2016இல் பார்க்கவேண்டிய 52 இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என்கிறது நியூயார்க் டைம்ஸ் (New York Times). தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு முழுதும் காணப்படும் நூற்றுக்கணக்கான கோயில்கள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகப் பார்க்கப்படவேண்டியவை என்று பாராட்டுகிறது அவ்விதழ். அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு நன்றியுடன்.
தமிழ்நாடு
இந்தியா
இந்தியாவின் பண்பாட்டிற்கான புதிய பாதைகள்
மிகப்புகழ் பெற்ற முகலாயர்களின் கோட்டைகளுக்காகவும் அரண்மனைகளுக்காகவும் வட இந்தியா பிரபலமான சுற்றுலாத்தலமாகக் கருதப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழ்நாடு அதற்கீடான அதிக அளவிலான இன்னும் கண்டறியப்படாத வரலாற்றினைக் கொண்ட பெருமை பெற்றதாகும். இம்மாநிலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய கோயில்கள் உள்ளன. அவற்றில் சில சிறிய நகரைப்போலவே காணப்படுகின்றன. மதுரையில் மிகப்பெரிய வளாகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண் தெய்வத்திற்கான மீனாட்சியம்மன் கோயில், இந்தியாவின் புகழ்பெற்ற வம்சங்களில் ஒன்றான சோழர்களால் கட்டப்பட்ட பிரகஸ்தீஸ்வரர் கோயில் மற்றும் 9ஆம் நூற்றாண்டு காலம் தொடங்கி காணப்படுகின்ற, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன.
கோயில்கள் பண்பாட்டினை மட்டுமே பிரதிபலிப்பன அல்ல. செட்டிநாட்டுப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பர்மா தேக்கால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. சிறந்த வாழை இலையில் பரிமாறப்படும் நறுமணத்துடன் கூடிய சமையல் பாணியைக் கொண்ட பெருமையுடையது.
தமிழ்நாட்டில் காணப்பட்ட குறைந்த அளவிலான அடிப்படை வசதிகள் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், அண்மைக்காலத்தில் அமைந்த தங்கும் விடுதிகள் இச்சூழலை மாற்றிவருகின்றன. அதிக எண்ணிக்கையியிலான தங்கும் விடுதிகள் தற்போது காணப்படுகின்றன. அவற்றில் செட்டிநாட்டில் உள்ள சிதம்பர விலாஸ் மற்றும் பங்களா, மதுரையில் உள்ள ஹெரிடேஜ், தஞ்சாவூரிலுள்ள ஐடியல் ரிவர் ரிசர்ட் உள்ளிட்டவை அடங்கும்.
-ஷிவானி ஓரா
நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான இக்கட்டுரையினை அவ்விதழில் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்.
தமிழனாய் பெருமைகொள்வோம்.
ReplyDelete"இந்தியாவின் பண்பாட்டிற்கான புதிய பாதை"யில் தமிழகம் பயணம் செய்த செய்தி
ReplyDeleteதமிழர்களுக்கு தமிழர் திருநாள் பரிசாகவே கொள்வோம் அய்யா!
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteசந்தோஷமும் பெருமையும்.
ReplyDeleteதம +1
வணக்கம்.
ReplyDeleteபதிவும் பகிர்வும் அருமை.
தொடர்கிறேன்.
நன்றி.
மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழனுக்கு பெருமையான விடயத்தை அறியத் தந்த முனைவருக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 5
நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு நன்றியுடன் வாழ்த்துகள்..!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநமதுநாடும்அடங்கிஇருப்பதில் மகிழ்ச்சி.
தமிழர் வரலாற்றுப் பதிவுகளை வெளியிடும் தங்களைப் போன்ற அறிஞர்களால் கிடைத்த வெற்றி.
ReplyDeleteதமிழைத் தோண்டித் தோண்டி அலச நிறைய அறிவு இருக்கு.
அதுபோல
தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி உலாவ நிறைய வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இருக்கு.
இதனைத் தங்களைப் போன்ற அறிஞர்களால் வெளிப்படுத்தினால் உலகெங்கும் தமிழ் வாழும் என நம்புகிறேன்.
வாழ்த்துகள்.
ReplyDeleteநமதுநாடும்அடங்கிஇருப்பதில் மகிழ்ச்சி.
மனம் பெருமை கொள்கிறது
ReplyDeleteநன்றி ஐயா
வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteபெருமை அடைய வைக்கும் செய்தி! மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் செய்தி..
ReplyDeleteதமிழகம் - மேலும் சிறக்க வேண்டும்..
வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteமிகவும் தேவையான பதிவுங்க அய்யா
ReplyDeleteமகிழ்வாகவும், பெருமையாகவும் இருக்கின்றது ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
நினைக்கும் போது மகிழ்வாக உள்ளது... வாழ்த்துக்கள் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் கண்களில் பட்டதை ,எங்கள் கண்களுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி :)
ReplyDeleteமீனாக்ஷி அம்மன் கோயிலையும் ப்ரகதீஸ்வரர் கோயிலையும் கண்டிருக்கும் பேறு பெற்றிருக்கிறோம். அருமையான பகிர்வு ஜம்பு சார். புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteநம் பெருமையை அவர்கள் சொன்னால்தான் நமக்குப் புரிகிறது!
ReplyDeleteஅருமை ஐயா
மனத்துக்கு மிகவும் மகிழ்வையும் நம் பாரம்பரியம் குறித்த பெருமிதத்தையும் தரும் செய்தி. பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDelete/கோயில்கள் பண்பாட்டினை மட்டுமே பிரதிபலிப்பன அல்ல./ இது கோவில்கள் மட்டுமே பண்பாட்டினைப் பிரதிபலிப்பன அல்ல என்று இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது பகிர்வுக்கு நன்றி ஐயா
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஅருமையன பதிவு....
தம 11
ReplyDeleteவணக்கம் சகோதரரே,
ReplyDeleteஅருமையான பதிவு. தகவலுக்கு நன்றி.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://www.friendshipworld2016.com/
அன்பினும் இனிய முனைவர் அய்யா
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
இணையில்லாத இன்பத் திருநாளாம்
"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! அய்யா....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Mr Sambasivam Udayasuriyan (suriyaudayam@gmail.com மின்னஞ்சல் வழியாக)
ReplyDeleteதமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் தகவலுக்கு நன்றி