28 September 2014

விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு

6.7.2014 அன்று விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கி இன்று 100ஆவது பதிவு நிறைவு. அதனைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இப்பணியில் துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.

பிறந்த மண்ணான கும்பகோணம், வளர்ந்து பார்த்த இடங்களான கோயில்கள், படித்த இலக்கியங்கள், நமது கலை, பண்பாடு போன்றவை தொடர்பாக அவ்வப்போது மனதில் படுவனவற்றை எழுதவேண்டும் என்பதே எனது ஆரம்ப எண்ணமாக இருந்தது. அந்த அடிப்படையில் எழுத ஆரம்பித்து 100 நாள்களுக்குள் 100 பதிவுகளைப் பதியசெய்ததை நினைக்கும்போது வியப்பாக உள்ளது. 

ஆரம்பத்தில் பதிவுகளைப் பதிய ஆரம்பிக்கும்போது நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பல தவறுகளையும், மாற்றங்களையும் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. விக்கியுள்ள நண்பர்கள் என்னை நெறிப்படுத்தி செல்லும் நிலையில் ஓரளவு பக்குவம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது.

திரு முத்துநிலவன் அவர்கள் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த ஒரு பயிற்சிப்பட்டறை விக்கியில் நான் எழுத ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இதில் கலந்துகொள்ள தஞ்சாவூரிலிருந்து     நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் சென்றிருந்தோம்.  பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகம் என்னுள் ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. திரு முரளீதரன் மற்றும் திரு திண்டுக்கல் தனபாலன் வலைப்பூக்களைப் பற்றி அருமையான விளக்கவுரை தந்தனர். 

அவரது அந்தப் பேச்சு என் விக்கிபீடியாவின் மீதான என் ஈர்ப்பை அதிகப்படுத்தியது. பௌத்தம் தொடர்பாக ஒரு வலைப்பூவிலும், பிற பொருண்மைகள் தொடர்பாக இவ்வலைபூவிலும் எழுதிவரும் நிலையில் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிப்பது, தொடர்வது சாத்தியமாகுமா என்ற ஒரு குழப்பம் மனதில் இருந்தது. நாம் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், பதியவும் விக்கிபீடியா உதவுகிறது என்ற நிலையில் தொடர்ந்து எழுதுவது சாத்தியமாயிற்று. தொடர்ந்து நான் எழுதும்போது எனது எழுத்துக்களை நெறிப்படுத்தி, அவ்வப்போது உரிய கருத்துக்களைக் கூறி தெளிவுபடுத்தி வரும் விக்கிபீடியா நண்பர்களுக்கு என் நன்றி. 

விக்கிபீடியாவிற்கு வலைப்பூ மூலமாகவே அறிமுகமான நிலையில் என் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அனைத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றி.

என் பணிக்குத் துணையாக இருக்கும் என் மனைவி திருமதி பாக்கியவதிக்கு என் நன்றி.
----------------------------------------------------------------------------------------------------
 விக்கிபீடியாவில் பதிவு
ஆரம்பிக்கப்பட்டவை :
http://tools.wmflabs.org/xtools/pages/?user=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects

பயனர்:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

பௌத்த ஆய்வாளர் :
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE._%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

20 comments:

  1. 100 வது பதிவைத்தொட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    எனது புதிய பதிவு My India By Devakottaiyan காண்க...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    தங்களின் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் எழுதும் ஒவ்வொரு படி முறைகளும் பல ஆண்டு காலம் அழியாமல் பாதுக்கப்படும் இடம் அதுதான் விக்கி. மேலும் பல பதிவுகள் ஒளிர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. 100 நாட்களில் 100 பதிவு
    மகத்தான சாதனையினைப் படைத்திருக்கிறீர்கள் ஐயா
    100 பதிவுகளின் பின்னனியில் இருக்கும் தங்களின் உழைப்பினை எண்ணி வியக்கிறோன்
    தொடரட்டும் தங்களின் சாதனை
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள், ஐயா. இது மிகவும் மகிழ்ச்சியானதோர் சாதனைச் செய்தியாக உள்ளது.

    ReplyDelete
  5. ஆசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த பயிற்சிப்பட்டறையில் தங்களை சந்தித்ததை மிக்க மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன். பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகத்திற்கு செயலாக்கம் தந்து இந்நாள் வரையில் 100 பதிவுகள் எழுதியது பெரும் சாதனைதான். தமிழுக்கு நீங்கள் செய்த தொண்டினுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    வீரமாகாளியம்மன் கோயில், கலியபெருமாள் கோயில் , கூத்தனூர் சரஸ்வதி கோயில் – ஆகிய கட்டுரைகளை விக்கிபீடியாவில் நீங்கள் எழுதியது என்று தெரியாமலேயே படித்தது நினைவுக்கு வருகிறது. விக்கிபீடியாவின் கட்டுரைகளில் எழுதியவர் அல்லது தொகுத்தவர் பெயர் ஏன் வெளிப்படையாக இல்லை என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. தங்கள் பணி போற்றுதற்குரியது. விக்கிபீடியாவில் தங்களைப் போன்ற அறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பது உண்மையில் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் . தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி , மிக விரைவில் 100 வது கட்டுரையை பதிவு செய்தது அறிய சாதனையே . வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. விக்கிபீடியாவில் தங்கள் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள். அன்பின் இனிய நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  8. வாவ்... நான் கொஞ்சம் எழுத ஆரம்பித்து அப்படியே விட்டுவிட்டேன்... அதுவும் புதிய பக்கங்கள் எதுவும் உருவாக்கவில்லை... நீங்க கலக்கிட்டீங்க... கோவில்கள் பத்தி எல்லாம் உங்கள் பழைய பதிவிலேயே கிடைச்சிருக்கும் இல்ல... :)

    ReplyDelete
  9. ஐயா, விக்கிபீடியாவில் தாங்கள் 100 பதிவுகள் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடர வேண்டும் இவ்வகைப் பணிகள் ச.மல்லிகா

    ReplyDelete
  10. 100 பதிவுகள்..வருங்கால ஆய்வாளர்களுக்கு நிச்சயம் உதவும்..வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. பாராட்டத்தக்க, போற்றத்தக்க அரிய பணியைச் ச்ய்திருக்கின்றீர்கள் ஐயா! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  12. மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  13. தகளுக்கும் இது 100 வது பதிவா மேலும் புதுமை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  14. அன்புடையீர்..
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete

  15. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. விக்கிபிடியாவில் தங்களது நூறாவது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete