என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று ஞானசம்பந்தப்பெருமான் இறைவனை நோக்கிப் பாடிய பாடலின் அடிகள் மாசிமகத்தன்று (11 மார்ச் 2017) கும்பகோணத்திற்கு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண குடும்பத்துடன் சென்றபோது உணர முடிந்தது.
கும்பேஸ்வரராக,
நாகேஸ்வரராக, சோமேஸ்வரராக, அபிமுக்தேஸ்வரராக, கோடீஸ்வரராக, கம்பட்ட விசுவநாதராக, காசி
விசுவநாதராக, சோமேஸ்வரராக, கௌதமேஸ்வரராக, ஏகாம்பரேஸ்வரராக, பானுபுரீஸ்வரராக, காளஹஸ்தீஸ்வரராக,
அமிர்தகலசநாதராக ......என்று எந்தவொரு பெயரிலும் எங்கள் ஈசனின் அழகு அழகேதான். கும்பகோணம் மகாமகக்குளக்கரையின் கரைகளைச் சுற்றி இறைவனும், இறைவியும் விடை மீது ஏறி சுற்றி வந்த அழகும், தீர்த்தவாரிக்காக குளத்தினை நோக்கி நின்ற அழகும், தீர்த்தவாரியின்போது அனைவரும் மகாமகக்குளத்தை நோக்கி நின்று அருள் தந்த விதமும் மனதில் நின்றன. இந்த முறைதான் பெரும்பாலும் அனைத்துக் கோயில்களின் மூர்த்திகளையும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. குளத்தைச் சுற்றி வெளியே ஒரு முறையும், குளத்திற்குள் இரு முறை சுற்றி வந்து அனைத்து புகைப்படங்களையும் எடுத்தேன்.
பல முறை மாசி மகத்தின்போதும், மகாமகத்தின்போதும் கும்பகோணம் சென்றாலும், ஒவ்வொரு முறையும் புதிதாகச் செல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. இப்பயணத்தின்போது என் மனைவி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு, பேரன் தமிழழகன் ஆகியோர் உடன் வர எங்களின் மகாமகக்குள உலா நிறைவைத் தந்தது. எந்த தொந்தரவும் செய்யாமல் எங்கள் பேரன் தமிழழகன் குளத்தைச் சுற்றி வந்தது எங்களுக்கு வியப்பினைத் தந்தது. எல்லாம் நம் ஈசனின் செயலே.
நன்றி
புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி, மகன் சிவகுரு
புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி, மகன் சிவகுரு
அழகிய படங்கள். ஒரு மகாமகத்துக்கு குடந்தையில் பணி செய்ய டெபுடேஷன் கொடுத்தார்கள். கடுக்காய் கொடுத்து விட்டேன். என் தந்தை கும்பகோணத்தில் இருந்திருக்கிறார் என்றாலும் நான் மகாமகம் பார்த்ததில்லை!
ReplyDeleteபுகைப்படங்கள் அனைத்தும் அருமை காண வைத்த முனைவர் அவர்களுக்கு நன்றி வாழ்க நலம்.
ReplyDeleteஎங்களுக்கும் உங்கள் பகிர்வு மூலம் தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteநன்றி ஐயா...
மாசி மகாமகப் பெருவிழாவை நேரில் கண்டது போலப் பதிவைப் படித்ததும் உணரமுடிகிறது.
ReplyDeleteபுகைப்படங்களும் பதிவும் அருமை!
ReplyDeleteஅழகிய காட்சிகள் அருமையான வர்னனை
ReplyDeleteஎனது முதல் வங்கிப்பணி, சிட்டி யூனியன் வங்கியில் தான். அந்த நேர்காணலுக்குச் சென்றவன், முதலில் கும்பேஸ்வரர்-மங்களாம்பிகையைத்தான் வழிபட்டேன். எனது வாழ்க்கைக்கு விளக்கேற்றிவைத்த மங்களாம்பிகையை மறவேன். - இராய செல்லப்பா நியூஜெர்சி
ReplyDeleteஉங்கள் மூலம் நாங்களும் மாசி மகம் கண்டோம். நன்றி ஐயா.
ReplyDeleteகாலையில் இனிய தரிசனம்.. மகிழ்ச்சி..
ReplyDeleteநலம் வாழ்க..
அழகான புகைப்படங்களுடன் மாசிமகம் உங்கள் மூலம் தரிசிக்க முடிந்தது. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா
ReplyDelete//கும்பேஸ்வரராக, நாகேஸ்வரராக, சோமேஸ்வரராக, அபிமுக்தேஸ்வரராக, கோடீஸ்வரராக, கம்பட்ட விசுவநாதராக, காசி விசுவநாதராக, சோமேஸ்வரராக, கௌதமேஸ்வரராக, ஏகாம்பரேஸ்வரராக, பானுபுரீஸ்வரராக, காளஹஸ்தீஸ்வரராக, அமிர்தகலசநாதராக ......என்று எந்தவொரு பெயரிலும் எங்கள் ஈசனின் அழகு அழகேதான்.//
ReplyDeleteசொல்லச் சொல்ல இனிக்குதய்யா.. நீங்கள் எழுதியதை வாசிக்க வாசிக்க நானும் அந்த அற்புதத்தை உணர்ந்தேன். நன்றி, ஐயா!
படங்கள் அருமையாக உள்ளன. சென்ற மாதம்தான் கும்பேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
ReplyDelete