எல்லாக் குழந்தைகளுக்கும் கதைகள் தேவை. கதைகளை குழந்தைகள்
விரும்புவர். இருப்பினும் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட 2000 தாய்மார்களிடம்
(என்ன? கணக்கெடுப்பில் அப்பா கிடையாதா?) அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி
64 விழுக்காட்டினரே தங்கள் குழந்தைகளுக்கு உறங்கப்போகும் முன்பாகக் கதைகளைக் கூறுவதாகத்
தெரியவந்துள்ளது. மிகுந்த மன அழுத்தம், அதிகம் களைப்படைதல் உள்ளிட்ட பல காரணங்களால்
பலர் குழந்தைகள் தூங்கப்போகும் முன்பாகக் கதைகள் சொல்வதில்லை. பாதிக்கு மேற்பட்டோர்
குழந்தைகளைக் கம்யூட்டர் விளையாட்டுக்களிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் மீட்டுக்
கொண்டுவர முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
Courtesy: Guardian |
நல்லது. சற்றுக் கடினமாக முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்குப்
படித்துக் காட்டும் நேரமே பெற்றோரும் குழந்தைகளும் ஒரு சேர இருக்கும் நேரமாகும். நான்
இதை ஒரு எழுத்தாளராக மட்டும் கூறவில்லை. வளர்ந்துவரும் மகனின் பெற்றோர் என்ற நிலையிலும்
கூறுகிறேன். குழந்தைகளோடு அனுசரணையாக இருங்கள். அது மன அமைதியைத் தருவதோடு சொகுசையும்
தரும். மன அழுத்தத்தைக் குறைக்கச் சிறந்த வழி 20 நிமிடங்களுக்கு மேல் ஒன்றாகச் சேர்ந்து
படிப்பதேயாகும். நானும் என் கணவரும் இதனை நன்கு அனுபவித்துள்ளோம். இதனால் நாங்கள் முறைவைத்துப்
படிக்க ஆரம்பித்தோம். அவர் எங்கள் மகனுக்குக் காலையில் படிப்பார். நான் மாலைப்பொழுதில்
படிப்பேன்.
அவனுக்கு 11 வயது ஆகும் வரை, சொல்லப்போனால் எங்களை அவனுடைய அறையிலிருந்து விட்டு வெளியே அனுப்பும்வரை, நாங்கள் அவன் தூங்குவதற்கு முன் அவனுக்குக் கதை சொல்வோம். அவனுக்கு இப்போது வயது 24. அவன் அனுமதித்தால் இப்போதுகூட படிக்கத் தயாராக இருக்கிறேன். நான் ஒரு 'சூப்பர்' அம்மாவாக இருப்பதால் மட்டுமல்ல. அவனுக்குப் படித்துக் காட்டுவதையும், அவனோடு நாங்கள் இருப்பதையும் மிக நல்ல நேரங்களாகக் கருதியதால்தான்.
உங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பதைக் குதூகலமாக ஆக்கிக்கொள்ள இதோ 10 மிகச் சிறந்த வழிகள்.
1. இளம் வயதிலேயே ஆரம்பியுங்கள்:
என் மகன் பிறந்த நான்காம் மாதத்திலேயே நான் அவனுக்காக நூல்களைத் தேட ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்கும் Helen Oxenbury எழுதிய Friends என்ற நூலைப் படிப்பதும், ஆடை அணிவதும், விளையாடுவதும் மிகவும் பிடிக்கும். அவனுக்கு ஏதாவது இரு நூல்களைப் படிக்க வாய்ப்பு தருவேன். பிடிக்காததை அவன் விட்டுவிடுவான். அவனுக்கு மிகவும் பிடித்தமானவை Peepo, The Baby's Catalogue. குழந்தைகளும் கருத்துக்களைக் கூற ஆர்வமாக இருக்கும். குழந்தைகளுக்கு, தனக்குப் பிடித்தவற்றைத் தெரிவிப்பதற்கான போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதலால் நூல்களைப் பார்ப்பதைப் பெரிதும் விரும்புகின்றன.
