The Hindu இதழின் வாசகன் என்ற நிலையில் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் :
1976-79
கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் (ஆங்கில வழி) படித்த காலத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலச் சுருக்கெழுத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டருகில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சாரங்கபாணி என்பவர் எனக்கு The Hindu இதழிலிருந்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், சுருக்கெழுத்தின் பயிற்சியும் என்னை The Hindu நாளிதழின் வாசகனாக்கியது. 1976இல் வாசிப்பின் முதல் நிலையாக அது எனக்கு அமைந்தது.
பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியபடி, படிக்க ஆரம்பித்தபோது பாடங்களில் வரும் Inflation, Deflation, Economy, Fiscal, Budget, Monetary போன்ற சொற்கள் The Hindu நாளிதழில் இருப்பதைக் கண்டேன். பாடத்தில் படிக்கும் சொற்களான தேடலானது வாசிப்பின் இரண்டாவது நிலையானது. தினமும் இடம்பெறும் இன்றைய நிகழ்ச்சிகளில் (Engagements) தொடங்கிய வாசிப்பு நிலை பின்வருமாறு பல படிநிலைகளைக் கடந்தது.
The Hindu இதழின் வாசிப்புப்பழக்கமானது மொழி நடை, பயன்பாடு, உத்தி, அமைப்பு, ஒப்புநோக்கல் புதியனவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்பன போன்ற பல நிலைகளில் என்னை உயர்த்தியுள்ளதை அனுபவத்தில் கண்டுள்ளேன். இவ்விதழில் வெளியான எனது கடிதங்களைப் பற்றியும், பிற அனுபவங்களைப் பற்றியும் மற்றொரு பதிவில் காண்போம்.
- நீங்கள் பள்ளிப்படிப்பு முதல் ஆங்கில வழியாகப் படித்தீர்களா?
- ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி என்ற நூலை முறைப்படி படித்தீர்களா?
- ஆங்கிலம் பேசுவது எப்படி என்ற வகுப்பிற்குச் சென்றீர்களா?
- நீங்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்களா?
1976-79
கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் (ஆங்கில வழி) படித்த காலத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலச் சுருக்கெழுத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டருகில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சாரங்கபாணி என்பவர் எனக்கு The Hindu இதழிலிருந்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், சுருக்கெழுத்தின் பயிற்சியும் என்னை The Hindu நாளிதழின் வாசகனாக்கியது. 1976இல் வாசிப்பின் முதல் நிலையாக அது எனக்கு அமைந்தது.
பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியபடி, படிக்க ஆரம்பித்தபோது பாடங்களில் வரும் Inflation, Deflation, Economy, Fiscal, Budget, Monetary போன்ற சொற்கள் The Hindu நாளிதழில் இருப்பதைக் கண்டேன். பாடத்தில் படிக்கும் சொற்களான தேடலானது வாசிப்பின் இரண்டாவது நிலையானது. தினமும் இடம்பெறும் இன்றைய நிகழ்ச்சிகளில் (Engagements) தொடங்கிய வாசிப்பு நிலை பின்வருமாறு பல படிநிலைகளைக் கடந்தது.
- முதலில் இன்றைய நிகழ்ச்சிகள், உள்ளூர் நடப்புகள், விழா நிகழ்வுகள்
- வாசகர் கடிதங்கள்
- சுதந்திர/குடியரசு நாள்களில் குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் விடுக்கும் வாழ்த்துச் செய்திகள்
- பிற நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அரசியல் தலைவர்களின் பேச்சுகள்
- தலையங்கம், தலையங்கப் பக்கம், தலையங்க எதிர்ப்பக்க கட்டுரைகள்
- பொருளாதாரம், கலை, அறிவியல், ஆன்மீகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் என்ற நிலைகளில் அனைத்து தரப்பிலான கட்டுரைகள்
1980-2016
கல்லூரிப்படிப்பு முடிந்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த பின்னரும் வாசிப்பானது தொடர்ந்தது. படிக்கும்போது கீழ்க்கண்ட உத்திகளை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
கல்லூரிப்படிப்பு முடிந்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த பின்னரும் வாசிப்பானது தொடர்ந்தது. படிக்கும்போது கீழ்க்கண்ட உத்திகளை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
- வித்தியாசமான சொல்/சொற்றொடரின் அமைப்பு, பயன்பாட்டை உற்றுநோக்கல்
- புதிய சொற்களுக்கான பொருளை அகராதியில் தேடல்
- இறந்த காலத்திலேயே செய்திகளும் கட்டுரைகளும் வரும் நிலையில் நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் என்பதற்கான வேறுபாட்டினை உணர்தல்
- வெளிநாட்டுச் செய்திகளைப் படிக்கும்போது நாட்டின் பெயரையும், அந்தந்த தலைவர்களின் பெயர்களையும் மனதில் கொள்ளுதல்
- அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளில் கையாளப்படும் கலைச்சொற்களை அடையாளம் காணுதல்
- எழுத்துருக்கள் (fonts), பக்க வடிவமைப்பு, பெட்டிச்செய்தி, படத்துடன் செய்தி என்ற நிலையில் செய்திகள் வழங்கப்படும் விதத்தை ஆராய்தல்
- கோயில், சுற்றுலா பற்றிய கட்டுரைகளை ஆர்வமாக வாசித்தல்
ஒரு புறம் வாசிப்பு என்ற நிலை இருந்தாலும், நண்பர்களிடமும் பிறரிடமும் பேசும்போது அன்றாடம் காணப்படும் புதிய சொற்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தேன். இதே காலகட்டத்தில் நண்பர்கள், அறிஞர்கள் பேசும்போது அவர்களின் பேச்சு முறையை கவனிக்க ஆரம்பித்தேன். அலுவலகத்திலும், பிற இடங்களிலும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படும் நிலையில் அதன் பொருளை அறிய ஆரம்பித்தேன். பல புதிய சொற்களை அறிந்துகொள்ள இந்த உத்தி உதவியது.
- Yea/Yeah (1976-79இல் கும்பகோணம் கல்லூரியில் படித்தபோது எங்கள் ஆசிரியரிடம் வகுப்பு நண்பர் ஒருவர் அப்போது வெளிவந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடிப் பயன்படுத்தும் "ய்யா.." என்ற சொல்லுக்கான பொருளைக் கேட்க, அவர் அதற்கான பொருளையும் உச்சரிப்பையும் கூறினார்).
- Partake (Part+take என்பதன் இணைப்பு. 1979-80இல் தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றியபோது அதன் மேலாளர் ஒரு நிகழ்ச்சிக்கு வரஇயலா நிலை குறித்து பயன்படுத்தியது).
- Etiquette (பண்பாடு, நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம் என்ற நிலையில் எவ்வாறு முறையுடன் பழகவேண்டும் என்பதை உணர்த்துவது.சென்னையில் 1980இல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அறிந்தது).
- You should speak pregnant words (1980-82இல் கோயம்புத்தூரில் பணியாற்றியபோது ஓய்வு நேரத்தில் ICWA வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பெடுத்த ஆசிரியர்களில் ஒருவர் அடிக்கடி இச்சொற்றொடரைப் பயன்படுத்துவார், பொருள் பொதிந்த வார்த்தைகளே பேசுங்கள், என்பார்)
- Vicissitude (1980களின் இறுதியில் மேதகு ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தபோது அவர் பயன்படுத்திய பல சொற்களில் என் மனதில் நின்ற புதிய சொல்).
- Epilogue/Prologue (தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 1985வாக்கில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற நூலைத் தட்டச்சு செய்தபோது அறிந்துகொண்ட புதிய சொற்கள். அவர் அதற்கான பொருளை விளக்கினார்).
- Fool's cap (தாளை மடித்தால் முட்டாளின் தொப்பி என்ற நிலையில் அமையும்) என்பது சரி Fullscape என்பது தவறு.
- Caesarian operation (Julius Caesar முதன்முதலாக அந்த முறையில் பிறப்பிக்கப்பட்டதால் அப்பெயரே அமைந்த நிலை).
இவ்வாறான நிலையில் The Hindu நாளிதழில் அவ்வப்போது வந்த பல சொற்களும், சொற்றொடர்களும் என் மனதில் பதிய ஆரம்பித்தன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
- இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி சுடப்பட்டபோது The Hindu நாளிதழில் அச்செய்தி "Indira Gandhi assassinated" என்ற தலைப்பில் வெளியானது. Indian Express நாளிதழில் "Indira Gandhi shot dead" என்ற தலைப்பில் வெளியானதாக நினைவு. "Assassinated" என்ற சொல்லுக்கான பொருளை அகராதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக அன்வர் சதத் (1981), மார்ட்டின் லூதர் கிங் (1968), கென்னடி (1963), மகாத்மா காந்தி (1948) கொல்லப்பட்டபோது இச்சொல் பயன்படுத்தப்பட்டதை அறிந்தேன்.
The Hindu, Madurai, Thursday, November 1, 1984 |
- Mumtaj would have gone into the footnotes of history but for Taj Mahal (தாஜ் மகாலைப்பற்றிய ஒரு தலையங்கத்தில் தாஜ்மகால் மட்டும் இல்லாமல் போயிருந்தால் மும்தாஜ் வரலாற்றின் அடிக்குறிப்புகளில் மட்டுமே காணப்பட்டிருப்பாள்).
- US is making efforts to dehyphenate the hyphenated relationship of India and Pakistan (இந்தியா பாகிஸ்தான் உறவை சரிசெய்ய அமெரிக்கா எடுக்கும் முயற்சி).
- 50 years on, scars remain (ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டு 50 ஆண்டு நினைவாக 1995இல் வெளிவந்த செய்தியின் தலைப்பு).
- Pilgrim's progress (கைலாய மலைக்கு பக்தர்கள் வரிசையாகச் சென்ற நிகழ்வுக்கு அமைந்த தலைப்பு).
- Elephantine task (நீலகிரி முகாமுக்கு யானையை லாரியில் ஏற்றிச்செல்லும்போது அமைந்திருந்த புகைப்படத்திற்கான தலைப்பு).
- Tigerish resolve (புலிகளைப் பாதுகாக்க பிரதமர் உறுதியான முயற்சி).
- Towering inferno (ஒரு கட்டடம் பற்றி எரியும்போது/இந்த தலைப்பில் ஓர் ஆங்கிலப்படம் பார்த்துள்ளேன்).
- We need not shed crocodile tears (முதலையின் எண்ணிக்கை குறைந்துவருகிறதே என கவலைப்படவேண்டாம், எண்ணிக்கையைப் பெருக்க திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்ற நிலையிலான செய்தி).
- I have faced many battles, I will win the war (ஒரு அரசியல்வாதி தனது அரசியல் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது).
- I want a full stop to be placed to this problem, no more commas. (ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பிரச்சினையைப் பற்றி ஓர் அரசியல் தலைவர் பேசியது).
- I will change the history of India and geography of Pakistan (மத்திய அமைச்சர் ஒரு குறிப்பிட்ட சூழலில் பேசியது).
- By finding an everlasting solution to the Kashmir problem, I want my name be entered in the history books (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஒரு பேட்டியில் கூறியது).
- Metamorphosis (மகாவீரரை, அம்மனாக மாற்றி வழிபடும் நிலை என்ற செய்திக்கான தலைப்பு).
- Pencilled (நாடாளுமன்றத் தேர்வில் ஒரு வேட்பாளருக்கான பெயர் விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படா நிலையில் இச்சொல் பயன்பாடு).
- Dealing the Deal, How to deal with the Deal?, Deal without deal, Dealing the Deal (இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட சொற்கள்).
- Abdul Kalam is wedded with good principles (குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் குணத்தைப் பற்றிய சொற்றொடர்).
- Emphasis added (ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ அதன் முக்கியத்துவம் கருதிக் கூறும்போது அடைப்புக்குறிக்குள் காணப்படும் சொற்றொடர்)
- Know your English, Letters to the Editor மற்றும் Letters to the Reader's Editor என்று பல நிலைகளில் கடிதம் எழுதுதல்.
- The Hindu இதழில் வெளியாகும் இணைப்புகளை வாசிக்க ஆரம்பித்தல் (குறிப்பாக Friday Review போன்றவை).
- வெளிநாட்டு இதழ்கள் பற்றிய அறிமுகம்.
- Frontline இதழ் அறிமுகமாகி வாசகனாதல்.
- 20.3.1997இல் லண்டனிலிருந்து வெளிவரும் The Sun இதழை அனுப்பக் கூறி அவ்விதழினைப் பெற்று, பின் அதைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு 17.4.1997இல் நன்றி தெரிவித்தேன். 84 பக்கங்கள் கொண்ட அவ்விதழ் tabloid வடிவில் இருந்தது.
- அத்துடன் தொடர்ந்து Guardian, New York Times, Dawn மற்றும் பல இதழ்களை இணையத்தில் அவ்வப்போது வாசிக்க ஆரம்பித்தல்.
- அவ்வப்போது காணும் புதிய சொல்/சொற்றொடரின் பயன்பாடுகளைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தல்.
எங்கள் மூத்த மகன் பாரத், இளைய மகன் சிவகுரு இருவருக்கும் இவ்விதழை வாசிக்கக் கற்றுக்கொடுத்தேன். இதழைப் படிக்கத் தனியாக நேரம் ஒதுக்கினேன். வாசிப்பின்போது என் மனைவி பாக்கியவதி உடன் இருந்து சந்தேகங்களைக் கேட்பார். தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்த மகன்களை கடிதம் எழுதவும் பழக்கப்படுத்தினேன். அவர்கள் எழுதிய கடிதங்கள் இவ்விதழில் வெளிவந்தன. மேலும் The Hindu இதழை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துப் படிக்கும் அளவிற்கு இருவரும் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள்.
ஆனாலும் தி ஹிந்துவின் ஆங்கிலத் தரம் முன்பு போல் இல்லை. அச்சுப் பிழைகள் அதிகம் வருகின்றன.
ReplyDelete
ReplyDeleteநல்ல முயற்சி........பாராட்டுக்கள் என் கல்லூரி ஆசிரியரும் ஆங்கில நாளிதழை படிக்க சொன்னார் ஆனால் வீட்டில் வாங்கியதோ தமிழ் நாளிதழ் அதனால் ஆங்கிலத்தில் இன்னும் ததிங்கனத்தாம்தான்
எங்களுக்கு நெறிகாட்டும் நல்ல கட்டுரை. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteFool's cap என்பதன் காரணமும் புரிந்தது :)
ReplyDeleteநல்ல பயனுள்ள கட்டுரை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அட ... இம்புட்டு ஆழமா வாசிப்பீங்களா ?
ReplyDeleteji immensely pleased to read about THE HINDU
ReplyDeleteit is true that one can develop an uncanny profficiency in ENGLISH LANGUAGE if he is reading hindu daily...
தங்களின் வாசிப்பு பழக்கம் போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் பலருக்கும் பயன் பெறும் வகையில் உள்ளது நன்றி
ReplyDeleteத.ம.3
தங்க்ள் வாசிப்பை வாசித்தேன். முயர்ச்சிகள் என்றுமே வீண் போகாது. பூத்துக் குலுங்கும் பலன்களைத் தந்து தான் ஆகும்.
ReplyDeleteநானும் தட்ட்ச்சும் சுருக்கெழுத்தும் படித்தேன். இன்று தட்ட்ச்சு பயின்றதின் உபயோகம் கைகொடுக்கிறது.
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் ஆங்கில நாளிதழ் என்றால் ஹிந்து தான்! தங்கள் வாசிப்பனுபவம் பகிர்ந்த விதம் வியப்பளிக்கிறது!
ReplyDeleteஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள விழையும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கட்டுரை. அன்றிலிருந்து இன்று வரை நானும் ஹிந்து வாங்குகிறேன். ஆனால் உங்களைப் போல ஆழமாக வாசிக்காமல் நுனிப்புல் தான் மேய்கிறேன். நன்றி முனைவர் ஐயா!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteநலமா? தங்களின் வாசிப்பு திறன் வியக்க வைக்கிறது.நலல பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு.
வாசிப்பு கலையில் முன்னேற பல தகவலகளை தந்தமைக்கு நன்றி.
தங்களுக்கும்.தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁
ReplyDeleteதங்கள் அனுபவம் அனைவரும் அறிய வேண்டுவன!முனைவரே
ReplyDeleteவாழ்த்துகள்!
தங்களுடைய அனுபவங்களை அருமையாக பதிவு செய்திருக்கின்றீர்கள்..
ReplyDeleteபயனுள்ள விவரங்கள்..
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
(Mr Ashok Kumar thro email)
ReplyDeletedear sir, I read your article is interesting,
regards. happy Diwali. yours lovingly,
T Ashok kumar, AP/SOME/SASTRA, Automobile Lab In-charge)
Dr Sundaresan (thro: kalam.drsundaresan@gmail.com)
ReplyDeleteValthukal. sundaresan
You are an asset to Tamil University
ReplyDeleteநான் தமிழ் வழிக்கல்வி பயின்றாலும் ஆங்கிலத்தில் ஈடுபாடு இருந்தது ஆங்கில இதழ் த ஹிந்து வாசித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பிற இதழ்கள் ருசிப்பதில்லை. ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சி பெற ஹிந்து உதவும்
ReplyDeleteமிக நல்ல பதிவு.
ReplyDelete"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"
என்ற பழந்தமிழ் பாடலை நினைவூட்டுகிறது.
Sir...really u r great....i can't able to express it in words....
ReplyDeleteதாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா..நான் எனது 50 ஆவதுவயதுக்குப்பின்தான் எழுதவும் படிக்கவும் தொடர்ந்து கொண்டு வருகிறேன் அய்யா...
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅருமையான அனுபவ பதிவும் -பாடமும்.
வாசிப்பிற்கு முன் நேசிப்பு மிக அவசியம் என்பதை உணர்த்தும் தெளிவான பதிவு.
தலைவர்கள் பேச்சுக்களும் அவர்கள் பயன் படுத்திய சொற்கள் - சொற்றோடர்கள் குறித்த ஞாபக பதிவு அபாரம்.
அனைத்தும் பிடித்திருந்தன. அதிலும் அந்த மத்திய அமைச்சரின் ( I will change the history of India and geography of Pakistan) பேச்சு சுவாரசியம்.
விமான, பேருந்து, ரயில் பயணங்களின்போது ஆங்கில செய்தித்தாள்களை (விலைகொடுத்து) வாங்கி பலரும் பார்க்கும் வண்ணம் இப்படியும் அப்படியும் திருப்பிக்கொண்டு அர்த்தம் தெரியாமல் படிப்பதுபோல் பாசாங்கு காட்டும் போலி கவுரவ மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசமான வாசக வித்தகர் என்பதை அறிய முடிந்தது.
ஆங்கிலம் என்பது லாஜிக்குடன் கூடிய ஒரு மேஜிக்கல் மொழி என்பது என் பார்வை.
பகிர்விற்கு நன்றி.
கோ
மிகவும் பயனுள்ள கட்டுரை... புதிய வார்த்தைகளை அவை எங்கே பயன்படுத்தப்பட்டன என்ற தகவல்களுடன் தந்தமைக்கு நன்றிகள். அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நாளிதழ்களை எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு சொற்களை நினைவு கொள்ள வேண்டும் போன்ற தகவல்களும் அருமை. தங்கள் நியாபக சக்தியும், திறமையும், போற்றத்தக்கது. எங்களைப்போன்று புதிதாக எழுதுபவர்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. மிகவும் அருமையான இந்தக் கட்டுரையை படிக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅருமை ஐயா 💐. அறிவுபூர்வமாக செயல்படுபவர்களில் தாங்களும் ஒருவர். வருங்கால இளைஞர்களுக்கு உங்களைப் போன்றவர்களின் வாழ்வியல் ஒரு Role model!
ReplyDeleteஅய்யா, எங்கள் இல்லத்திலும் The Hindu நாளிதழை, எனது விருப்பத்தின் பேரிலே கடந்த இரண்டு மாதங்களாக வாங்கி வருகிறோம். இருப்பின் சரியான முறையை அறிந்து படிக்க முடியவில்லையே என்ற கவலை என்னுள் இருந்து கொண்டே இருந்தது... ஆனால் தங்களுடைய இப்பதிவினை படித்த பிறகு ஒரு சில தெளிவுகள் கிடைத்துள்ளன... பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா.
ReplyDelete