12 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் மகாமகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமகக்குளத்தில் கூடும் அழகினைப் பார்க்கும்போது அவர்களுடைய பக்தியையும், நமது பண்பாட்டையும் உணரமுடியும்.
அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் குளத்தில் இவ்வாறாக புனித நீராடல் என்பது மகாமகத்திற்கே உரித்தானதாகும். ஒவ்வொரு 12 ஆண்டும் நடைபெறும் இவ்விழாவினைக் காண்பதையும், கலந்துகொள்வதையும் பெரும்பேறாகப் பலர் கருதுகின்றனர். ஒவ்வொரு மகாமகத்தின்போதும் கும்பகோணம் புதுப்பொலிவு பெறுவதைக் காணமுடியும். மகாமகப்பணிகள் நடைபெற்று வரும் கும்பகோணம் நகருக்கு மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். கும்பகோணம் நகரம் மகாமகத்திற்கு ஆயத்தமாகிவரும் இவ்வேளையில் மகாமகக்குளத்தினைச் சுற்றி நான்கு கரைகளிலும் அமைந்துள்ள 16 கோயில்களுக்குச் செல்வோம்.
மகாமகக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களை சோடச மண்டபங்கள், சோடசக் கோயில்கள் என்று கூறுகின்றனர். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும். இந்நிலையில் இம்மண்டபங்களில் உள்ள மூலவரான லிங்கத்திருமேனியை சோடச லிங்கங்கங்கள் என்றழைக்கின்றனர். விஜயரகுநாத மன்னர் மனமுவந்து அளித்த 16 வகையான தானங்களின் வாயிலாக இந்த 16 மண்டபங்கள் கட்டப்பட்டது. இந்த மண்டபங்கள் ஒவ்வொன்றும் பெரிய கோயில்களில் காணப்படுகின்ற சிறிய சன்னதியைப் போல உள்ளன. சிறிய கருவறையுடன் கூடிய விமானமும் அதற்கு முன்னால் ஒரு மண்டபமும் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. கருவறையில் மூலவராக லிங்கத்திருமேனி காணப்படுகிறது. ஒவ்வொரு மூலவருக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.
|
காசி விஸ்வநாதர் கோயில், முகுந்தேஸ்வரர் மண்டபம் (2), பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் (1) |
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபம் முதல் மண்டபம் ஆகும். இது பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் எனப்படுகிறது. வட கரையில் இம்மண்டபத்தில் தொடங்கி ஐந்து மண்டபங்கள் உள்ளன. இரண்டாவதாக உள்ளது முகுந்தேஸ்வரர் மண்டபமாகும்.
|
முகுந்தேஸ்வரர் மண்டபம் (2), பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் (1) |
|
(1) பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் |
இரண்டாவது மண்டபமான முகுந்தேஸ்வரர் மண்டபம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. 16 மண்டபங்களில் கருங்கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் உள்ளவை இந்த மண்டபமேயாகும். தூண்களிலும் அழகான சிற்பங்கள் உள்ளன.
|
(2) முகுந்தேஸ்வரர் மண்டபம்
|
முகுந்தேஸ்வரர் மண்டபத்தை அடுத்து தானேஸ்வரர், இடபேஸ்வரர், பாணேஸ்வரர் மண்டபங்கள் உள்ளன.
|
(3) தானேஸ்வரர் மண்டபம் |
|
(4) இடபேஸ்வரர் மண்டபம் |
|
(5) பாணேஸ்வரர் மண்டபம்
|
ஆறாவது மண்டபமான கோணேஸ்வரர் மண்டபம் வடக்குக் கரையும், கிழக்குக்கரையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. கிழக்குக்கரையில் அடுத்தடுத்து பக்திகேஸ்வரர் மற்றும் பைரவேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன. இக்கரையின் எதிரே அபிமுகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
|
(6) கோணேஸ்வரர் மண்டபம் |
|
(7) பக்திகேஸ்வரர் மண்டபம் |
|
(8) பைரவேஸ்வரர் மண்டபம்
|
ஒன்பதாவது மண்டபமான அகஸ்தீஸ்வரர் மண்டபம் கிழக்குக் கரையும் தெற்குக்கரையும் சந்திக்கும் சந்திப்பில் உள்ளது. அதையடுத்து, வியாகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன.
|
(9) அகஸ்தீஸ்வரர் மண்டபம் |
|
(10) வியாகேஸ்வரர் மண்டபம் |
|
(11) உமாபாகேஸ்வரர் மண்டபம் |
|
(12) நிருதேஸ்வரர் மண்டபம் |
13ஆது மண்டபமான பிரம்மேஸ்வரர் மண்டபம் தெற்குக் கரையும், மேற்குக்கரையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்குக்கரையில் அடுத்தடுத்து கங்காதேஸ்வரர், முக்தேஸ்வரர், ஷேத்திரபாலேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன.
|
(13) பிரம்மேஸ்வரர் மண்டபம் |
|
(14) கங்காதேஸ்வரர் மண்டபம் |
|
(15) முக்தேஸ்வரர் மண்டபம் |
|
(16) ஷேத்திரபாலேஸ்வரர் மண்டபம் |
மகாமகக்குளத்த்தின் வட கரையில் தொடங்கி ஒரு சுற்று சுற்றி நிறைவு பெறும்போது 16 மண்டபங்களையும் அதிலுள்ள இறைவனையும் காணலாம். இவ்வாறு சுற்ற ஆரம்பிக்கும்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் இரு கோயில்களான காசி விஸ்வநாதர் கோயிலையும், அபிமுகேஸ்வரர் கோயிலையும் காணலாம். பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள இவ்வினிய வேளையில் கும்பகோணத்திற்குச் செல்வோம், பிற கோயில்களுடன் மகாமகக்குள சோடச மண்டபக்கோயில்களுக்கும் செல்வோம்.
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
சோடச மண்டபங்களைக் காணச் சென்றபோது மகாமகக்குளத்தில் மகாமகத்தை முன்னிட்டு மும்முரமாக பணிகள் நடைபெற்று வருவதைக் காணமுடிந்தது. இதோ சில புகைப்படங்கள்....
-------------------------------------------------------------------------------
it is nice to see fine pics of mamhatank. if possible kindly add the info about these 16 temples. thank you for your tireless work.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இதழில் வெளிவந்தமைக்கு நன்றி ஐயா.ஒவ்வொரு சிற்ப வேலைப்பாடுகளையும் பார்க்கும் போது பிரமிக்கவைக்கிறது.. ஆலயம் பற்றி சிறப்பாக சொல்லிமைக்கு நன்றி.த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கோவில் நகரம் என்று கும்பகோணத்தை சொல்லலாம் போலிருக்கே :)
ReplyDelete. while I was in Kumbakonam and used to walk around the mahamaha tank. I remembered the names of sivalingam. An excellent information
ReplyDelete. while I was in Kumbakonam and used to walk around the mahamaha tank. I remembered the names of sivalingam. An excellent information
ReplyDeleteதக்க தருணத்தில் அழகான படங்களுடன் இனிய பதிவு..
ReplyDeleteமகிழ்ச்சி.. வாழ்க நலம்..
மனதில் மகிழ்ச்சி அது தங்களது பதிவைக் காண்பதால் பிறக்கும் எழுச்சி!
ReplyDeleteஅருமை! அழகு!
நன்றி அய்யா!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
16 மண்டபங்களையும் அறிய தந்தமைக்கு நன்றி. தங்களின் உழைப்பு இதில் தெரிகிறது. பத்திரிக்கை.காம் இணையத்தில் வெளியானதற்கு வாழ்த்துகளும். பகிர்ந்ததற்கு நன்றியும்.
ReplyDeleteத ம 5
அழகிய புகைப்படங்கள். அருமையான விவரங்கள்.
ReplyDeleteதம +1
அழகிய புகைப்படங்களுடன் மகா மகம் பற்றிய அரிய விளக்கமும் தந்த முனைவருக்கு நன்றி மென்மேலும் சாதனை படைக்க எமது வாழ்த்துகளும்....
ReplyDeleteதமிழ் மணம் 7
அருமை ஐயா... விளக்கங்களுக்கு நன்றி...
ReplyDeleteஅழகான படங்கள், விவரங்கள் எல்லாம் மிக அருமை.
ReplyDeleteகோயில் உலாவில் இக் கட்டுரை வந்ததற்கு வாழ்த்துக்கள்.
2004ல் நடந்த மகாமகம் கழிந்து சிலநாட்களுக்குப் பின் போனோம் மண்டபங்கள் எல்லாம் ஒரு தூரப் பார்வையில் கண்டோம் அது பற்றிய விளக்கமான புகைப்படங்களுடன் ஆன பதிவுக்கு நன்றி
ReplyDelete16 மண்டபங்களைக் குறித்தத்தகவல்கள் பிறதகவல்கள் என்று படங்களுடன் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா! பத்திரிக்கை.காமில் வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteவலைப் பூவின் முகப்பு அருமை ஐயா
ReplyDeleteதம +1
சிறப்பான தகவல்கள். பதினாறு மண்டபங்களையும் உங்கள் பதிவின் வழியே பார்த்து ரசித்தேன். நன்றி.
ReplyDeleteபடங்களும் பதிவும் சிறப்பே! த ம 12
ReplyDeleteஅருமை,அருமை ஐயா
ReplyDeleteஅறியாத பல அறிந்து கொண்டேன்
ReplyDeleteத ம +1
'மகாமகக்குள சோடச மண்டபங்கள்' என்ற தலைப்பில் அழகிய படங்களுடன் அருமையான பக்தி உணர்வூட்டும் சிறந்த வரலாற்றுப் பதிவு.
ReplyDeleteஇந்தப் பக்கம் பாருங்க...
http://ootru.yarlsoft.com/
புகைப்படங்கள் வழியே
ReplyDeleteகும்பகோணம் மகாமக பயணம் செய்தது போன்ற
அழகிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
அழகான படங்களும்... அருமையான பகிர்வும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா..
மிக அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. கும்பகோணம் மஹாமகக்குளத்திற்குள் இறங்கியது போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete//பத்திரிக்கை.காம் இதழில் மகாமக ஸ்பெஷல் : கும்பகோணம் கோயில் உலா என்ற தலைப்பில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. //
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
படங்களும் விளக்கங்களும் அருமை. கும்பகோணத்திற்கு பலமுறை சென்றும் இந்த சோடசக் கோயில்களைப் பார்த்ததில்லை. அவைகளை அடுத்தமுறை அங்கு செல்லும்போது பார்க்க இருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவிரிவாக தந்துள்ளீர்கள்.
ReplyDeleteவிரிவாக தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅழகான படங்களும்... அருமையான பகிர்வும்..
ReplyDeleteசார் உங்கள் பதிவுகளை என் வலைப்பூவில் பதிவிடலாமா
ReplyDelete