24 June 2015

கோயில் உலா : சூன் 2015

20.6.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, மங்களாசாசனம் பெற்ற தலங்களான நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், திருப்புகழ்த் தலமான காவலூர், பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் காவலூர் மற்றும் திருஆதனூர் கோயில்கள் தற்போது முதல் முறையாக நான் செல்கிறேன். மற்ற அனைத்து கோயில்களுக்கும் முன்னர் பல முறை சென்றுள்ளேன். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். வாருங்கள்.


கோயில் உலாவின்போது ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலில்
1) திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
காலை 7.00 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேனில் கிளம்பினோம். முதலில் திட்டை சென்றோம். வசிஷ்டேஸ்வரையும் சுகந்தகுந்தளாம்பிகையையும் தரிசித்தோம். குருவினை நின்ற நிலையில் கண்டோம்.
திட்டை கோயிலின் முன்பாக நிற்கும் எங்களது வேன்
 2) காவலூர் முருகன் கோயில்
திட்டை பயணம் முடித்து அங்கிருந்து காவலூர் சென்றோம். திருப்புகழ் பாடல் பெற்ற இக்கோயில் சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. ஆறுபடை வீடுகளைச் சேர்ந்த முருகனின் திருவுருவங்களையும் இங்கு கண்டோம். திருமுருக கிருபானந்த வாரியார் இக்கோயிலுக்கு விரும்பி வந்ததாகக் கூறினர்.

காவலூர் முருகன் கோயில் முழுத்தோற்றம்
3) திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்
அங்கிருந்து நாங்கள் சென்றது திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில். முல்லைவனநாதரையும், அம்மனையும் தரிசித்தோம். யாகசாலையை ஒட்டிய மண்டபம் குதிரை, தேரை இழுத்துச் செல்வது போல அமைந்துள்ள அமைப்பு பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அச்சிற்பத்தை ரசித்துவிட்டு அக்கோயிலிலேயே காலை உணவு உட்கொண்டோம். இதே போன்ற சிற்பத்தை பழையாறையிலும் கண்டோம்.

திருக்கருக்காவூர் கோயிலில்  தேரை இழுத்துச்செல்லும் குதிரை
 4) ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
அழகான மாடக்கோயில்.  படிகளில் ஏறி மேலே கோயிலுக்குச் சென்றோம். பசுபதிநாதரையும், மங்களாம்பிகை, பங்கஜவல்லி என்ற இரு அம்மன் இரு அம்மன் சன்னதிகளையும் கண்டோம். ஒரே இடத்தில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், காள பைரவர், உன்மத்த பைரவர் எனப்படுகின்ற ஐந்து பைரவர்களைக் கண்டோம். இவ்வாறு வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.

மாடக்கோயில் அமைப்பில் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
5) திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில்
அடுத்து நாங்கள் சென்றது திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில். இம்மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் எனப்படுகின்ற சக்தி உறையும் இடத்தை இறைவி இறைவனுக்கு முத்தம் தருவதாகக் கூறிவருவதைக் கண்டோம். தனியாக அம்மன் சன்னதியில் அம்மனைக் கண்டோம்.

6) பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
அடுத்து நந்தி விலகிய தலமாகக் கருதப்படும் தேனுபுரீஸ்வரர் கோயில். மூலவர் சன்னதியின் இடப்புறம் ஞானாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்படுகளோடு உள்ளதைக் கண்டோம். தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது அக்கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் சன்னதியைக் கண்டோம். துர்க்கையம்மனை தரிசித்துவிட்டு குழுவாக அங்கு மதிய உணவு உண்டோம். மாலை வரை ஓய்வெடுத்தோம். 4.00 மணிக்கு மறுபடியும் கிளம்பினோம்.
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் வாயில்
அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயிலாக மிகவும் பெரிய கோயிலாக இருந்தது. அதற்கடுத்து  பார்சுவநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நேரமின்மை காரணமாக இரு கோயிலுக்கும் செல்ல முடியவில்லை.

7) பழையாறை சோமநாதர் கோயில்
இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளபோதிலும் பெயரின் காரணமாக வரலாற்றுரீதியாக என்னை ஈர்த்த கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் அமைப்பு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை நினைவுபடுத்தும். மூலவர் சன்னதி அமைந்துள்ள மண்டபம் குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல அமைந்துள்ளது. ஒரே நாளில் இவ்வாறான அமைப்பில் இரு கோயில்களை இன்று பார்த்துள்ளோம்.

பழையாறை சோமநாதசுவாமி கோயிலில் தேரை இழுத்துச்செல்லும் குதிரை
8) நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில்
அதற்கருகில் நாதன்கோயில் எனப்படுகின்ற ஜகன்னாதப்பெருமாள் கோயில் இருப்பதாகக் கூறினேன். அப்போது திரு ஜெயபால் அவர்கள் அது மங்களாசாசனம் பெற்ற தலமா? என்றார். ஆமாம் என்று நான் கூறியதும் எங்களது வேன் அக்கோயிலை நோக்கிச் சென்றது. ஆறு விண்ணகரங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளதாகக் கூறினர். மூலவராக அமர்ந்த கோலத்தில் பெருமாள் உள்ளார். அருகில் ஸ்ரீதேவி, பூமாதேவி உள்ளனர். பெருமாள் சன்னதியின்  இடப்புறம் செண்பகவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

நந்திபுரவிண்ணகரம் ராஜகோபுரம்

9) பஞ்சவன்மாதேவீச்சரம்
கோயில் உலாவின்போது வரலாற்றறிஞர் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நாங்கள் இருக்கும் இடத்தைக் கூறியவுடன் அவசியம் பஞ்சவன்மாதேவீச்சரம் செல்லுங்கள் என்றார். என் மனதுக்குள் இருந்த ஆசையும் அதுவே. அடுத்த இடமாக நாங்கள் ராஜேந்திர சோழன் தன் சிற்றன்னைக்காகக் கட்டிய பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் சென்றோம்.  

10) திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்
பஞ்சவன்மாதேவீச்சரத்திலிருந்து கோபிநாதப்பெருமாள் கோயில் வழியாக திருவலஞ்சுழி வந்தடைந்தோம். திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயிலும், விநாயகர் கோயிலும் ஒரே வளாகத்தில் உள்ளன.  வலப்புறம் பைரவருக்கான தனிக்கோயில் உள்ளது. விநாயகர் கோயிலைக் கடந்தே சிவன் கோயிலுக்குச் செல்ல முடியும் விநாயகர் கோயிலிலும், கபர்தீஸ்வர் கோயிலிலும்  நுட்பமான தூண்கள் காணப்படுகின்றன. மிகப்புகழ் பெற்ற திருவலஞ்சுழி பலகணியைப் பார்த்தோம்.
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வலஞ்சுழி விநாயகர் கோயில்
11)திருஆதனூர்
திருவலஞ்சுழியிலிருந்து சுவாமிமலை வழியாக வந்து திருஆதனூர் சென்றோம். கிடந்த நிலையில் பெருமாள் இருந்த ஆண்டளக்குமயன் கோயில் சென்றோம். மங்களாசாசனம் பெற்ற இக்கோயிலில் பெருமாள் கிடந்த கோலம் மனதிற்கு நிறைவைத் தந்தது. அக்கோயிலுடன் எங்களது பயணத்தை நிறைவு செய்து, இரவு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

திருஆதனூர் பெருமாள் கோயில்
நன்றி : இத்தலச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
-----------------------------------------------------------------------------------------------
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது தனது தளத்தில் எனது இரு வலைப்பூக்களையும் 25.6.2015 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.கீழ்க்கண்ட இணைப்பில் அப்பதிவைக் காண அழைக்கிறேன்.
அமைதியான சாதனையாளர் பா.ஜம்புலிங்கம்
-----------------------------------------------------------------------------------------------

59 comments:

  1. நேரில் பார்த்த நிலை பெற்றேன! நன்றி! முனைவரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்களைப் போன்றோருக்காகவே முடிந்தவரை படங்களைச் சேர்க்க முயற்சித்துள்ளேன்.

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகை எனக்கு மன நிறைவைத் தருகிறது.

      Delete
  3. நாங்களும் உடன் வந்த உணர்வு ஐயா தம 3

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறான உணர்வை பதிவு ஏற்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  4. படங்களும் செய்திகளும் மிக அருமையாக உள்ளன.

    இதில் No. 1 ) திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் மட்டும் நான் இருமுறை சென்று வந்துள்ளேன்.

    பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. தங்களது தளத்தில் எனது வலைப்பூக்களையும் சிறப்பாக அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி. தங்களது எழுத்து என்னை மென்மேலும் எழுத ஊக்கம் தருகிறது.

      Delete
  5. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்திற்கு நன்றி. அத்தளத்தில் சென்று பதிவினைப் பார்த்தேன். தங்ளைப் போன்றோர் தரும் ஊக்கம் என்னை வாசிக்கவும், எழுதவும் வைக்கிறது.

      Delete
  6. மரியாதைக்குரிய முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தமிழ்மணத்தில் உங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், சுற்றுலா அனுபவங்களையும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/25.html

    ReplyDelete
    Replies
    1. பதிவினைக் கண்டேன். தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும், அன்பும் இருக்கும்போது சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.

      Delete
  7. மாடக் கோயிலும், காவலூர் முருகன் கோயிலும் மிகவும் வித்தியாசமான அமைப்பில், இருப்பது கண்டு வியந்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்குக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  8. பல கோயில்களை அறிந்தேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  9. உங்கள் பதிவின் மூலம் நாங்களும் நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவு அவ்வாறான உணர்வு ஏற்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  10. சிறப்பான கோவில்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டவற்றில் திட்டை மற்றும் திருக்கருகாவூர் சென்றதுண்டு. மற்றவையும் செல்ல விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விருப்பம் பூர்த்தியடையும். நன்றி.

      Delete
  11. தங்களுடன் நாங்களும் சென்று வந்த உணர்வு, அருமையான பயணம். நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. பதிவு அவ்வாறான உணர்வு ஏற்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
    2. பல் கோயில்களுக்கும் நேரில் சென்ற உணர்வு... முதல் முறைவருகிறேன் உங்கள் வலைப்பூவிற்கு இனி அடிக்கடி வருகிறேன்

      Delete
    3. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகையை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  12. உண்மையிலேயே அமைதியான சாதனையாளர் தான் தாங்கள். மனமார்ந்த வாழ்த்துகள். காவலூர் சென்றதில்லை. செல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற வாசகர்களின் ஊக்கங்களே என் முயற்சிகளுக்குக் காரணம். நன்றி.

      Delete
  13. அன்பின் ஐயா..
    இந்தத் திருத்தலங்களுள் - காவலூர், பழையாறை புதியன..

    தங்கள் பயணத்தின் வழியாக நானும் தரிசித்தேன்..
    மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. பல திருத்தலங்களுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தங்களை நான் பதிவின் மூலமாக அழைத்துச்சென்றது மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி.

      Delete
  14. எங்களை நேரில் அழைத்து சென்று காண்பித்தது போன்ற எளிமையான எழுத்து நடை மற்றும் படங்கள். நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை எழுதுகிறேன். அன்புக்கு நன்றி.

      Delete
  15. 12 கோவில்களா?அதிர்ஷ்டம் செய்தவர்.ஆனால் எங்களையு அழைத்துச் சென்று விட்டீர்கள்
    திட்டைதான் சரியான குரு பரிகாரத் தலம்

    ReplyDelete
    Replies
    1. முன்னர் பல முறை பல கோயில்களுக்குச் சென்றுள்ளேன். இருந்தாலும் வலைப்பூ நண்பர்களும் பார்க்கவேண்டும் என்ற நிலையில் இப்பதிவு. இதுபோன்ற பதிவு தொடரும். நன்றி.

      Delete
  16. இனிய வணக்கம் முனைவர் ஐயா !

    ஆலயதரிசனம் கோடி புண்ணியமாம் அத்தனை ஆலயங்களையும் நேரில் சென்று பார்த்ததுபோல் ஒரு உணர்வினை ஏற்ப்படுத்தியமைக்கு நன்றிகள் !

    தங்கள் இருநூறாவது பதிவு விக்கிபீடியாவில் வந்ததை இட்டு அன்னைத் தமிழ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் !

    கோபாலகிருஸ்ணன் ஐயாவின் அறிமுகப் படுத்தலையும் சென்று பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ஐயா !
    தமிழ்மணம் 9

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு கலந்த நன்றி.

      Delete
  17. செலவு இல்லாமல் பார்த்தாகிவிட்டது நன்றி அய்யா...

    ReplyDelete
  18. குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல மண்டபம் அமைத்து கோயில் கட்டுவது மூன்றாம் இராசராசன் கலைப்பாணியா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா, பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறான பாணி உள்ளதாக அறிஞர்கள் தெரிவித்தனர். நன்றி.

      Delete
  19. தங்களுடன் இணைந்து நாங்களும் பயணம் செய்வதும் போன்ற உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் உணர்வுக்கு நன்றி. தொடர்ந்து செல்வோம்.

      Delete
  20. திட்டை திருக்கருகாவூர், பட்டீஸ்வரம் சென்றிருக்கிறோம் படங்களில்கோவில்களின் அமைப்பே வித்தியாசமாக இருக்கிறது மாடக்கோவில்களென்றால் கோபுரங்கள் இருக்காதா. எல்லாகோவில்களையும் சென்று பார்க்க ஆன நேரமும் கடந்த தூரமும் கொடுத்தால் உதவியாக இருக்கலாம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஐயா, ராஜகோபுரம் இருக்கும். உள்ளே கோயிலின் அமைப்பு இவ்வாறாக உயர்ந்த நிலையில் காணப்படும். இப்பகுதியில் அண்மையில் நாங்கள் பார்த்த, இவ்வாறான கோயில்களில் ஒன்று பசுபதிகோயில். அடுத்தடுத்த பயணங்களில் நேரத்தையும், தூரத்தையும் சேர்க்க முயற்சிப்பேன். நன்றி.

    ReplyDelete
  22. //மாடக்கோவில்களென்றால் கோபுரங்கள் இருக்காதா. //

    வெளியே காணப்படும் ராஜகோபுரங்களும் இருக்கும். உள்ளே கருவறை உயரமாகப் படிகள் ஏறிச் சென்று காணும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கோச்செங்கணான் கட்டியவை என்பார்கள் மாடக் கோயில்கள் அனைத்தும். யானை ஏற முடியாத அளவுக்கு உயரமாகக் கட்டினான் என்றும் சிலர் சொல்கின்றனர். பல பெருமாள் கோயில்களும் மாடக் கோயில்களே. உயர்ந்த மாடங்களில் கருவறை அமைந்திருந்தால் அவை மாடக் கோயில்கள்.

    ReplyDelete
  23. பல கோவில்களை அதன் சிறப்புகளை அறியாமலேயே பார்த்து வருகிறோம். இது போன்ற பதிவுகள் கோவிலின் தனித் தன்மையை அறிந்து கொள்ள உதவும். இந்தப் பகுதிக்கு பயணம் செய்யும்போது நிச்சயம் மனதில் கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் காணவேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான பதிவுகள். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  24. கோயில்கள் பெயர் அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தங்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்....புகைப்படங்கள் அழகு. செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது தங்களது பதிவும் புகைப்படங்களும்....மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
    Replies
    1. பல நிலைகளில் நானும் இவ்வாறான நிலையை எதிர்கொண்டதுண்டு. அதற்காகவே இவை போன்ற கோயில்களைப் பற்றிய இப்பதிவு. வருகைக்கு நன்றி.

      Delete
  25. போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடங்கள்.

    ReplyDelete
  26. கோவில் உலா அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உலாவில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

      Delete
  27. தஞ்சை பெரிய கோவிலுக்கு மட்டும் போயுளேன் ஏனையவை பார்க்கவில்லை தங்கள் மூலம் நானும் உலா வந்தது போல் ஒர் உணர்வு நன்றி சகோ!

    ReplyDelete
  28. //திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது தனது தளத்தில் எனது இரு வலைப்பூக்களையும் 25.6.2015 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. கீழ்க்கண்ட இணைப்பில் அப்பதிவைக் காண அழைக்கிறேன்.
    அமைதியான சாதனையாளர் பா.ஜம்புலிங்கம்//

    தங்களின் வலைத்தளத்தினை, என் வலைத்தளத்தினில் நான் 25.06.2015 அன்று http://gopu1949.blogspot.in/2015/06/25.html அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதால் என் வலைத்தளத்திற்கே ஓர் பெருமை கிடைத்துள்ளதாகவே நான் உணர்கிறேன்.

    அதற்கு அமைதியான மாபெரும் சாதனையாளரான தங்களுத்தான் நான் நன்றி கூற வேண்டும். மீண்டும் என் நன்றிகள், முனைவர் ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. தங்களுத்தான் = தங்களுக்குத்தான்

      Delete
    2. உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கங்களே என் எழுத்துப்பணிக்கு காரணம். நன்றி.

      Delete
  29. இந்த ஒரு இடுகைக்கே தாங்கள் எவ்வளவு மெனக்கட்டிருப்பீர்கள் என்று புரிகிறது! அருமை! பயனுள்ள இடுகை! தொடருங்கள்! தொடர்கிறேன்!அன்புடன் ரவிஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகையும் அன்பான கருத்தும் நெகிழ வைக்கிறது. நன்றி.

      Delete
  30. தகவல்களும் படங்களும் மிக அருமையாக உள்ளன. நல்ல தகவல்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியது என்று சொல்லுவார்களே அது போல உங்கள் பதிவுகளையும் பாதுக்காத்துதான் வைக்க வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. முடிந்த அளவு தாங்கள் எதிர்பார்க்கும் வகையில்
      எழுத முயற்சிப்பேன். நன்றி.

      Delete