டிசம்பர்
2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், டெய்லி மெயில், ஏபிசி நியூஸ், சீனாடெய்லி, இன்டிபென்டன்ட் ஆகியவற்றில்
வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.
சிங்கப்பூரையும்,
ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு
(United Arab Emirates) உலகின் மிகச் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற நிலையைப் பெற்றுள்ளது.
அந்நாட்டு கடவுச்சீட்டினை வைத்துள்ளவர்கள் முன்விசா (prior visa) இன்றி 167 நாடுகளுக்குள்
நுழையலாம். 113 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். 54 நாடுகளுக்கு அடைந்த பின் விசா
(visas on arrival) என்ற நிலையில் செல்லலாம். கடந்த மாதம் மூன்றாமிடத்திலிருந்த இந்நாடு
தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளதாக கல்ப் நியூஸ் கூறுகிறது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள
கலகாடி டிரான்ஃப்ரான்டியர் பார்க்கில் (Kgalagadi Transfrontier Park) ஓர் ஆமையை இரு
சிங்கங்கள் தமக்கு இரையாக்க முயற்சிக்கின்றன. அந்த ஆமை கூட்டுக்குள் தன்னை உள்ளிழுத்துக்கொள்கிறது.
பசியோடு உள்ள இரு சிங்கங்களும் தம் கூரிய பற்களாலும், நகங்களாலும் மாறி மாறி அந்த கூட்டினை
உடைக்கவும், முயற்சித்துத் தோற்றுவிடுகின்றன. அக்காட்சியை பீட் வான் சால்க்விக்
(Peet van Schalkwyk) என்பவர் படம் பிடித்துள்ளார். இச்செய்தியில் ரசிக்கத்தக்க மற்றொரு
கூறு Turtle-y protected!இல் உள்ள Turtle-y என்ற சொல்லின் பயன்பாடு.
வெற்றிக்களிப்பில்
விருது பெற மேடைக்கு வந்த கால் பந்தாட்ட வீராங்கனையிடம் கேட்கப்படக்கூடாத கேள்வியைக்
கேட்க, மேடை நாகரீகம் கருதி நிதானத்தை கடைபிடித்து தன் கருத்தைக் கூறியவிதம் அருமை.
சீனாவில்,
தென் சீனக்கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மாகாணங்களுள் ஒன்றான குவாங்டாங் (Guangdong)
என்னுமிடத்தில் வகுப்பறைகளில், மாணவர்களின் கண் பார்வையினைப் பாதுகாக்கும் நோக்கில்
அலைபேசிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மின்னணு சாதனங்களை அறிவியல்பூர்வமாகப் பயன்படுத்த
வேண்டும் என்றும் வீட்டுப்பாடங்களை எழுதுவதற்கு மின்னணுக் கருவிகளுக்கு பதிலாக தாள்களையே
பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தி்னர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டைம்
(Time) இதழின் 2018இன் சிறந்த நபராக (Person of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒன்றுக்கு
மேற்பட்டவர் ஆவர். அவர்களில் வாஷிங்டன் போஸ்ட் இதழைச் சேர்ந்த ஜமால் கஷோகி உள்ளிட்ட,
கொலை செய்யப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவர்களை
பாதுகாவலர்கள் (The Guardians) என்று கூறுகிறது அவ்விதழ்.
லிட்டில்
ஸ்டோன் (Little Stone) என்றழைக்கப்படுகின்ற மூன்று வயது குங்பூ குழந்தை க்யூஇ
(Qi), தினமும் காலை 5.00 மணிக்கு படுக்கையை விட்டு எழுகிறது. ஷாவோலின் மாஸ்டராவதற்காக
ஷாவோலின் கோயிலில் ஏப்ரல் மாதத்திலிருந்து தினமும் பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறது.
பயிற்சி எடுக்க சேர்ந்தபோது தினமும் குழந்தை அழுததாகவும், பின்னர் பயிற்சியில் ஈடுபட
ஆரம்பித்ததாகவும் அக்குழந்தையின் பயிற்சியாளர் (master, Abbot Yanbo ) கூறுகிறார்.