2. குழந்தைகளுக்கு உங்களால் படித்துக்காட்ட இயலவில்லை என்று பணிப்பளுவைக் காரணமாகக் கூறாதீர்கள்:
இது எப்படியென்றால் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க போதுமான நேரம் இல்லை என்று சொல்வதைப் போலத்தான். அதிக நேரம் பணியாற்றுகின்றீர்களா? மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றீர்களா? இரவில் அதிகப் பணியா? குழந்தைகளுக்கு படுக்கை நேரத்தில்தான் படித்துக் காட்டவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சற்று முன்கூட்டி படுக்கையைவிட்டு எழுந்திருங்கள். காலையில் குழந்தையுடன் சேர்ந்து படியுங்கள். என் கணவர் எப்போதும் பணிமுடிந்து தாமதமாக வருவார். அதனால் அவர் அவ்வாறு செய்தார்.
3. உங்கள் குழந்தைக்கு நூலக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொடுங்கள்:
தங்களுக்குப் பிடித்த 10 நூல்களை ஒரு வாரத்திற்கு எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு வசதி உள்ளது. பின்னர் அடுத்த 10 நூல்களை எடுத்துச்செல்லலாம். இதன்மூலமாகக் குழந்தைகளுக்கு நல்லமுறையில் பொழுதை வெளியே செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மறுபடியும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுங்கள். வீட்டுக்கு சில புதுமையான நூல்களை என் மகன் கொண்டு வந்தான். Tiddles என்ற சாரமற்ற ஒரு நூல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் என்ன? அவனுக்கு நாங்கள் அவன் விருப்பப்படி Goodnight Moon, The Very Hungry Caterpillar, Michael Rosen எழுதிய We are Going on a Bear Hunt, The Cat in the Hat, The Baby's Catalogue எழுதிய Mr Gumpy's Outing, Ahlberg எழுதிய Burglar Bill ஆகிய நூல்களை அவனுக்கு வாங்கித் தந்தோம்.
4. நீங்கள் குழந்தையாக இருந்தபோது படிக்கத் தவறிய நல்ல நூல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்:
இப்போது உங்களுக்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் என் மகனுக்கு The Hobbit, Swallows and Amazons நூல்கள், The Wind in the Willows ஆகியவற்றைப் படித்துக் காண்பித்தேன்.
5. தங்களுக்குத் தெரியாத சொற்களைப் பற்றிக் குழந்தைகள் பீதியடைவதில்லை:
Swallows and Amazons எளிதில் புரிந்துகொள்ள இயலாத நடையில் உள்ள நூலாகும். அந்நூலில் உள்ள பல சொற்களுக்கானப் பொருள் எனக்குத் தெரியாது. பயனிலாத் தகவலைக் கொண்டிருந்த அரை பக்கத்தைப் படித்ததும் நான் என் மகனிடம் பல சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றேன். "என்னாலும்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அதனைப் படிக்கச்சொல்லிக் கேட்பதை நான் விரும்புகிறேன்" என்று என் மகன் கூறினான்.
6. தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அவர்களுக்குக் கொடுங்கள்:
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு ஐந்து நூல்கள் வாங்கிக் கொடுங்கள். நீங்களும் வாசிப்பை நேசிக்க ஆரம்பிப்பீர்கள். முதலில் சில பத்திகளை உரக்கப் படியுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் முடிவுக்கு விட்டுவிடுங்கள். இது ஒரு வீட்டுப்பாடம் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இது குதூகலம் என நினைத்துக் கொண்டாடுங்கள்.
7. படிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு எதையும் படித்துக் காட்டாமல் உங்கள் குழந்தையை நீங்கள் தண்டிக்காதீர்கள்:
படிக்க மிகவும் கடினமாக உள்ள நூல்களைத் தாமாகவே படித்துக்கொள்ள குழந்தைகள் விரும்புவர். தனியாகப் படித்துப் புரிந்துகொள்ளும் நிலையை அடைவதற்குள்ளாகவே என் மகன் Harry Potter, Kevin Crossley-Holland எழுதிய Norse Myths, Little House on the Prairie ஆகிய நூல்களை அதிகம் விரும்பினான்.
8. மாறுபட்ட அத்தியாயங்கள்:
என் மகனும் அவருடைய தந்தையும் CS Lewis எழுதிய Narnia books, Philip Pullman எழுதிய His Darm Materials ஆகிய நூல்களை சேர்ந்தே படித்தார்கள். வேகமாகப் படித்து முடிப்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒருவரும் அடுத்த அத்தியாயத்தை மற்றவரும் மாறிமாறி சத்தம்போட்டுப் படித்தார்கள். அதிலுள்ள கதைகள் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு நாளில் ஒரு அத்தியாயத்தைப் படிப்பது என்பது இயலாத காரியம். இவ்வாறான வாசிப்பு முறையினால் என் மகனும் பதட்டமின்றி நிதானமாக வாசித்து ஒரு சிறந்த வாசகனாக வர ஊக்கம் பெற்றான்.
