16 November 2019

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம், புதுக்கோட்டை : 12-13, அக்டோபர் 2019

அண்மையில் புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு விக்கிபீடியா தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அடுத்தடுத்த பிற நிகழ்வுகளில் கலந்துகொண்ட நிலையிலும் விக்கிபீடியா நடத்துகின்ற வேங்கைத்திட்டம் மற்றும் ஆசிய மாதம் ஆகியவற்றின் போட்டிகளில் கலந்துகொள்வதாலும், இப்பதிவு வெளியிட சற்று தாமதமானது. 


பணிச்சுமை காரணமாக முழுமையாக முகாமில் கலந்துகொள்ள இயலா நிலை. முகாமின் இரண்டாம் நாளன்று (13 அக்டோபர் 2019) நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் சென்றிருந்தோம். வலைப்பூவில் எழுதும் பல நண்பர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இம்முகாம் தொடர்பாக திரு முத்துநிலவன், திரு திண்டுக்கல் தனபாலன், முனைவர் ஆ.கோவிந்தராஜுமுனைவர் அ.பாண்டியன் உள்ளிட்டோர்  பதிந்துள்ளனர். 

விக்கிபீடியாவில் ஒரு பதிவினை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை எளிய முறையில் பகிர்ந்துகொண்டேன். நான்முதலில் முகநூல் மற்றும் மின்னஞ்சலுக்குத் தனியாக கணக்கு தொடங்கும் முறைப்படி பயனர் கணக்கு தொடங்குதல், புதிய பதிவினை ஆரம்பித்தல், சொற்றொடரை அமைத்தல், உரிய மேற்கோளைத் தருதல், இணையத்திலிருந்து தரவுகளைத் திரட்டுதல், வந்த தலைப்பே வராமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளல் உள்ளிட்ட பல உத்திகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்பொழுதே புதிய பதிவாக, கணினி தமிழ்ச்சங்க நிறுவுநரும், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருமான திரு நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி ஒரு புதிய பதிவினை தொடங்கிக் காண்பித்தேன். (அந்தப் பதிவினை பின்னர் மேம்படுத்தி எழுதிக்கொண்டு வந்த நிலையில், அது விக்கிபீடியாவிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. அதற்கான காரணத்தை விக்கியின் சக நண்பர்கள் தெரிவித்து கைகொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மறுபடியும் அவரைப் பற்றி எழுதவுள்ளேன்) விக்கிபீடியாவில் எழுதுவது மிகவும் எளிமையானது என்பதை உரிய உதாரணங்களுடன் கூறினேன். நான் எதிர்கொண்ட சில சிக்கல்களையும் எடுத்துரைத்தேன். திரு என்னாரெஸ் பெரியார் அவர்களும் என்னுடன் இணைந்துகொண்டார். நான் சொல்ல மறந்த, விடுபட்ட முக்கியமான கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். கலந்துகொண்ட பல நண்பர்கள் மிகவும் எளிமையானதாக இருந்ததாகக் கூறினர். திரு நீச்சல்காரன் அவர்களைக் கண்டதில் மகிழ்ச்சி.  
இவ்வகையான முன்னெடுப்புகளுக்கு என்றும் என்னுடைய ஆதரவு என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, எனக்கு வாய்ப்பு தந்த கணினித் தமிழ்ச்சங்கத்தாருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  









இவ்விழாவில் வீதி50 நூலினை (நா.முத்துநிலவன், மேன்மை வெளியீடு, சென்னை, 2018, ரூ.110) மேடையில், திரு நா.அருள்குமரன் அவர்கள் முன்னிலையில் திரு ஆதவன் தீட்சண்யா அவர்களிடமிருந்து பெற்றேன். கவிதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் திரு நா.முத்துநிலவன் அவர்களால் மிகவும் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வீதி நிகழ்வினை தொடர்ந்து  நடத்திவருகின்ற புதுக்கோட்டை கலை இலக்கியக் களத்தின் பணி பாராட்டுக்குரியதாகும். அமைப்பல்லாத அமைப்பு என்று கூறிக்கொள்ளும் வீதியின் நண்பர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து இதனை மேற்கொள்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.  வீதியின் பயணம் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.



இவ்வகையான முகாம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் என்னுடைய விக்கிபீடியா பணி இந்நூலில் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன். ".......இதில் மாணவராக வந்து பயிற்சியெடுத்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பின்னால் உதவிப்பதிவாளராகி பணி நிறைவு பெற்ற முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதி அதற்காக விருதும் பெற்று, பின்னர் நடந்த பயிற்சியில் ஆசிரியராகப் பரிணமித்ததும் நடந்தது". உண்மைதான். அதிகம் சிரமம் என முதல் வகுப்பில் நினைத்த என்னை வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினர் இதுபோன்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.  

11 comments:

  1. சிறப்பான தகவல்கள்.  விக்கியில் எழுத நிறைய பணியாற்றவேண்டும்.   அந்த வகையிலும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கிடைத்த நேரத்தை அருமையாக பயன்படுத்தி விளக்கி சொல்லி விட்டீர்கள் ஐயா... நன்றி...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரிய முயற்சி

    ReplyDelete
  4. அவர்கள் 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதி அதற்காக விருதும் பெற்று, பின்னர் நடந்த பயிற்சியில் ஆசிரியராகப் பரிணமித்ததும் நடந்தது"..............அடுத்த 33 வருடங்கள் ( ஒரு தலைமுறையின் கால அளவு) நிச்சயம் உங்கள் செயல் தமிழர்களால் நினைவு கூறப்படும்.

    ReplyDelete
  5. மீண்டும் நிகழ்வுகள் நிழலாடியது மகிழ்ச்சி

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  7. பல நிகழ்வுகளில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தற்கரிய பேறு. தமிழ் மொழியின் உச்சரிப்பு அழகு அதன் அழகுக்கு அழகூட்டுவது. தமிழறிஞர்களிடையே கூட தமிழ் மொழியின் அந்த அழகு, பொலிவு கொள்ளாமல் சிதைந்து கிடக்கிறது. முக்கியமாக, ழ, ல, ள -- எழுத்துக்களை திருத்தமாக மொழியும் ஆற்றலுக்கான விழிப்புணர்வு தமிழர்களிடையே பெருக வேண்டும்.

    மேடைகளில் பேசும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் நம் தாய் மொழியின் உச்சரிப்பு மேன்மையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்திச் சொல்ல சில நிமிடங்கள் ஒதுக்கி உரையாற்ற வேண்டுகிறேன், ஐயா. தங்கள் மொழித் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அனுபவசாலியான உங்களின் விக்கிப்பீடியா பயிற்சியைக் கண்டது இனிய அனுபவம்

    ReplyDelete
  9. நல்ல விடயம் வாழ்த்துக்கள்....உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    ReplyDelete
  10. சிறப்பான தகவல்கள் ஐயா.

    ReplyDelete
  11. நிச்சயமாக தமிழ்கூறும் நல்லுலகம் போற்றுகின்ற பணியை செவ்வனே செய்து வருவதும் கனிவான குரலில் அன்போடு பேசுவதும் எப்போது எண்ணினாலும் மகிழ்ச்சியை மிகுவிப்பதாகவே இருக்கும். மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா.

    ReplyDelete