தாயின் நினைவு வரும்போது அவ்வப்போது அழ ஆரம்பிக்கின்ற அக்குழந்தை, தானாகவே கண்ணீரை
துடைத்துக்கொண்டு இயல்பாக பயிற்சியில் இறங்கிவிடுகிறது என்றும் அவர் கூறுகிறார். அக்குழந்தை
பயிற்சியெடுப்பது தொடர்பான படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகிவருகிறது.
கேம்பிரிட்ஜ்,
காலின்ஸ், ஆக்ஸ்போர்டு அகராதிகளைத் தொடர்ந்து, மெரியம் வெப்ஸ்டர் அகராதி இந்த ஆண்டுக்கான
சிறந்த சொல்லை தற்போது வெளியிட்டுள்ளது. மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த,
2018க்கான சிறந்த சொல் (Word of the Year, WOTY) Justice ஆகும். நீதித்துறையைப்
(Justice Department) பற்றிக் குறிப்பிடும்போது நீதி (Justice) என்றே டிரம்ப் கூறுவாராம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இந்த சொல்லுக்கான தேடல் 74 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும்,
நீதிக்கான வழியடைப்பு (obstruction of justice) என்ற அவருடைய சொல் பயன்பாடு, கடந்த
ஆண்டைவிட 900 விழுக்காடு அதிகமாக, இத்தளத்தில் பார்க்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும்
மக்கள் இந்த சொல்லையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்ததாகவும் அவ்வகராதி கூறுகிறது.
பிரிட்டனில்
அதிக நம்பகத்தன்மை வாய்ந்த இதழ் The
Guardian (துவக்கம் 1821,
கார்டியன்) என்கிறது அறிக்கை. கார்டியனை அடுத்து வாசிக்கப்படும் இதழ்களாக The
Telegraph (1855, டெலிகிராப்), The
Independent (1986,
இன்டிபென்டன்ட்), The Times (1785, டைம்ஸ்), i (2010, ஐ, இன்டிபென்டன்ட் இதழின் சகோதர
இதழ்) இதழ்களை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கார்டியன், டெலிகிராப், டைம்ஸ், இன்டிபென்டன்ட் ஆகிய இதழ்களை நான் படித்துள்ளேன். i என்ற இதழைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு
தற்பொழுதுதான் கிடைத்தது.
யூ.ஏ.ஈ. யின் வளர்ச்சி இன்னும் பிரமிக்க வைக்கும். காரணம் இன்னும் அடுத்த நூறு வருட பெட்ரோல் சேமிப்பு தற்போது நிலுவையில்...
ReplyDeleteபல தகவல்களை அறிந்தேன்... நன்றி ஐயா...
ReplyDeleteஅயலக வாசிப்பில் அரிய தகவல்கள் - தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் - பதிவுக்கு நன்றி
ReplyDeleteஇந்த முறை செய்திகள் அழகாக வந்துள்ளது.
ReplyDeleteஎல்லா செய்திகளும் சுவாரஸ்யம். ஆமை- சிங்கம் காணொளி இருந்தால்பார்க்கலாம். மூன்று வயதுச் சிறுவன் ஷாஓலின் பயிற்சி செய்தி ஆச்சர்யம்.
ReplyDeleteஅயல்நாட்டுச் செய்திகள் பற்றிய சுவையான தொகுப்பு.
ReplyDeleteU.A.E இன் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது
ReplyDeleteநல்லதோர் தொகுப்பு விடுப்பில் இருந்ததால் விடப்பட்ட தளங்கள் அதிகம்
ReplyDeleteஅனைத்துச் செய்திகளும் ஸ்வாரஸ்யம். யுஏஇ விஷயம் அருமை.
ReplyDeleteசிங்கம் ஆமையைச் சாப்பிட போராடி தோற்ற விஷயம் ஸ்வாரஸ்யம்.
மூன்று வயது குழந்தை ஷாவோலின் பயிற்சி வியப்பு. ஆனால் குழந்தை பாவம் என்றும் தோன்றியது.
துளசிதரன், கீதா
Interesting.
ReplyDeleteஅனைத்தும் சிறப்பு. அருமை
ReplyDelete