தினமணி 10.4.2015 இதழில் வெளியான, எனது மனைவி
திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரையை கூடுதல் புகைப்படங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
திருநெல்வேலி
மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி
திருக்கோயில்!
இக்கோயில்
உருவானதற்கு வாய்மொழியாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை
என்ற இடத்திலிருந்து இப்பகுதிக்கு தினமும் பால் விற்று வருவாராம். தினமும் அவர் உவரி
வழியாகத் தான் செல்வாராம்.
ஒருமுறை இவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விடுவாராம். இதற்கு என்ன காரணம் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்று யோசித்தபின்னர், அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுக்குவதால்தான் கால் இடறுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.
அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம்.
நுழைவாயில் |
அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம்.
இறைவனுடைய
ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டினார்களாம். நாளடைவில் அந்த கோயில்
பெரிய அளவில் உருப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின்
கருவறையில் சுயம்புலிங்கசுவாமியாக அருள்பாலிக்கின்றார் இறைவன்!
கோயிலின் வெளிப்புறமாக
வலது பக்கத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறம்
பிரம்மசக்தி அம்மன் சந்நிதி உள்ளது.
இச்சந்நிதியில் முன்னடி சாமியும் அதற்கடுத்தபடியாக
பேச்சியம்மனும் தனி சந்நிதி கொண்டு விளங்குகின்றனர். இச்சந்நிதியிலேயே மாடசாமி, இசக்கியம்மன்
ஆகிய தெய்வங்களும் அமைந்து அருள்கின்றனர்.
கருவறையை நோக்கிச்செல்லும் பக்தர்கள் |
கன்னி விநாயகர் சன்னதி
|
பேச்சியம்மன் சன்னதி |
சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக முடிகாணிக்கை செய்யுமிடம் மிகவும் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் அருகில் கிணறும் உள்ளது. இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. கடல் பக்கத்தில் உள்ள கிணற்றில் நீர் உப்பாக இல்லாமல் குடிக்க ஏற்றதாக உள்ளது. இதுதான் இறைவனின் அருள்! இங்கு குழந்தைகளுக்கு காது குத்துதலும் சிறப்பாக நடைபெறுகிறது.
கோயில் எதிரில் குளம் |
மற்றொரு நுழைவாயில் |
வைகாசி மாதம் விசாகத்தில்
இக்கோயில் களை கட்டிவிடும். தமிழகம் முழுவதிலிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் அனைத்து
இனத்தவரும் இக்கோயிலுக்கு வருகின்றனர். தை மாதத்தில் பூசம், அமாவாசை ஆகிய நாட்களிலும்,
பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. -
ஜ.பாக்கியவதி.
-------------------------------------------------------------------------------
முன்னர் நாம் வாசித்த இவரது கட்டுரைகள் :
வாசிப்பைநேசிப்போம், 13.7.2014
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, 7.12.2014
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, 7.12.2014
-------------------------------------------------------------------------------
சென்று வர வேண்டும் ஐயா... சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteஎனது மகிழ்வினையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்
ReplyDeleteஐயா
நன்றி
தம 4
ReplyDeleteவணக்கம் தங்களது துணைவியாருக்கு எமது வாழ்த்துகளும் அறியாத தகவல்கள் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் மூன்றாவது...
எங்கள் குலதெய்வம் அல்லவா..
ReplyDeleteஉவரியைப் பற்றிப் படிக்கும் போதே இனிக்கின்றது!..
நேரில் பார்க்கத்தான் ஆசை! முடியாதே!
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி! அய்யா........
ReplyDeleteவாழ்த்துக்களை சகோதரிக்கு தெரிவியுங்கள் ஐயா.
ReplyDeleteதங்களது மனைவி ஜ. பாக்கியவதி அவர்களும் ஒரு நல்ல கட்டுரையாளர் என்பதனை அறிந்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தினமணியில் எழுதிய ”உவரி சுயம்புலிங்க சுவாமி ’’ பற்றிய கட்டுரையை , இன்னும் அதிகப்படியான படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteத.ம.7
வணக்கம்
ReplyDeleteஐயா
ஆலயம்பற்றி சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி தினமணி பத்திகையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான ஆலயம் பற்றிய பகிர்வு! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅங்கே ஒரு கி. கோவிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். 73ம் ஆண்டு புது மனைவியோடு அந்தக் கோவிலுக்குச் சென்றேன்.
ReplyDeleteஅந்தக் கோவிலுக்கும் ஒரு ‘ஸ்தலக் கதை; சொன்னார்கள்!
உவரிக்கே போய் வந்தது போல் உள்ளதய்யா மிக்க நன்றி
ReplyDeleteஉவரி பார்க்கவேண்டிய கோவில் பட்டியலில் சேர்த்து விட்டேன். தங்களைப் போலவே தங்கள் துணைவியாரும் அற்புதமாக எழுதுகிறார்கள். அவருக்கும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து கொடுத்து விடுங்கள்
ReplyDeleteபடங்கள் அற்புதம்
தங்கள் நற்பாதிக்கு எமது வாழ்த்துக்கள்
ReplyDeleteபெரும்பாலான சுயம்பு சிலைகளின் பின்னே இந்த மாதிரி கதை இருக்கிறது இதுவரை உவரி சென்றதில்லை. உங்கள் திருமதிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதினமணி இதழில் வெளியான, தங்களின் துணைவியார்
திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். பாராட்டுகள்...வாழ்த்துகள்.
த.ம. 10.
ஆலயம் பற்றிய பகிர்வு அருமை.
ReplyDeleteதங்களின் துணைவியாரின் எழுத்து நடை வசீகரம்.
வாழ்த்துகள்.
தம கூடுதல் 1
கோவிலின் வரலாறு கேட்டு மகிழ்ந்தேன் தங்கள் துணைவியாருக்கு என் நன்றி அழகான நதியில் தந்த இனிய பதிவுக்கு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஉம்மொடு உம்மனையும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள். பயணங்கள் முடிவதில்லை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
ReplyDeleteஉவரி கோவில் பற்றிய அருமையான தகவல்களுடன் ௬டிய விளக்கங்களுக்கு முதலில் நன்றி! தங்கள் மனைவியாரின் இனிதான நடையில் சொல்லியுள்ள கட்டுரையும் அழகாக இருந்தது. அவர்களுக்கு என் வணக்கங்களுடன் ௬டிய நன்றிகள். அதை எங்களுக்கு தாங்கள் அறிய தந்தமைக்கு தங்களுக்கும் எங்கள் பணிவான நன்றிகள்.விரைவில் உவரி சென்று சுவாமியை தரிசித்து வர விழைகிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.
என்தளம் வந்து கருத்திட்டமைக்கும், வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இருவருக்கும் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்கள் நன்றாக உள்ளன.
நல்ல தகவல்.
அழகிய நடையில் கட்டுரை அமைந்துள்ளது. அருமையாக உள்ளது அய்யா. நன்றி.
ReplyDeleteஎன்தளம் வந்து கருத்திட்டமைக்கும், வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
எப்படி விட்டுப்போனேன் என்று தெரியல. தாமத வருகைக்கு வருந்துகிறேன்.
விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி! : ஜ. பாக்கியவதி = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr B Jambulingam
ReplyDelete