16 July 2015

கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம்

அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே
திங்கட்கிழமை (சூலை 13, 2015) கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றுவந்து முகநூலில் சில புகைப்படங்களை வெளியிட்டபோது நாக்பூரில் உள்ள, எனது கல்லூரித் தோழர் சந்தானகிருஷ்ணன் "அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே" என்று கருத்துக் கூறியிருந்தார். அவருக்காகவும், கும்பாபிஷேகம் பற்றிய பதிவை எழுதுங்கள் என்று கூறிய தஞ்சையம்பதிக்காகவும் இப்பதிவு.


கும்பகோணத்திலுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் நாங்கள் சென்றுள்ளோம். என்னை அந்நாட்களுக்கு இட்டுச்சென்றன அவரது எழுத்துக்கள். கல்லூரி நாள்களில் பாடம் படிக்க நாங்கள் செல்வது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம். பின்னர் நான் சென்றது சார்ங்கபாணி கோயில் பிரகாரம். அவ்வளவு அமைதியான இடங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறாக ஒரு முறை சார்ங்கபாணி கோயில் சென்றபோது கும்பகோணம் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் என்னை பிரகாரத்தில் பார்த்துவிட்டு அதிகம் விசாரித்தார். அந்த அளவு கோயில்களுடனான எங்களது பிணைப்பு அதிகமே. கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

சார்ங்கபாணி
சார்ங்கம் என்னும் வில்லுடன் பெருமாள் விமானத்தில குடந்தை வந்து கோமளவல்லியை ஏற்றுக்கொண்டதாகக் கூறுவர். அதனால் அவரை சார்ங்கபாணி என்றழைப்பர். சிலர் தவறாக சாரங்கபாணி என்று கூறுகின்றனர். 

திவ்யப்பிரபந்தம்
அண்மைக்காலமாக திவ்யப்பிரபந்தம் படித்துவருவதால் குடந்தைக்கிடந்தான் என்றாலே பெருமாளது நினைவு வரும். நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கக் காரணமாக இருந்த பெருமாள் இவரே என நினைக்கும் போது மெய் சிலிர்க்கும். 

கோயில்
உயர்ந்த அழகான ராஜகோபுரம். திருவரங்கம், திருவில்லிப்புத்தூரை அடுத்து அமைந்துள்ள பெரிய கோபுரம். பார்க்கப் பார்க்க பார்த்துககொண்டே இருக்கலாம். கருவறை மண்டபம் தேர் போன்ற வடிவில் கண்கொள்ளாக் காட்சி. சயனக்கோலத்தில் பெருமாளின் அழகிற்கு ஈடு இணையில்லை. இக்கோயிலிலுள்ள சித்திரைத்தேர் தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றாகும். இந்தத் தேரை திருமங்கையாழ்வாரே இறைவனுக்கு அர்ப்பணித்ததாகக் கூறுவர். 

திருமழிசையாழ்வார் இப்பெருமாளை நோக்கி இலங்கைக்கு நடந்த வருத்தத்தால் கால்கள் நொந்து களைத்துப் போய் படுத்துள்ளீரோ, உலகைத் தாங்கிய களைப்போ என்று கேட்டுக் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு கேசவனே என்று பாடியதும், சற்றே எழுகின்ற கோலத்தில் புஜத்தைச் சாய்த்து எழுந்திருக்க முயல்வதுபோல் காட்சி தந்தாராம். இன்றும் இதுபோல் சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் கோலத்தில்தான் காட்சிதருகிறார் (சாய்ந்து எழ முயலும் திருக்கோலம்) இருக்கிறார். 

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளன்று விடியற்காலை கிளம்பி கும்பகோணம் சென்றேன். கும்பேஸ்வரர் கோயில் மொட்டைகோபுரம் நிறுத்தத்தில் இறங்கி பொற்றாமரைக்குளம் வழியாகக் கோயிலை நோக்கிச் சென்றேன். அங்கிருந்து கோபுரங்களைக் கண்டேன். 

பொற்றாமரைக்குளத்திலிருந்து கோயில் தோற்றம்

ஒரே இடத்தில் நான்கு விமானங்களும், கோபுரமும்
பொற்றாமரைக்குளத்தருகே உள்ள வாயிலின் வழியாக சார்ங்கபாணி கோயிலுக்குள் நுழைந்தேன். பிரகாரத்திலிருந்து உள்ளே உள்ள சன்னதிகளைக் கண்டேன். அங்கிருந்து முதலில் ராஜகோபுர தரிசனம் கண்டேன்.

பிரகாரத்திலிருந்து ராஜ கோபுரம் தோற்றம்
பிரகாரத்தில் சுற்றிவிட்டு உள்ளே யாகம் நடந்த இடத்திற்குச் சென்று வணங்கினேன். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்தனர்.  
யாகசாலைக்காட்சிகள்
உள்ளே சன்னதிக்குள் சென்றேன். பெருமாளை நின்று வரிசையில் பார்க்கலாமென்றால் ஒரே கூட்டம். பெருமாள் சன்னதியையும், தாயார் சன்னதியையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். 


தாயார், பெருமாள் சன்னதிக்கு செல்லும் வரிசை
 ஆங்காங்கு கூட்டம். சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் கருவறையைச் சுற்றி வந்து தேர் போன்ற வடிவில் யானை இழுத்துச் செல்லும் அந்த அரிய காட்சியைக் கண்டேன், முன்னர் பல முறை நானும் நண்பர்களும் ரசித்த காட்சி.

தேரை யானை இழுத்துச்செல்லும் அரிய காட்சி (பெருமாள் கருவறை)

பின்னர் பிரகாரத்தில் இருந்து கோபுர தரிசனம் கண்டேன். அங்கிருந்து முன் மண்டபம்  நோக்கிச் சென்றேன். 

முன்மண்டபம்
வெளியே வந்து கும்பாபிஷேகக் காட்சியைக் கண்டுகளித்தேன். மகாமகத்தை வரவேற்க ஒவ்வொரு கோயிலாக கும்பாபிஷேகம் ஆகவுள்ள நிலையில் சார்ங்கனைக் கண்ட மன நிறைவுடன் தஞ்சாவூர் திரும்பினேன் 


கும்பாஷேகம் கண்டுள்ள ராஜகோபுரம்

நன்றி: டாக்டர் ஆ.எதிராஜன், 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு, வைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, 2002

தஞ்சையம்பதி திரு துரை செல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பதிவைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.

36 comments:

 1. சாய்ந்து எழ முயலும் திருக்கோலம் உட்பட படங்களும் தகவல்களும் அருமை...

  நண்பருக்காக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 2. முதல் தரிசனத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. பதிவும் படங்களும் மிக அருமை.

  ReplyDelete
 4. அன்பான வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 5. அழகு.. அழகு!..

  திருக்குடந்தை சார்ங்கபாணி திருக்கோயிலை மீண்டும் ஒருமுறை தரிசித்தேன்..

  நன்றி.. ஐயா!..

  ReplyDelete
  Replies
  1. உங்களது எழுத்து என்னை அங்கு மறுபடியும் அழைத்துச் சென்றது. நன்றி.

   Delete
 6. மிக்க நன்றி நண்பா. உன்னுடன் சேர்ந்து நானும் சார்ங்கபாணி கோவில் உலா வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. பதிவை எழுதியபோதும், உன் கடிதத்தைப் படித்த பின்னரும் 30 வருடங்களுக்குப் பிறகு உன்னுடன் நானும் கும்பகோணம் கோயில்களைச் சுற்றிவந்தது போலிருந்தது. உன் கருத்துக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது பதிவுகளைப் படிக்க உன்னை அழைக்கிறேன். நன்றி.

   Delete
 7. வணக்கம் சகோதரரே.

  திருக்குடந்தை சார்ங்கபாணி திருக்கோயிலின் தகவல்களும் படங்களுமாய், விபரமாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்.
  தங்களுடன் நாங்களும் கோவிலின் அழகை தரிசித்த திருப்தியை தந்தது தங்களின் இந்த அற்புதமான பதிவு. எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 8. வணக்கம் அய்யா,
  எம்மையும் உடன் அழைத்துச்சென்றது போன்ற ஓர் உணர்வு,
  புகைப்படங்கள் அருமை,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அவ்வாறான ஒரு உணர்வை பதிவு ஏற்படுத்தியதறிந்து மகிழ்ச்சி.

   Delete
 9. தகவல்களும் படங்களும் அருமை ஐயா...
  உங்களுடன் கோவிலுக்குள் பயணித்தது போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகை மனதிற்கு மகிழ்ச்சி.

