தமிழ் விக்கிபீடியாவின் முதல் பக்கத்தை முழுமையாகவும், தொடர்ந்து தெளிவிற்காக தனித்தனியாகப் பிரித்தும் தந்துள்ளேன்.
|
தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முழுமையாக (நவம்பர் 1, 2015) |
|
தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முதல் பகுதி |
|
இரண்டாம் பகுதி |
|
மூன்றாம் பகுதி |
|
நான்காம் பகுதி |
|
முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம் நவம்பர் 1, 2015
பங்களிப்பாளர் அறிமுகம்
|
பா. ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், சூலை 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கி 250 கட்டுரைகள் எழுதியுள்ளார். விக்கித் திட்டம் சைவம் மூலம் கும்பகோணத்திலுள்ள கோயில்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளார். மகாமகம், நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (நூல்),சோழர்கள் (நூல்), சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம், இளைய மகாமகம் 2015, தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள், தேனுகா (எழுத்தாளர்), திருவூடல் ஆகியன இவர் எழுதிய கட்டுரைகளில் சில. தமிழர் அல்லாதோரும் தமிழின், தமிழ்நாட்டின் பெருமையை அறியவேண்டும் என்ற நன்னோக்கிலும் தமிழ் விக்கிப்பீடியா தந்த அனுபவத்திலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் மே 2015 தொடங்கி இதுவரை 100 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
முதற்பக்கத்தில் மேற்கண்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக என்னைப் பற்றிய அறிமுகம் முதல் பக்கத்தில் வெளிவரக் காரணமாக இருந்த அனைத்து விக்கிபீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து அந்த அனுபவமே என்னை விக்கிபீடியாவில் எழுத உதவி செய்த நிலையில் சக வலைப்பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வாருங்கள் விக்கிபீடியாவில் எழுதுவோம், நாம் பார்த்ததை, படித்ததை, சிந்தித்ததை, நேசித்ததை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு தளமாகப் பயன்படுத்துவோம் வாருங்கள்.
--------------------------------------------
|
தமிழ் விக்கிபீடியா முதல் பக்கம் முழுமையாக (நவம்பர் 15, 2015) |
முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம் 15 நவம்பர் 2015 வரை திரையில் காணப்பட்டது.
--------------------------------------------
16 நவம்பர் 2015 அன்று மேம்படுத்தப்பட்டது.
ஆஹா! மகிழ்ச்சி ஐயா :-)
ReplyDeleteவாழ்த்துகள்
முதல் வருகைக்கு நன்றி.
Deleteமிக்க மகிழ்ச்சி முனைவரே மென்மேலும் சிறப்புற தங்களுக்கு எமது வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 1
தமிழ் மண முதல் வாக்கும், வருகையும் நெகிழ வைத்தன. நன்றி.
Deleteமேலும், பற்பல சிறப்புகளை எய்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களைப் போன்றோரின் ஆசியுடன் சிறப்புகளை அடைவேன். நன்றி.
Deleteமிக்கமகிழ்ச்சி அய்யா பெருமையாக உல்ளது உங்களை எண்ணி...
ReplyDeleteஉங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமே இதற்குக் காரணம். நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவிக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகத்தில் தங்களை அறிமுகப்படுத்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
த.ம.2
வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
Deleteமிகவும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அய்யா.
ReplyDeleteதங்கள் பணி தொடரட்டும். நாங்களும் தொடர்வோம். நன்றி
ஆரம்பமே புதுக்கோட்டைதான். விக்கிபீடியா என்றால் நினைவுக்கு வருவது புதுக்கோட்டையும் புதுக்கோட்டை நண்பர்களுமே. தொடர்வேன். நன்றி.
Deleteதமிழ்த்தாய் பெருமை கொள்வாள் தங்கள் பணி கண்டு!
ReplyDeleteமேலும் மேலும் சிறப்புகள் தங்களை வந்தடைய
வாழ்த்துகிறேன் ஐயா!
தமிழுக்கு நம்மால் ஆன பங்களிப்பு என்று நினைக்கும்போது மனம் மகிழ்கின்றது. நன்றி.
Deleteமிக்க மகிழ்ச்சி..... வாழ்த்துகள் & பாராட்டுகள்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Deleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதங்களின் பணி தொடரட்டும்
தம =1
இரண்டாவது வலைப்பூவான இவ்வலைப்பூவை நான் தொடங்க ஊக்குவித்ததே தாங்கள்தான். தங்களால்தான் பௌத்தம் தவிர்த்த பிறவற்றை பதிய முடிந்தது. அதன் தொடர்ச்சியே விக்கிபீடியா. நன்றி.
Deleteமிகவும் சந்தோசம் ஐயா...
ReplyDeleteவாழ்த்துகள்...
