24 May 2017

கோயில் உலா : 26 பிப்ரவரி 2017

26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாச்சியார்கோயில், திருச்சேறை, நாலூர் மயானம், கூகூர், திருவீழிமிழலை, துக்காச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்றோம். 

நாச்சியார்கோயில்
கும்பகோணம் குடவாசல் சாலையில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகான மாடக்கோயில். உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள கல் கருடரைச் சிறப்பாகக் கூறுகின்றனர். முன் மண்டபம் பெரிய தூண்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நாச்சியார் கோயில் ராஜகோபுரம்

நாச்சியார் கோயில் பெரிய தூண்களைக் கொண்ட மண்டபம்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
சாரபரமேஸ்வரர், ஞானாம்பாள்
ஞானசம்பந்தர், அப்பர்
கும்பகோணம் வட்டத்தில் நாச்சியார்கோயில் குடவாசலுக்கு இடையே இக்கோயில் அமைந்துள்ளது. 
திருப்பணி நடைபெற்று வருகின்ற
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
நாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்
பலாசவநாதர், பெரியநாயகி
கும்பகோணம்-குடவாசல் சாலையில் திருச்சேறையை அடுத்துள்ளது.
மாடக்கோயில் (இக்கோயிலையும் நாலூர் கோயிலையும் மாற்றி மாற்றி பலர் எழுதுகின்றனர். நேரமின்மையால் இக்கோயிலுக்கு அருகேயுள்ள நாலூர் கோயிலுக்குச் செல்ல இயலாமல் போனது) 

கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ள
நாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்
 கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில்
ஆம்பரவனேஸ்வரர், மங்களாம்பிகை
(கோயிலைப் பற்றிய குறிப்பில் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிட்டுள்ளது. பாடல் பெற்ற தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டும்.) கும்பகோணம் வட்டத்தில் உள்ள இவ்வூர் திருநல்ல கூரூர் என்றும் அழைக்கப்படுகிறது. (திருச்சி மாவட்டத்தில் கூகூர் என்ற பெயரில் இன்னொரு ஊர் உள்ளது.)
அண்மையில் குடமுழுக்கு கண்ட
கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில் ராஜகோபுரம்


கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயிலின் விமானம்
புகைப்படம் எடுப்பவர் எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவருகு
திருவீழிமிழலை திருவீழிநாதர் கோயில்
திருவீழிநாதர், அழகுமுலையம்மை
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்
மயிலாடுதுறை-திருவாரூர் இருப்புப்பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ளது.   திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். 
புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம்
புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்தில்
எங்கள் பேரன் தமிழழகன் உடன்
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆபத்சகாயேஸ்வரர், சௌந்தரநாயகி
கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாக செல்லும்போது அரசலாற்றங்கரை வடக்கே உள்ளது. 
பெரிய தூண்களைக் கொண்ட நாச்சியார் கோயிலும், மாடக்கோயில் அமைப்பில் உள்ள நாலூர் மயானம் கோயிலும், வவ்வால் நத்தி மண்டபத்திற்காகப் பெயர் பெற்ற திருவீழிமிழலைக் கோயிலும், கட்டட அமைப்பில் தனி இடம் பெற்ற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலும் பார்க்க வேண்டிய கோயில்களில் முக்கியமானவையாகும். 

நாலூர் மயானம் பற்றி என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய கட்டுரை தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை அவரது தளத்தில் திருநாலூர் மயானம் என்ற தலைப்பில் காணலாம். திருவீழிமிழலை மற்றும் துக்காச்சி பற்றி தனியாக விரைவில் பதிவுகள் எழுதவுள்ளேன்.


25 மே 2017 மாலை மேம்படுத்தப்பட்டது.

16 comments:

  1. அனைத்துப்படங்களும் செய்திகளும் மிகவும் அழகோ அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  2. 1971-இல் என் பெரியப்பா பிள்ளை ஒருவருக்கு நாச்சியார் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நானும் நேரில் சென்றிருந்தேன்.

    அங்குள்ள மிக அழகான பெருமாள் கோயிலைக் கண்டு நிம்மதியாக தரிஸித்து பிரமித்துப்போனேன். அங்கு கல் கருடன் மிகவும் விசேஷம் என்று சொல்வார்கள்.

