பெற்றோரால் காலங்காலமாக முயற்சிக்கப்பட்டு
சாதிக்கமுடியாதது ஒன்று உண்டெனில் அது உரிய நேரத்தில் குழந்தைகளைச் உறங்கச் செல்லவைக்கமுடியாததாகும்.
உறங்கச்செல்லும் சேரம் சரியான நேரமாக இருப்பின் அது பெற்றோருக்கு அதிக மன நிம்மதியைத்
தரும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் குறைவாகவே
குறும்புகள் செய்கின்றனவாம்.
மாறுபட்ட நேரங்களில் உறங்கச் செல்லும்
குழந்தைகளால் பல பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றில் இயல்புக்கு மீறிய செயல்கள், சக குழந்தைகளுடனான
பிரச்சினைகள் மற்றும் உணர்வு சார்ந்த சிரமங்கள் போன்றவை அடங்கும். நீண்ட நேர விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு உள்ளூர் நேரம் வேறுபடும்போது வழக்கமாக உண்டாகும் களைப்புணர்ச்சி போன்ற நிலையினை அதில் காணமுடியும்.
அதிக நேர இடைவெளிவிட்டு படுக்கைக்குச்
செல்கின்ற, நேரம் முறையாக இல்லாத, சூழலில் குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்படும்
நிலை ஏற்பட்டு தூக்கமின்மைக்கு இட்டுச் செல்கிறது. இதன் காரணமாக மூளை வளர்ச்சியடையும் நிலையும், குழந்தைகளின் நன்னடத்தையும் படிப்படியாகக்
குறைந்துவிடுகிறது என்று இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியால் (University College
London)10,000 குழந்தைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும் முறையற்ற தூக்க முறைகளின்
தாக்கத்தை மாற்றமுடியாது என்று கூறமுடியாது; ஆசிரியர்களைப் போலவே குழந்தைகளை எப்போதும்
ஒரே மாதிரியான நேரத்தில் உறங்க வைத்த பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தையில் ஒரு முன்னேற்றத்தைக்
கண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த UK
Millennium Cohort Study என்ற அமைப்பின்மூலமாக மூன்று, ஐந்து, ஏழு வயது என்ற படிநிலைகளில்
படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளை வைத்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. பெற்றோரிடமும்
ஆசிரியர்களிடமும் நடத்தை அடிப்படையில் செய்திகள் திரட்டப்பட்டன. அதன்மூலமாக மூன்று
வயதுள்ள குழந்தைகள் அதிக அளவு முறையற்ற நேரங்களில் படுக்கைக்குச் செல்வது தெரியவந்துள்ளது.
இப்பிரிவில் ஐந்தில் ஒரு குழந்தை மாறுபட்ட நேரங்களில் தூங்கச் செல்கிறது. ஏழு வயதுள்ள
குழந்தைகளைப் பொறுத்தவரை பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் சரியாக இரவு 7.30 மணியிலிருந்து
8.30 மணிக்குள் தூங்கச் சென்றுவிடுகின்றனர்.
மூன்று முதல் ஐந்து வயதிற்குள்ள
அவ்வப்போது நேரத்தை மாற்றி படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் ஏழு வயதினை எட்டும்நிலையில்
சரியான நேரத்தில் படுக்கச் செல்லும் நிலையில் நற்குணத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. மாறுபட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் குழந்தைகளின்
நன்னடத்தைக் குறைய ஆரம்பிப்பதை பெற்றோரால் உணர முடியும்.
ஆரம்ப காலக்கட்டத்தில் குழந்தையின்
வளர்ச்சியானது அதன் வாழ்நாள் முழுதுமான அக்குழந்தையின் ஆரோக்கியத்திலும் நலத்திலும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொள்ளை நோயியல் மற்றும் பொது நலத்துறையைச் சேர்ந்த
பேராசிரியர் யோவ்ன் கெல்லி கூறுகிறார். முறையான படுக்கை நேரம் கொள்ளாதிருத்தலும் தொடர்ந்து
காணப்படும் மலம், எச்சம் போன்றவையின் வெளிப்படு உணர்வும் மன நிலையிலும் உடல் நிலையிலும் உள்ளூர்
நேரம் வேறுபடும் ஓரிடத்திற்கு நீண்ட நேர விமானப் பயணம் செய்பவர்களுக்கு வழக்கமாக உண்டாகும்
ஒருவகையான களைப்பு போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதோடு ஆரோக்கிய நிலையிலும் அன்றாடப்
பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக தூக்கத்தில் குறுக்கீடுகள் காணப்படும்.
குறிப்பாக வளர்ச்சி நிலையில் முக்கியமான நேரங்களில் இதனைக் காணலாம். அதன்விளைவாக
உடல் ஆரோக்கியத்தில் ஒரு முக்கியமான வாழ்நாள் முழுதும் தொடரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வகையான
விளைவுகள் குழந்தைப்பருவத்தில் தொடர்வதை ஆய்வில் கண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வின்போது
ஒன்று அல்லது இரண்டு வயதில் முறையற்ற நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள்
முறையான நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளைவிட அதிகம் பாதிக்கப்படுவதை அறியமுடிந்தது.
முறையற்ற படுக்கை நேரங்களைக்
கொண்ட குழந்தைகளும் இரவு 9 மணிக்கு மேல் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளும் சமூக
நிலையில் பின் தங்கிய சூழலைக் கொண்டவர்களாக உள்ளனர். தவிரவும் அவர்கள் படுக்கைக்கு
உரிய நேரத்திற்கு முன்பாகச் செல்லும் குழந்தைகளோடு ஒப்பிடும்போது அன்றாட வாழ்க்கையில்
காலை உணவை உட்கொள்ளா நிலை, தினமும் படிக்காத நிலை, படுக்கையறையில் தொலைக்காட்சிப் பெட்டியைக்
கொண்டுள்ள நிலை, தொலைக்காட்சி முன்பாக அதிக நேரம் செலவழித்தல் நிலை என்ற பல சூழல்களில் இருப்பதைக்
காணமுடிகிறது.
'பீடியாட்ரிக்ஸ்' இதழில் வெளியான
ஆய்வு பின்வருமாறு கூறுகிறது: "பெற்றோர்கள் அதிகமாகவோ சமூக நலனுக்கு உகந்ததற்ற
நேரத்தில் உழைப்பதாலோ குடும்பத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதென்பது சிரமமாகிறது.
இந்நிலையில் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் வளர குடும்பங்களுக்கு நல்ல நிலையில் ஆதரவு
தருவதற்கான சூழலுக்கு கொள்கையளவிலான முன்னேற்றம் தேவைப்படுகிறது."
"முரண்பாடான தூக்க நேரம்
என்ற நிலையைத் தடுப்பதற்கு வழக்கமான உடல்நலம் பாதுகாப்பதற்கான உரிய வளமான வாழ்விற்கான
வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். அதுபோன்றே உறக்கத் தடைக் காரணங்களை மருத்துவப்பரிசோதனை மூலமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து
குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் நலத்தைப் பேணும்போது வாழ்வின் வளர்ச்சிநிலையில்
நல்ல பலன்களைக் காணமுடியும். இந்நிலையில் தலையீடுகள் என்ற சூழலில் குடும்பத்தின் இயல்பான
பழக்கங்களுக்கு உதவி புரியும் வகையில் பல நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
அவை நீண்ட வாழ்வில் பல தாக்கங்களை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை" என்கிறார் கெல்லி.
தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The Guardian
(கார்டியன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்)
(கார்டியன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்)
Children with regular bedtimes less likely to misbehave, research shows, Alexandra Topping, The Guardian
திரு என்னாரெஸ்பெரியார், விடுதலை ஞாயிறு மலர் 23 மே 2020இல் வெளியானதைத் தெரிவித்து இக்கட்டுரையினை அனுப்பியிருந்தார். அவருக்கும், விடுதலை இதழுக்கும் நன்றி.
அருமையான தகவல்
ReplyDeleteசிறந்த பதிவு
பயனுள்ள பகிர்வு
ReplyDeleteநன்றி.நண்பரே...
பெற்றோர்களுக்குப் பயனுள்ள கட்டுரை ஐயா
ReplyDeleteநன்றி
பெற்றோர்களுக்கு பானுள்ள அருமையான கட்டுரை! அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
ReplyDeleteபயனுள்ள பதிவு. நானும் எனக்கு தெரிந்த இளம் பெற்றோருடன் பகிர்ந்துள்ளேன். வளமான இளைய தலைமுறையை உருவாக்குவோம். நன்றி.
ReplyDeleteகுழதைகளின் தூக்கத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா? அழகாக மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவிடயங்களை அழகாக விளக்கிய முனைவருக்கு நன்றிகள் பல இது சேகரித்து வைக்க வேண்டிய பதிவு
ReplyDeleteத.ம. 3
மிகவும் நல்லதொரு பதிவு! என் குழந்தையும் டிவி பார்த்துக் கொண்டு தூங்க மறுக்கின்றது. சீக்கிரம் உறங்க பழக்க வேண்டும்.
ReplyDeleteமிக மிக பயனுள்ள கட்டுரை, தகவல்கள். ஆம் ஒரு குழந்தை நன்னடத்தையுடன் வளர, ஆரோக்கியமாகவும் வளர குழந்தையின் தூக்கம் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களும் கூட முறையான தூக்கத்தை, நேரத்தைக் கடைபிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
ReplyDeleteமொழிபெயர்த்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
பயனுள்ள கட்டுரை. நன்றி ஐயா.
ReplyDeleteபயனுள்ளக் கட்டுரை. குழந்தைகளுக்குப் பத்துமணிநேர தூக்கமும் அவசியம்.
ReplyDeleteநன்றி ஐயா
நல்லதொரு, தெரிந்து கொள்ளவேண்டிய பகிர்வு.
ReplyDeleteநமது 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் 'என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாய் இருக்கே :)
ReplyDeleteநல்ல கட்டுரை பகிர்வு.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.
மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி.
பயனுள்ள புதிய செய்தி. அழகான மொழிபெயர்ப்பில் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஅருமையான ( மொழிபெயர்ப்பு) கட்டுரை. இப்போதுள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கணினி தொடர்பான விளையாட்டுகளாலும் , பெற்றோரின் வேலை முறைமைகள், முன்னுரிமைகளின் விளைவுகளாலும் குழந்தைகள் நலனில் பெற்றோர்களால் அதீத கவனம் செலுத்தமுடிவதில்லை என்பதும் பிரதான காரணம்.
ReplyDeleteஅதேபோல வீட்டில் அடிக்கடி நடத்தப்படும் கேளிக்கை விருந்துகள்,விருந்தினர் வருகை,நண்பர்களோடு பெற்றோரின் சம்பாஷனைகள் , மணி கணக்கில் பெற்றோர் பார்க்கும் தொலைகாட்சி மற்றும் கணினி தொடர்பான நிகழ்ச்சிகளும் குழந்தைகள் அதிக நேரம் விழித்திருக்கவும் சரியான நேரத்தில் உறங்கமுடியாமலும் செய்கின்றன.
தேவையான தகவல்களை பரிமாறியதற்கு நன்றிகள்.
கோ
நல்ல கட்டுரைதான். சரியான நேரத்துக்கு தூங்க வைப்பதற்கான யோசனைகளையும் முன்வைத்தால் நல்லது
ReplyDeleteஅந்த வயதுக் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
ReplyDeleteநல்ல தகவல் அய்யா.........
ReplyDeleteகட்டுரை சுட்டியை என் இல நண்பர்களுக்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன். பயனுள்ளது
ReplyDelete'இள' என்பது 'இல'ஆகி விட்டது!
ReplyDelete