   Delete
 10. படங்களுடன் கூடிய தகவல்களும் அருமை ஐயா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 11. படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்பு.

  ReplyDelete
 12. நாங்கள் சென்றிருந்த போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது! அழகிய படங்களுடன் கும்பாபிஷேக காட்சிகள் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மகாமகத்திற்காக ஒவ்வொரு கோயிலும் கும்பாபிஷேகம் காணவுள்ளது. நன்றி.

   Delete
 13. சாரங்கபாணி திருக் கோவிலை கண்டு களித்தேன் பதிவுக்கு நன்றி ! அழகான படங்களும் பதிவும்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 14. கூட்டத்தில் இடிபட்டு, வியர்த்து வேதனைப்படாமல், இங்கிருந்தபடியே சார்ங்கபாணிப் பெருமாளின் குடமுழுக்கை கண்டுகளித்தேன். நன்றி ஐயா! (௨) நான் சிடி யூனியன் வங்கியில் பணியில் சேர நேர்காணலுக்கு கும்பகோணம் வந்தபோது (1974) முதலில் எனக்குத் தரிசனம் தந்தது இந்தப் பெருமாள்தான். அடுத்தபடியாக கும்பேஸ்வரர் கோவில் மங்களாம்பிகையின் தரிசனம். அம்மையின் தரிசனத்திற்குப் பிறகு நெஞ்சம் நிறைந்து நேர்காணலுக்குப் போனேன். வேலை கிடைத்தது. ஆனால் 1978இல் அந்த வங்கியை விட்டு, கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்த பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. சுமார் இருபது ஆண்டுகள் கழிந்த பிறகுதான் குடந்தைக்கு வருகை தர முடிந்தது. இந்த ஆண்டு விரிவாக ஒரு பயணம் செய்து அங்குள்ள கோயில்களை மறுதரிசனம் செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இறையருள் வேண்டும். - இராய செல்லப்பா

  ReplyDelete
  Replies
  1. எனது பதிவு உங்களது நேர்காணலுக்கு எங்களை அழைத்துச்சென்றதறிந்து மகிழ்ச்சி. அனைத்துக்கோயில்களையும் பார்க்கவேண்டும் என்ற தங்களின் எண்ணம் இறையருளால் ஈடேறும். நன்றி.

   Delete
 15. 1967-ல் என் மூத்த மகனுடனும் மனைவியுடனும் முதன் முதல் சென்று வந்தது நினைவில் அலை மோதுகிறது என் மகன் கோவிலுள்ளே சிறிநீர் கழிக்க நம்மால் கோவில் சுத்தம் பாழ்படுமோ என்று என் மனைவி பதறியது நினைவுக்கு வருகிறது. அப்போது எடுத்த கருப்பு வெள்ளப் புகைபடம் இன்னும் இருக்கிறது. பலமுறை சென்றிருந்தாலும் இந்தப் பதிவின் மூலம் கும்பாபிஷேகத்தில்கலந்து கொண்டது போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. எத்தனை முறை பார்த்தாலும் கோபுரத்தையும், கோயிலையும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். தங்களது கடந்து கால நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

   Delete
 16. குடமுழுக்கில் கலந்து கொண்ட புண்ணியம் உங்கள் படம்+ வர்ணனையால் கிட்டியது

  ReplyDelete
 17. சாரங்கபாணி கோவில் பற்றிய விளக்கமும் படங்களும் அருமை... விளக்கு அலங்கார படங்களை பார்க்கும்போது எனக்கு எங்கள் ஊர் மாங்கனி திருவிழாவை கண்ட உணர்வு !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
 18. சாரங்கபாணி கோவில் பற்றிய விளக்கமும் படங்களும் அருமை... விளக்கு அலங்கார படங்களை பார்க்கும்போது எனக்கு எங்கள் ஊர் மாங்கனி திருவிழாவை கண்ட உணர்வு !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தங்களின் பதிவைப்படித்தேன். அருமை.

   Delete
 19. வணக்கம்
  ஐயா
  அழகிய படங்களுடன் அற்புத விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 20. அழகான பல நிறப் படங்களுடன்
  கோயிலை நேரில் கண்ட பட்டறிவு
  தங்கள் பதிவில் காண முடிகிறதே!

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  ReplyDelete