01 September 2018

வாழ்வில் வெற்றி மின்னூல் : முனைவர் பா.ஜம்புலிங்கம்

2001இல் அச்சு வடிவில் வெளியான வாழ்வில் வெற்றி என்னும் தலைப்பிலான, 32 சிறுகதைகளைக் கொண்ட  என் முதல் நூல் தற்போது மின்னூலாக்கம் பெற்றுள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். என் முதல் சிறுகதை வெளியான 25 ஆண்டுகள் கழித்து அச்சிறுகதையை உள்ளடக்கிய கதைகளைக் கொண்டு வெளிவந்த அந்நூல், தற்போது மின்னூலாக வடிவம் பெறுகிறது. எழுத்துப்பணிக்குத் துணை நிற்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி. 

எழுத்தோடு என் தொடர்பானது என்பது 1980களில் ஆரம்பித்தது. எனது முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன்மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த வழக்கம் சிறிது சிறிதாக சிறுகதைகள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது.   

பௌத்த ஆய்வின் காரணமாக தொடர்புகொண்ட அறிஞர்களில் ஒருவரான திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி தஞ்சையில் சந்தித்தபோது நான் எழுதிய சிறுகதைகளைப் பற்றிக் கேட்டு, வியந்தார். ஆய்வுப்பணியுடன், சிறுகதைகளும் எழுதுவதையும் பார்த்த அவர், அதனை நூலாக்க முயற்சியினை மேற்கொள்ளலாம் என்று கூறி அனைத்துக் கதைகளின் நகல்களையும் கேட்டு வாங்கிச் சென்றார். எடுத்துச்சென்ற சில நாள்களில் பதிப்பகத்திலிருந்து ஒரு நாள் அஞ்சலில் மெய்ப்புப்படிகள் வந்தன. தொடர்ந்து நூலிற்கான அட்டையும் வந்தது. திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்கள் இந்நூல் வெளிவர ஊக்கம் தந்தார். அப்பெருமக்களின் உதவியுடன் சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றது. இந்த முதல் நூல் எழுதிய ஆர்வம் அடுத்தடுத்து சில நூல்களை எழுதக் காரணமாக அமைந்தது.  

1. Tantric Tales of Birbal (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, நவம்பர் 2002
2. Judgement Stories of Mariyathai Raman (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, நவம்பர் 2002
3. படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, டிசம்பர் 2004
4. Jesting Tales of Tenali Raman (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, அக்டோபர் 2005
5. Nomadic Tales from Greek (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மே 2007
6. தஞ்சையில் சமணம், ஏடகம், தஞ்சாவூர், 2018 (கோ.தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன் உடன் இணைந்து)


திரு கு.வெ.பாலசுப்பிரமணியன் அணிந்துரையிலிருந்து:
.........."ஏன் சார்! நான் வந்து கொஞ்ச நாள்லேயே உங்க கதைங்க ரொம்ப படிச்சிட்டேன். நீங்க ரொம்ப நாளா எழுதுறதாச் சொன்னீங்க. நீங்க வெளியிட்ட கதையெல்லாம் ஒரு தொகுப்பா போட்டா நல்லாயிருக்குமே!" இது ஜம்புலிங்கத்தின் கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் குரல் மட்டுமன்று; என்னுடைய குரலும்தான். ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது; ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக்கொள்ளும் திறன் கைவசம் இருக்கிது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக் கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்... இந்த சித்துச் விளைட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.... (ப.7) 

என்னுரையிலிருந்து:
மனதில் நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அன்றாடம் எதிர்கொள்ளும் சில தீர்வுகள், சமூகத்தில் நம் முன் தோன்றும் அவலங்கள், பிற குடும்பச் சூழல்கள் போன்ற நிலைகளை மனதில் வைத்து கதை எழுத ஆரம்பித்தேன். சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனதில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள் என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன்முதலாக 1993இல் வெளியானது. நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கியக்காரணிகளாக அமைகின்றன. (ப.11)

வாழ்வில் வெற்றி, புஸ்தகா 
வாழ்வில் வெற்றி, அமேசான் 
பல நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி சிறுகதைத்தொகுப்பு தற்போது மின்னூல் வடிவம் பெற்றுள்ளது. வாழ்வில் வெற்றி மின்னூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். நூலைப் பெற மேற்கண்ட புஸ்தகா அல்லது அமேசான் தளத்தின் இணைப்பைச் சொடுக்க வேண்டுகிறேன்.

நன்றி : திரு ரமேஷ், புஸ்தகா
திரு திலக் (அட்டைப்பட இயற்கைக்காட்சி)

26 comments:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    இந்தப் பதிவு படிக்கும்போது எனக்கொரு சந்தேகம் வருகிறது. "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதிக்கு உங்களிடம் கதை கேட்டிருக்கிறேனோ... எப்படி விட்டேன்?

    அதனால் என்ன? இப்போதுதான் ஒரு கதை எழுதி அனுப்புங்களேன்...

    sri.esi89@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மின்னஞ்சலில் அனுப்பிவைப்பேன். நன்றி.

      Delete
    2. நம் ஆரோக்கியம் காணாமல் போவதற்குள் நம் எழுத்துக்களை மின் நூலாக மாற்றி விட வேண்டும் என்று எப்போதும் நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. காரணம் காலமாற்றத்தில் தொழில் நுட்ப வசதிகள் எப்படி மாறும் என்றே நம்மால் கணிக்க முடியாது?

      Delete
  2. மகிழ்ச்சியான விசயம் முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சார்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    தங்களுடைய சிறுகதைகள் மின்னூலாக வெளிவந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. நல்வாழ்த்துக்கள்! அண்ணா....

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஐயா... அசத்துங்க...

    ReplyDelete
  8. மேலும் பல நூல்களைத் தாங்கள் வழங்க வேண்டும்...

    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா. மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.

    ReplyDelete
  11. சிறுகதை எழுதும் பக்குவம் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. தங்கள் முயற்சியில் வெற்றி கண்டுள்ளீர்கள். அனந்தபுரம் திரு.கிருஷ்ணமூர்த்தியும் சேகர் பதிப்பக உரிமையாளர் திரு.வெள்ளையாம்பட்டு சுந்தரம் போன்ற நல்ல உள்ளங்களின் முயற்சியால் பெற்ற வெற்றி இது. தொடர்ந்து தங்களுடைய அணைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  13. எனக்கு வாழ்த்த வயதில்லை அய்யா .
    தங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. மனம் நிறை வாழ்த்துகள் முனைவர் ஐயா.
    தங்கள் உழைப்பின் பலன் அளவில்லாமல் பெருக வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சிறுகதைகள் என்றாலே உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு கடைசியில் என்ன Twist கதாசிரியர் வைப்பார் என்று படிக்க ஆவல்.

    ReplyDelete
  17. மின்னூல்களுக்கு வாசகரிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அறிகிறேன்.

    தொடர்ந்து வெளியிடுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. மின்னஞ்சல் மூலமாக (mani.tnigtf@gmail.com) :
    அய்யா மிகுந்த மகிழ்ச்சியும் பாராட்டுகளும்,
    பெருமை மிக்க பணி தொடரட்டும்
    அன்புடன், ஆ.மணிகண்டன்

    ReplyDelete
  19. மின்னஞ்சல் மூலமாக (gangadharan.kk2012@gmail.com) :
    மிக்க மகிழ்ச்சி ஐயா..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஐயா. மிக்க மகிழ்ச்சி. :))
    தொடர்ந்து நூல் வெளியிடுங்கள் ஐயா.

    ReplyDelete
  21. எங்களின் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete