04 May 2017

பணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலைக்கழகம்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவடைந்ததையொட்டி 28.4.2017 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் வாழ்த்தியல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், குடும்பத்தார், உள்ளூர் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தார், கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தார் உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பணி நிறைவுறுகின்ற இனிய வேளையில் எனக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததை உங்களோடு பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். அதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

விழா சிறப்புற அமைய உதவிய அனைத்துத் துறையினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.

விழா ஆரம்பிக்கும் முன்பாக மரியாதை நிமித்தம் துணைவேந்தர் அவர்களையும் பதிவாளர் அவர்களையும் சந்தித்து, குடும்பத்தை அறிமுகப்படுத்தினேன். விழாவில் கலந்துகொள்ளவும், நூல் வெளியிடவும்  இசைந்தமைக்குத் துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். பதிவாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். 

துணைவேந்தருக்குப் பொன்னாடை அணிவித்தல்

பதிவாளருக்குப் பொன்னாடை அணிவித்தல்
துணைவேந்தர், பதிவாளர், நிதியலுவலர், துணைப்பதிவாளர் ஆகியோருடைய வாழ்த்துகளுடன் வாழ்த்தியல் விழா தொடங்கியது. நண்பர் திரு சக்தி சரவணன் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.  விழா நினைவாக நினைவுப்பரிசு துணைவேந்தரால் வழங்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய பயணக் கட்டுரைத் தொகுப்பினை  வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  



விழாற்கு வந்திருந்த அறிஞர் பெருமக்களும், நண்பர்களும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். நண்பர்களின் அன்பளிப்பால் எங்களது இல்ல நூலகத்திற்கு மேலும் பல நூல்கள் இவ்விழாவின் மூலம் சேர்ந்தன. 

 









 






ஏற்புரையில், பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் நேரந்தவறாமை, நேர்மை போன்றவற்றை கடைபிடித்துவருவதை எடுத்துக்கூறி, பல துறைகளில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். தட்டச்சும் சுருக்கெழுத்தும் வாசிப்பும் எனக்குத் துணை நின்றதை வலியுறுத்தினேன். முன்னுதாரணமாக வாழத் திட்டமிடலே அவசியம் என்பதை எடுத்துரைத்து அதற்கான பலனை உணர்ந்ததை எடுத்துக்கூறினேன். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் பயன் அனைவரையும் சென்றடையும் என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அனைத்திற்கும் மேலாக பல பேரறிஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பினையும், அரிய பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றதை நினைவுகூர்ந்தேன்.    


பல்கலைக்கழக வரலாற்றில் பணி நிறைவு விழாவின்போது நூல் வெளியிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அந்த வகையில் இவ்விழாவினை சிறப்பான விழாவாகக் கருதுகிறேன். விழாவிற்கு வந்திருந்த பல அறிஞர்களும், கவிஞர்களும், நண்பர்களும் நேரமின்மை காரணமாக மேடையில் வாழ்த்த இயலா நிலை இருந்தும் அதனை குறையாக எண்ணாமல் பெருமனதோடு நேரில் பாராட்டியது மன நிறைவைத் தந்தது. பல நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் நூலை அன்பளிப்பாகத் தந்தனர். தமிழ்ப்பல்கலைக்கழகம் பிரியாவிடை தர. பிரிய மனமின்றி கிளம்பினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பினை கிடைத்தற்கரிய பேறாக எண்ணி மனம் மகிழ்ந்து அந்த வளாகத்திலிருந்து குடும்பத்தினரோடு கிளம்பினேன்.   



மகளும், மருமகள்களும் அன்புடன் வரவேற்க மன நிறைவோடு இல்லம் வந்து சேர்ந்தோம். சுமார் மூன்று மகாமகங்களாக, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகளும், பணியின்போது கிடைத்த அனுபவங்களும் என்றென்றும் என் மனதில் இருக்கும்.  


புகைப்படங்கள் நன்றி : விஜி போட்டோகிராபி விஜி விஸ்வா
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்

42 comments:

  1. முனைவர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    புகைப்படங்கள் அருமை இன்னும் புகைப்படங்கள் அடுத்த பதிவுகளில் வரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

    ReplyDelete
  2. மேடையில்தான் வாழ்த்தவேண்டுமா என்ன? நேரில்வந்து நிறைவாக வாழ்த்தினோம். தங்கள் பணிகள் பல்கலையில் என்றும் நிலைபெறும். இனி சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவாறு பணிகளைத் தொடருங்கள். எனது பணிஓய்வுச் செய்தி தங்கள் பார்வைக்கு -http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_31.html நன்றியும் வணக்கமும் அய்யா.

    ReplyDelete
  3. இனிமையான நிறைவான் மகிழ்வான பணி ஒய்வு காலத்திற்கு வாழ்த்துக்கள், ஐயா!

    வாழ்க வளமுடன்,

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  4. இனியதோர் விழா. சிறப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
  5. பணி ஓய்வு விழா பற்றிய படங்களும் செய்திகளும்
    மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளன. முனைவர் ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தங்களின் பணி ஓய்வு சமயம், தங்களுக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததும், தங்கள் துணைவியாரின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்துக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எதிர்பாரா ஒரு அழைப்பில் நிலவன் அண்ணா மூலம் கிடைத்த வாய்ப்பு விழாவில் பங்கேற்றது

    விழா வெகு நேர்த்தியாக இருந்தது மிகச் சரியாக ஆரம்பித்து மிகச் சரியான நேரத்துக்கு நிறைவடைந்தது

    நானும் அவப்போது டெய்லி மெயில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்

    ReplyDelete
  8. அமைதியான பனி ஒய்வு நாட்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. மனம் கனிந்த வாழ்த்துகள். பல்கலைக் கழகம் தந்த நினைவுகளுடன் ஓய்வுக் காலத்திலும் உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தமிழ் செழிக்கட்டும்

    ReplyDelete
  11. இனி தான் தங்களுக்கு பொறுப்புகள் அதிகம்...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  12. நண்பர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம். பணிநிறைவு வழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் தாங்கள் வழங்கிய புகைப்படம் மூலம் அதை நிறைவு செய்து கொண்டேன். மனைவி மகன்கள் மருமகள் ஆகியோருடன் தங்களைக் காண்பதில் அகமகிழ்கிறேன். தாங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மேலும் கல்விப்பணிகள் புரிந்துவர மனமாற வாழ்த்துகிறைன்.

    ReplyDelete
  13. ஓய்வு பெறுவதற்கு முன் பதவி உயர்வு
    தங்களின் சீரியப் பணிக்கு அளிக்கப்பெற்ற நற்சான்று
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  14. முனைவர் கி.அரங்கன் (மின்னஞ்சல் மூலமாக rangan.lingprof@gmail.com)
    அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,
    பணிநிறைவு என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி. உங்கள் நேரம் உங்கள் கையில். அதை சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இன்னொரு வகையில் நம்முடன் பழகியவர்களுடன் அதிகமாக சந்திக்க இயலாது. நல்ல உழைப்பாளியாக நேர்மையான பணியாளராக நெறிமுறை ஆய்வாளராக இருந்துள்ளீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆய்வுப் பயணம் தொடரட்டும்.
    அன்புடன்
    அரங்கன்

    ReplyDelete
  15. Mr S Irshad Ahamed (thro' email: irshadahamed1963@gmail.com)
    Dear sir,
    Congrats on your promotion as Assistant Registrar. Wish you a happy and peaceful retired life.
    with regards
    S Irshad Ahamed

    ReplyDelete
  16. திரு சே. அப்துல் லத்தீப்
    (kaviathippu@yahoo.co.in மின்னஞ்சல் வழியாக)
    வாழ்க வளத்துடன் . . .
    *********************************
    எம்முளம் தமிழ்ப் பணியால்
    எப்போதும் மகிழச்செய்த
    ஜம்புலிங்கம் லிங்கம் அய்யா
    புதுப்பணி தொடங்கும் நாளில்
    மும்முரமாக இன்னும்
    முழுநேரம் அதற்கேயாக்கி
    நம்மன்னை மகிழச் செய்வார்
    நல்லருள் துணையாய் நிற்கும்!

    இறைவன் அருளால் சகோதரர்
    எல்லா வளமும் மிகப்பெற்று
    நிறைந்த நலத்துடன் வாழ்க என
    நெஞ்சம் நிறைந்து வேண்டுகிறேன்!

    கனிவான அன்புடன்
    சே. அப்துல் லத்தீப்
    (கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ)
    ஆசிரியர்: தகவல் முத்துக்கள்
    நீர்முளை அஞ்சல் 614711
    நாகை மாவட்டம்.

    ReplyDelete
  17. திரு பரிவை சே.குமார் (kumar006@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    வணக்கம் ஐயா...
    நலம். நலமே ஆகுக.
    விழா சிறப்பாக முடிந்ததுடன் பணி நிறைவு பதவி உயர்வுடன் அமைந்தது குறித்து மகிழ்ச்சி.
    இனி வரும் நாட்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு சிறந்த காலமாக அமையட்டும்...
    வளமும் நலமும் வாழ்வில் தொடரட்டும்.
    நன்றி.

    ReplyDelete
  18. திரு ஜி.எம்.பாலசுப்பிரமணியம் (gmbat1649@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்பின் இனிய நண்பர் ஜம்புலிங்கத்துக்கு முதற்கண் வணக்கங்கள் பணி ஓய்வு பெற்று நினைவலைகளில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஓய்வு என்பது ஊதியம் தரும் பணியில் இருந்து மட்டும்தான் உங்கள் க்ரியேடிவிடி சுடராக மின்னட்டும் நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தால் பெங்களூர் வாருங்கள் வரவேற்கக் காத்திருக்கிறேன் இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி

    ReplyDelete
  19. Mr Bhikkhu Bodhipala (thro' email: buddhavedu@gmail.com)
    Dear sir,
    Congratulation happy and peaceful retirement life.
    with regards,
    Bhikkhu Bodhipala

    ReplyDelete
  20. உதவி பதிவாளராய் பதவி உயர்வுடன் பணி ஓய்வு ,இனி முழுநேரப் பதிவாளராய் சாதனை படைக்க வாழ்த்துகள் :)

    ReplyDelete

  21. பணி ஓய்வு விழா - ஆங்கே
    பணி உயர்வோடு தான் - விழா
    ஒழுங்குகள் சிறப்பு
    மதிப்பளிப்புகள், வாழ்த்துகள் நிறைய
    பணி ஓய்வு கிடைத்த பின்னும்
    தங்கள் சாதனைப் பட்டியல் நீள
    தங்கள் ஆய்வுப் பணிகள் தொடர
    வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  22. நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, புகழ்ச்சி மூன்றும் சங்கமித்த விழா இந்த நல்விடை நல்கு விழா.
    பதவி உயர்வு உங்கள் பணிக்கலாச்சாரத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  23. ஓயாது ஓடி உழைத்த உங்களுக்கு பணி நிறைவு வாழ்த்துகள்.

    என் அப்பாவோட பணி நிறைவு நாளை நினைக்க வைத்துவிட்டது உங்கள் புகைப்படங்கள்

    ReplyDelete
  24. நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
    பணி நிறைவடையும்போது பதவி உயர்வு கிடைத்தது மிக உயர்ந்த விருதிற்கு சமம்! அதற்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
    நூலாசிரியர் ஆகியுள்ள தங்களின் இல்லத்தரசியாருக்கும் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!

    ReplyDelete
  25. கிடைத்தற்கரிய பணி..
    செவ்வனே செய்திருக்கின்றீர்கள்..

    நாளும் நலமே நிறைவதற்கு எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றேன்..

    வாழ்க நலமும் வளமும்!..

    ReplyDelete
  26. அர்ப்பணிப்போடு, பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிய மன நிறைவுடனும், சிறந்த இனிமையான நினைவுகளுடன் பணி ஓய்வு.
    வாழ்த்துக்கள் ஐயா.










    ReplyDelete
  27. மனநிறைவோடு பணிநிறைவெய்தும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. தங்களுக்குக் கிட்டியது தங்கள் துணைவியார் செய்த பாக்கியமே. அவர்கள் பெயரும் பாக்கியம் என்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்! நொடிப்பொழுதும் வீணாகாமல் இனி பதிவர் உலகில் உழைத்திட உங்களுக்குக் கிட்டியுள்ள இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இறையருளும் நண்பர்கள் நல்வாழ்த்தும் என்றும் துணையிருக்கும்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  28. மன நிறைவுடன் பணி நிறைவு செய்த உங்கள் ஓய்வுக்காலம் நிச்சயம் பயன் நிறைந்ததாகவே இருக்கும்.என் வாழ்த்துகள்.விழாத் தொகுப்பு அருமை

    ReplyDelete
  29. மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மனைவியும் எழுதுவாரா? புத்தக வெளியீட்டுக்கும் வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்றதும் சிறப்பான முறையில் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்நாள் கழியவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. நிறைவான பணி நிறைவு. விழா மிகச் சிறப்பாக நடந்தது படங்கள் மூலம் தெரிகிறது.

    மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  31. மனநிறைவு வேண்டும் செய்யும் பணியில். பணியை சிறாப்பாக நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் துணைவியார் எழுதிய புத்தக வெளியீடு மேலும் சிறப்பு.
    உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள். நல்ல குடும்பம் நல்ல பல்கலைக்கழகம் என்ப்பார்கள். உங்கள் குடும்பம் பல்கலைக்கழகம் தான். பரிசு புத்தகங்கள் படிக்க காத்து இருக்கிறது. எங்களுக்கு நிறைய விஷயங்க்கள் கிடைக்கப் போகிறது.

    நீங்கள் எண்ணியயாவும் கைகூட இறைவன் அருள் புரிவார்.

    ReplyDelete
  32. மனம் நிறைந்த வாழ்த்துகள்! தங்களது பணி நிறைவு அடைந்திருக்கலாம். ஆனால் உங்கள் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் ஐயா. நீங்கள் நிறைய பதியவேண்டும். வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. Dr Rajendran S (rajushush@gmail.com)பணிநிறைவு விழாவுக்கு எனது வாழ்த்துகள்.. தங்கள் ஆய்வுப்பணி தொடர எனது ஆசிகள். இராசேந்திரன்.

    ReplyDelete
  34. Mr Srini Vasan (seenuthilaka@yahoo.com)
    பணி நிறைவு விழாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
    எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    Dr. P. Srinivasan, Associate Professor
    School of Education, Central University of Tamil Nadu, Thiruvarur 610005, Mobile: 9443460093

    ReplyDelete
  35. Mr vetri poet (vetripoet@gmail.com)
    நிறைவான பணியாற்றி பணி நிறைவுபெறும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்தும் வணக்கமும்.
    தெ.வெற்றிச்செல்வன்

    ReplyDelete
  36. Mr Subramanian kamatchi gouder (subramaniankamatchigouder@gmail.com)
    நிறைவான மனமுடன் பணி நிறைவுசெய்யும் உங்கள் பணி முழு நேர ஆய்வுப் பணியாகத் தொடர வாழ்த்துக்கள்
    கா. சுப்பிரமணியன்

    ReplyDelete
  37. Mr Duraisamy natrajan (tunatraj@gmail.com)
    இறைவன் அருளோடு அனைத்து நலன்களையும் பெற்று இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  38. முனைவர் மு இளங்கோவன் (muelangovan@gmail.com)
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
    மு.இளங்கோவன், புதுச்சேரி

    ReplyDelete
  39. திரு வீரமணி சுந்தரமூர்த்தி (veeramaninsv@gmail.com)
    வாழ்த்துகள்.அழைப்பிற்கு நன்றி.நிச்சயம் கலந்துகொள்கிறேன்.

    ReplyDelete
  40. Mr Kk Gangadharan (gangadharan.kk2012@gmail.com)
    ஐயா, தாங்கள் என்றும் வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன் ..வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன், கு.கி.கங்காதரன்,மதுரை, 9865642333

    ReplyDelete