10 November 2015

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர்,  பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் , காளஹஸ்தீஸ்வரர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

காவிரியாற்றில் தென் கரையில் அமைந்துள்ள இக்கோயில், பெரிய மடத்திற்கு சற்று முன்னதாக உள்ளது. கல்லூரி நாள்களில் (1975-79) இக்கோயிலைக் கடந்துதான் நண்பர்கள் குழாமாகக் கல்லூரிக்குச் செல்வோம். ஆனால் அப்போது இக்கோயிலைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 

காளத்தி என்றால் நம் நினைவிற்கு வருவது தேவார மூவரால் பாடப்பெற்ற, கண்ணப்பர் வழிபட்டு பேறுபெற்ற, திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தியாகும். அவ்வாறான பெயரில் கும்பகோணத்தில் ஒரு கோயில் உள்ளது என்பதை, விக்கிபீடியாவிற்காகக் கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது அறிந்தேன். அந்த வாய்ப்பு கும்பாபிஷேகம் காண உதவியது. 
அழகான ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும் ஒரு மண்டபம் இருந்தது. மண்டப முகப்பில் நடராஜர் சிலை மிகவும் அழகாக அமைந்திருந்தது. 

உள்ளே சென்றதும் ஒரு மண்டபம் இருந்தது. மண்டப முகப்பில் நடராஜர் சிலை மிகவும் அழகாக அமைந்திருந்தது. கொடி மரத்தைக் கடந்து உள்ளே மூலவர் கருவறையில் இருந்த காளஹஸ்தீஸ்வரரைக் கண்டோம், தரிசித்தோம். 

தொடர்ந்து இறைவியின் சன்னதிக்குச் சென்றோம். ஞானாம்பிகை அம்மனை தரிசித்தோம். திருச்சுற்றில் வலம் வரும்போது கும்பாபிஷேகம் ஆன கருவறை விமானங்களைக் கண்டோம். இக்கோயிலுக்கு காமாட்சி ஜோசியர் தெருவின் வழியாகவும் வரலாம். 




கோயிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00-இரவு 8.30 


வரும் வழியில் அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன பகவத் விநாயகர் கோயிலுக்குச் சென்றோம். இங்குள்ள பகவ ரிஷியை புத்தர் என்று வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை எனது பௌத்த ஆய்வின்போது படித்துள்ளேன். அந்நிலையில் இக்கோயிலுக்கு முன்னரே பல முறை ஆய்விற்காக வந்துள்ளேன். விநாயகரையும் பகவரையும் பார்த்துவிட்டு, அடுத்த கோயிலுக்குக் கிளம்பினோம்.



கும்பகோணத்தில் யானையடி என்று பெயர்பெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள யானையடி அய்யனார் கோயில் நாங்கள் சென்ற அடுத்த கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை எதிரே அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்தது. யாகசாலையைப்பார்த்துவிட்டு எதிரே உள்ள அய்யனார் கோயிலுக்கு வந்தோம். மூலவராக அய்யனார் பூரணை புஷ்கலையுடன் உள்ளார். கருவறையின் வெளிப்புறம் வலப்புறத்தில் ஐயப்பன் சன்னதி சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. தரிசனத்தை முடித்துவிட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம். 


--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு மகிழ்ச்சியான செய்தி
தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம்
நவம்பர் 1, 2015 முதல் என்னைப் பற்றிய பங்களிப்பாளர் அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் வெளியாகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிமுகமானது தொடர்ந்து சில நாள்களுக்கு முதல் பக்கத்தில் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன். 
--------------------------------------------------------------------------

45 comments:

  1. தீபாவளி அன்று அதிகாலையை ஆண்டவர் தரிசனத்துடன் ஆரம்பிக்கிறேன்! நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து மற்றொரு கோயில் செல்வோம். வருகைக்கு நன்றி.

      Delete
  2. இனிய தரிசனம் ஐயா... நன்றி...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. தாய்மண்ணிலிருந்து நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  5. இந்த மாதம் கும்பகோணம் வருகிறேன்
    நிச்சயம் இந்தக் கோவிலையும் தரிசித்து வருவேன்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தீர்த்தவாரி சைவக்கோயில்கள் 12, தீர்த்தவாரி வைணவக் கோயில்கள் 5. நான் சென்ற பெரும்பாலான கோயில்களுக்கு நம் நண்பர்களை பதிவு மூலமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளேன். தங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

      Delete
  6. உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

    தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம்//

    தங்கள் தொடர் உழைப்பு
    அங்கீகரிக்கப் பட்டிருப்பது
    மகிழ்வளிக்கிறது
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற நண்பர்களால்தான் இது சாத்தியமாயிற்று. நன்றி.

      Delete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் தங்களைப்பற்றிய அறிமுகம் தோன்றுவது குறித்து மகிழ்வும் பெருமையும் மனதில் தோன்றுகிறது! தங்களின் சாதனைகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நெடுநாள் கழித்துக் கண்டதில் மகிழ்ச்சி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துடன் விக்கிபீடியாவில் பயணம் தொடரும். நன்றி.

      Delete
  9. காளத்திநாதர் கோயில் தரிசனம் செய்து மகிழ்ந்தேன் !பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அடுத்து கம்பட்ட விஸ்வநாதர் கோயில் அழைத்துச்செல்லவுள்ளேன். நன்றி.

      Delete
  10. வணக்கம்
    ஐயா

    பதிவை அசத்தி விட்டீர்கள்....
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோர் தரும் ஊக்கமே இதற்குக் காரணம். நன்றி.

      Delete
  11. அறியாத சில கோயில்கள் பற்றி அறிந்து கொண்டோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்த, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளாத பிற கோயில்களைப் பற்றிய பதிவுகள் தொடரும். நன்றி.

      Delete
  12. வணக்கம் ஐயா !

    சிறப்பான தகவல்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் காணக் கிடைக்காத இடங்களை அழகான காட்சிப் படங்களுடன் பதிவிட்டீர் நன்றி இறையருள் நல்கட்டும் !

    விக்கிபீடியாவில் தங்கள் சேவை அளப்பரியது அங்கும் உங்களை முதல் பக்கத்தில் காண்பதை இட்டும் நெஞ்சம் மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

    இனிய தீபத்திருநாள் வாழ்த்தும் உரித்தாகட்டும் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவ நண்பர்களின் ஊக்கத்தால் இது சாத்தியமானது. நன்றி.

      Delete
  13. வணக்கம் முனைவரே.. அழகான புகைப்படங்கள் வழக்கம்போல தெளிவான விளக்கவுரைகளுடன் நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    விக்கிப்பீடியாவை அலங்கரிக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை சென்ற கோயில்களைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எனது ஆவலே இதற்குக் காரணம். விக்கிபீடியா சாதனை உங்களைப் போன்றோரால்தான். நன்றி.

      Delete
  14. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  16. உங்கள் மூலம் நானும் கோயில்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது ஒரு கொடை போல தொடருங்கள் பல ஆலயங்கள் பற்றி அறிய ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை ஒரே நாளில் 9 கோயில்களின் குடமுழுக்கு கண்டது இன்னும் நினைவில் நிற்கிறது. இவ்வாறான அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம். நன்றி.

      Delete
  17. தங்கள் சிரத்தையும் உழைப்பும் தேடலும் பிரமிக்கவைக்கின்றன. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குறிப்பிட்ட துறையில் இலக்கு வைத்து சென்று கொண்டேயிருக்கும்போது சாதிக்கலாம் என்பதை அனுபவம் உணர்த்துகிறது. நன்றி.

      Delete
  18. நான் 11, 12 மற்றும் இரண்டாடுகள் கும்பகோனத்தில் படித்தேன்.பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு சென்றுள்ளேன்.ஆனால் அங்குள்ள கோவிகளின் தனித்துவம் தெரியாமலேயே இருந்துள்ளேன். இந்த பதிவுகளைப்பார்க்கும்போது தான் தெரிகிறது. நேரிலேயே கும்பாபிசேகம் கண்டதுபோல் இருந்தது ஐயா,நன்றி

    ReplyDelete
  19. பதிவில் கூறியபடி இக்கோயில் வழியாகத்தான் நான் கல்லூரிக்குச் சென்றேன். ஆனால் இப்போதுதான் கோயிலைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. மிகவும் அழகான படங்களுடன் கூடிய அற்புதமான தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி. நன்றி. மகாமகத்திற்கு முன்பாக நண்பர்களை பதிவுகளின் மூலமாக அனைத்து தீர்த்தவாரிக் கோயில்களுக்கும் அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது தாங்களும் வர வேண்டுகிறேன்.

      Delete
  21. //தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம்.

    நவம்பர் 1, 2015 முதல் என்னைப் பற்றிய பங்களிப்பாளர் அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் வெளியாகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிமுகமானது தொடர்ந்து சில நாள்களுக்கு முதல் பக்கத்தில் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன். //

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மிகப்பெரிய சாதனைதான். :)

    இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    மென்மேலும் உச்ச நிலையைத் தாங்கள் எட்ட வேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன், முனைவர் ஐயா.

    ReplyDelete
  22. வலையுலகில் என்னை ஈர்த்தனவற்றில் உங்களுடைய எழுத்து நடையும், தொழில்நுட்பமும் முக்கியமானவையாகும். இவை போன்றவவையே நான் இவ்வாறாக ஒரு சிறிய சாதனை படைக்க உதவியது. தங்களுடைய வாழ்த்துக்களுடன் உச்ச நிலையைத் தொடுவேன். நன்றி.

    ReplyDelete
  23. மேலும் சில கோவில்கள் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா.

    தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  24. உங்கள் தயவில் ஆலய தரிசனங்கள்,குட முழுக்குக் காட்சிகள் எல்லாம் கிடைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. நான் சென்ற, குடமுழுக்கு கண்ட, கோயில்களில் இன்னும் இரு கோயில்களைப் பற்றிய பதிவுகளை அடுத்தடுத்து பகிரவுள்ளேன். நன்றி.

      Delete
  25. இனிய முனைவருக்கு வணக்கம்
    தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
    முகவரி -
    http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    12.11.2015
    U.A.E. Time: 03.34 pm

    ReplyDelete