செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது?
அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா
ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும்
பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது
உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம்.
ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது.
கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா
உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள
தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை
உறுதிசெய்திருக்கிறது.
‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ
ஹெர்னான்டஸ், கடந்த வாரம் ஹொஸே மார்த்தி விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸும் அவரை
வாழ்த்தினார்கள். தொலைக்காட்சிகளில் அப்போது ஒளிபரப்பான அந்த நிகழ்வில்,
ஹெர்னான்டஸின் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
எப்படி நிகழ்ந்தது?
இது எப்படி? கியூபர்கள் வியந்தார்கள். ஹெர்னான்டஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு
மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் 2001-ல் ‘பிரதர்ஸ் டு த ரெஸ்கியூ’ என்ற
அமைப்பைச் சேர்ந்த இரு பயணியர் விமானங்களை கியூபாவின் விமானத்திலிருந்து
சுட்டு, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டமைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர்.
அப்போது நான்கு கியூபா-அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். ஹெர்னான்டஸ்
இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்.
ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த தோடு மட்டுமின்றி, அவர்
மனைவியும் கியூபா உளவுத் துறைக்காகப் பணியாற்றியதன் காரணமாகச் சிறையில்
இருந்த தன் கணவரைச் சந்திக்க அமெரிக்காவால் அனுமதிக்கப்படாமல்
தடைவிதிக்கப்பட்டதாக கியூபா அரசு கூறியது.
இப்போதுதான் சிக்கல். எங்கு பார்த்தாலும் புரளி. அந்தக் குழந்தைக்குத்
தந்தை யார்? ஹெர்னான்டஸ் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும்
ரகசியமாகச் சந்திக்க கியூபா அரசு உதவியிருக்குமா? உண்மை என்னவோ வேறு விதமாக
இருந்தது. ஹெர்னான்டஸ், தன் மனைவியின் கருத்தரிப்புக்குக் காரணம்,
‘‘உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள்தான்’’ என்றார்.
ரிமோட் கன்ட்ரோல்
“இந்தப் பேச்சுவார்த்தைகளின் காரணமாகக் கிடைத்த பலன்களில் ஒன்று இதுதான்”
என்று ஹெர்னான்டஸ் கர்ப்பமாக உள்ள தன் மனைவியின் வயிற்றைச் சுட்டிக்
காட்டினார். தடவிக்கொண்டே “ரிமோட் கன்ட்ரோல் மூலமாகச் செய்ததுபோல்தான்
எல்லம் நடந்தது. இருப்பினும் அனைத்தும் சுபமாகவே முடிந்தது” என்றார்.
காஸ்ட்ரோ மற்றும் கியூபாவின் உயர்நிலை அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகள்
கலந்துகொண்ட நிகழ்வில், அந்தத் தம்பதியினரும் விடுதலை செய்யப்பட்ட மற்ற
உளவாளிகளும் இருந்தார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில்
பேசும்போது ஹெர்னான்டஸ், “எல்லோரும் என்னிடம் இதுபற்றியே கேட்கிறார்கள்.
அவர்களுடைய பேச்சுகளையும் அனுமானங்களையும் கேட்கும்போது வேடிக்கையாக
இருந்தது. உண்மையை நாங்கள் காப்பாற்ற வேண்டி அமைதியாக இருந்தோம்.
அனைத்தையும் முழுமையாக எங்களால் கூற முடியாது. நல்லது நடக்கக் காரணமாக
இருந்தவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது.”
இது தொடர்பான வெளியுறவுப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது
ஹெர்னான்டஸின் விந்தணு சேகரிக்கப்பட்டு, கியூபாவுக்கு அனுப்பப்பட்டு,
ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸ் செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கப்பட்டார்
என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் சிஎன்என் நிறுவனத்திடம்
கூறினார்கள்.
பதிலுக்குப் பதில்
கியூபாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஆலன்
கிராஸுக்கு, நல்ல சூழலை உருவாக்கித்தருவதற்கு ஈடாக அமெரிக்கா இந்த வேண்டு
கோளை ஏற்றதாக அமெரிக்க நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி
செய்தார். இரு நாட்டுச் சிறைக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, கடந்த மாதம்
கிராஸ் விடுதலை செய்யப்பட்டார்.
“தன் கணவர் மூலமாகக் குழந்தை பெற விரும்பிய பெரீஸின் வேண்டுகோளை அமெரிக்கா
ஏற்று, அதற்காக உதவியதை நாங்கள் உறுதி கூறுகிறோம். அவரது வேண்டு கோள்
செனட்டர் லெய்ஹீயிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்தான் க்யூப சிறையில் கிராஸ்
இருந்தபோது, அவரது சூழலை மேம்படுத்த வேண்டியிருந்தார்” என்று செய்தித்
தொடர்பாளர் பேட்ரிக் ரோடென்புஷ் கூறினார்.
க்யூபாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்ற
முயற்சிகள் மேற்கொள்ள லெய்ஹீயுடன் உதவிய டிம் ரைசர், ‘‘ஹெர்னான்டஸ் குழந்தை
பெற்றுக்கொள்ள உதவியது, கியூபா நிர்வாகத்தினர் கிராஸை சிறையில் நல்ல
முறையில் நடத்தத் துணைபுரிந்ததோடு மட்டுமின்றி, இந்த ஒரு சாதனையை நிகழ்த்த
ஒரு முக்கியமான சலுகையாகவும் இருந்தது’’ என்றார்.
“இவர் சிறையில் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது மனைவி
குழந்தை பெற்றுக்கொள்ள இது ஒன்றே சந்தர்ப்பம்” என்றும் ரைசர் சிஎன்என்
நிறுவனத்திடம் கூறினார். தங்களின் பெண் குழந்தை இன்னும் இரு வாரங்களில்
பிறக்கவிருப்பதாகவும் அவளுக்கு ஹீமா என்று பெயரிட உள்ளதாகவும் ஹெர்னான்டஸ்
கூறினார்.
தி கார்டியன், தமிழில்: பா. ஜம்புலிங்கம்
----------------------------------------------------------------------------------------------------
5.1.2015 நாளிட்ட தி இந்து நாளிதழில் வெளியான எனது கட்டுரை. கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கினால் இதழில் படிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------
28.1.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.
பல தகவல்கள் அறியாதவை ஐயா...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
தகவலை பார்த்து வியந்து விட்டேன் ..... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்படியெல்லாம் கூட ராஜதந்திரம் இருக்கிறதா?
ReplyDeleteஅனைத்தும் புதிய தகவல்கள் ஐயா.
விந்தை உலகம்..
ReplyDeleteஎதுவும் நடக்கலாம்!..
விந்தையான உலகத்தில் இன்னும் என்னவெல்லாமோ நடக்க இருக்கிறதோ.... எல்லாவற்றையும் நாம் சகித்தே வாழ வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு விட்டோம் வேறு வழியில்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதாங்கள் கூறியவுடன், நாளிதழிலேயே படித்து விட்டேன்
நன்றி ஐயா
தம1
மாற்றம் தேவையாய் இருந்தது.தங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகார்டியன் கட்டுரையை எளிய தமிழில் மொழி பெயர்த்த உங்களுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் பதிவைப் படித்தவுடன். “பட்டிக்காடா....பட்டணமா” படத்தில் கணவன் லண்டன் போயி,ஒரு வருசமாச்சு,குழந்தை மட்டும் எப்படி? கணவன் இல்லாத கர்ப்பமா...? என்று கேட்ட கேள்விதான் முதலில் நிணைவுக்கு வந்தது. படித்து முடித்தபின் உண்மை விளங்கியது அய்யா................
ReplyDeleteஅறியாத தகவல் ஐயா...
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
என் தளம் வந்து கருத்திட்டமைக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும் நன்றிகள்..
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான தகவல் ஐயா
ReplyDeleteமிக மகிழ்வாக இருந்தது.
மிக்க நன்றி.
Happy new year..
வேதா. இலங்காதிலகம்.
புதிய தகவல்.அமெரிக்காவை சில சமயம் புரிந்து கொள்ள முடியவில்லை.
ReplyDeleteஇந்து நாளிதழில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
இந்து நாளிதழில் தங்கள் கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா! இது போன்ற ஒரு சம்பவம் பற்றி நாங்கள் எங்கள் தளத்திலும் எழுதியுள்ள்ளோம்!
ReplyDeleteதகவல் அறியதந்தைமைக்கு மிக்க நன்றி! ஐயா!
ReplyDeleteஆகா இப்டி வேற நடந்ததா?!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா
‘விந்தை’யான தகவல். தகவலுக்கு நன்றி!
ReplyDeleteஐயா, இந்து நாளிதழில் வெளிவந்த தாங்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ள கட்டுரை புதிய தகவல். புதியதாக படிப்பவர்களுக்கும் முழுவதும் புரியும் வகையில் மொழி பெயர்ப்பு உள்ளது. நன்றி.
ReplyDeleteஅன்பின் ஜம்புலிங்கம்
ReplyDeleteஅருமையான இதுவரை கேட்டறியாத அரிய தகவல். இப்படியும் நடக்குமா எனச் சிந்திக்கும் போது தான் நமது முன்னேற்றம் நமக்குத் தெரிகிறது. தமிழ் மொழி பெயர்ப்பு நன்று.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
என்னமா சிந்திக்குதுக ...
ReplyDeleteநல்ல பதிவு ...
புதமையான தகவல்
த ம +
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஅன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!
எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதி இந்து நாளிதழில் படித்தேன். வாழ்த்துகள் சார்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதற்போது விட்டகுறை தொட்ட குறையாக தமிழ்நாட்டிலும் விந்து சண்டை நடைபெற்று கொண்டு இருக்கிறது ஐயா....
ReplyDeleteஎஸ் வி வேணுகோபாலன் (மின்னஞ்சல் sv.venu@gmail.com வழியாக)அன்பின் ஜம்புலிங்கம் அவர்களுக்கு, இன்றைய தமிழ் இந்துவில் கியூபா அமெரிக்க நல்லுறவு தொடர்பான மொழிபெயர்ப்பு கட்டுரை தாங்கள் எழுதியதா....
ReplyDeleteமிகவும் அருமையான மொழி நடையில் அற்புதமாக வந்திருக்கிறது....
கொஞ்சம் பிசகினாலும் விரசம் தட்டக் கூடிய ஆனால் அடிப்படை மனித உரிமை சார்ந்த விஷயத்தின் மீதான செய்திக் கட்டுரை அது. சிறப்பான சொற்கள்.என் அன்பின் வாழ்த்துக்கள்...எஸ் வி வேணுகோபாலன்
Karan Karan (மின்னஞ்சல் gauthamtamiluniv@gmail.com வழியாக) fine translation do more fo this sort,goodluck
ReplyDeleteSaravana Rajendran (மின்னஞ்சல் rajesaravana@gmail.com வழியாக ) புதுமையானதாக இருந்தாலும், அமெரிக்க மற்றும் கியூபாவிற்கான நட்புறவு குறித்து இதைவிட முக்கியமான பல தகல்வகள் உளது, முக்கியமாக கியூபாவின் கடற்பகுதியில் 20 பில்லியனுக்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது குறித்து 2011 அன்றே செல் எண்ணேய் நிறுவனமும் அய்ரோப்பிய எண்ணெய் கழகமும் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
ReplyDeleteஎண்ணெய்க்காக அரபியர்களுக்குள்ளே சண்டை மூட்டிவிட்டு கலகம் விளைவித்து அதில் லாபமடைந்து வரும் அமெரிக்காவிற்கு தங்கள் காலடியில் பெரிய எண்ணெய்வளம் இருப்பது என்பது த்ண்ணீருக்கு அலைந்தவனுக்கும் கைக்கெட்டும் தொலைவில் இளநீர் மரம் கிடைத்தது போன்றது, ஆகையால் தான் தற்போடு கியூபாவிடம் அமெரிக்க இறங்கி வந்திருக்கிறது, இதை வெளியில் கொண்டுவராமல் இருப்பதற்காகத்தான் அமெரிக்க பத்திரிகைகளை விட்டு இது போன்ற தேவையற்ற செய்திகளை முக்கியத்துவம் படுத்தி முக்கியமான செய்திகளை பின் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, எடுத்துக்காட்டாக பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவரும் போது பாராளுமன்றத்தில் விவாதம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க தங்களுடைய பரிவாரங்களை விட்டு மதமாற்ற சிக்கலை கிளப்பிவிட மக்களின் கவனம் அங்கு சென்ற பிறகு நைசாக அவரசச் சட்டத்தின் மூலமாக தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வது. அமெரிக்கனும் முதலாளிகளின் அடிமை இங்கே பாஜகவும் அப்படியே!
உண்மைச்செய்தியை மறைக்கச்செய்யும் வேலை இது போன்ற கதை களைப் பரப்புவது,