தங்களின் மகிழ்ச்சி எனக்கு நிறைவைத் தருகிறது. நன்றி.
Deleteகற்றுக்கொள்ளும் ஆர்வம் எழுத்தாற்றலை வளர்க்கிறது. உழைப்பு பயனைத் தருகிறது. வெற்றியாளர் நீங்கள். வாழ்த்துகள் ஸார்.
ReplyDeleteதம +1
உண்மைதான். கற்றுக்கொள்ளும் ஆர்வம் பல்வகையில் துணைபுரிகிறது. நன்றி.
Deleteபெருமை மிகு அறிமுகம் அய்யா! மேலும் பல பெருமைகள் தங்களை சேரட்டும்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஅங்கும் இங்கும் படித்து மகிழ்ந்தேன்,வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஅங்கும் இங்கும் வந்தது மகிழ்வைத் தருகிறது. நன்றி.
Deleteதங்களின் பங்களிப்பு மிகவும் அளப்பறியது ஐயா. உங்களின் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்... எனக்கும் இது போல எழுத ஆசை..வழிமுறைகளை சொல்லிக்குடுங்கள் ஐயா..
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை சொல்லித்தர தயாராக இருக்கிறேன். வாருங்கள், எழுத ஆரம்பிப்போம்.
Deleteவாழ்த்துக்கள்! நானும் எழுத முயற்சிக்கிறேன்!
ReplyDeleteஉங்களுடைய முயற்சிக்குத் துணை நிற்பேன். நன்றி.
Deleteவழ்த்துகள் ஐயா;தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
ReplyDeleteதங்களது வாழ்த்துக்களுடன் பணியைத் தொடர்வேன். நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தொடரட்டும் தமிழ்ப்பணி... வாழ்த்துக்கள் ஐயா த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்ப்பணி தொடரும். நன்றி.
Deleteமிக்க மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteவாழ்த்துகள்
வருகை கண்டு மகிழ்ச்சி. நன்றி.
Deleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கு நன்றி.
Deleteதொடர்ந்தும் தமிழுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுடன் தொடர்வேன், நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
Deleteநீங்கள் தொட்டது துலங்கும். உங்களுக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களைப்போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் எழுதத் துணைபுரியும். தங்களின் அன்புக்கு நன்றி.
DeleteDr Karthikeyan (thro email: drkarthik53@gmail.com)
ReplyDeleteCongratulations. Dr Karthikeyan
முனைவர் மு இளங்கோவன் (மின்னஞ்சல் வழியாக muelangovan@gmail.com)
வாழ்த்துகள் ஐயா. மு.இ.
Mr.Murugesan, French Institute of Pondicherry (thro email: murugesan.n@ifpindia.org)
Congratulations Sir!!! I am proud that you are a role model for many youngsters. Good luck for your future tasks. Regards
Jambu should Jump still still still more to more heights.
ReplyDeleteprof. dr. t. padmanaban
உங்களது வாழ்த்துக்களுடன் பல எல்லைகளைக் கடப்பேன், தொடுவேன். நன்றி.
ReplyDeleteமியான்மிரில் உள்ள தங்க பாறையின் அடியில் பகவன் புத்தரின் தலைமுடி இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இதனை ஏற்க முடியாது. காரணம்
ReplyDelete01. பகவன் புத்தர் தலை முடியுடன் இருந்தார் என்ற குறிப்புகள் திரிபிடகத்தில் இல்லை.
02. பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்கள் பின்னிணைப்பு. புத்தரின் மீது பற்று கொள்ள ஏற்படுத்தியது என்று கோசாம்பி கூறுகிறார்.
03. இந்தியாவிலும் பல கோவில்களில் தொங்கும் தூண்கள் இருக்கிறது. ( Hanging Pillars ).
04. சிற்ப முறைக்காக தலை முடியை ஏற்படுத்தி இருக்கலாம். இவைகள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். இன்னும் பல காரணங்கள் இருக்கிறது தலை முடியை மறுப்பதற்கு. நன்றி
வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்...
ReplyDeleteதங்களைப் போன்ற சக வலைப்பதிவர்களின் வாழ்த்துக்களுடன் தொடர்வேன். நன்றி.
Deleteஇன்னும் விக்கிபீடியாவில் எழுதாத, அல்லது எழுத முயன்று முடியாத, எழுத்தாளர்களுக்கும், இனிமேல் எழுதப்போகின்ற புதிய எழுத்தாளர்களுக்கும் தாங்கள் ஒரு 'மாதிரி ஆளுமை'யாக (Role Model) விளங்குகிறீர்கள் ஐயா! - இராய செல்லப்பா
ReplyDeleteமுடிந்தவரை என்னால் ஆன ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். தங்களின் அன்பிற்கு நன்றி.
Delete