28 October 2017

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம் பகுதி) : ப.தங்கம்

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் மூன்றாம் பகுதியுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சித்திர வடிவம் நிறைவு பெறுகிறது. அண்மையில் மூன்றாம் பகுதியை ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் அனுப்பிவைத்திருந்தார். அந்நூலை, அவருடைய ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகம்
இந்த மூன்று பகுதிகளில் ஓவியர் தங்கம் அவர்களில் கைவண்ணத்தால்
ஓவிய வடிவம் பெற்றுள்ளது

கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 
நிறைவுப்பகுதியான மூன்றாம் பகுதியின் முகப்பட்டை

பின் அட்டையில் நந்தினி (ஓவியம் சந்திரோயம்)
அவர் தீட்டிய கல்கியின் பொன்னியின் செல்வன்  சித்திரக்கதையின் முதல் இரண்டு பகுதிகளை முன்னர் படித்துள்ளோம். அவற்றைப் போலவே மூன்றாம் பகுதியும் மிகவும் விறுவிறுப்பாகவும், சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே கதையை புரியும்படி வாசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  மூன்றாம் பகுதி (பக்.227-326 வரை) நிலவறையில் தொடங்கி (அத்தியாயம் 41), நட்புக்கு அழகா, பழையாறை, எல்லாம் அவன் வேலை, குற்றம் செய்த ஒற்றன், மக்களின் முணுமுணுப்பு, ஈசான சிவ பட்டர், நீர்ச் சுழலும் விழிச் சுழலும், விந்தையிலும் விந்தை, பராந்தகர் ஆதுர சாலை, மாமல்லபுரம், கிழவன் கல்யாணம், மலையமான் ஆவேசம், நஞ்சினும் கொடியாள், நந்தினியின் காதலன், அந்தப்புர சம்பவம், மாய மோகினி (அத்தியாயம் 57) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து  தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம்.

மூத்த பத்திரிக்கையாளரும் ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியருமான திரு அ.சா.சாமி, "ஓவியர் தங்கம் என் மாணவர். மாணவர் படைப்புக்கு ஆசிரியர் அணிந்துரை அளிப்பது சங்க மரபு. அந்த வழக்கம் இன்றும் நீடிப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று பாராட்டி எழுதியுள்ளார். 

அவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்றுவிடுவதோடு, அந்தந்த பாத்திரங்களுடனும் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு அமைந்துள்ளன. முந்தைய பகுதியில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் தத்ரூபமாக நம் முன் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம்.  இதில் மூன்றாம் பகுதி நிறைவு பெறுவதையும், நான்காம் பகுதி ஆரம்பிக்கப்படவுள்ளதையும்கூட சித்திரமாகத் தீட்டியுள்ளார். 

 
கதாபாத்திரங்களின் உணர்வுகளை தம் ஓவியங்களில் வெளிப்படுத்தும்போது உரிய சொற்றொடர்களைத் தெரிவு செய்து சிறப்பாகத் தருகிறார் நூலாசிரியர். கதையும், சித்திரமும், நிகழ்விடமும் பின்னிப்பிணைந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது.
 • பழுவேட்டரையர் காவலனுக்கு சமிஞ்கை செய்யும்போது காணப்படும் வஞ்சகம் (ப.232)
 • பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ என்று கந்தமாறன் கேட்கும்போது வந்தியத்தேவன் அடையும் வேதனை (ப.235)
 • கைவிளக்கு வெளிச்சத்திலும் சேந்தன் அமுதனுக்கு மூலிகை வைத்தியம் பார்க்கும்போது அமுதனின் அன்னையின் முகத்தில் வெளிப்படும் பரிவு (ப.240)
 • பழையாறையை நகரைப் பார்க்கும்போது வந்தியத்தேவன் வெளிப்படுத்தும் பிரமிப்பு (ப.244)
 • மதுராந்தகனின் ரகசியப் பயணத்தை ஆழ்வார்க்கடியான் மூலமாக அறிந்த செம்பியன்மாதேவி உணரும் குற்ற உணர்வு (ப.250)
 • வந்தியதேவனைப் பற்றி ஆழ்வார்க்கடியான் ஏதாவது கூறமாட்டாரா என்ற குந்தவையின் ஏக்கம் (ப.261)
 • ஈழ நாட்டில் உள்ள அருள்மொழிவர்மருக்கான ஓலையை குந்தவை வந்தியத்தேவனிடம் தந்தபோது அவனிடம் தோன்றிய மெய் சிலிர்ப்பு (ப.286)
 • ஆதித்த கரிகாலன், நண்பர் பார்த்திபேந்திரனிடம் வெளிப்படுத்தும் மனம் திறந்த பேச்சு (ப.292)
 • வீரபாண்டியனுக்கு நந்தினி தண்ணீர் கொடுத்தபோது அவள் முகத்தில் காணப்பட்ட பரிவு (ப.306)
 • கோடியக்கரையில் பெயருக்குத் தகுந்தாற்போல பூங்குழலி, தன் கூந்தலில் தாழம்பூவின் இதழைக் கொண்டு வெளிப்படுத்தும் அழகு, அலை கடலும் ஓந்திருக்க பாடலைப் பாடும் பாங்கு (ப.326)

நூலாசிரியரின் அயரா உழைப்பும், தொடர்ந்த முயற்சியுமே பொன்னியின் செல்வனின் முதல் பாகம் நிறைவு பெறக் காரணமாக அமைந்துள்ளது. அவருடைய ஓவியங்களின் அழகை நாம் அறிவோம். தொடர்ந்து நான்காம் பகுதி விரைவில் வெளிவரவுள்ளதாக இந்நூலில் கூறியுள்ளார். அந்த பகுதியைக் காணும் நாளுக்காகக் காத்திருப்போம். திரு தங்கம் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள். கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, மூன்றாம் பகுதி
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200
ஆண்டு : செப்டம்பர் 2017  

இதுவரை நாம் வாசித்த ஓவியர் தங்கம் தொடர்பான பதிவுகள்:

16 comments:

 1. முனைவர் அவர்களின் விளக்கவுரை மேலுமொரு மகுடம் பிறகு கணினியில் சித்திரங்களை காணவேண்டும் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. ஒவ்வொரு தொகுதியும் 200 ரூபாயா?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு தொகுதியும் ரூ.200 என் முந்தைய பதிவுகளில் முந்தைய இரு தொகுதிகளைப் பற்றியும் தனித்தனியாக எழுதி, அதன் இணைப்பினை பதிவின் நிறைவுப்பகுதியில் தந்துள்ளேன். மேலும் விவரங்களுக்கு அவரை தொலைபேசிவழி தொடர்புகொள்ள வேண்டுகிறேன். நன்றி.

   Delete
  2. வி பி பி யில் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். நன்றி. பின்னர் தொடர்பு கொள்கிறேன்.

   Delete
 3. Yes, available here for online purchase: http://nammabooks.com/ponniyin-selvan-comic-Combo

  ReplyDelete
 4. அருமையான அறிமுகம்

  ReplyDelete
 5. அறிமுகப் பதிவும் விளக்கமும் நன்று!

  ReplyDelete
 6. பொன்னியின் செல்வன் படக்கதையா?! புதுசா கேள்விப்படுறேன். வாங்கிட வேண்டியதுதான். அறிமுகத்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. அற்புதம்.. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?..

  ஓவியர் ப. தங்கம் அவர்களுக்கு அவரது புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 8. கண் கவரும் வகையில் இந்த பதிவு

  ReplyDelete
 9. போற்றுதலுக்கு உரிய மாமனிதர் ஐயா
  தங்களால் இவரது அறிமுகம் கிடைத்தது எனது பெருமை ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
 10. ஆஹா அருமை...
  தாங்கள் விளக்கமாய் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா...
  அருமை...அருமை.

  ReplyDelete
 11. நினைவின் மீட்டல்.
  நன்று
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
 12. இன்று பதிவு திறந்தது. என் பிள்ளைகள் ராமாயணம் பாரதம்கதைகளை இம்மாதிரி சித்திரவடிவில்தான் வாசித்திருக்கிறர்கள் புரிந்து கொள்வது எளிது

  ReplyDelete
 13. ஆம் ஐயா உங்களின் முதல் இரு பகுதிகளையும் அறிந்தோம் இப்போது முன்ன்றாவது பகுதி அருமை....குழந்தைகள் கூட பொன்னியின் செல்வன் வாசிக்க முடியும். சித்திரக் கதை என்பது வாசித்துப் புரிந்துகொள்ள மிக மிக எளிது. எவ்வளவு நல்ல முயற்சி.!! தங்கம் அவர்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்! தொடர்பு கொள்ள வேண்டும்.

  ReplyDelete