27 October 2018

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பகுதிகள்) : ப.தங்கம்

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் ப.தங்கம் (9159582467) அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.

நான்காம் பகுதிக்கான அணிந்துரையில் மருத்துவர் ச.மருதுதுரை : “தங்கம் போன்ற ஆளுமைகள்  கலைக்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதாகவே தங்கம் என்ற கலைஞனையும், அவரது கலையையும் பார்க்கும்போது தோன்றுகிறது என்றால் அது சற்றும் மிகையன்று.”

நான்காம் பகுதி (பக்.327-429 வரை) 
பூங்குழலி அறிமுகம் தொடங்கி (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 1 முதல்), சேற்றுப்பள்ளம், சித்தப்பிரமை, நள்ளிரவில், நடுக்கடலில், மறைந்த மண்டபம், சமுத்திர குமாரி, பூதத்தீவு, இது இலங்கை, அநிருத்தப் பிரம்மராயர், தெரிஞ்ச கைக்கோளப் படை, குருவும் சீடனும், பொன்னியின் செல்வன், இரண்டு பூர்ண சந்திரர்கள், இரவில் ஒரு துயரக்குரல், சுந்தர சோழரின் பிரமை, மாண்டவர் மீள்வதுண்டோ?, துரோகத்தில் எது கொடியது?, ஒற்றன் பிடிபட்டான், இரு பெண் புலிகள், பாதாளச்சிறை, (அத்தியாயம் 21) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து  தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம். கற்பகம் இதழின் ஆசிரியர் வி.ர.வசந்தன் அவர்கள் வரைந்துள்ள கல்கியின் சித்திரத்தை நம்முடன் பகிர்கிறார் நூலாசிரியர். (ப.327)

ஐந்தாம் பகுதிக்கான மதிப்புரையில் டாக்டர் சா.இராமையா : “ஓவியர் மணியம் வரைந்த சித்திரங்களை உள் வாங்கிக்கொண்டு அவற்றிற்கு வசனமும் பக்கத்திலேயே கதையையும், பெரிதாக படங்களையும் வரைந்து, மூலக்கதையின் கருவை சிதைய விடாமல் தெளிந்த நீரோடை போல் கொண்டு சென்றுள்ளார்.”

ஐந்தாம் பகுதி (பக்.430-532 வரை) 
சிறையில் சேந்தன் அமுதன், (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 22 முதல்), நந்தினியின் நிருபம், அனலில் இட்ட மெழுகு, மாதோட்ட நகரம், இரத்தம் கேட்ட கத்தி, காட்டுப்பாதை, இராஜபாட்டை, யானைப்பாகன், துவந்த யுத்தம், ஏலேல சிங்கன் கூத்து, கிள்ளிவளவன் யானை, சிலை சொன்ன செய்தி, அநுராதபுரம், இலங்கைச் சிங்காதனம், தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன், சித்திரங்கள் பேசின, இதோ யுத்தம், மந்திராலோசனை, அதோ பாருங்கள், பூங்குழலியின் கத்தி (அத்தியாயம் 42) ஆகிய அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது.

அவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்விடத்திற்கே அழைத்துச்சென்றுவிடுவதை நாம் முன்பு உணர்ந்துள்ளோம். முந்தைய பகுதிகளில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நமக்கு அருகாமையில் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். நான்காம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம்.  



 







கதாபாத்திரங்களை ஓவியங்களில் கொணரும்போது அவர் பயன்படுத்துகின்ற சொற்கள் வரலாற்றுக்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
· பூங்குழலி, தூரத்தில் தெரிந்த குழகர் கோயிலை பார்க்கும்போது அவளுடைய முகத்தில் வெளிப்படுகின்ற ஆர்வம் (ப.329)
· குதிரை மீது வந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், அவளுக்குத் தோன்றும் நாண உணர்ச்சி (ப.333)
· புதைசேற்றுக்குழயில் வந்தியத்தேவனின் முழங்கால் வரையில் சேறு மேலேறியபோது அவன் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.337)
·   அவனுடைய கைகளை பூங்குழலி பற்றியபோது அவளுடைய கைகளில் இருந்த வலிமை (ப.341)
·   கடலுக்குள் வந்துவிட்டால் சமுத்திரராஜன் தான் தன் தந்தை என்றும், தன்னுடைய மற்றொரு பெயர் சமுத்திரக்குமாரி என்றும் பூங்குழலி கூறும்போது அவள் முகத்தில் தோன்றும் பிரகாசம் (ப.360)
·    தான் கண்ட செய்திகளைச் சொன்னால் வாயு பகவான் நடுங்குவார், சமுத்திரராஜன் ஸ்தம்பிப்பார், பூமாதேவிகூட அலறிவிடுவாள் என்று ஆழ்வார்க்கடியான் கூறும்போது அதனை அநிருத்தப் பிரம்மராயர் கேட்கும்போது இருக்கும் கவனம் (ப.372)
· இளவரசர் அருள்மொழிவர்மன் பொன்னியின் செல்வனாக ஆன வரலாற்று உண்மையை குந்தவை சொல்லும்போது, அவள் முகத்தில் தோன்றும் கனிவு (ப.378)
· தன் மனத்தைத் திறந்து மகள் குந்தவையிடம் உண்மை சொல்ல விரும்பும்போது, தந்தை சுந்தரசோழரின் முகத்தில் காணும் சஞ்சலம் (ப.384)
·   தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ பயங்கரமாக சதி நடப்பதை அறிந்தபோது குந்தவையின் முகத்தில் காணப்பட்ட பீதி (ப.408)
·  சோழசாம்ராஜ்யத்தை தம் காலடியில் விழச்செய்து, நந்தினி சோழ சிம்மானத்தில் வீற்றிருக்கும் நாள் சீக்கிரம் வரும் என்று பெரிய பழுவேட்டரையர் கூறும்போது அவர் முகத்தில் தோன்றிய வஞ்சம் (ப.415)
·      பாதாள சிறையின் சாவியைப் பெற்றதும், சோழர் குலத்திற்கு தன்னால் தீது எதுவும் வராது என்று குந்தவை கூறியபோது அவளுடைய முகத்தில் காணப்பட்ட உறுதி (ப.427)    
· பாதாளச்சிறையில் வானதியிடம் பயமாக இருக்கிறதா என்று குந்தவை கேட்கும்போது அவளுடைய முகத்தில் காணும் எச்சரிக்கை உணர்வு (ப.431)
·          நிருபம் எழுதும்போது நந்தினியிடம் காணப்பட்ட நடுக்கம் (ப.441)
·   வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மூன்று வீரர்களோடு காட்டுப்பகுதிக்குள் பிரயாணம் தொடங்கியபோது அவர்களிடம் காணும் நிதானம் (ப.459)
·          யானையின் கழுத்தில் வீற்றிருந்த யானைப்பாகனின் கழுகுப்பார்வை (ப.471)
·    சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக்கொண்டிருந்த வீரனுடைய முகத்தை வீரர்கள் பார்ததபோது எழுந்த ஆரவாரம் (ப.483)
· அநுராதபுரத்தை நெருங்கும்போது இருந்த புத்தர் சிலையினை இளவரசர் வணங்கும்போது வெளிப்படும் பக்தி (ப.488)
·  இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றி சித்திரங்கள் மூலமாகவும், சமிக்ஞைகளின் மூலமாகவும் அந்தப் பெண் செய்த எச்சரிக்கை உணர்வு வெளிப்பாடு (ப.504)
·          இளவரசை சிறைப்படுத்திக்கொண்டுபோக ஆட்கள் வந்திருப்பதாகக் கூறியபோது பூங்குழலியின் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.531)

பொன்னியின் செல்வன் புதினத்தில் வெளிவருகின்ற நிகழ்வுகளில் முக்கியமானவை எதுவும் விட்டுப்போகா நிலையில் அவர் தெரிவு செய்து ஓவியங்களாக்கிய விதம் சிறப்பானதாகும்.  நூலாசிரியரின் விடா முயற்சி தற்போது அடுத்தடுத்த பகுதிகளை நமக்கு அளித்துள்ளது. தொடர்ந்து வெளிவந்துள்ள ஆறாவது பகுதியை விரைவில் ஓவியங்களோடு ரசிப்போம். அசாத்திய முயற்சியில் களமிறங்கி பயணிக்கின்ற திரு தங்கம் அண்ணன் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள். 

கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, நான்காம் பகுதி (மார்ச் 2018)
கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, ஐந்தாம் பகுதி (ஜுலை 2018)
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200 (ஒவ்வொரு தொகுதியும்)



முதல் மூன்று தொகுதிகளின் முகப்பட்டைகள்

13 comments:

  1. குழந்தைகளுக்கும் புரியும்வண்ணம் படக்கதை வாயிலாக பொன்னியின் செல்வன்.

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிறப்பான முயற்சி. கல்கி இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவர் குடும்பத்தாரிடமிருந்து ஏதும் ஊக்கம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. நானும் நினைத்தேன் ஸ்ரீராம்...நீங்க இங்க சொல்லிருக்கறதைப் பார்த்ததும் அப்படியே டிட்டோ செய்கிறேன் உங்க கருத்தை...

      கீதா

      Delete
    2. தங்கம் அண்ணன் யாரிடமும் உதவி எதிர்பார்க்கவில்லை. தானாகவே ஒரு முன்முயற்சி எடுத்து இத்தகைய அரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

      Delete
  3. பெரியவர் ஓவியர் தங்கம் அவர்களின் அயரா முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  4. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இது அவசியமான விடயமே...
    தங்களது பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்லதொரு தகவலுக்கு மகிழ்ச்சி...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    மீண்டும் இப்படி சித்திரகதையாக படிக்க ஆவல்.
    ஒவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லதொரு தகவல். படக்கதையாக படிப்பதில் இன்னும் ஸ்வாரஸ்யம்.

    ஓவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  8. ஓவியர் தங்கத்துக்கு வாழ்த்துகள் சித்திரக்கதை இன்னும் பார்க்க வில்லை

    ReplyDelete
  9. (Thro email: subrabharathi@gmail.com)
    Aaha. Arumai. Subrabharathi manian

    ReplyDelete
  10. ஒரு வேள்வி என்றே சொல்லத்தக்கது.
    ஓவியர் தங்கம் வாழ்க.

    ReplyDelete
  11. தோழர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete