கடந்த பதிவில் 2017இன் சிறந்த ஆங்கிலச் சொல்லைப் பற்றி விவாதித்தோம். இப்பதிவில் டிசம்பர் 2017இல் அயல்நாட்டு இதழ்களில் வாசித்தவற்றில் சில செய்திகளைக் காண்போம். வெள்ளை மாளிகையில் கரப்பான் பூச்சி முதல் கார்டியன் அளவு மாற்றப்படுவது வரை பல செய்திகள் இவற்றில் உள்ளன. கார்டியன், நியூயார்க்கர், இன்டிபென்டன்ட் ஆகிய இதழ்களில் இச்செய்திகள் வெளிவந்துள்ளன.
தென்னிந்தியாவில் ஆன்மாவைத் தொடும்வகையிலான பயணம் மேற்கொள்வோமா? பழமையான கோயில்கள், வனங்கள், நீர்நிலைகள், அழகான நகரங்கள். சென்னைக்குஅருகே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமான மகாபலிபுரம். கடலை நோக்கியமைந்துள்ள 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயில்கள். ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட பஞ்சரதங்கள். அருச்சுனன் தவம். யுனெஸ்கோவின் மற்றொரு உலகப்பாரம்பரியச் சின்னமான, சோழப்பெருமையை செம்மாந்து வெளிப்படுத்த நிற்கின்ற தஞ்சாவூர் பெரிய கோயில். ஆயிரக்கணக்கான சிற்பங்களைத் தாங்கி நிற்கின்ற மதுரைக் கோயில்.
2017இல் அதிகம் வாசிக்கப்பட்டுள்ள கட்டுரைகளாக 25 கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ் தெரிவு செய்துள்ளது. பக்கப்பார்வையா, பார்வையாளர்களா, வேறு காரணியா எதனை அடிப்படையாகக் கொள்வது என்று யோசிக்கும்போது நிதிநிலை என்ற அடிப்படையில் தம் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டு அதே சமயம் சந்தா செலுத்துகின்ற வாசகர்களைச் சார்ந்துள்ளதாக அவ்விதழ் கூறுகிறது. ஒவ்வொரு கட்டுரையினையும் படிக்க வாசகர்கள் எடுத்துக்கொண்ட நிமிடங்களின் அடிப்படையில் இந்த 25 கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவ்விதழ் கூறுகிறது.
அரசியல், விளையாட்டு, பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பணம், பயணம் என்ற தலைப்புகளில் கார்டியனில் 2017இல் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தலைப்புவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.
2018இல் கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்கள் டேப்ளாய்ட் வடிவிற்கு மறுபடியும் மாறவுள்ளன. 2005 முதல் இருந்த ஐரோப்பிய பாணியிலான பெர்லினர் வடிவமானது இதன் மூலம் முடிவிற்கு வருகிறது. மாற்றம் விரைவில் நிகழவுள்ள நிலையில் இதுவரை இருந்து வந்த பெர்லினர் வடிவத்தினைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறது கார்டியன். "ஒரு குறிப்பிட்ட கார்டியன் இதழையோ, அப்சர்வர் இதழையோ நீங்கள் பாதுகாத்து வைத்துள்ளீர்களா? குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வோ, நீங்கள் ரசி்த்த ஒஒரு குறிப்பிட்ட முக்கிய பிரமுகரைப் பற்றிய நினைவு தொடர்பான செய்தியோ அவ்விதழில் வெளியாகி இருக்கலாம். இவையனைத்திற்கும் அப்பால் - தனிப்பட்ட சொந்தக் காரணம்கூட இருக்கலாம் - நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ இந்த இதழ்களில் இடம் பெற்றிருக்கலாம். உங்களுடைய கடிதமோ, புகைப்படங்களோகூட வெளியாகியிருக்கலாம்" என்கிறது கார்டியன்.
பெர்லினர் வடிவம் என்பதானது நாம் வழக்கமாக வாசிக்கின்ற ப்ராட்ஷீட் வடிவிற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த வடிவமானது டேப்ளாய்டைவிட உயரத்தில் சற்று நீண்டும், சற்றே அகலமாகவும் காணப்படும். அதேசமயம் ப்ராட்ஷீட்டை விட குறுகியதாகவும், சிறியதாகவும் இருக்கும்.
ஆ்ண்டின்
12 மாதங்களை ஒரே சொல்லில் கொணர முடியுமா? 2017இன் இறுதியில் சொல் (expletive) அசைநிலை
என்பதற்கப்பால் நினைத்துப்பார்ப்பது சற்றுசிரமம்தான். அதே நேரத்தில் உலக நிகழ்வுகளில்
ஓர் ஆண்டு என்பதானது அவற்றை விவரிக்க ஓராண்டில் பயன்படுத்தப்பட்ட மொழியின் நிலையிலும்
அமையும் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? இச்சூழலில் Feminism தொடங்கி
broflake வரை 2017இன் சொற்களாக அலசப்பட்டவற்றைக் காண்போமா?
T.M.1
ReplyDelete//வெள்ளை மாளிகையில் கரப்பான்பூச்சிகளும், எலிகளும், எறும்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றனவாம்.//
ReplyDeleteஒரு அல்ப திருப்தி வருவதைத் தவிர்க்க முடியவில்லை! மனித பலவீனம் பாருங்கள்!
ஸ்ரீராம் அமெரிக்காவில் கிழக்கே கொஞ்சம் இதெல்லாம் அதிகம் தான். அதை வைத்துத்தானே மௌஸ் ஹண்ட்ட் அப்புறம் கரப்பான் பூச்சி வைச்சும் படம் எடுத்தாங்க....
Deleteகீதா
ஹஹ்ஹா :) ஸ்ரீராமுக்கு எவ்ளோ சந்தோஷம் .இங்கே பிரைமரி ஸ்கூல் பிள்ளைங்க தலையில் ஈறு பேன் கூட இருக்கு :)
Deleteஸ்ரீராம் அமெரிக்காவில் பல இடங்கள இந்தியாவை விட மிக மோசமாக இருக்கின்றன.... நேற்று இந்தியா செல்லவிருந்த நண்பரிண் மனைவியை நீயூயார்க்கில் உள்ள JFK ஏர்போட்டில் விட சென்றேன் வழக்கமாக செல்லும் ரூட்டை தவிர்த்து வேறு ஒரு ரூட்டை தேந்தெடுத்து செல்லும் போது அங்குள்ள கட்டிடங்களை பார்த்த போது நண்பரின் மனைவியிடம் சொன்னது இதுதான் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் இந்த பகுதிகளை பார்த்தால் இந்தியா எவ்வளவோ மேல் என்று சொல்லி சென்றுவிடுவார்கள் அதிலும் தமிழகத்தில் இருந்து வருபவர்கள்...
Deleteஇங்குள்ள சில பகுதிகளில் நம்மால் வசிக்கவே முடியாது ஒன்று சுத்தமற்று இருப்பது மற்றொன்று பாதுகாப்பின்மை
சுவாரஸ்யத் தகவல்கள். வழக்கம்போல தம +1
ReplyDeleteதங்களின் வாசிப்புப் பழக்கம் போற்றுதலுக்கு உரியது
ReplyDeleteஇங்க தமிழ் நூல்கள், நாளிதழ் வாசிக்கவே நாக்கு தள்ளுது. உங்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்...
ReplyDeleteநன்றி
ReplyDeleteபல்சுவைப் பகுதி - சுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteசுவையான தகவல்கள். தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல தகவல்கள். அதுவும் வெள்ளி மாளிகையில் வாழும் ஜீவன்கள் பற்றிய தகவல் ஸ்வாரஸ்யம். கேள்விப்பட்டதுண்டு...இப்போது உங்கள் பதிவின் மூலம் மேலும் அறிந்தோம்.
ReplyDeleteதகவல்கள் அருமை பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅயல் நாட்டில் நடக்கும் எதுவும் ரசிக்க வைக்கும் ஸ்ரீராம்சொல்வதுபொல் சில சமயம் அல்ப திருப்தியும்தரும்
ReplyDeleteவணக்கம் ஐயா .இந்த கரப்பான் பூச்சி பற்றி ரொம்ப வருஷம் முன் என் ப்ரொபசர்சொன்னது நினைவுக்கு வருது அமெரிக்காவில் ஸ்பேஸுக்கு எந்த ஜீவனை அனுப்பலாம்னு ஒவ்வொருவரின் யோசனைகளை கேட்டு கொண்டிருந்தார்களாம் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்ல ஒரு குட்டி பெண் சொல்லிச்சாம் கரப்பான் பூச்சின்னு .எதுக்குன்னு அவளை கேட்டப்போ சொல்லியிருக்கா நான் கரப்பான் பூச்சியை டாய்லட் கிச்சன் bedroom கராஜ் எல்லா இடத்திலும் பார்க்கிறேன் அதுதான் ஸ்பேஸுக்கு அனுப்ப பொருத்தமான ஆள்னு :)
ReplyDeleteவெள்ளை மாளிகை மட்டுமில்லை இங்கே பிரதமந்திரி லண்டனில் டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்திலும் எலித்தொல்லை இருக்கு :)
ReplyDeleteகார்டியன் மற்றும் அப்சர்வர் தொடர்ந்து வாசிக்கிறேன் நானும் .நல்ல தொகுப்பு ஐயா
மிக அருமை
ReplyDeleteகரப்பான் பூச்சி அதிக தொல்லை போலும் எங்கும்))
ReplyDeleteவணக்கம் சகோதரே
ReplyDeleteசுவையான தகவல்கள். அயலக பத்திரிக்கைகளையும் அலசும் தங்களின் படிக்கும் திறன் வியக்க வைக்கிறது.
கரப்பான்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு ஜீவன் போலும். பகிர்ந்தமைக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பல்சுவைத் தகவல்கள் ஐயா, மீண்டும் வருவேன்!
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல தரவு இந்த பதிவில் உள்ள கட்டுரைகளை தரவுகளை படிக்கவே ஒரு மாதம் ஆகும் இல்லையா..?
ReplyDeleteநன்றிகள்
வாழ்த்துகள்
அருமையான தகவல்கள்.
ReplyDelete