18 November 2022

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு : நிகரிலி சோழன் விருது

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2022ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1037ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. வரலாற்றுத்தேடல் குழுவின் தலைவர் திரு உதயசங்கர் தலைமை தாங்க,  தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைத் தலைவரும் தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தலைவருமான முனைவர் கோ.தெய்வநாயகம்  திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சண்முக செல்வகணபதி, திரு கயிலைமாமணி செ.இராமநாதன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் த.ரமேஷ், இந்து அறநிலையத்துறையின் முன்னாள் செயல் அலுவலர் து.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதே மேடையில் நானும் சிற்றுரையாற்றினேன். 



நிகழ்விற்குப் பின் பெருவுடையாருக்கும், ராஜராஜனுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்த நிகழ்வான மரபு நடையின்போது பெரிய கோயிலின் சிறப்புகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தெளிவாக எடுத்துரைத்தனர்.





மாலை தஞ்சை நட்ராஜ் நாட்யாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம், வீணை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழுவின் பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூற விழா இனிதே நிறைவேறியது.









இவ்விழாவில் நிகரிலி சோழன் விருது வரலாற்று அறிஞர்கள், வளரும் ஆய்வாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. நானும் இவ்விருதினைப் பெற்றேன். விருதினை எனக்கு வழங்கிய குழுவினருக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் காலை முதல் இரவு வரை விழாவினை சிறப்பாக நடத்தினர்.  அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு


முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001







அருமொழி விருது, 2021


***************************
விரைவில் வெளிவரவுள்ள என் நூல் 

***************************

5 comments:

  1. அன்பின் நல்வாழ்த்துகள் ஐயா..

    இம்மாதிரியான விழாக்கள் நமது பாரம்பர்யத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வன..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.  மென்மேலும் விருதுகள் உங்களைத் தேடி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. நிகரிலி சோழருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இதுவரை நிகழ்த்தியுள்ள சாதனைகளுக்கும் இனியும் தொடர்ந்து வரவிருக்கும் சாதனைகளுக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete