உள்ளங்காலில் ஒரு மையைத் தடவுகிறேன். அடுத்த கணமே
நீங்கள் இமயமலையில் இருப்பீர்.
இரண்டாவது வாக்கியத்தில் நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மை வந்திருப்பதால் முதல் வாக்கியத்தில் உங்கள் என்றே இருக்க வேண்டும். அல்லது உம் என்பதை ஏற்றுக்கொண்டால் இரண்டாவது வாக்கியத்தில் நீர் என்று இருப்பதே பொருத்தம். நீங்கள் - உங்கள், நீர் - உம் என்பதே பொருத்தமான மாற்றுப் பெயர் வடிவங்கள்.
தமிழ் இலக்கணமோ, இலக்கணம் தொடர்பான சொற்களோ நமது புரிதலுக்குச் சிரமமாக இருந்தால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியதில்லை. பெயரடை, சுட்டுப்பெயரடை, வினையடை, வினையெச்சம், பெயரெச்சம், துணை வினை, உடம்படுமெய், தொகைச்சொல் எதிர்மறைப் பெயரெச்சம் என்பன போன்ற சொற்களுக்கு உதாரணம் என்னவென்றோ, அதற்கான விளக்கம் தெரியாத நிலையிலோ அதை விட்டுவிடுவோம். பயன்பாட்டில் எனக்கு இவை போன்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாது. என்னைப் போன்று உள்ளோருக்கு உதாரணங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உதாரணங்களை முழுமையாக எழுதப் பழக வேண்டும். அவ்வாறாகப் பயன்படுத்தினால் முழுமையாகச் சரியாக எழுதுகிறோம் என்பதைவிட குறைவான தவறுடன் எழுதுகிறோம் எனக் கொள்ளலாம். நாளடைவில் தமிழ் இலக்கணச் சொற்கள் தாமாகவே நமக்கு உரிய பொருளைத் தந்துவிடும். இந்நூலில் தந்துள்ள உதாரணங்களை முறையாகப் பயன்படுத்தினால் தவறுகள் குறைய வாய்ப்புண்டு.
தாய்மொழியில் முறையாக எழுத இக்கையேடு முழுமையாக உதவிசெய்கிறது. இக் கையேட்டை முழுமையாகப் பயன்படுத்துவோம். இலக்கணப் பிழைகளையும், வாக்கியப் பிழைகளையும் தவிர்ப்போம். இந்நூலை வாசிப்போம், எழுதப் பழக அடிப்படையாகக் கொள்வோம், வாருங்கள்.
தமிழ் நடைக் கையேடு, (Tamil Style Manual) உருவாக்கம் : இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), பதிப்பகம்: அடையாளம், (தொலைபேசி எண்.04332273444), 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம், மறுபதிப்பு 2007
-------------------------------------------------------------------------------------------
இந்நூல் தொடர்பாக பதிப்பகத்தார் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரத்தை கீழே தந்துள்ளேன். கூடுதல் விவரம் தேவைப்படின் அவர்களுடைய தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
இணையத்தில் உள்ள பதிப்புக்குப் பிறகு பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சு படியை வாங்குவதே பயன்படுத்துவதற்கும் நல்லது. தற்போதைய விலை ரூ 110. ஏறக்குறைய 15 ஆண்டுகள் விலை கூடாத நூல் இதுவாகத்தான் இருக்கும். மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸிலும் புத்தகத்திருவிழாவில் அடையாளம் 201 கடையிலும் கிடைக்கும்.
சாதிக் 944 37 68004 (மாலை 6.30 க்குமேல் பேசலாம்)Adaiyaalam, 1205/1 Karupur Road, Puthanatham 621 310
Thiruchirappalli District, Tamilnadu, India
email: info@adaiyaalam.net
Tel: (+91) 04333 273444, Fax (+91) 04332 273055
-------------------------------------------------------------------------------------------
7.9.2015 அன்று பதிவு மேம்படுத்தப்பட்டது.
எனக்கும் பயன் படும் இந்த நூல் !அடுத்தமுறை இந்தியா வரும் போது வாங்கிவிடுகின்றேன் ஐயா!
ReplyDeleteதங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteஅருமையான , அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் நூல் ஐயா
ReplyDeleteதமிழ்ப் பல்கலைக்க் கழகத்தில் இந்நூல் கிடைக்குமா ஐயா
நன்றி
தம +1
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் விற்பனைக்கு இல்லை. கட்டுரையின் இறுதி பத்தியில் குறிப்பிட்டுள்ள அடையாளம் ( தொலைபேசி எண்.04332273444) நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவேண்டுகிறேன். அன்புக்கு நன்றி.
Deleteஅவசியம் அனைவருக்கும் தேவைப்படும் நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி,
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதமிழ் நடைக் கையேடு : மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மொழி அறக்கட்டளை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலை அறிமுகப்படுத்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி. தமிழர்களிடம் அவசியம் இருக்க வேண்டியதும்... படித்துப் பயன் அடைய வேண்டியதும் அவசியம்.
நன்றி.
த.ம. 5
தங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
Deleteகையேடு பற்றிய தகவலுக்கு நன்றி. அவசியம் வாங்கி விடுகிறேன்.
ReplyDeleteதங்களின் ஆர்வத்திற்கும், வருகைக்கும் நன்றி.
Deleteநல்ல செய்தி! கையேடு சென்னையில் கிடைக்குமா!
ReplyDeleteவிசாரித்ததில், சென்னையில் கிக்கின்ஸ்புத்தம்ஸ் (தொலைபேசி 04428513519) மற்றும் நியூ புக் லேண்ட் (தொலைபேசி 04428158171) கிடைக்குமென்று கூறினர். வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅடடா..! அருமையான நூல் ஐயா!
அவசியம் நானும் வாங்க வேண்டுமே!
அங்கு வந்தால்தான் வாங்க முடியுமா?
அவர்கள் இணையத்தளம் தெரிந்தால் இருந்தால் தாருங்கள் ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கிக் கொள்ள முயல்வேன். வெளிநாடுகளுக்கு அனுப்புவார்களா எனவும் கேட்க வேண்டுமே!..
பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!
த ம 7
ஐயா!..
Deleteஇப்போது கூகிலில் தேடிய போது இதனைக் கண்டேன்.
இதுதானா அந்தப் புத்தகம் என்பதனை உறுதிப் படுத்தினீர்கள் என்றால் ஆன்லைனில் பெற முயன்றிடுவேன்! மிக்க நன்றி ஐயா!
இணைப்பு இதோ...
http://www.noolulagam.com/product/?pid=26706
தாங்கள் தந்துள்ள இணைப்பில் உள்ள நூலேதான். தங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.
Deleteமிக்க நன்றி ஐயா!
Deleteஅவர்களிம் கையிருப்பில் இல்லையாம்.
எனது தாய்நாட்டில் ஈழத்தில் உள்ள புத்தகக் கடையொன்றில் இருப்பதாக அறிந்து எடுப்பதற்கான ஆயத்தம் செய்துவிட்டேன்.
நன்றி ஐயா!
தங்களின் சுறுசுறுப்பும், ஆர்வமும் என்னை வியக்கவைத்தன. நன்றி.
Deleteவணக்கம் முனைவரே அருமையான நூலைப் பற்றிய தகவல் எனக்கு கண்டிப்பாக இது உதவும் இவ்வளவு விடயங்களைத் தாங்கிய இந்த நூல் 95 ரூபாய் மட்டும்தானா ? ஆச்சர்யமாக இருக்கிறது
ReplyDeleteதங்களது விளக்க நடையே இவ்வளவு அருமையாக இருக்கிறதே அருமை கண்டிப்பாக நூல் வாங்குவேன் நன்றி
தமிழ் மணம் 8
தங்களின் பாராட்டுக்கும் நூல் மீதான ஆர்வத்திற்கும் மனமார்ந்த நன்றி.
Deleteஎனக்கு தாங்கள் கூறியது போல் நிறுத்தற் குறிதான் பிரச்சினை தாங்கள் அறிமுகப்படுத்திய நூல் கண்டிப்பாக உதவும் அய்யா.... நன்றி!
ReplyDeleteஉங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்பிரச்சினை உண்டு. வருகைக்கு நன்றி.
Deleteஅவசியமான நூல்...
ReplyDeleteகண்டிப்பாக வாங்க வேண்டும்...
வருகைக்கும், ஆர்வத்திற்கும் நன்றி.
Deleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்,
நல்ல நூல்பற்றிய பகிர்வு,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteநல்லதொரு நூலினை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete#பதிப்பகம்: அடையாளம்#
ReplyDeleteநன்றாகவே அடையாளம் காட்டியுள்ளீர்கள் ,மிக்க நன்றி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபிழையின்றி எழுத நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய நூல் .தகவலுக்கு நன்றி முனைவர் அவர்களே!
ReplyDeleteஅவ்வப்போது நான் பயன்படுத்தி வருகிறேன். வருகைக்கு நன்றி.
Deleteபடிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்புத்தகம் ஒவ்வொருவரும் தங்கள் நூலகத்தில் வைக்கவேண்டிய அருமையானதொரு புத்தகம்!
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி.
Deleteமிகவும் பயனுள்ள நூல். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. மதுரையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? எனக்கு தேவைப்படுகிறது. விலை எவ்வளவு? என்று கூறினால் நலமாக இருக்கும்.
ReplyDeleteத ம 12
அடையாளம் பதிப்பகத்தார் இந்நூல் மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸிலும் புத்தகத்திருவிழாவில் அடையாளம் 201 கடையிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Deleteவணக்கம் முனைவர் ஐயா !
ReplyDeleteஎல்லோருக்கும் பயன்படக்கூடியதும் அவசியம் கற்க வேண்டியதுமான நூல் ஐயா நானும் பெற முயல்கிறேன் ...இதன் தேவைதனை ஆரியப் படுத்தினால் மீழ்பதிப்பினை மேற்கொள்வார்கள் இல்லையா ....எல்லோரும் ஒன்று கூடி
வேண்டுகோள் விடுப்போம் பகிர்வுக்கு நன்றி ஐயா
வாழ்க வளமுடன் தம +1
ஆரியப் படுத்தினால்------ அறியப்படுத்தினால் என்பதற்குப் பதிலாய் வந்துவிட்டது தட்டச்சில் மன்னிக்கவும் ஐயா திருத்தி வாசிக்கவும்
Deleteதங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள். நன்றி.
Deleteஅடையாளம் (adaiyaalam) பதிப்பகத்தார் அனுப்பிய கடிதம் (மின்னஞ்சல் info@adaiyalam.com மூலமாக அனுப்பிய கடிதம்)
ReplyDeleteஅன்புமிக்க அய்யா, கடுமையான பணிச்சுமைக்கிடையே உங்களுடைய வலைப்பூவைப் பார்த்தோம்.
‘தமிழ்நடைக் கையேடு’ பற்றி நல்ல அறிமுகத்தைத் தந்திருக்கிறீர். நன்றி.
இணையத்தில் உள்ள பதிப்புக்குப் பிறகு பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சு படியை வாங்குவதே பயன்படுத்துவதற்கும் நல்லது. தற்போதைய விலை ரூ 110. ஏறக்குறைய 15 ஆண்டுகள் விலை கூடாத நூல் இதுவாகத்தான் இருக்கும். மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸிலும் புத்தகத்திருவிழாவில் அடையாளம் 201 கடையிலும் கிடைக்கும்.
உங்களுடைய ஆர்வத்திற்கும் பணிக்கும் வாழ்த்துகள்.
சாதிக் 944 37 68004 (மாலை 6.30 க்குமேல் பேசலாம்)
Adaiyaalam, 1205/1 Karupur Road, Puthanatham 621 310
Thiruchirappalli District, Tamilnadu, India
email: info@adaiyaalam.net
Tel: (+91) 04333 273444, Fax (+91) 04332 273055
அறிமுகத்திற்கு நன்றி அய்யா...
ReplyDeleteவருகைக்குக்கும், கருத்திற்கும் நன்றி.
Deleteசிறப்பான தகவல்.NCBH இல் விசாரிக்கிறேன்
ReplyDeleteஅன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஆஹா....அருமை....வாழ்த்துக்களும், நன்றியும்
ReplyDeleteஎஸ் வி வி (thro email: Venugopalan SV sv.venu@gmail.com)
நல்ல புத்தகம்.
ReplyDeleteபடிக்கும்போது உணர்ந்தேன். நன்றி.
Deleteநல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் பிழையின்றி எழுத முடியும் என்றே தோன்றுகிறது. இருந்தும் சில நேரங்களில் தெரியாமல் தவறுகள் நேர்ந்து விடுகின்றன,நூலைப் படிப்பதன் மூலம் சில தெளிவுகள் கிடைக்கலாம்
ReplyDeleteதவறுகள் தவிர்க்கமுடியாதவை. தாங்கள் கூறுவதுபோல சில தெளிவுகள் கிடைக்கின்றன. நன்றி.
Deleteஐயா! மிக மிக் மிக மிக இன்னும் எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்....அருமையான புத்தகம் ஒன்றைச் சொல்லியதற்கு முதற்கண் எங்கள் நன்றி! கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும் ஐயா...
ReplyDeleteமிக்க மிக்க நன்றி...முனைவர் ஐயா எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் இவ்வளவு ஒரு நல்ல அரிய புத்தகத்தை அறிய தந்ததற்கு
தங்களின் ஆர்வத்திற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
Deleteநல்ல பயனுள்ள நூலை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி; இந்தப் பதிவில் இருந்து ஏராளமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். வாங்க வேண்டிய புத்தகம்தான் நன்றி ஐயா
ReplyDeleteவருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.
Deletea, aa, i, ii, u. uu.i.........in these, for tamil i there is no second nedil eluthu ii. but linguistically. as vice chancellor used va. ai. subramoniam, try to use ai instead if i.in tamil. ayya is correct. iyya cannot be correct.
ReplyDeleteதாங்கள் கூறுவது சரிதான். அவர் வ.அய்.சுப்பிரமணியன் என்றே எழுதினார்.
Delete('ஐ' அல்ல) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பயனுள்ள அருமையான நூலைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா , வாங்கி விடுகிறேன்.
ReplyDeleteபயன்படுத்தும்போது உணர்ந்தேன். தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteஅன்புடையீர்
ReplyDeleteKanaka Ajithadoss (ajithadoss@gmail.com மின்னஞ்சல் வழியாக>
வணக்கம். மிக்க பயனுள்ள நூல் பற்றிய தகவல் .தங்கள் சிந்தையும் செயலும் தூய நீர் நிறைந்த குளம் போல ---மிக்க நன்றி, மிக்க அன்புடன்
நல்ல தகவல் தந்துள்ளீர்கள். எல்லோரும் பாராட்டும் அதே வேளையில் நானும்...
ReplyDeleteதங்களின் பாராட்டு என்னை மென்மேலும் எழுத வைக்கும். நன்றி.
Deleteஎல்லோருக்கும் பயன்படும் நூல் . இங்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
ReplyDeleteவருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி.
Deleteசிறந்த நூலை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுகள்..
ReplyDeleteஇந்நூலை நானும் வேண்டிப் பாவிக்கின்றேன்.
பலருக்குப் பயன்தரும் இலக்கணத் தெளிவு நூல்
ஏதாவது ஐயம் வரும்போது இந்நூலை எடுத்துப் பார்க்கின்றேன். மிகவும் உதவியாக உள்ளது. தங்களின் பாராட்டுக்கு நன்றி.
Deleteஉபயோகமான புத்தகமாகத் தெரிகிறது.
ReplyDeleteஆம், உண்மை. வருகைக்கு நன்றி.
Deleteஇது போன்ற நூல்களை பள்ளிகளில் பாடப்புத்தகமாக கொண்டு வர வேண்டும். அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteநல்ல, பயனுள்ள கருத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
புத்தகம் பற்றியதகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
த.ம 17
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
Deleteபயனுள்ள நூல் அறிமுகத்திற்கு மிக நன்றி.
ReplyDeleteவருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.
Delete