    அப்போது எனக்கு 20-21 வயது மட்டுமே. அவை மிகவும் இனிமையான நினைவலைகள். இன்னும் என்
    பசுமையான நினைவுகளில் உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  3. அறியாத கோவில்கள் பற்றிய விடயங்கள் தந்த முனைவருக்கு நன்றி
    த.ம.

    ReplyDelete
  4. அருமையான கோவில் தரிசனம். ஆமாம் கஜப்ருஷ்ட நாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோவிலின் சிறப்பையும், வவ்வால் நத்தி மண்டபம், பழமையான, கொஞ்சம் பாழடைந்ததாகத் தோன்றுகிற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலைப்பற்றியும் விரிவாக முன்னமேயே எழுதியிருக்கிறீர்களா? இருந்தால் அதைக் குறிப்பிடவும்.

    ReplyDelete
  5. அழகான படங்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. சிறப்பான கோயில் உலா! வவ்வால் நந்தி மண்டபம் என்று பல அறியாத தகவல்கள் எல்லாம் அறிந்துகொண்டோம் ஐயா....துக்காச்சி ஆபத்ஸகாயெஸ்வரர் கோயில் எல்லாம் குறித்துக் கொண்டோ ஐயா. தகவல்கள் அருமை!! மிக்க நன்றி பகிர்விற்கு...

    ReplyDelete
  7. அருமையான படங்களுடன்
    கோவில் உலாத் தகவல்
    அத்தனையும் சுற்றிவர
    எத்தனை ஆண்டுகள் முடியுமோ...
    நானும்
    இந்த ஆண்டு இறுதியில்
    தமிழகம் வந்தால் - தாங்கள்
    காட்டிய சில கோவிலையாவது
    பார்த்திட விரும்புகிறேன்!

    ReplyDelete
  8. அப்பாவுக்கு ஊர் பெரும்பண்ணையூர். குடவாசல் அருகே. எங்கள் குலதெய்வம் கோவிலும் அங்கேதான். மழுவச்சேரி. வந்து நாளாச்சு. தாண்டித் செல்லும்போது வெளியிலிருந்து நாச்சியார் கோவிலைப் பார்த்திருக்கிறேன். பார்க்கவேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது.

    தம +1

    ReplyDelete
  9. ஆகா
    அருமையாய் ஒரு நாள் மகிழ்வுடன்
    மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  10. ஆலயங்கள் பற்றிய அரிய தகவல்களும் ஒளிப்படங்களும் அருமை அய்யா.

    ReplyDelete
  11. கோயில் உலா படங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. வயதாகிப் போக முடியாதவர்களுக்கு இம்மாதிரி போய் வந்தவர்களின் வர்ணனையில் மிக்க ஆனந்தம் ஏற்படுகிறது. மானஸீகமாக எல்லாக் கோவில்களையும் தரிசித்த திருப்தி ஏற்படுகிறது. நன்றி. அன்புடன்

    ReplyDelete
  12. உங்களுடன் நானும் பயணித்தேன்!

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவில்களில் நாச்சியார் கோவில் சென்றுள்ளோம் திருச்சியிலும் உறையூரில் ஒரு நாச்சியார் கோவில் உள்ளது கும்பகோணம் நாச்சியார் கோவில் கல் கருடன் விசேஷம் என்கிறாந்ர்க்ளானுமொரு பதிவில் எழுதி இருக்கிறேன் செடி கொடிகளுடன் புதர் மண்டிக்காட்சிதரும் கோவில்கள் நமதுஅலட்சியத்துக்கு எடுத்துக்காட்டு

    ReplyDelete
  14. படமும் பதிவும் அருமை. என்ன கேமிராவை பயன்படுத்துகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. கேமராவை பயன்படுத்துவதில்லை ஐயா. மொபைல் போனைத்தான் (MotoG4) பயன்படுத்துகிறேன்.

      Delete
  15. அற்புதமான புகைப்படங்களுடன்
    அபூர்வ அறியாதத் தகவலகளுடன்
    கோவில் குறித்த பதிவு
    அருமையிலும் அருமை

    பார்க்கவேண்டிய கோவில் பட்டியலில்
    இதைச் சேர்த்துக் கொண்டேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete