அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகே காமரசவல்லியில் உள்ள கார்க்கொடேஸ்வரர் கோயிலுக்கு 20 ஜனவரி 2019 அன்று சென்றிருந்தோம். அங்கிருந்த கோஷ்ட சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றைக் காண அன்போடு அழைக்கிறேன்.
சுந்தரசோழனால் (பொ.ஆ. 956-973) கட்டப்பட்ட இக்கோயில் பல்வேறு காலங்களில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதவல்லி எனப் பலவாறாக அழைக்கப்படுகின்ற இத்தலத்தில் உள்ள இறைவன் கார்க்கொடேஸ்வரர் என்றும் சௌந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர்கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவியான பாலாம்பிகை தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், முருகன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.
நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக உள்ளே நுழையும்போது முன்மண்டபம் காணப்படுகிறது. மூலவர் கருவறை, விமானத்துடன் அமைந்துள்ளது.
கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, உமையொருபாகன், அடிமுடிகாணா அண்ணல், பைரவர், கொற்றவை உள்ளிட்டோரின் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்களைப் பார்த்தபோது கரந்தட்டாங்குடி வசீஷ்டேஸ்வரர் கோயில் நினைவிற்கு வந்தது. அக்கோயிலின் கோஷ்டத்திலும் இவ்வாறான சிற்பங்களைக் காணமுடியும்.
இனிமையான மன நிறைவான தரிசனத்திற்குப் பின் ஏலாக்குறிச்சியில் உள்ள வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கலமாதா கோயிலுக்குச் சென்றோம். சற்றே இருட்ட ஆரம்பித்தபோதிலும் இனிய தரிசனத்தை நிறைவு செய்த அங்கிருந்து புறப்பட்டோம்.
நன்றி :
ஏலாக்குறிச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்த நிகழ்விற்குச் சென்றபோது, கொற்றவை உள்ளிட்ட கோஷ்ட சிற்பங்களைக் காணக் கருத்து கூறிய திரு அரும்பாவூர் செல்வபாண்டியன்
உடன் வந்து, புகைப்படங்கள் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி , கார்க்கொடேஸ்வரர் கோயில் போனது இல்லை.
ReplyDeleteஅழகான புகைப்படங்கள்.
அடைக்கல மாதா கோவிலும் நான்றாக இருக்கிறது.
சதுர்வேதி மங்கலம் கேள்விப்பட்ட பெயர். நல்லதொரு அறிமுகம். அழகிய புகைப்படங்கள்.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை
ReplyDeleteகார்க்கொடேஸ்வரர்
வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே ஐயா
அழகான சிற்பங்கள் ஐயா...
ReplyDeleteதளம் சுற்றிக் கொண்டே இருக்கிறது... காரணம் gadget-ல் உள்ள http://pathivar.net/ அதை நீக்கி விடுங்கள் ஐயா... நன்றி...
நீக்கிவிட்டேன். கருத்துரைத்தமைக்கு நன்றி.
Deleteஅழகான காட்சிகள் விளக்கங்களும் நன்று.
ReplyDeleteஅழகான கோவில்.
ReplyDeleteசில சிற்பங்கள் சிதிலமடைந்து இருப்பது வேதனை.
சிறப்பான ஒரு உலா பற்றி எழுதியதில் மகிழ்ச்சி.
மிகத் துல்லியமான படங்கள். நல்ல அறிமுகம். அடுத்தமுறை ஜெயங்கொண்டம் செல்லும்போது சென்று காண்பேன்.
ReplyDeleteவரலாற்றுப் பின்னணியோடு படங்கள் அருமை அய்யா
ReplyDeleteஅழகான சிற்பங்கள் படங்கள்,ஏலக்குறிச்சி, காமரசவ்ல்லி , கார்க்கொடேஸ்வரர் கோயில் சிறப்புகள், .அடைக்கலமாதா கோயில் எல்லாமே அருமை ஐயா
ReplyDeleteதுளசிதரன், கீதா
மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருமொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்ப குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது.
ReplyDeleteகடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தை தொடங்கினர். இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான். http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_13.html
சுந்தரசோழனால் (பொ.ஆ. 956-973) கட்டப்பட்ட இக்கோயில் பல்வேறு காலங்களில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
ReplyDeleteநான் எழுதியதையும் இங்கே பதிவிட்டு உள்ளேன். நீங்க எழுதியதையும் சேர்த்துள்ளேன். காலகட்டம் சரிதானா?
ReplyDeleteசரியே. இணைப்பில் நீங்கள் தந்துள்ள, 13 ஜனவரி 2011இல் நீங்கள் எழுதியுள்ள சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரையினை முழுமையாகப் படித்தேன். ஓர் அரிய ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கும் வாய்ப்பினைத் தந்தீர்கள். நன்றி.
Deleteசமீபத்தில் தான் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப் பட்டேன். போகணும். சுந்தர சோழர் காலத்தியது என்பது தெரியாது. கூர்ந்து கவனிக்கையில் எங்க புக்ககத்து ஊரான கருவிலி சற்குணேஸ்வரர் கோயில் அமைப்பை ஒத்திருக்கிறது. அங்கேயும் ராஜ கோபுரம் இப்போது சமீபத்தில் தான் எழுப்பப்பட்டுள்ளது. ராஜகோபுர அமைப்பும் ஒத்து உள்ளது. விரைவில் இந்தக் கோயிலுக்கும் சென்று பார்த்து வர வேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. பார்ப்போம். இதைப் பார்க்கையில் கருவிலி கோயிலும் சுந்தரசோழர் காலத்தியதாக இருக்கலாமோ எனத் தோன்றியது.. ஆனால் அப்பர் தேவாரம் இந்தக் கோயிலைப் பற்றி இருப்பதால் (கொட்டிட்டைக் கருவிலி எனக் குறிப்பிட்டுள்ளார்.) சுந்தர சோழர் காலத்துக்கும் முந்தையது கருவிலி கோயில்!
ReplyDelete15 ஜுலை 2017 கோயில் உலாவின்போது கருவேலி சற்குணேஸ்வரர் கோயில் சென்றோம். அதனைப் பற்றி 12 ஆகஸ்டு 2017இல் கோயில் உலா : ஜூலை 2017 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். நன்றி.
Deleteசற்குணநாதேஸ்வரர்-சர்வாங்கநாயகி (நாவுக்கரசர்) கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.
பார்க்காத இடம் கர்க்கோடகன் என்னும் பெயர் ஒரு புராணகால பாம்பின் பெயர் அல்லவோ
ReplyDeleteமிக அருமையான படங்களுடன் கோவில் பற்றிய விளக்கங்கள்
ReplyDeleteஅழகுடன் சொல்லி இருக்கிறீர்கள். துர்க்கை அம்மா வீரப் பொலிவுடன் காட்சி தருகிறார். மிக மிக நன்றி ஐயா. தங்கள் துணைவியார் படமும் இனிமை.இருவருக்கும் என் வாழ்த்துகள்.என்றும் வாழ்க வளமுடன்.