23 September 2017

கோயில் உலா : மயிலாடுறை கோயில்கள்

காவிரி புஷ்கர ஏற்பாட்டை காண்பதற்காக 4 செப்டம்பர் 2017 அன்று மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்குச் சென்றபோது காவிரியின் வட கரையிலும், தென் கரையிலும் உள்ள கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

காவிரி புஷ்கரத்திற்காகத் தயாரான துலாக்கட்டம்

மயிலாடுதுறையில் உள்ள ஏழு காசி விசுவநாதர் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு இப்பயணத்தின்போது சென்றேன். இதற்குமுன் தேவாரப்பாடல் பெற்ற, மயூரநாதர் கோயிலுக்கு நவம்பர் 2016இல் சென்றுள்ளோம். இப்போது இந்த நான்கு கோயில்களுக்கும் செல்வோம். 

1) வட கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி
கன்வ மகரிஷியால் பூசிக்கப்பட்ட விஸ்வநாதர் என்ற பெருமையுடைய இக்கோயிலில் சிதம்பரத்து ரகசியம் யந்திர வடிவமாக உள்ளது. 16 செப்டம்பர் 2013 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

2) வட கரை : கேதாரநாதர் கோயில்
கேதாரநாதர்-கௌரி அம்மன்
 
மிகச் சிறிய அளவில் அமைந்துள்ள இக்கோயிலின் விமானம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றதை அறியமுடிந்தது. 

3) தென் கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் லாடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம், துலா மாதப் பிறப்பு,  துலா அமாவாசை, கடைமுக தினத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுப்பதால் சிறப்பு பெற்றது. ஏழு காசி விஸ்வநாதர் கோயில்களில் இக்கோயில் முதன்மையான கோயிலாகக் கருதப்படுகிறது. கோயிலின் விமான அமைப்பு காசியில் உள்ளதைப் போன்று உள்ளது.

4) தென் கரை : படித்துறை காசி விசுவநாதர் கோயில்
படித்துறை விசுவநாதர்-விசாலாட்சி கோயில்
 
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் கீழுள்ள இக்கோயில் பாலக்கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்துடன் உள்ளது.

மேற்கண்ட நான்கு கோயில்களும் பிற சிவன் கோயில்களைப் போன்ற அமைப்பில் உள்ளன. இவை துலாக்கட்டம் அருகே அமைந்துள்ளன.அனைத்து கோயிலும் விமானங்களுடனும், கோஷ்ட தெய்வங்களுடனும் காணப்படுகின்றன.  வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து மயிலாடுதுறையிலுள்ள பிற காசி விசுவநாதர் கோயில்களுக்குச் செல்வோம்.


டெக்கான் க்ரானிக்கல் இதழில் 11 செப்டம்பர் 2017இல் வந்த செய்தியை இன்றுதான் கண்டேன், பகிர்வதில் மகிழ்கிறேன். 
"144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படுகின்ற நிலையில் காவிரி புஷ்கரம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெற்ற உதவிப்பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்." (நன்றி : டெக்கான் க்ரானிக்கல், 11 செப்டம்பர் 2017) 


26 செப்டம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.

21 comments:

  1. கோவில் உலா சிறப்பாக உள்ளது. அதிலும் தென் கரை காசி விசுவனாதர் கோவில் மிகப் பழமையானதாகத் தெரிகிறது. வடகரை கேதார நாதர் கோவில் விமானம் பெயின்ட் அடித்து சிறப்பை மாசுபடுத்தியதுபோல் தோன்றுகிறது.

    ReplyDelete
  2. கோவில் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  3. மயிலாடுதுறையில் காவிரியின் வட கரையிலும், தென் கரையிலும் உள்ள கோயில்கள் பற்றிய படங்களும் அதற்கான விளக்க்நகளும் அருமை.
    பாராட்டுக்கள்!

    //தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் லாடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.//
    இந்த கோவில் உள்ள இடத்தை உள்ளூர் மக்கள் லாகடம் என்கிறார்கள். துலாக்கட்டம் என்பதுதான் மருவி லாகடம் என ஆகிவிட்டதாம்.

    ReplyDelete
  4. படங்கள் சிறப்பு த ம 2

    ReplyDelete
  5. தமிழ்மண வாக்கு பெட்டி காணவில்லையே. படங்களும் பகிர்வும் அருமை மிக்க நன்றி

    ReplyDelete
  6. த.ம.3 - ஒருவழியாக தமிழ்மணம் ஓட்டுப்பட்டை கிடைத்து விட்டது.

    ReplyDelete
  7. #கேதாரநாதர்#காசி விசுவநாதர்#
    வடநாட்டு தெய்வங்கள் ஆகையால் ,கோவில் விமானங்களும் வடநாட்டு பாணியிலேயே இருக்கோ :)

    ReplyDelete
  8. விரிவான விளக்கங்களும், அழகான படங்களும் பகிர்ந்தளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  9. விரிவான பதிவு. போன வாரம்தான்பா போய் வந்தோம். அப்ப இத்தனை விவரம் தெரியாதாக்கும்

    ReplyDelete
  10. கோயில் உலா படங்கள் சிறப்பு ஐயா
    தம +1

    ReplyDelete
  11. அழகிய மனம் கவரும் படங்கள். மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. நாங்கள் மயிலாடுத்றி சென்றிருந்தபோது கோமதி அரசு தம்பதிகள் எங்களைப்பல கோவில்களுக்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது அங்கு ஒரு கோவிலில் அன்னை அபயாம்பிகாவின் படம் வாங்கினேன் கண்ணாடி ஓவியமாக. ஆனால் அது த்ருப்திகரமாக வரவில்லை ஓவியம் தீட்டுவதே நின்று விட்டது அதன்பின்

    ReplyDelete
  13. படங்களும் பதிவும் மிகச் சிறப்பு. உங்களுடன் உடன் வந்து பார்த்ததாகவே உணருகின்றேன்.

    ReplyDelete
  14. அழகிய படங்களுடன் இனிய தரிசனம்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  15. படங்களும் பதிவும் மிக நன்று ஐயா. சிறப்பான தரிசனம்!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  16. கோவில் உலா சிறப்பாக இருக்கிறது. சிற்ப கலையை வணங்குகிறேன்

    ReplyDelete
  17. படங்களுடன் கோயில் உலா அருமை. பக்தி மற்றும் கலைக்கு ஆதாரமாக திகழும் கோயில்கள் அவற்றின் பழமை கெடாமல் பாதுக்காக்கப்பட வேண்டியது அவசியம்.

    நன்றியுடன்
    சாமானியன்

    புதிய பதிவு " எனது ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    ReplyDelete
  18. கோவில் உலா படங்களுடன் சிறப்பு ஐயா...

    ReplyDelete
  19. தங்கள் கோவில் உலா
    எங்களுக்கான தெய்வீக அழைப்பு

    ReplyDelete