25 April 2023

சென்று வாருங்கள், ராண்டார் கை

தி இந்து ஆங்கில நாளிதழில் நான் தொடர்ந்துவிரும்பி வாசித்த பத்திகளில் ஒன்று ராண்டார் கை எழுதிவந்த திரைப்படம் தொடர்பான மதிப்புரைகள். அப்பதிவுகள் மூலமாக அவருடைய நினைவாற்றலையும், மொழி ஆழத்தையும் அறிந்து வியந்தேன். தொடர்ந்து அடுத்த வாரம் அவருடைய பத்தி எப்பொழுது வெளியாகும், எந்தப் படமாக இருக்கும், எந்த வகையில் எழுதுவார் என்ற எண்ண ஓட்டங்களோடு காத்திருப்பேன். தி இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து 50 வருடங்களாக நான் படித்துவருவதற்குக்காரணம் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முக்கியக் காரணம். அவருடைய அப்பதிவுகள் மூலமாக பல புதிய ஆங்கிலச்சொற்களைக் கண்டு வியந்ததுண்டு. As there is nobody to compete with him, he is competing with himself (இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் பற்றிய ஒரு பதிவில்), The first scene will bring to you to the edge of the seat (பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம்), She had been to yonder blue (நடிகை பண்டரிபாய் இறந்தபோது என நினைக்கிறேன்), Reams have been written about him (நாகேஷ் பற்றிய பதிவில்), The title of film is spelt with capital V (referring to violence, வன்முறையை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு). இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரே பதிவில் அதிகமான புதிய வார்த்தைகளை நான் பார்த்தது ஸ்ரீவித்யா இறந்தபோது என நினைக்கிறேன். அதனைப் பல முறை படித்தேன், இவருக்காகவும், ஸ்ரீவித்யாவிற்காகவும்.

கட்டுரை வெளிவரும் நாளன்று ராண்டார் கை எழுதியுள்ள மதிப்புரையை முதலில் படித்துவிட்டு, பின்னர்தான் தி இந்து நாளிதழின் முதன்மைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.



நான் பல முறை ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று பத்து கட்டளைகள்(Ten Commandments) ஆங்கிலத்திரைப்படம். அத்திரைப்படம் வெளியான 50ஆவது ஆண்டு நினைவாக அவர் இவ்விதழில் (A Randor Guy, Memorable Milestone, The Hindu, Friday Review, 8.6.2007, p.1) எழுதிய கட்டுரையை அப்போது நான் நேரடியாக 70 நிமிடங்களில் மொழிபெயர்த்தேன், அவருடைய எழுத்தின்மீது உள்ள ஆர்வம் காரணமாக. இன்னும் அதனைப் பாதுகாத்து வருகிறேன். (இந்த மொழியாக்கத்தில் நிறைகுறைகள் இருக்க வாய்ப்புள்ளது), நான் மொழிபெயர்த்த, நினைவில் நிற்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.




7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

8 comments:

  1. தங்களது வாசிப்பு இன்னும் தொடரட்டும்...

    ReplyDelete
  2. அருமை..
    சிறந்த மதிப்பீடு..

    ReplyDelete
  3. ராண்டார்கை மறைவு இழப்புதான்.  அவர் இதுவரை எழுதி கொண்டிருந்தார்?  இப்போதும் எழுதிக் கொண்டிருந்தாரா?  அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை நான் இணையத்தில் PDF ஆகக் கிடைக்கிறதா என்று தேடியதுண்டு.

    உங்கள் ஆர்வம் எங்களுக்குத் தெரிந்ததே.  உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சி பாராட்டத்தக்கது. 

    ReplyDelete
    Replies
    1. // அவர் இதுவரை எழுதி கொண்டிருந்தார்? //

      Correction : "அவர் எதுவரை எழுதி கொண்டிருந்தார்?"

      Delete
    2. கிடைப்பதில்லை ஸ்ரீராம். நானும் தேடியதுண்டு

      கீதா

      Delete
  4. ராண்டார் கை அவர்களின் மறைவு இழப்புதான். அவருடைய கட்டுரையை நீங்கள் மொழிபெயர்த்து அதுவும் 70 நிமிடங்களில் மொழிபெயர்த்திருப்பதற்குப் பாராட்டுகள்.

    கீதா

    ReplyDelete