09 December 2017

முனைவர் வீ.ஜெயபால் : கோயில் உலா 2014-2017

2014 முதல் முனைவர் வீ.ஜெயபால் (9443975920) அவர்களுடைய தலைமையில் கோயில் உலா சென்று வருகிறோம். தலப்பயணத்தின்போது இறைவனின் பெருமைகளையும், தலங்களின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லி வருகிறார். இவர் மூலமாக தேவாரப்பாடல்/மங்களாசாசனம் பெற்ற கோயில்களையும், திருப்புகழ் தலங்களையும், ஆங்காங்கே வைப்புத்தலங்களையும், அம்மன் கோயில்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கின்றது. இவர் அழைத்துச்சென்ற தலங்களின் பட்டியலை இப்பதிவில் காணலாம். அந்தந்த தலைப்பில் சொடுக்கினால் எங்களது அனுபவங்களைக் காணலாம்.

  • உலாவின்போது காலை 6.30 மணிவாக்கில் தஞ்சாவூரிலிருந்து கிளம்புவோம். 
  • முனைவர் வீ. ஜெயபால் அவர்கள் வழிநடத்திச் செல்வார்.
  • வருவோர் அனைவரும் ஆர்வமாகக் கலந்துகொள்வோம்.
  • முதல் கோயிலில் அவரோடு அனைவரும் சேர்ந்து சிவபுராணம் ஓதுவோம். 
  • இறைவனுக்கு ஒரு மாலை, இறைவிக்கு ஒரு மாலை மற்றும் ஆராதனைப் பொருள்களை வாங்கி வைத்திருப்பார்.
  • நடுப்பகல் 12.00 முதல் மாலை 4.00 வரை பெரும்பாலான கோயில்கள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலையில் அந்நேரத்தில் ஓய்வெடுக்கும்படி கூறுவார்.
  • ஒரே நாளில் 15 கோயில்கள் சென்ற அனுபவம் உண்டு.
  • பயணத்தின்போது உணவு, தேநீர், சிற்றுண்டிக்கு முன்கூட்டியே ஏற்பாடு.  
  • பயண நிறைவில் அனுபவம் குறித்துப் பகிர்வார். 
  • பயணச்செலவை அனைவரும் பகிர்ந்து தருவோம். மேலதிகமாகும் செலவினை அவரே மனமுவந்து ஏற்பார், உடன் வரும் அன்பர்களுக்குச் சுமை கூடக்கூடாது என்பதற்காக.
ஜனவரி 2017 : திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்

நவம்பர் 2014 :  அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் கோயில்


நவம்பர் 2014 உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

நவம்பர் 2016 : கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்

நவம்பர் 2016 : மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்

ஜனவரி 2017 : திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவநாயனார் கோயில்
  
நவம்பர் 2016 : மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்

திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர்
மருதாநல்லூர் கருக்குடிநாதர் கோயில்
சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
அரிசிற்கரைப்புத்தூர் சுவர்ணபுரீஸ்வரர் கோயில்
திருநரையூர்ச்சித்தீஸ்வரம் சித்தநாதர் கோயில்
திருப்பந்துறை சிவாநந்தேஸ்வரர் கோயில்
வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
திருவீழிமிழலை கோயில்
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் 
கருவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
நாலூர் மயானம் பலாசவநாதர் கோயில்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்

24 சூன் 2017 (10 : தேவாரம் 9, மங்களாசாசனம் 1)
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
நாகப்பட்டினம் காயரோகணேசுவரர் கோயில்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்
திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில்
தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்
கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
வேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
திருக்கடையூர்மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)

28 ஜனவரி 2017 (4 : தேவாரம் 4)

திருநெய்வெணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில் 
திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் 
திரு இடையார் கோயில்

24 டிசம்பர் 2016 (11 : தேவாரம் 8, மங்களாசாசனம் 3)
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
வைகல் வைகல்நாதர் கோயில்
திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில்
கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் 
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (2ஆம் முறை)
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்
தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)
நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)
திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)

26 நவம்பர் 2016 (12 : தேவாரம் 8, மங்களாசாசனம் 4)
மயூரநாதர் கோயில்
திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்
கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் 
நனிப்பள்ளி நற்றுணையப்பர் கோயில்
மேலப்பெரும்பள்ளம் வலம்புர நாதர் கோயில்
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)
திருநகரி கல்யாண அரங்கநாதசுவாமி கோயில் (மங்களாசாசனம்) 
திருவாலி லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்)
திருத்தேவனார்தொகை கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் (மங்களாசாசனம்) 

13 மார்ச் 2016  (11 : தேவாரம் 10, மங்களாசாசனம் 1)

திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் கோயில்
திருக்கோடிக்கா கோடீஸ்வரர் கோயில்
வேள்விக்குடி மணவாளேஸ்வரர் கோயில்
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ஐராவதேஸ்வரர் கோயில்
திருமணஞ்சேரி (கீழைத்திருமணஞ்சேரி) கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
குத்தாலம் (திருத்துருத்திசொன்னவாறு அறிவார் கோயில்
கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேஸ்வரர் கோயில்
அன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
நீடூர் சோமநாதேஸ்வரர் கோயில்
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (2ஆம் முறை)
உப்பிலியப்பன் கோயில் (மங்களாசாசனம்)

பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் கோயில்
பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேஸ்வரர் கோயில்
திருவாழ்கொளிப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்
திருக்குரக்குக்கா குந்தளேஸ்வரர் கோயில்
திருக்கருப்பறியலூர் குற்றம்பொறுத்தநாதர் கோயில்
திருப்புன்கூர் சிவலோகநாதர்
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
வேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் (மங்களாசாசனம்)

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் 
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்
ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
பழையாறை சோமநாதர் கோயில்
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்
நந்திபுர விண்ணகரம் (நாதன்கோயில்) (மங்களாசாசனம்)
திருஆதனூர் ஆண்டளக்கும்மய்யன் கோயில் (மங்களாசாசனம்)
காவலூர் முருகன் கோயில்
பஞ்சவன்மாதேவீச்சரம் பள்ளிப்படை கோயில்

கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில்
திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
திருஆலம்பொழில் வடமூலேஸ்வரர் கோயில்
திருக்காட்டுப்பள்ளி (மேலைத்திருக்காட்டுப்பள்ளி) அக்னீஸ்வரர் கோயில்
திருவானைக்காவல்  ஜம்புகேஸ்வரர் கோயில்
சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்
திருவெறும்பியூர் எறும்பீஸ்வரர் கோயில்
திருப்பேர்நகர் அப்பாலரங்கநாதன் கோயில் (மங்களாசாசனம்)

கடம்பந்துறை கடம்பவனேஸ்வரர் கோயில்
ஐயர்மலை ரத்னகிரீஸ்வரர் கோயில்
திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்
கற்குடி உச்சிநாதர் கோயில்
முக்கீஸ்வரம் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
உறையூர் அழகியமணவாளன் கோயில் (மங்களாசாசனம்)

ஆப்பாடி பாலுகந்தநாதர் கோயில்
சேய்ஞலூர் சத்யகிரீஸ்வரர் கோயில்
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
ஓமாம்புலியூர் பிரணவபுரீஸ்வரர் கோயில்
கானாட்டுமுள்ளூர் பதஞ்சலிநாதர் கோயில்
திருநாரையூர் சௌந்தரநாதர் கோயில்
திருக்குருகாவூர் வெள்ளிடைஈசர் கோயில்
திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோயில்
காழிச்சீம விண்ணகரம் (திருவிக்கிரமன் கோயில்) (மங்களாசாசனம்)

2014 முதல் தொடங்கிய உலா தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவருடன் பயணிக்கும் நேரத்தில் அந்தந்த கோயில்களைப் பற்றி புகைப்படங்களை எடுத்து அவ்வப்போது வலைப்பூவில் பதிந்துவருகிறேன். அவரைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பக்கத்தைக் காண அழைக்கிறேன்.

முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு
  • பிறப்பு 4 டிசம்பர் 1955
  • பெற்றோர் : திரு பி.வீரப்பச்செட்டியார்-திருமதி வீ.இராமாயி அம்மாள்
  • திருமணம் 15 ஜுலை 1983, மனைவி திருமதி கலாவதி
  • மக்கட்பேறு : மூன்று மகன்கள் : நவக்கோடி நாராயணன், மதுசூதனன், வேதராமன்
  • முதுகலை பொருளியல் (1990), முதுகலை வரலாறு (1996)
  • சிறப்புக்கல்வி கல்வியியல் (1986), நூலகக்கல்வி எம்எல்ஐஎஸ் (1993)
  • சோதிடவியல் இளங்கலை (2009), முதுகலை (2011)
  • அக்குபங்சர் (2012)
  • முனைவர் (2005)
  • திருமுறைப்பயிற்சி (களிமேடு சிவத்திரு திருநாவுக்கரசு ஓதுவார் அவர்களிடம்)
  • தமிழ்முறைச்சடங்குப் பயிற்சி (குன்றக்குடி ஆதீனகர்த்தரால் பயிற்சியளிக்கப்பட்ட வழிபாட்டியல்)
  • ஏறத்தாழ 4000க்கும் மேலான சொற்பொழிவுகள் 
  • பதிப்பித்த/வெளியிட்ட நூல்கள் : 6
  • வெளியான கட்டுரைகள் : 20+
  • 1980 முதல் அன்பர்களுடன் திருத்தல வழிபாடு , 1981 முதல் 1998 வரை சபரிமலை 
  • பெற்ற தீட்சைகள் : சிவ தீட்சை, சமய தீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆச்சாரிய அபிஷேக தீட்சை
  • விருதுகள் : சித்தாந்த ரத்தினம், வித்தாந்த வித்யாநிதி, சிவநெறிச்செம்ல், அருள்நெறி ஆசான், மனிதருள் மாமணி, அறப்பணிச்செம்மல், சித்தாந்த வித்தகர், ஜோதிட ரத்னா, சித்தாந்த செம்மல், சைவ சித்தாந்த மணி, திருமுறை நெறிச்செல்வர், வாழ்நாள் சாதனையாளர், ஞானியார், செந்தமிழ்ச் செம்மல், திருமுறைத் திலகம்
  • சமயத்தொண்டுகள் : திருநீற்று நெறி வளர்த்தல், சமய நிகழ்ச்சிகளில் உரையாற்றல், சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்துதல், திருமந்திரம், திருவாசகம், பெரிய புராணம் சொற்பொழிவுகள் நடத்துதல், திருவாசகம் முற்றோதல், தல யாத்திரை, விரும்பும் அடியார்கள் இல்லத்தில் சிவ பூசை செய்தல், தெய்வத்திருமுறை நெறியில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருமணங்களை நடத்திவைத்தல், தகுதியுள்ள சைவ அன்பர்களுக்கு  சிவ தீட்சை அளித்தல்
  • தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய (அம்மையப்பா அறக்கட்டளை) பணிகள் 
அன்னாரின் தொண்டு சிறக்கவும், அவருடைய அருட்பணிகள் மென்மேலும் தொடரவும் என் சார்பாகவும், நண்பர்கள் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த மகாமகத்தின்போதும், விக்கிபீடியாவின் பதிவிற்காகவும் மேலும் பல கோயில்களுக்குச் சென்றுவந்தபோதிலும், அன்பர்களுடன் பயணிப்பது வித்தியமாசமான அனுபவத்தைத் தருவதை உணர்கிறேன்.

11 comments:

  1. அடேயப்பா... வாழக அவர் தொண்டு. தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. இதுவரை அறிந்திராத ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ள நேரிட்டது. அவருடைய படிப்புகளும், தீட்சை விவரங்களும் மலைக்க வைக்கின்றன. அவருடைய நற்செயல்கள் தொடருக.

    ReplyDelete
  3. ஆன்மீகப்பயணம் கண்டு மலைப்பாக இருக்கிறது வாழ்க நலம்.

    ReplyDelete
  4. முனைவர் வீ.ஜெயபால் ஐயா அவர்களுக்கு வணக்கம்..
    அவர்தமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அன்னை அபிராமவல்லி வாழ்த்துவளாக!..

    ReplyDelete
  5. மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  6. முனைவர் வீ ஜெயகோபால் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இறைவன் எல்லா நன்மைகளையும் அருளட்டும். மாபெரும் சேவை!! பட்டியலைக் கண்டு மலைப்பு!! உங்களுக்கும் நல்ல சுவையான ஆன்மீகப் பயணமாக இருந்திருக்கும் இல்லையா ஐயா..

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. சிறப்பு சார் அவரை பற்றி படித்தேன் அறிந்தேன் நன்றி
    மேலும் உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அவரது தொண்டு சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. விருப்பமுள்ளோருடன் குழுவாகப் பயணிப்பதே ஒரு நல்ல அனுபவம்தான் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. மிகச் சிறப்பு . செல்லும் தலங்களின் சிறப்புக்களை விரிவாக ப்ளாக் இல் வெளியிடுங்கள்

    ReplyDelete
  11. அருமை!வளர்க அவர் தொண்டு

    ReplyDelete