9. தானாகவே படிக்க ஆரம்பித்தல்:
தானாகவே படிக்க ஆரம்பித்த நிலையில் என் மகன் மற்ற நூல்களைவிட The Horrible Stories போன்ற பொதுவான கதைகளையே விரும்பினான். அவன் இது போன்ற நூல்களையே படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். ஆகையால் அவனுக்கு Roald Dahl எழுதிய நூல்கள், The Magic Faraway Tree, அதிக எண்ணிக்கையில் கட்டுக்கதைகள், வியப்பூட்டும் கதைகள் போன்றவற்றைப் படித்துக் காண்பித்தேன். அவனுக்கு மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி.
10. அழ முயற்சிக்கவேண்டாம்:
Tom எழுதிய Midnight Garden நூலை இப்போதுகூட படித்து முடிக்கும்போது அழாமல் இருக்கமுடியவில்லை. அழுதுகொண்டே நான் படிப்பதை என் மகன் ஏற்கவில்லை. அவனுடைய தந்தையிடம் இப்பொறுப்பைக் கொடுத்தோம். சில பக்கங்கள் படித்ததும் அவரும் அழ ஆரம்பித்தார். கதையின் முடிவை எங்கள் மகன் தெரிந்துகொண்டானா என எனக்குத் தெரியவில்லை.

தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The Guardian
(கார்டியன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரையைப்
பின்வரும் இணைப்பில் காணலாம்)
Ten tips to make bedtime reading fun: Francesca Simon, Guardian
--------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் சூன்
2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
--------------------------------------------------------------------------------
மிக அருமையான பதிவு! இன்றைய நிலையில் குழந்தைகள் கணினியிலும் கைபேசியிலும் தான் காலத்தைக்கழிக்கிறார்கள். அவசியம் இளம் பெற்றோர் இதைப்படிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதைப்புரிந்து கொள்ளுவதற்காகவாவது அவர்கள் இதைப்படிக்க வேண்டும்!
ReplyDeleteஅனைவரும்ப யன் பெறக்கூடிய நல்ல முயற்சி இன்றைய சூழலில் குழந்தைகளை கணினி, செல்பேசியிடமிருந்து காப்பாற்ற நல்லவழி பகிர்வைத்
ReplyDeleteதந்த முனைவருக்கு நன்றி
தமிழ் மணம் 2
நல்ல பதிவு. இதைச் செயாற்ற நான் எத்தனை வருடங்கள் காலயந்திரத்தில் பின்னோக்கிச் செல்லவேண்டும்?!! அப்போது இவை முக்கியமில்லை என்று தோன்றியது, அல்லது தோன்றவே இல்லை. இப்போது விட்டு விட்டோமே என்று தோன்றுகிறது. இது போன்ற பெற்றோர்தான் பேரன்களிடம் நெருக்கமாகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த முயற்சிகளை பேரக்குழந்தைகளிடம் செயல் படுத்தலாமே. அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத்தான் எவ்வளவு மிஸ் செய்கிறோம்!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஎன் குழந்தைகளுக்கு கதை சொல்வேன் இரவு. இப்போது பேரக்குழந்தைகளுக்கும் கதை சொல்வேன். பெரிய பேத்தி மிகவும் ஆர்வமாய் கதை கேட்பாள்(இப்போது பெரி பெரிய கதை புத்தங்கள் படிக்கிறாள்). பேரன்கள் இருவரும் கதை கேட்டாலும் விளையாட்டில் தான் ஆர்வம். விளையாட்டு சம்மந்தபட்ட கதைகள் சொன்னால் கேட்பார்கள். எங்கள் குடும்பம் கூட்டுகுடும்பம் இல்லாவிட்டாலும் விடுமுறைக்கு இங்கு வரும் போது கதை சொல்வேன், அங்கு அவர்கள் ஊருக்கும் போனாலும் கதை சொல்வேன்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
பயனுள்ள அற்புதமான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையான பதிவு சார்.
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteஇன்றைய காலகட்டத்தில் அலைபேசியும் தொலைக் காட்சியுமே முழு நேரத்தையும் எடுத்துக் கொள்கின்றன
பேசுவதற்கு ஏது நேரம் கதைசொல்ல ஏது நேரம்
பயனுள்ள பகிர்வு ஐயா.....
ReplyDeleteஉங்களது இப்பதிவு இந்த தளத்தில் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது இதோ சுட்டி
ReplyDelete- கில்லர்ஜி
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_14.html
தகவலுக்கு நன்றி.
Deleteநல்ல பதிவுகள்.. மிக நன்றாக உள்ளது..
ReplyDeleteதிரு எஸ் வி வேணுகோபாலன் மின்னஞ்சல் (sv.venu@gmail.com)வழியாக :
ReplyDeleteபேரன்பின் முனைவர் பா ஜ அவர்களுக்கு,
மிக வித்தியாசமான ஒரு விஷயத்தைமீது அருமையான கட்டுரை வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. எடுத்துக் கொள்ளாத தக்க குறிப்புகள் பலவும் உண்டு. சில, நமது மரபு, வளர்ப்பு, பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியவையும் உண்டு. நன்றி
15 வயதாகும் எங்கள் செல்ல மகன் நந்தா, கதை பிரியன். இன்றும் கதை கேட்காமல் தூங்குவதை விரும்புவதில்லை....எத்தனை நூறு கதைகள் சொல்லி இருப்பேனோ கணக்கில்லை...அந்த இன்பத்திற்கு ஈடில்லை. எங்கள் மகளும் இப்படி கதை கேட்டே வளர்ந்தவள். தற்போது 23 வயது அவருக்கு.
எஸ் வி வேணுகோபாலன்
"குழந்தைகளைக் கம்யூட்டர் விளையாட்டுக்களிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் மீட்டுக் கொண்டுவர முடியவில்லை" என்ற செய்தியை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்தேன்.
ReplyDeleteபடுக்கைக்குப் போகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பதால், குழந்தைகள் நல்ல சிந்தனைகளுடன் தூங்குவர். காலையில் எழும்பும் போதும் நல்ல சிந்தனைகளுடன் எழும்புவர். இந்த ஒழுக்கம் பேணும் செயலை இன்றைய பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டுமே!
நல்ல தகவல்கள் அய்யா......
ReplyDeleteமிகவும் நல்ல இன்றைய குழந்தைகளுக்குத் தேவையான பதிவு.
ReplyDeleteபெற்றோர்கள் தங்களது கற்பனையை உபயோகித்து தாங்களே ஆக்க பூர்வமான கதைகளை சொல்லுவதும் பிறகு குழந்தைகளை ஏதாவது கதை சொல்லும்படி தூண்டுவதும் அவர்களை நல்லவிதமாக வளர்க்க உதவும்.
ஜம்புலிங்கம் ஐயாவுக்கு வாழ்த்துகள்.
அருமை .. மிக அருமை ...
ReplyDeleteகுழந்தைகளைக் கதை கேட்க வைப்பது முக்கியமா படிக்க வைப்பது முக்கியமா . இப்போதைய சூழலில் பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பது மிகவும் சிரமம்கதைகளை எந்தசௌகரியப்பட்ட நேரத்திலும் சொல்லலாம் அதன் மூலம் படிக்க வைக்கும் முறையிலும் வெற்றி பெறலாம்
ReplyDeleteமிக நல்ல பதிவு
ReplyDeleteமிகமிகச் சிறந்த பதிவு. நான் என் மகனை இம்முறையில்தான் வளர்த்தேன். அடுத்த தலைமுறைக்கும் நான் என்னைத் தயாராகிக் கொண்திதிருக்கின்றேன். முடிந்தவரையெல்லாருக்கும் சொல்லியும் வருகின்றேன். மிக்க நன்றி அய்யா

ReplyDeleteபயனுள்ள பதிவு ஐயா.
ReplyDeleteஇதனைச் செயலாற்றி இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும். என் மூத்தவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே வாசிக்க ஆரம்பித்தேன். (மூன்றாம் மாதத்தில் இருந்து சிசுவிற்குக் காது கேட்கும்). அவன் பிறந்து மருத்துவமனை சென்று வந்த பாத்து நாட்கள் மட்டும் இடைவேளை. மீண்டும் பத்தாவது நாள் வாசிக்க ஆரம்பித்தேன். இளையவனுக்கும்...இன்றும் வாசித்தல் தொடர்கிறது..பிள்ளைகள் இருவரின் வாசித்தல் அளவை அதிகம்.
பகிர்விற்கு நன்றி ஐயா